அவார்ட் கொடுக்க வேண்டியதுதான்


சன் டிவி கொண்டாடி முடித்துவிட்டார்கள் போல தெரிகிறது. அடுத்த வாரத்திலிருந்து இந்த ஸ்லாட்டில் காமெடி டைம் வரப்போகிறதாம். (வெங்கட்ரமணன் கொடுத்த இன்ஃபர்மேஷன்.) என் மனைவி அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விடுகிறாள்.

பல குறைகள் இந்த ப்ரோக்ராமில் உண்டு – விளம்பரப்படுத்தி விட்டு மாற்றுவது, போடாமல் இருப்பது, ரொம்ப ராண்டமாக படங்களை தேர்வு செய்வது, எத்தனையோ நல்ல படங்களை போடாமல் விட்டது (ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், திரும்பிப் பார், கூண்டுக் கிளி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மலைக் கள்ளன், மங்கையர் திலகம், மனம் போல் மாங்கல்யம், பெண்ணின் பெருமை, மந்திரி குமாரி, பதி பக்தி, பாச மலர், பாவ மன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா, புதிய பறவை, நெஞ்சில் ஓர் ஆலயம், வல்லவனுக்கு வல்லவன், ஞான ஒளி, கௌரவம், துணிவே துணை, வீட்டுக்கு வீடு, காசேதான் கடவுளடா, தீர்க்க சுமங்கலி, பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நீர்க்குமிழி, பணமா பாசமா, கர்ணன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்), எத்தனையோ மட்டமான படங்களை போட்டது (தேன் கிண்ணம், ஹலோ பார்ட்னர், வந்தாளே மகராசி போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்) மாதிரி நிறைய சொல்லலாம். தூர்தர்ஷனின் ஆரம்பக் காலம் போல unprofessional ஆக இருந்தது.

ஆனால் விளம்பரங்கள் வராத நிலையில், இந்த மாதிரி படங்களை திரையிட துணிச்சல் வேண்டும். நிறைய நல்ல படங்களும் திரையிடப்பட்டன – அந்த நாள், சந்திரலேகா, கப்பலோட்டிய தமிழன், நவராத்திரி, எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி. பல குறைகள் இருந்தாலும் இதற்காக சன் டிவிக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்.

நானும் பக்சின் உதவியுடன் இந்த ப்ரோக்ராமை வைத்து இரண்டு மூன்று மாதங்கள் ஓட்டிவிட்டேன். பலரது அறிமுகம் கிடைத்தது. சிலரை இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது – சாரதா, ப்ளம், வெங்கட்ரமணன், பிசுப்ரா, சுபாஷ், பிமுரளி80, ராஜ்ராஜ், இன்னும் பலர் என்று அது ஒரு லிஸ்ட் இருக்கிறது.

அடுத்தது இந்த ப்ளாகில் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். உங்களிடமிருந்து ஏதாவது யோசனைகள்?

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

15 Responses to அவார்ட் கொடுக்க வேண்டியதுதான்

 1. bmurali80 says:

  சில யோசனைகள் உண்டு ஆர்.வி.

  1. பல பதிவுகளில் உள்ள எழத்து பிழைகளை நீக்கி, நல்லா அழுகு படுத்தி படங்கள் சேர்த்தால் இந்த ஆவணங்கள் காலத்தால் அழியாத களஞ்சியமாக இணையத்தில் இருக்கும்.

  2. தட்டச்சு செய்ய சோம்பல் என்ற தோன்றினால் ஒலிபதிவுகள் செய்யலாம். மிகவும் எளிது.

  3. பழைய படங்கள் போடாமலா இருக்க போறாங்க, கண்டிப்பா வரும் பொழுது பதிவு போடுங்க.

  4. ட்ரிவியா என்று சொல்லப்படும் துணுக்குகளை நீஙகள் தொடர்ந்து எழுதலாம். சாரதா இதில் வல்லவர் போல் தெரிகிறது.

  அந்த நாளில் பாலசந்தர் தன்னை வைத்து முயற்சி செய்தார் என்பது எனக்கும் புதுசா இருந்தது.

  அவங்களோட பேச்சுக் கொடுத்தா கண்டிப்பா இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவரலாம்.

 2. puratchi rasigan says:

  1.Don’t you have KTV ?
  2. How about taking DVDs from shops ?
  You can execute some of your recommendations ?

  3. Write review for Comedy time 🙂
  just joking.

 3. Manivannan says:

  இது வரை வெளியான தமிழ் படங்கள் பற்றிய சிறு குறிப்பு வரையலாம். வெளியாண ஆண்டு, நடிகர், இயக்குனர் பற்றிய சிறுவிபரம் மற்றும் முக்கியமாக வெற்றிப்படமா இல்லையா வெற்றிப் படமாயின் எவ்வளவு காலம் ஓடியது போன்ற குறிப்புகளை தரலாம்.

  உண்மையைச் சொல்ல வேண்டுமாயின் எனக்கு இப்படிப்பட்ட தகவலகள் தேவைப்படுகின்றது 🙂 உங்களுக்கு இந்த மாதிரி தகவல்களுடன் கூடிய எதாவது தளம் இருந்தால் தெரியப் படுத்தவும்
  நன்றி

 4. RV says:

  பிமுரளி, பாஸ்டன் பாலா, புரட்சி ரசிகன், மணிவண்ணன்,

  யோசனைகளுக்கு நன்றி! விகியில் போடும் ஐடியா எனக்கும் பிடித்திருக்கிறது. புரட்சி ரசிகன், ப்ளாக் ரெகுலராக எழுதணும், நான் சினிமா பாக்கறது கொஞ்சம் . மணிவண்ணன், எதற்காக இது உங்களுக்கு தேவைப்படுகிறது என்று கொஞ்சம் விளக்க முடியுமா? வேண்டுமென்றால் rv_subbu at yahoo dot com முகவரிக்கு எழுதுங்கள்.

 5. Manivannan
  கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதியுள்ள `சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு’ என்னும் நூல் உங்களுக்கு உதவியாயிருக்கும். (http://www.thinaboomi.com/octo24/23raj4.htm) இதுவரை வெளிவந்துள்ள அனைத்து திரைப்படங்களின் பட்டியல்(நடிக நடிகையர், (இசை)இயக்குனர், என அனைத்துத் தகவல்களுடன்).
  கிடைக்குமிடம்:
  http://newbooklands.com/new/reviews_write.php?panum=94&&catid=56
  மேலும் திருவான்மியூரில் இது கிடைக்குமென நினைக்கிறேன்(அங்கேதான் அந்த பதிப்பகம். பெயர் மறந்துவிட்டது)

 6. ஷக்திப்ரபா says:

  It was fun watching along with an internet crew. What made these pics more interesting was the subsequent movie reviews and thoughts of others reg the movies.

  Thankyou once again RV!

  regards,
  Shakthiprabha

 7. RV says:

  நன்றி ஷக்திப்ரபா! மேலும் தொடர வேண்டும் என்றுதான் ஆசை, இன்னும் லாஜிஸ்டிக்ஸ் சரியாக பிடிபடவில்லை.

 8. bmurali80 says:

  தமிழ் விக்கிப்பீடியா சிந்தனை எனக்கு வந்து, அதுவே முதல் அலோசனையாகத் தரவிருந்தேன். இருப்பினும், பதிவுகள் என்பன நமது பார்வையைக் காட்டக் கூடியவை. நடுநிலைமை என்று நிலை எடுக்கத் தேவையில்லை. விக்கியின் அரசியல் தெரிந்தால் இதெல்லாம் நான் ஏன் சொல்லப் போகிறேன். உங்களைத் தடுக்கவில்லை, ஆனால் கவனமாக இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 9. தமிழ் சினிமா பற்றிய நிறைய கருத்துக்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
  ஒன்றுமே தெரியாமல் விளையாட்டாக பிளாகுகு வந்த நான் எவ்விதத்தில் உங்களை கவர்ந்தேனென தெரியவில்லை.
  ஆனால் உங்களை தெரிந்து கொள்வதில் எனக்குத்தான் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.
  உங்கள் விடய ஞானமும் சீராகவும் சுருக்கமாகவும் எழுதுவது மிகவும் பிடிக்கும்.
  நன்றி
  சுபாஷ்

 10. RV says:

  சுபாஷ்,

  உண்மையில் நீங்கள் தமிழில் கம்ப்யூட்டர் பற்றி அழகாக எழுதுவது எனக்கு பிடிக்கும். அதை உங்கள் ப்ளாகில் எழுதி இருக்கவேண்டும், இங்கே ஏதோ தவறாக எழுதிவிட்டேன். :-))

 11. சாரதா says:

  டியர் RV…

  சன் டிவியின் ‘முத்தான திரைப்படங்கள்’ ஒளிபரப்பைப் பார்த்து இப்படி ஒரு தளத்தை நீங்கள் உருவாக்கியிருந்தாலும், அவர்கள் (SUN T.V) நிறுத்தி விட்டார்கள் என்பதற்காக நீங்களும் நிறுத்தி விடவேண்டுமென்று அவசியம் இல்லை. நீங்கள் தொடரலாம். சன் டி,வி.யில் தினமும் ஒளிபரப்பானதால் நீங்களும் தினமும் எழுத வேண்டியிருந்தது. அவற்றில் சில பரபரப்பாக அமைந்தன என்பது உண்மை. இப்போது நீங்களாகவே வாரம் ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்துப்பார்த்து அதைப்பற்றி எழுதலாம். சாய்ஸ் உங்களுடையது என்பதால் பாடாவதிப்படங்கள் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வர வழியில்லை.

  ‘சன் டி.வி.யினர் போடாமல் விட்ட நல்ல படங்கள்’ என்று நீங்களே ஒரு பெரிய பட்டியல் கொடுத்துள்ளீர்கள். அத்தனையும் முத்தான படங்கள் என்பதில் சந்தேகமில்லை. அவற்றைப் பார்த்து, நிறுத்தி நிதானமாக அழகான விமர்சனங்களை எழுதலாமே (அதற்காக இதுவரை எழுதியவை அழகில்லை என்று அர்த்தமல்ல). அல்லது மற்ற தொலைக்காட்சி சேனல்களிலும் அடிக்கடி நல்ல திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அவற்றையும் எழுதலாம். அவ்வாறு எழுதும்போது மற்றவர்களும் (நான் உள்பட) அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பாக அமையக்கூடும். முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன்….

 12. Bags says:

  சாரதா,

  பிரட்சனை இதுதான். எங்களுக்கு Sun TV ம்ட்டுமே வருகிறது. வேண்டுமானால் விஜய் டிவிக்கு மாறலாம். ஆனால் அது ஒரு பெரிய ப்ராஸஸ். மேலும் விஜய் டிவி ப்ற்றி அவ்வளவு தெரியவில்லை.
  We have these options:
  1. வீடியோ கடைகளில் டிவிடி எடுத்துப் பார்த்துவிட்டு, review எழுதலாம்
  2. சன் டிவியில் வரும் weekend பாடாவதி படங்கள் பற்றி எழுத்லாம்.
  3. KTV என்ற channel subscribe செய்து அதி வரும் படங்கள் பற்றி எழுதலாம்.
  4. Bookclub formatஐ பின்ப்ற்றலாம். அதாவது bookclub அங்கத்தினர் அடுத்த வாரம் டிஸ்கஸ் செய்ய வேண்டிய புத்தகத்தை இந்த வாரம் அறிவித்து விடுவார்கள். அதை அனைவரும் அடுத்தவார மீட்டிங் வருவதற்குள் படித்துவிடுவார்கள். இது மீட்டிங்கில் டிஸ்கஸ் செய்ய வசதியாக இருக்கும்.

  எனக்கு 4ஆவது ஃபார்மட் ஒத்து வரும் என்று தோன்றுகிறது. சன் டிவி போல் ”இந்த வாரப் படங்கள்” என்று ஒரு சொந்த scheduleஐ முன்னரே அறிவித்துவிடுவதால் இது எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பை அளிக்கும். ஆனால் எல்லோருக்கும் பார்க்க வாய்ப்பு கிடைக்காது.

 13. ullathaisolven says:

  KTV அன்புள்ள அப்பா (சூப்பர் ஹிட்டுன்னு நெனைக்கிறேன்), நினைவுசின்னம் (பிரவு ,ராதிகா )எல்லம் கூட வந்திச்சி இந்த வாரம்

 14. RV says:

  சாரதா,

  நல்ல யோசனைகள், நன்றி! நானும் பக்சும் கலந்து பேசி ஒரு முடிவு செய்கிறோம்.

  இந்த ப்ளாக் எழுதி உங்களுடன் கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடிந்தது ஒரு பெரிய மகிழ்ச்சி…

  உள்ளதை சொல்வேன், நீங்க வெறுப்பேத்தாதீங்க! :-)) (சும்மா டமாஸ்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: