ஊட்டி வரை உறவு (Ooty Varai Uravu)


சிவாஜியே ஸ்ரீதரிடம் தன்னை வைத்து ஒரு காமெடி படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டாராம். அப்படி எடுக்கப்பட்ட படம்தான் இது. 1967இல் வந்த படம். சிவாஜி, கே.ஆர். விஜயா, பாலையா, வி.கே. ராமசாமி, நாகேஷ், முத்துராமன், எல். விஜயலக்ஷ்மி, சச்சு நடித்தது. எம் எஸ்வி இசை. எல்லா பாட்டுகளும் கண்ணதாசன்தானோ? இயக்கம் ஸ்ரீதர்.

பாலையாவின் அங்கீகரிக்கப்படாத மகள் விஜயலக்ஷ்மி. கே.ஆர். விஜயா ஆள் மாறாட்டம் செய்து தான்தான் அந்த மகள் என்று பாலையாவின் வீட்டில் நுழைந்துவிடுவார். பாலையா தன் நண்பனின் மகள் என்று சொல்லி ஒப்பேற்றுவார். சிவாஜி உண்மையை கண்டுபிடிப்பார், பிறகு இருவருக்கும் தமிழ் பட இலக்கணத்தின் படி காதல். இடையில் விஜயலக்ஷ்மி, அவரது காதலன் முத்துராமன் இருவரையும் சேர்த்து வைக்க சிவாஜி தான் ஒரு டாக்டர் என்று வேறு கூத்தடிப்பார். ஊரில் வம்பு பேச மட்டுமே உயிர் வாழும் நாகேஷ் கே.ஆர். விஜயாவைப் பற்றி அவரது மாமாவிடம் சொல்லிவிடுவார். பிறகு சாஸ்திரத்துக்கு மாமாவுடனும் அடியாட்களுடனும் ஒரு சண்டை போட்டுவிட்டு, சிவாஜி-கே.ஆர்.வி திருமண மேடையில் பாலையா தனது மகளை பற்றி ஒத்துக்கொள்ள, விஜயலக்ஷ்மிதான் அந்த மகள் என்று சொல்லி, இரு ஜோடிகளும் சேர்ந்து, சுபம்!

முக்கால்வாசி படம் ஊட்டியில்தான். அழகான ஊர். இப்போது வெயிலாக இருக்கிறது என்று 4 வருஷங்களுக்கு முன் போயிருந்த என் மனைவி சொன்னாள்.

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் பாலையாவுக்கு ஒரு இடம் உண்டு. இந்த மாதிரி காமெடி ரோல்களில் கலக்குவார். அவர் தன் மகனும் மகளும் காதலிக்கிறார்கள் என்று நினைத்து சொல்ல முடியாமல் முழிப்பதும் தவிப்பதும் அருமை. நாகேஷ், வி.கே. ராமசாமி கொடுத்த வேலையை ஒழுங்காக செய்கிறார்கள். சிவாஜி அலட்டிக்கொள்ளவில்லை. பார்க்க இளமையாக சிக்கென்று இருக்கிறார் (புதிய பறவை போல இல்லை.) நல்ல ஸ்டைல் வேறு – தேடினேன் வந்தது பாட்டில் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலும், நாகேஷை மிரட்டுவதும் நன்றாக வந்திருக்கும். ஆனால் வி.கே.ஆர்., சிவாஜி, முத்துராமன், வி. லக்ஷ்மி டாக்டர் வேஷம் அமெச்சூர் நாடகம் மாதிரி இருக்கும். எல். விஜயலக்ஷ்மி “ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்” பாட்டுக்கு ஆடிவிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டுவிட்டார். கே.ஆர். விஜயா ஒரு நல்ல அழகியிலிருந்து சகிக்க முடியாத ஆன்டியாக மாறத் தொடங்கிவிட்டது நன்றாக தெரியும். இன்னும் முழுமையாக மாறவில்லை, அதனால் பிழைத்தோம். முத்துராமனுக்கு பெரிதாக வேலை இல்லை. எல்லா ஸ்ரீதர் படங்களிலும் முத்துராமன் வந்து போவார் போலிருக்கிறது!

முத்தான பாடல்கள். எல்லா பாட்டுகளும் படமாக்கப்பட்ட இடங்களும் ரொம்பவே அழகு. எம்எஸ்வி ஸ்ரீதர் காம்பினேஷன் எப்போதுமே டாப் க்ளாஸ்தான்.

“தேடினேன் வந்தது” ஒரு அற்புதமான பாட்டு. “என் மனதில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி!” என்ன ஒரு சந்தம் இந்த வரிகளிலே! சுசீலா சுசீலாதான். என் கல்லூரி நண்பன் சிவப்ரகாசத்துக்கு இந்த பாட்டும் கே.ஆர்.வியின் ஆட்டமும் ரொம்ப பிடிக்கும்.

“ஹாப்பி இன்று முதல் ஹாப்பி” கொடுமையான பல்லவி. ஏன் இப்படி ஆங்கிலத்தையும் தமிழையும் கொலை செய்ய வேண்டும்? ஏதோ catchy ஆக இருக்க வேண்டும் என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல மெட்டு.

“புது நாடகத்தில் ஒரு நாயகி” இன்னொரு அருமையான பாட்டு. நல்ல வரிகளும் கூட. இதை பற்றி நண்பர் சூர்யா தரும் தகவல்: உண்மையா வதந்தியா என்று தெரியாது. முதலில் ஊட்டி வரை உறவில் ஜெயலலிதாவே புக் செய்யப்பட்டு 4 நாள் ஷீட்டிங் நடை பெற்றது. பின்னர் சின்னவருக்கு தெரிய வரவே ஜெ. பின் வாங்கினார். அதையே சிம்பாலிக்காக கவிஞர் “புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்” என்று பாடல் எழுதினார். ஜெ. ஜகா வாங்கி பின்னாளில் மீண்டும் கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்ததையே தனது பாணியில் “நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகாராணி” என்று எழுதி சும்மா அமர்க்களப் படுத்திவிட்டார்.

“பூ மாலையில் ஓர் மல்லிகை” டி.எம்.எஸ்ஸை விட சுசீலா ஒரு மாற்று மேலாக பாடி இருக்கிறார்.

“அங்கே மாலை மயக்கம் யாருக்காக” பாட்டு மற்ற பாட்டுக்கள்தான் ஒரு மாற்று குறைவாக தெரிகிறது. நல்ல பாட்டு.

“யாரோடும் பேசக் கூடாது” இந்த படத்தில்தானா? எனக்கு ஞாபகமே இல்லையே! யாராவது confirm செய்யுங்களேன்!

எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் பிடித்த பாட்டு “ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்” தான். பி.பி.எஸ்., எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல்களில் எனக்கு ஒரு பெரிய மயக்கம் உண்டு. “ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல” என்ற வரிகளிலும், அதை தொடர்ந்து வரும் இசையிலும் உள்ள கொஞ்சல் அமர்க்களம்!

பாடல்களை இங்கே கேட்கலாம்.

அருமையான பாட்டுகளுக்காகவும், சும்மா ஜாலியான படம் என்பதற்காகவும் இன்றும் பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். C+ grade

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

18 Responses to ஊட்டி வரை உறவு (Ooty Varai Uravu)

 1. Manivannan says:

  அதுவரை சிவாஜியும், ஜெயலலிதாவும் ஜோடியாக நடிக்காததால், ஊட்டி வரை உறவு படத்தை முதலில் காலமெல்லாம் காத்திருப்பேன்
  என்னும் பெயரில் ஜெயலலிதாவை ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய முயற்சித்தார்கள், ஆனால் ஜெயலலிதாவின கால்ஷீட் ஒத்துவராததால், பெயரை மாற்றி கே.ஆர்.விஜயா, சிவாஜிக்கு ஜோடி சேர்ந்தார்.
  அதன் பின் கலாட்டா கல்யாணம் படத்தில் ஜெயலலிதா முதன் முதலாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.
  இதற்க்கு முன் கந்தன் கருணை, மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆகிய படங்களில் சிவாஜியோடு நடித்திருந்தார் ஆனால்
  ஜோடியாக இல்லை

 2. muthu says:

  Hi,
  I want lyrics of old tamil film songs
  like Kannadasas’s.
  Does any one know where can I get it ?

 3. rinks says:

  Thedinen vandhadhu was undoubtedly a classy number. The song exhibit PS versatility aptly indeed. But KRV is a horrible dancer. She did not do justice to the song. My dad always use to mock her steps especially in the song ‘Ange maalai mayakkam yaarukaga’. கழுத உதைக்கிற மாதிரி உதைக்குது பாருன்னுவார்.

  I concur with you completely about the song Happy indru mudhal happy. I suppose its because of the cheesy lyrics the song never made up to my favorite list.

 4. சாரதா says:

  மணிவண்ணன்….

  சிவாஜியும் ஜெயலலிதாவும் ஜோடி சேர்ந்த முதல் படமான ‘கலாட்டா கல்யாண’த்தில் (இயக்கம் சி.வி.ஆர்), படத்தின் முதல் காட்சியே பாடல் காட்சிதான். பாடலின் முதல் வரி…

  ‘நல்ல இடம்…. நீ வந்த இடம்…
  வரவேண்டும் காதல் மகாராணி’

  What a symbolic liric….

 5. Manivannan says:

  ‘நல்ல இடம்…. நீ வந்த இடம்…
  வரவேண்டும் காதல் மகாராணி’

  இந்த பாட்டைக்கேட்டு MGR ஜெயலலிதாவோடு கோபிக்கவில்லையா? 🙂

 6. bmurali80 says:

  ஆர்.வி –

  என் மின்னஞல் முகவரியை சென்ற வாரம் அனுப்பினேன். நினைவெல்லாம் நித்யா சம்மந்தமாக…

 7. RV says:

  பிமுரளி,

  உங்களுக்கு பதில் அனுப்பினேனே? உங்கள் ஸ்பாம் ஃபோல்டரை எதற்கும் பாருங்கள்…

 8. RV says:

  maNivaNNan, saaradhaa, rinkS,

  Thanks for the info!

  Muthu, check out tfmpage.com

 9. bmurali80 says:

  பார்த்தேன். பதில் அனுப்பியிருக்கேன்.

  மேலும் ஸ்ரீதர் படங்கள் பார்க்க

  http://www.rajshri.com/Tamil/special/cvsridhar.asp?page=1

 10. geethailangovan says:

  HI,
  I AM NEW FRIENT. WELCOME TO ALL.

 11. Das says:

  RV,

  “poo mAligaiyil” ‘kAnadA’ rAgaththil amaikkappatta pAdal?

  innoru pAdal, Sridarin “nenjirukkum vari” yil “muthhukkalO kangal” (kAnadA rAgam)

 12. RV says:

  Das,

  I don’t know music that well. If a knowledgable person like yourself says so, that must be right. However, the two tunes look significantly different to me – shouldn’t the tunes be closer if they are based on the same raga? (Layman’s question, of course)

 13. RV says:

  Murali,

  I saw the site – rajshri.com only today. Awesome! I heard a couple of songs today…

 14. surya says:

  இதற்கு முதலில் ஸ்ரீதர் வைத்த பெயர்.

  ‘ வயது 16 ஜாக்கிரதை”

 15. surya says:

  நல்ல இடம்…. நீ வந்த இடம்…
  வரவேண்டும் காதல் மகாராணி’ இந்த பாட்டிற்கும் ஒரு பின்னணி உண்டு..

  முதலில் ஊட்டி வரை உறவில் ஜெயலலிதாவே புக் செய்யப்பட்டு 4 நாள் ஷீட்டிங் நடை பெற்றது. பின்னர் சின்னவருக்கு தெரிய வரவே ஜெ. பின் வாங்கினார்..

  அதையே சிம்பாலிக்காக கவிஞர் “புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் என்று பாடல் எழுதினார்.

  ஜெ. ஜகாவாங்கி மீண்டும் கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்ததையே தனது பாணியில்..

  நல்ல இடம்…. நீ வந்த இடம்…
  வரவேண்டும் காதல் மகாராணி’ என்று எழுதி சும்மா அமர்கள படுத்தி விட்டார்.

 16. Venkate bala says:

  ஊட்டி வரை உறவு காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு வந்த மெகா ஹிட் கே ஆர் விஜயா சிவாஜி கணேசன் உள்பட அனைவரின் நடிப்பும் சூப்பர் பாடல்கள் சூப்பர் மற்றபடி குறை கூறமுடியாத படம் காமடி எனும் போது அதை சரியாக கோபு மற்றும் ஶ்ரீதர் அவர்கள் சரியாக செய்துள்ளனர் குறை கூறுபவர்கள் அன்றைய வழக்கப்படி வேறு ஒரு நடிகரை திருப்தி படுத்த குறை கூறும் வழக்கம் உண்டு அதன் அடிப்படையில் இப்படம் சில பேரால் குறை கூறப்பட்டுள்ளது எல்லா வகையிலும் நடிக்க தெரிந்த சிவாஜி கணேசன் அவர்கள் மேல் மாற்று நடிகர்களின் ரசிகர்கள் குறை கூறுவது உணடு அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: