ப்ளாக் பாடங்கள் II


பதிவர் சுபாஷ் இதை பற்றி இங்கே எழுதி இருக்கிறார். நான் சுபாஷின் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட போஸ்ட்களை அவ்வப்போது படிப்பேன். அவர் தமிழில் கம்ப்யூட்டரை பற்றி எழுதுவது அருமை.

நான் கஷ்டப்பட்டு போதி மரம் தேடி ப்ளாக் எழுதுவது பற்றி ஞானம் பெற்றால், அவர் சிம்பிளாக கூகிளில் பார்த்து என்னை விட அதிகமான ஞானத்தை பெற்று விட்டார்! உண்மையிலேயே இன்னும் சில அருமையான பாடங்களை அவர் சொல்லி இருக்கிறார். முக்கியமாக படங்கள் போடுவது பற்றி. படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை சேர்ப்பது நல்ல விஷயம். பழைய படங்களுக்கு ஸ்டில் தேட ரொம்ப கஷ்டப்பட்டேன். சில சமயம் சோம்பேறித்தனத்தால் எதையும் சேர்க்காமல் விட்டுவிடுவேன். அந்த தவறை செய்யாதீர்கள்.

தவிர, முடிந்த வரை ஒரு பக்கத்துக்கு மேல் ஒரு போஸ்டை எழுதாதீர்கள். (படிப்பவருக்கு ஸ்க்ரோல் செய்யும் சிரமம் இருக்கக்கூடாது.) ஆனால் என்ன செய்வது, வோர்ட்ப்ரெஸ் பதிவுகளில் யூட்யூப் சுட்டிகளை சேர்த்தால் பாதி ஸ்க்ரீன் அங்கேயே போய்விடுகிறது.

சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்


கணையாழி இன்னும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்’ இந்த காலத்து ப்ளாக்களின் முன்னோடி. சுருக்கமாக (எப்பவுமே வார்த்தைகளை வீணடிக்க மாட்டார்), சுவாரசியமாக எழுதப்பட்டவை. கணையாழி களஞ்சியம் என்ற தொகுப்பில் சில கடைசி பக்கங்களை படித்தேன். ஒன்று சினிமா பற்றியது.

இதை எழுதும்போது சுஜாதா டெல்லியில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பழைய படங்கள்தான் டெல்லிக்கு வரும்போல. இதை முழுவதுமாக இங்கே தரப்போவதில்லை. சில பகுதிகள் மட்டும்.

சுஜாதா நல்லபடியாக சொன்ன படங்கள் இவை.

அன்னை – பானுமதியின் நடிப்பை சிலாகித்திருக்கிறார். சில சமயங்களில் கண்ணீர் வந்ததாம். ஆனால் கூட இருக்கும் எல்லாரும், குறிப்பாக இளம் நடிகர்கள் (பெயர் குறிப்பிடவில்லை, ஹரிநாத் ராஜாவும் சச்சுவும் என்று நினைக்கிறேன்) சொதப்பிவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். பானுமதியை தவிர எனக்கு கண்ணில் தெரிந்த நடிகர்கள் ரங்காராவும் (பரவாயில்லை), ஸௌகாரும் (ஓவர் ஆக்டிங்) மட்டும்தான். இவர் கண்ணில் எல்லாரும் பட்டிருக்கிறார்கள்.

பாலச்சந்தரின் அந்த நாள், இது நிஜமா – அந்த நாள் பற்றி சாரதாவின் கருத்துகள் இங்கே, ராஜ்ராஜின் கருத்துகள் இங்கே, எனது கருத்துகள் இங்கே. இது நிஜமா கல்யாணராமனின் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாதை தெரியுது பார், உன்னை போல் ஒருவன் – நான் இரண்டையும் பார்த்ததில்லை. இதை எல்லாம் போட்டிருக்கக்கூடாதா?

நாலு வேலி நிலம் – இது படமாக வந்ததே தெரியாது. தி. ஜானகிராமனின் கதை. பாட்டுகள் இதை கெடுக்கின்றன என்று சொல்லி இருக்கிறார்.

குமார ராஜா – சில பகுதிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் சந்திரபாபு பாடிய “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” பாட்டு மட்டும்தான். பார்த்ததில்லை.

அவருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார். நான் பார்த்து பல வருஷம் இருக்கும், பார்த்த போது படம் பிடித்துத்தான் இருந்தது.

வாலி மீது பாய்ந்திருக்கிறார். கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார். வாலி கேட்டால் கண்ணதாசனை காப்பி அடிப்பதில் எனக்கு பெருமைதான் என்று சொல்லி இருப்பார்.

சிவாஜி மீது ஏகமாக பாய்ந்திருக்கிறார். verbatim ஆக – “இவர் முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே!…”

ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.

கே. பாலச்சந்தரை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் அனேகமாக இது அறுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது என் யூகம்தான், எழுதப்பட்ட தேதி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்பவே சிவாஜியை பற்றி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்களா?

எம்ஜிஆர் லிஸ்ட்


சிவாஜி படங்களுக்கும் எம்ஜிஆர் படங்களுக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. இந்த ப்ளாகில் இடம் பெற்ற 12 எம்ஜிஆர் படங்களின் லிஸ்ட்:

அன்னமிட்ட கை (Annamitta Kai)
அரச கட்டளை (Arasa Kattalai)
அரசிளங்குமரி (Arasilankumari)

பாக்தாத் திருடன் (Baghdad Thirudan)

கணவன் (Kanavan)
காஞ்சித் தலைவன் (Kanchith Thalaivan)

மஹாதேவி (Mahadevi)

நான் ஏன் பிறந்தேன் (Naan Yen Piranthen)
நீரும் நெருப்பும் (Neerum Neruppum)

பணம் படைத்தவன் (Panam Padaitthavan)
பெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)

ராணி சம்யுக்தா (Rani Samyuktha)

சிவாஜி லிஸ்ட்


சிவாஜி படங்களுக்கும் எம்ஜிஆர் படங்களுக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. இந்த ப்ளாகில் இடம் பெற்ற 15 சிவாஜி படங்களின் லிஸ்ட்:

அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)
அன்பை தேடி (Anbai thedi), அன்பை தேடி 2
அந்த நாள் (Andha Naal), அந்த நாள் 2, அந்த நாள் 3

சிரஞ்சீவி (Chiranjeevi)

டாக்டர் சிவா (Doctor Siva)

இமயம் (Imayam)
இரும்புத் திரை (Irumbuth Thirai)

கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)
குறவஞ்சி (Kuravanji)

மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)

நான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)
நவராத்திரி (Navaraatthiri)

ராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)

சுமதி என் சுந்தரி (Sumathi En Sundari)

திரிசூலம் (Thirisoolam)