ஒளி விளக்கு (Oli Vilakku)


விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.

திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!

லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.

லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?

துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!

ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!

சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!

சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!

குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!

சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.

சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.

சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!

திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.

ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!

சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.

ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.

சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!

குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.

சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!

கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!

திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

16 Responses to ஒளி விளக்கு (Oli Vilakku)

 1. மணி says:

  இந்த படம் ஏற்கனவே ஹிந்தியில் தர்மேந்திரா
  தெலுங்கில் என்,டி.இராமராவ் நடித்து நன்றாக
  ஓடிய படங்கள்.தன் திரைப்பட வாழ்வினை
  நிலைப்படுத்திக்கொள்ள நரித்தனமாக திராவிட
  இயக்கத்தில் இணைந்து திராவிடக்கொள்கைகளை
  தன் படங்களில் காட்டி அன்றைய காலக் கட்டங்களில் திராவிட மாயையில் மதிமயங்கி
  கிடந்த இளிச்சவாய் தமிழர்களை தன்வயப்படுத்தினார் பயன்படுத்திக்கொண்டார். ஹிந்தியில்,தெலுங்கில்துணியோடு கைம்பெண்(விதவை)மறுமணத்தை வரவேற்றார்கள். ஆனால் திராவிடக் கொள்கையான கைம்பெண் மறுமணத்தை இந்த படத்தில் வலியுறத்தவில்லை. அதற்கு முழுமுதற்
  காரணம் ஜெமினியின் வாசன் நிறுவனம்.அதற்கு எம்ஜிஆரும் உடந்தை.ஏனைய நிறுவனங்களில்
  இவரின் வல்லாண்மை இங்கு செல்லாது.ஏற்கனவே மாடரன் தியேட்டர்ஸ் குட்டுப்பட்டார்.அதே நேரத்தில் இது ஜெமினியில் முதல் படம்.வழக்கம்போலவே தற்புகழ்ச்சி,தான் நல்லவன் என்று காட்டிக்கொள்ளும் போக்கே இந்த படத்திலும் மிகுந்துள்ளது.இந்த விமர்சனத்தில் அவரை குணசித்திர நடிகராக
  புகழப்படுகிறார்.அப்படியானால் ஒரு படத்திலாவது
  முழுநீள படத்தில் அந்த திறமையை காண்பித்திருக்களாமே!ஜெயல்லிதா பொறுத்தவரை பெறும்பாலும் கவர்ச்சி மற்றும்
  இறுமாப்பு,ஆணவம்,எதேச்சாரக குணங்கொண்ட
  பாத்திரங்களில் நடித்த்தே மிகுதி.அதே போக்கை இன்று அரசியலிலும் காணலாம்.கடவுள் தொடர்புடையக் கருத்துக்கள் இடம்பெற்றதும்
  இவருக்கு உடன்பாடானதே.கழகத்திற்க்கு தெரியாமல் மூகாம்பிகை போனவர்தானே.
  இந்தியா சீனா சண்டையின்போது ஏலம்விட்டு
  பணத்தை நன்கொடையாக வழங்கினார்.அதே தங்க வாள் இன்று அவரின் நன்கொடையாக
  மூகாம்பிகை கோயிலில் உள்ளது.அப்படியானால் ஏலத்தில் எடுத்தவர் யாரோ?இப்படி முரண்பாட்டின் மொத்த உருவமானவர் என்பதற்கு எவ்வளவோ? இனி எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
  ஏமாரும் இளிச்சவாய் இருக்கும்வரை….
  மணி

 2. RV says:

  Mani,

  Thanks for the feedback. I didn’t know that the movie was made in Telugu as well.

 3. MUTHU MOHAN says:

  Maniiku MGR mel enna kopamo? But he did good things for poor. Everyone should accept that!

 4. BaalHanuman says:

  ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே.

  வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

  இதில் இடம் பெற்ற , ஆண்டவனே , உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

  1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது , அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது.

 5. BaalHanuman says:

  எம்.ஜி.ஆர் படங்களில், அவர் புகைப்பது போலவோ, குடிப்பது போலவோ காட்சி இருக்காது..

  ஒளி விளக்கு படத்தில் “தைரியமாக சொல் நீ மனிதன் தானா” என்ற பாடலில் மட்டுமே குடித்திருப்பது போல் நடித்திருப்பார்.

 6. சாரதா says:

  //எம்.ஜி.ஆர் படங்களில், அவர் புகைப்பது போலவோ, குடிப்பது போலவோ காட்சி இருக்காது.//

  அதற்குக்காரணம், எந்த ரோலிலும் நடித்து திறமை காட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. மாறாக அவரது படங்களின் வசனங்கள், பாடல்கள், காட்சியமைப்புக்கள் அனைத்தும் மக்களின் ‘ஓட்’டை குறி வைத்து மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும்.

  //ஒளி விளக்கு படத்தில் “தைரியமாக சொல் நீ மனிதன் தானா” என்ற பாடலில் மட்டுமே குடித்திருப்பது போல் நடித்திருப்பார்.//

  அதுவும்கூட, மற்றவர்கள் அவருக்குத்தெரியாமல் சதிசெய்து குடிக்க வைத்து விடுவதைப்போல காண்பித்து, பின்னர் அதற்கும் கூட அவரது மனசாட்சி பல உருவங்களில் வந்து பாடி கண்டிப்பது போல செய்து காம்ப்ரமைஸ் பண்ணியிருப்பார்கள்.

  இமேஜ், இமேஜ் என்று அலைந்தவர்களில் அவரைப்போல ஒருவரைப் பார்க்க முடியாது. மணி சொன்னதுபோல, அது அவருக்கு பெரிய பலனைத் தந்தது.

  • Gita says:

   //அதற்குக்காரணம், எந்த ரோலிலும் நடித்து திறமை காட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. //

   Your criticism is so lame. What has no smoking/no drinking got to do with acting skills? Like him or hate him but MGR should be really applauded for not smoking and not drinking on screen. A definite role model !

  • parthiban says:

   Sivajiyoda utthal padathuku aho oho vimarsanama eludhi thallia kaigalidam nermai enbadhu marunthukum erukkathu enbatharku edhu oru edhukkattu

 7. BaalHanuman says:

  ஏழைப் பங்காளர் என்ற காரணத்தால் மக்களிடையே அவருக்குக் கிடைத்த அளவு கடந்த மக்கள் ஆதரவைக் கண்டு அவரே தன்னைப் பற்றி ஒரு சூப்பர் மேன் என்று நம்ப ஆரம்பித்து விட்டார். தனக்குக் கிடைத்த இமேஜ் வட்டத்துக்குள் அவரே சிறைக்கைதி ஆனார். சூப்பர் மேனுக்கு வழுக்கை இருக்கலாமா? எனவே அதற்கு ஒரு தொப்பி அணிந்து கொண்டார். அவர் இறந்த பிறகு கூட அவரது உடலை தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும் அலங்கரித்துக் கொண்டிருந்தன.

 8. knvijayan says:

  இந்த படத்திற்கு ஜனசக்தி (CPI கட்சி பத்த்ரிக்கை)இதழில் படம்வந்தபோது அறந்தை நாராயணன் (தமிழின் தலைசிறந்த கலை இலக்கிய விமர்சகர்) இப்படி எழுதினார் நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க என்பது mgr மற்றும் ss வாசனையும் குறிக்கிறது என்று.

 9. rinks says:

  Got hold of this movie finally. Wanted to watch it for two reasons as its 100th film of MGR and for the hype surrounding the song “Aandavane un…”

  I did not know it was remake of Phool Aur Patthar. Haven’t watched PAP so no comparisons. But seriously this movie was nothing special. It sucked big time.

  Cannot expect logic in MGR movies. But the screenplay was terrible especially in second half.

  Was surprised at M.N.Nambiar’s absence in 100th film of MGR. Thankfully Asokan was without his usual antics. lol.

  I usually don’t like Jayalalitha in MGR films. She gets on my nerves. But all she had to do in this movie was drool all over MGR and call him darling in every single dialogue. She had no role and was there to just add glamor.

  Hero oru widow va vechu kaapathra kadhai sentiment odidum nu ninaichrupaanganu ninaikren. Heard it was not a great success.

  Oor makkal Sowcar Gandhimathi purushana MGR kittendhu kaapathi thalaila kattu pottapa kuda purinjikka maatengranga aana MGR kuzhandaiya neruppu lendhu kaapathina udane dhaan sowcar purinjipaangalaam. Even express their wish to see her getting married again. But tamil padam avlo progressive aa edhir paaka mudiyuma. She is made to die in the end. Does the character die in hindi too?

  Koodave irukra Jayalalitha va unnum pannaama vechurka Asokan Sowcar Janaki ya mattum kashta pattu rape panna try panraar climax la. LOL.

  MSV’s music could have been better especially considering the fact its MGR’s 100th movie. S.S.Vasan production gardhaala MGR romba dominate panna mudiyama pogirkum ninaikren. Liked only two songs Aandavane and dhairya maaga chol songs. Naanga Pudhusa song la TMS voice modulation nalla irundhudhu. L R Eswari ku edhukku ivlo paatu koduthaanganu therila. Grrr. Can tolerate maximum two songs of LRE in a film not more than that… that’s not the case with P.Suseela. Ella paatum PS na kuda allupu thattaadhu. Eg: Karpagam, Paalum Pazhamum, Paarthal Pasi Theerum etc.

  Climax la Sowcar 5 Lakhs anadhai kuzhandaingalukku ezhudhi vechu sonna message nalla irundhudhu.

 10. anbalagan says:

  MGR i pattri thairiyamana vimarsanngal

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: