அன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum)


1969ல் வந்த படம். AVM ப்ரொடெக்‌ஷன்ஸில் வெளிவந்தது.

நடிகர்கள் AVM ராஜன், நாகையா, கோபாலக்கிருஷ்ணன், சிவக்குமார், சோ, T.R. ராமச்சந்திரன், V.K. ராமசாமி, ஒர் விரல் கிருஷ்ணாராவ்
நடிகைகள் வாணிஸ்ரீ, லக்‌ஷ்மி, SN லக்ஷ்மி, S.சகுந்தலா, மனோரமா, பானுமதி
வசனம் நிர்மலா
ஒளிப்பதிவு தம்பு
பாடல்கள் கண்ணதாசன்
இசை M.S. விஸ்வனாதன்
பின்னணி L.R.ஈஸ்வரி. T.M.S, P.சுசீலா
தயாரிப்பு M.முருகன், M.சரவணன், M.குமரன்
டைரக்‌ஷன் கிருஷ்ணன்-பஞ்சு

நாகையா, மனைவி S.N.லக்‌ஷ்மி இருவருக்கும் கோபாலகிருஷ்ணன், AVM ராஜன், ஊனமுற்ற தங்கை லக்‌ஷ்மி ஆகியோர் வாரிசுகள்.  நாகையாவுக்கு ஃபாக்டரியில் வேலை செய்யும் போது கண் போய்விடுகிறது. அதன் பின் மருமகள் சகுந்தலா கொடுமை படுத்துகிறாள். AVM ராஜன் பொறுப்பு வந்து பாண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டு கட்டட வேலை செய்யப் போன இடத்தில் வேலையை இன்னொருவருக்கு தியாகம் செய்துவிட்டு தத்துவப் பாடல் ஒன்றை அவிழ்த்துவிடுகிறார். அந்தப் பாடல் ”சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்”.

பின்னர் ராமச்சந்திரன் வாலட்டை கண்டுபிடித்துக்கொடுத்து அவர் மூலமாக டிரைவர் வேலை கண்டுபிடித்துக்கொள்கிறார். எந்த வேலையிலும் நிலைக்காமல் கடைசியில் வாணிஸ்ரீயின் தந்தை வி.கே.ராமசாமி கம்பெனியில் அண்ணன் மேனேஜர், தம்பி குமாஸ்தா.

சோ  VKராமிசாமியை நல்ல மிளகாய் அரைக்கிறார். ராமச்ச்ந்திரனின் மகன் சிவக்குமார் லக்‌ஷ்மியுடன் ஜோடி சேருகிறார்.

அண்ணன் கோபாலகிருஷ்ணன் மனைவி பேச்சைக் கேட்டு குடும்பத்தை கைவிட்ட பிறகு AVM ராஜன் குடும்பத்தை பல கஷ்டங்களுக்கு இடையில் காப்பாற்றுவதுதான் கதை. திரைகதையை நன்றாக சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறார்கள் கிருஷ்ணன் பஞ்சு.

“முத்தான ஊர்கோலமோ”, “மோதிரம் போட்டது”, “மலரும் மங்கையும் ஒரு ஜாதி”, “இறைவா உனக்கொரு கேள்வி” என்ற பாடல்கள் சுசீலா பாடுகிறார். ”பொன்னாலே” என்ற பாட்டை வெ.நிர்மலாவிற்க்காக LR ஈஸ்வரி பாடுகிறார். பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்க்கவில்லை. வார்த்தைகள் பரவாயில்லை

வசனம் நன்றாக இருக்கிறது. நார் பெருமையானதா? பூ பெருமையானதா என்று சோ விளக்குவது இது: “பூ இவ்வளவு தானா?” என்று பூவை அலட்சியம் பண்ணுவார்கள். ஆனால் நாரையோ பெருமையாக மாம”நாரு” என்று பெருமையாக சொல்வார்கள்.

வாணிஸ்ரீ அழகாக இருக்கிறார்.

நல்ல பாசம் நிறைந்த குடும்பக் கதை. ஆனாலும் 19 ரீல் பாசம் கொஞசம் ஓவர் தான்.

கடைசி சீன் ஜோக் – சோ மனம் திருந்துகிறார். அவர் கைவிட்ட பானுமதியிடம் “நான் திருந்திட்டேன்”  என்கிறார். அவர் “அப்படிச் சொல்லாதிர்கள்” என்று சொல்ல,  “இல்லை, அப்படித்தான் சொல்லனும்” என்கிறார் சோ, கடைசி சீன் என்பதை குறிப்பிட்டு.

6/10 மார்க்.

பற்றி Bags
Trying out

3 Responses to அன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum)

  1. காவிரிமைந்தன் says:

    அன்னையும் பிதாவும் பாடல் – சத்தியா நான் சொல்வதெல்லாம் தத்துவம் – வேண்டும்..

    காவிரிமைந்தன் – அபுதாபி

  2. காவிரிமைந்தன் says:

    பழைய பாடல்களைப் பற்றி பகிர்வுகள் செய்யும் அனைவரோடும் தொடர்பில் இருக்க விரும்புகிறேன்.

    அன்புடன்
    காவிரிமைந்தன் (கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்க நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்) பம்மல் சென்னை 600075 kmaindhan@gmail.com

  3. Bags says:

    நன்றி காவிரி மைந்தன் அவர்களே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: