வாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II


சண்டை போட யாரும் வராததால் சரி நானும் பக்சுமே கொஞ்சம் அடித்துக் கொள்கிறோம்.

பக்ஸ் ஒரு அடாவடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அதை முதலில் பார்ப்போம்.
விக்ரமை விட நெஞ்சில் ஓர் ஆலயம் நன்றாகவே இருக்கிறது. அதனால் சுஜாதா நெஞ்சில் ஓர் ஆலயத்தை குறை சொல்லக் கூடாது..
இருந்து விட்டு போகட்டுமே? அதனால் என்ன? சுஜாதா எப்போதாவது விக்ரம் நெஞ்சில் ஓர் ஆலயத்தை விட சூப்பர் என்று எழுதி இருக்கிறாரா என்ன? பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது? மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும்? விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே!

பக்ஸ் 3 அடாவடி ஸ்டேட்மெண்ட்களை குறிப்பிடுகிறார்.
1. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை.
இதை இப்படி பார்க்க வேண்டும். நெஞ்சில் ஓர் ஆலயம் உலகத் தரம் வாய்ந்த படம் இல்லை. அதை தமிழின் தலை சிறந்த படம் என்று சொன்னால், we are setting the bar too low. இதுதான் அவர் சொல்வதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன்.

2. ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.
நாம் சாதாரணமாக ஸ்ரீதரை ராம நாராயணன், ஜம்பு புகழ் கர்ணன் ஆகியோரோடு ஒப்பிட்டு ஆஹா பெரிய ஜீனியஸ் என்கிறோம். அவர் அந்த கட்டுரையில் சத்யஜித் ரே எப்படி படம் எடுப்பார் என்று பேசுகிறார். (நான் அந்த பத்திகளை என் ஒரிஜினல் போஸ்டில் கொடுக்கவில்லை). கே.எஸ்.ஜிக்கும் கர்ணனுக்கும் உள்ள இடைவெளி ரேக்கும் கே.எஸ்.ஜிக்கும் இருக்கத்தான் செய்கிறது.

3. கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.
சினிமா பாட்டுகளில் என்ன ராமாயணமா எழுத முடியும்? சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா? கண்ணதாசனும் வாலியும் கிடைத்த ஃபார்மட்டில் அருமையாக எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவுக்கு சினிமா பாட்டுகளின் constraints புரியவில்லை என்று நினைக்கிறேன்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

16 Responses to வாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II

 1. Bags says:

  நானும் சண்டை போடுகிறேன். நிறுத்து உன் “அவர்”, “இவர்” என்ற ஏக வசனத்தை!

 2. bmurali80 says:

  //மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும்? விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே!//

  😀

 3. Bags says:

  கடைசியில் விஷயம் இல்லாமல் பிளாக்கை ஓட்ட வைத்துவிட்டதே இந்த சன் டி.வி.! நானும் யாராவது உருப்படியாக (RV ஒத்து போகும் கருத்துக்களை சொல்லி எனது நெற்றிக்கண்ணை மூடிவிட்டான். “அவன்” “இவன்” என்று மரியாதையாக பேசாமல் “அவர்” ”இவர்” என்ற ”ஏக வசனத்தில்” பேசியதை வைத்து சண்டை போட்டால் தான் உண்டு.) சண்டை போட்டால் இன்னும் கொஞசம் ஓட்டலாம்.

 4. puratchi rasigan says:

  Funny thing is neither of you picked up
  Sujatha’s comment about Sivaji as controversial.

  That shows,
  clearly shows,
  very clearly shows ,
  Ullangai nelli kani pol,
  Muzhu poosanikai in Soru pol,

  that both of you are Sivaji haters and MGR fans.

  Plum , you are dead right.

 5. RV says:

  puratchi rasigan,

  ithu ennanga kodumaiya irukku? Bags raised some points and I am just registering my disagreement with the points he raised. It feels like we need to say in every post that Sivaji is a great actor before I say anything else! sari ethukku veen vambu, check out my next post!

 6. முதலில் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். உங்கள் வலைப்பூவில் ஒரு பதிவிலிருந்து மற்ற பதிவுகளுக்கு செல்ல வசதிகள் குறைவாக உள்ளன. வேறு பதிவுகளுக்கான இணைப்புகள் பெற இல்லம் பக்கத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அல்லது எனக்குத்தான் அவை சரியாக புலப்படவில்லையா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 7. RV says:

  டோண்டு அவர்களே,

  இல்லை, எனக்குத்தான் கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு குறைவு. கூட்டாஞ்சோறு ப்ளாக் ரோலில் இருக்கிறது. அடுத்த ப்ளாக் உருவாகும்போது ப்ளாக் ரோலில் எப்படி சேர்ப்பது என்பது மறந்துவிட்டது, இன்னும் தெரியவில்லை…

 8. Bhuvanesh says:

  கண்ணதாசன் அவர்களை காப்பி அடிப்பவர் என்று சொல்லி இருக்கிறார்! கண்ணதாசன் அவர்கள் எந்த சூழ்நிலையில் சில பாட்டுகளை எழுதினார் என்று சமீபத்தில் படித்ததை கூறுகிறேன்:

  ## 1
  Recording Studio வில் கண்ணதாசன், எம்.எஸ்.வி எல்லாம் இருக்கும் போது ஒருவர் வெளிநாட்டு விஸ்கி விற்றுக்கொண்டு வந்திருக்கிறார். கவிஞர் மது பிரியர் என்று எல்லோருக்கும் தெரியும். அதை வாங்க ஆசை! அங்கே இருந்த அனைவரிடமும் கேட்டு பார்த்தும் போதிய பணம் கிடைக்கவில்லை. கடைசியாக தன் அண்ணனை அழைத்து விஷயத்தை சொல்லி இருகார். அண்ணன் பணம் தருவதிற்கு பதில் ‘அட்வைஸ்’ தந்திருக்கிறார். அப்போது எழுதுன பாட்டு

  “அண்ணன் என்ன டா தம்பி என்ன டா அவசரமான உலகத்திலே”

  ## 2
  காலை எட்டு மணி பாடல் பதிவு. எம்.எஸ்.வி அவர்கள் பின் இரவு ரெகார்டிங் முடித்து தூங்கிவிட்டார்! காலை ‘Recording Studio’ வில் இருந்து அழைத்திருக்கிறார்கள், எம்.எஸ்.வி இன் உதவியாளர் விஷயத்தை சொல்லியிருக்கிறார்! சிறிது நேரம் பொறுத்து இருந்த கவிஞர், நான் பாட்டை எழுதுகிறேன், அவன் வந்து மெட்டு அமைக்கட்டும் என்று கூறி விட்டு எழுதிய பாட்டு
  “அவனுகென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானன்றோ!”

  ## 3
  அதில் இருந்த முன்றாவது பாட்டும் படமும் மறந்து விட்டது. சூழ்நிலை இது தான், எம்.எஸ்.வி ஒரு பட்டை “மே” மாதம் படபிடிக்க இருக்கிறார்கள், பாட்டை எழுதி கொடுங்கள் என்று அடிக்கடி கேட்டு இருக்கிறார். அதற்கு கவிஞர் “என்னய்யா சும்மா மே மே என்கிறாய்” என்று கேட்டு விட்டு எழுதிய பாட்டின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும்.

  யாராவது பாட்டை சொன்னால் தேவலை!

  காப்பி அடிப்பவரால் இப்படி சூழ்நிலைகேத்தவாறு ‘Spontaneous’-ஆ எழுத முடியுமா?

  வாலி தலைமுறைகளை கடந்து நிற்கும் கவிஞர்! கண்ணதசானுகே சவால் விட்டவர்!

  இவைகளை பற்றி ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை! சுஜாதா இருந்திருந்தால் அவர் ஸ்டைலில் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார்!

 9. bmurali80 says:

  RV –

  I think dondu is saying that browsing the site is little tough. You may try and choose a different theme like “Cutline”…If you need help on choosing a theme let me know. My email address is in the comment header details.

 10. //யாராவது பாட்டை சொன்னால் தேவலை//
  அன்பு நடமாடும் கலைக்கூடமே என்று ஆரம்பித்து ஒவ்வொரு வரியும் மே என்று முடியும்.

  சிவாஜி மற்றும் ஜயலலிதா நடித்தது. அவன்தான் மனிதன் என்னும் படம். பாட்டு சீன் என்னவோ மஞ்சுளா சிவாஜிக்குத்தான்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 11. RV says:

  புவனேஷ், டோண்டு, அருமையான விவரங்களுக்கு நன்றி!

  பிமுரளி, கட்லைனுக்கு மாறிட்டேன். நல்லாத்தான் இருக்கு. ஆனா பிரசன்னா ஏதோ வெப் லிங்க் சரியா வரமாட்டேங்குதுன்னு சொன்னார். உங்களுக்கு இதை பத்தி ஏதாவது தெரியுமா?

 12. bmurali80 says:

  அர்.வி-

  பிரசன்னாவின் வலைத்தள சுட்டி http://www.prasannag.com வருகிறதே…

 13. Bhuvanesh says:

  நன்றி டோண்டு ராகவன், ஆர்.வி.
  ஆர்.வி , நீங்கள் யூத் ஆகா இருந்த போது (ஹீ ஹீ) வந்த ரஜினி, கமல் படங்களையும், அவர்கள் போட்டி போட்ட விதத்தையும் பத்தி சொன்னால் நன்றாக இருக்கும்!

 14. Pingback: கண்ணதாசன் காரைக்குடி! « Suttapalam’s Weblog

 15. RV says:

  புவனேஷ், நீங்கதான் சுட்ட பழம் என்று தெரியாது!

  அன்றைய யூத் படங்களை பற்றி எழுதுவது நல்ல யோசனை. கூடிய விரைவில்…

bmurali80 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: