குறவஞ்சி (Kuravanji)


பார்க்க முடியவில்லை. பக்சும் பார்க்கவில்லை. யாரும் எழுத வருகிறீர்களா?

பார்த்தவரையில் எழுதுகிறேன் – Bags

MGR வசன உச்சரிப்பு பிரமாதம். கணீரென்று இருந்தது.
இதில் எங்கிருந்து எம்ஜிஆர் வந்தார் என அதிர்ச்சியடைய வேண்டாம். மக்களாட்சி, அரசியல், ஏழை எளியவருக்கு உதவுதல், இப்படி ஃப்ரேம் பை ஃப்ரேம் காட்சிகள் அமைந்திருந்தால் அது சாதரணமாக எம்ஜிஆர் திரைப்படமாகத் தானே இருக்கவேண்டும். குறவஞ்சி நான் பார்த்தவரையில் காட்சிகள் இப்படித்தான் இருந்தது. ஒரே ஒரு மாறுதல். எம்ஜிஆருக்கு பதில் சிவாஜி.

1960ல் வந்த படம். விபரமாக எழுத முடியவில்லை. பிட் கொஞ்சமாகத்தான் அடிக்க முடிந்தது.

கதை – மு. கருணாநிதி
நடிகர்கள் – சிவாஜி கணேசன், பி.எஸ்.வீரப்பா, ஓ.ஏ.கே. தேவர்
நடிகைகள் – சாவித்திரி
டைரக்‌ஷன் – A. காசிலிஙகம்

எல்லைபுரம் அக்கிரமங்கள் அனைத்திலிருந்தும் தன் அரசாங்கம் பாதிக்கப்படாமல் ஆட்சி புரிந்துக்கொண்டிருக்கிறார் மன்னர். ஆனால் எல்லைபுரத்திலோ தளபதி பி.எஸ். வீரப்பாவின் ஓ.ஏ.கே. தேவரின் அட்டகாசம். அப்பொழுது தான் திருமணம் ஆன மணமகளை கடத்தி சென்றுவிடுவார்கள். மணமகனை தூக்கி வந்து அவருடைய சொந்த கிராமப் பகுதியில் கொண்டுவந்து கொன்றுவிடும் வீரர்களை மாறுவேடத்தில் இருக்கும் சிவாஜி (மன்னரின் மருமகன்) துவம்சம் செய்கிறார்.

இங்கே தான் சிவாஜி எம்ஜிஆரிடமிருந்து மாறுபட்டுவிட்டார். எம்ஜிஆராக இருந்தால், அவருடைய கத்தி, மணமகனை நோக்கி வீரர்களின் கத்தி பாயும் போது இடையில் வந்து தடுத்திருக்கும்.

பின்னர் மன்னரின் அரண்மனைக்கு வந்து மன்னரிடம் எம்ஜிஆர் பாணி வீரவசனங்களை பேசித் தள்ளுகிறார். சில சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆருக்கு பதில் சிவாஜியை போட்டிருந்தால் பிய்த்து உதறியிருப்பார் என்று யோசிப்பார்கள். அப்படி பட்டவர்கள் இந்த படத்தை பார்த்து பிய்த்து உதறியிருக்கிறாரா எனத் தெரிந்துக் கொள்ளலாம். நான் பார்த்த வரையில் கொஞசம் பிய்த்து கொஞ்சம் கிழித்து உதறியிருக்கிறார். இருந்தாலும் எம்ஜிஆராக இருந்தால் ஆட்டோமேட்டிக்காக அட்ரீனல் சூடேறிவிடும்.
சிவாஜி நல்ல இளமையாக காட்சித் தருகிறார். அருமையாக விறுவிறுப்பாக சண்டை போடுகிறார். அதனால் எம்ஜிஆரும் சிவாஜியும் ஒன்று – சுபம்

(இது எம்ஜிஆர் vs சிவாஜி பிரச்சனையை வளர்க்குமா? குறைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்)

முழுவதும் பார்க்காததால் மார்க் (என்றாவது பார்க்கும் வரை) pendingல் இருக்கிறது.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

15 Responses to குறவஞ்சி (Kuravanji)

 1. கடைசி சண்டையில் சிவாஜி தோத்துப் போயிடுவாரு.. ஓ.ஏ.கே. தேவர்(ன்னு நெனைக்கிறேன்) உதைபட்டு, மண்டை உடைஞ்சு மாட்டிக்கிட்டு உயிரோட சமாதி ஆயிடுவாரு.

 2. rinkster says:

  இல்லை. கடைசியில் சிவாஜியொட காதலி அவருக்காக அவங்க உயிரை தியாகம் செஞ்சுடுவாங்க. இடம் மாறி உயிரோட சமாதி ஆவாங்க.

  அவர் அமைக்கப்பட்டிருந்த சுரங்க பாதை வழியா உயிர் பிழைத்து விடுவார்.

  சிவாஜி கடைசியில் 4 பக்க வீராவேச வசனம் பேசி விட்டு. இந்த அம்மையார் நினைப்பிலயே காலத்தை கடக்க முடிவு செஞ்சுடுவார். (மு.கருணாநிதி வேறு இந்த படத்துக்கு வசனம் என்று கேள்வி பட்டேன் !)

  இந்த அறுவை படத்தை மூழுசா கடைசி வரைக்கும் பார்த்த எனக்கு முதல்ல அவார்ட் கொடுக்கணும். 😉

 3. ullathaisolven says:

  அக்பரோட சுரங்கவழி மாதிரியேவா ?
  மைனாவதி (பண்டரிபாயோட தங்கச்சி ) தானே சிவாஜிக்கு ஜோடி
  சாவித்திரி நல்லா வசனம் பேசி நடிச்ச படங்களில் இதுவும் ஒண்ணு
  அவங்க தெலுங்கராக இருந்தும் அழகா தமிழ் பேசுறது ரொம்பவுமே ஆச்சர்யம்
  அவ்வளோவ் சுத்தமான உச்சரிப்பு
  அற்புதமான திறமை

  எப்போவோ பார்த்த‌ ப‌ட‌ம் டிவில‌ பாக்க‌லை
  சி எஸ் ஜெய‌ராம‌ன் பாட்டு நெறைய‌ வ‌ரும்
  யார் சொல்லுவார் நில‌வே..
  சிவாஜிக்கு அவ‌ர் கொர‌ல் பொருத்த‌மில்லையின்னாலும் அவர் சிவாஜிக்காக பாடிய‌
  அன்பாலே தேடிய‌ என் அறிவு செல்வ‌ம் , காவிய‌மா நெஞ்சின் ஓவியமா ,ஆயிர‌ம் க‌ண் போதாது பாட்டெல்லாம் ரொம்ப‌ பாப்பூல‌ர்

 4. rinkster says:

  Yep, I agree Savitri’s dialogue delivery and voice modulation were intact. But the dialogues as such were not impressive.

  மைனாவதி பண்டரிபாயோட சகோதரியா? அது எனக்கு தெரியாது. முக சாயல் இருந்தது, நினைச்சேன்!! ஆனா சம bore அக்ட்ரெஸ்.

  அக்பரோட சுரங்கவழி? If you are referring to Mughal-E-Azam 😛 Its supposed to be just a fictional climax, not actual history.

  சி.எஸ்.ஜெயராமன் குரல் எனக்கு கூட அவ்வளவு பிடிக்காது. ஆனால் சிவாஜிக்கு ரொம்ப பிடித்த பாடகர் அவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன். When TMS was chosen to do playback for Sivaji for first time in Thooku Thooki, I heard Sivaji had some apprehensions and he was particular about CSJ. But after hearing the songs I guess he would have changed his mind. CSJ was M.Karunanidhi’s brother-in-law. It might probably be the reason why he got to sing majority of the songs in Kuravanji.

 5. RV says:

  ரிங்க்ஸ்டர், முழுசா பார்த்ததற்கு பிடியுங்கள் ஒரு அவார்டை!! பேசாம நீங்களே இதுக்கு முழு விமர்சனத்தையும் எழுதிடுங்களேன்! கலைஞர்தான் வசனம். அவரது சொந்தப் படம் வேறு (மேகலா பிக்சர்ஸ்)

  உள்ளதை சொல்வேன் சொன்ன மாதிரி மைனாவதி – ஸௌகாரி அன் தங்கை – சிவாஜிக்கு ஜோடி. எனக்கு சி.எஸ்.ஜெ. குரல் ரொம்ப பிடிக்கும். இந்த நடிகருக்கு அவரது குரல் பொருந்துமானு பாக்கறதை விட்ட அவர் குரல் எந்த நடிகருக்கு பொருந்தும்னுதான் பாக்கணும். எம்.ஆர். ராதா ஒருவருக்குத்தான் கொஞ்சம் பொருந்துது. இல்லாட்டா அசரீரி.

  ராஜா, நீங்க சொன்னது ஆச்சரியம்! ஆனாலும் சிவாஜிக்கு தைரியம் அதிகம். வில்லனிடம் தோத்துப் போகிற மாதிரி எல்லாம் நடித்திருக்கிறார்!

 6. rinkster says:

  தெலுங்கு நடிகை கிருஷ்ண குமாரி தான் சௌகாரின் தங்கை.

  நீங்கள் சி.எஸ்.ஜெயராமன் பற்றி கூறிப்பிட்டது ஓரளவு உண்மையே. சீர்காழியும் கிட்ட தட்ட அதே ரகத்தை சேர்ந்தவர் தான். முக்கால்வாசி நடிகர்களுக்கு அவர் குரலும் பொருந்தாது.

 7. RV says:

  ரிங்க்ஸ்டர்,

  கிருஷ்ண குமாரி, மைனாவதி இருவருமே ஸௌகாரின் தங்கைதான்.

  சீர்காழியை பற்றி நீங்கள் சொல்வது சரிதான்.

 8. ullathaisolven says:

  கிருஷ்ண குமாரி ஸௌகாரின் தங்கை
  மைனாவதி பண்டரிபாயோட தங்கை
  i am very sure folks

 9. Das says:

  ullathaisolvEn,

  I did not know that the song “nee sollAvidil yAr solluvAr” is from “kuRavanji”. In another moview (“iLavarasi”?), kouNdamaNi will keep singing this pallavi (“nee sollAvidil”) and would insist everyone in the village to sing with him or listen to him! even when they are sleeping!! Hilarious!

  antha ninaivukkAka intha pAdalai pathivu paNNinEn!!

  Das

 10. RV says:

  Das,

  That is a decent song. I haven’t seen Ilavarasi, (never even heard of it), one day…

 11. ullathaisolven says:

  CSJ was M.Karunanidhi’s brother-in-law ! this is news for me rinkster
  அதுக்காக இப்பிடியா பொருத்தம் இல்லாத கொரலை போட்டு வதைக்கனும் ?
  காத்தவராயன்’ல சிவாஜி சங்கிலி இழுத்துக்கிட்டே சவுக்கடி வாங்கும் CSJ கொரல் தான் விதியா சதியா ?ன்னு ஓகே ஆனா
  ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ‘(புதையல்) சூப்பர் பாட்டு பி சுசீலா கொரலோட ஒரு ‘தாத்தா ‘கொரலும் வருது..விதியா சதியா ?

 12. RV says:

  அப்போல்லாம் குரல் பொருத்தம் யார் பார்த்தா? இப்பவும் யாரும் பாக்கறதில்லே. :-)). Things go in cycles!

 13. RV says:

  உள்ளதை சொல்வேன்,

  மைனாவதி பண்டரிபாயின் தங்கைதானோ? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது…

 14. ராசா தீர்ப்பு சொல்லிட்டார்..

  பண்டரிபாயின் தங்கை மைனாவதி..!

 15. Pingback: கலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: