காதலிக்க நேரமில்லை – Part 3


1964லில் சித்ராலயா வெளியிட்ட திரைப்படம்.

இந்த சினிமாவை ஒரு பத்துமுறையாவது நான் பார்த்திருப்பேன். இன்னும் ஒரு பத்து முறை பார்த்தாலும் ஆச்சரியம் இல்லை.

நடிகர்கள் – பாலையா, முத்துராமன், நாகேஷ், ரவிச்சந்திரன் (அறிமுகம்),  வி.எஸ். ராகவன், வீராசாமி

நடிகைகள் – ராஜஸ்ரீ, சச்சு, காஞ்சனா (அறிமுகம்)

கதை வசனம் – ஸ்ரீதர் & கோபு

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன் உதவி: பஞ்சு அருணாசலம்

பின்னணி – P.B.ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, L.R.ஈஸ்வரி, ராஜூ

நடனம் – தங்கப்பன் உதவி: M.சுந்தரம் – பின்னாளில் தங்கப்பனிடம் கமல் உதவி நடன இயக்குநராக சில வருடங்கள் பணியாற்றினார்.

இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வனாதன், ராமமூர்த்தி உதவி- கோவர்த்தன், ஹென்றி டேனியல்

அசோசியேட் டைரக்டர் – C.V.ராஜேந்திரன் அசோசியேட் டைரக்டராக – C.V.ராஜேந்திரன் பணியாற்றிய முதல் படம். தனது உறவினராக (தம்பி முறை) இருந்தாலும் பல முறை கேட்டும் அவருக்கு திறமை வந்த பிறகே அசோசியேட் ஆக்கினார்.

உதவி டைரக்டர் – லெனின்

டைரக்‌ஷன் – ஸ்ரீதர்

ஸ்ரீதரின் மாஸ்டர்பீஸ். இரண்டு நண்பர்கள் ஒரு செல்வந்தரை ஏமாற்றி அவர் பெண்களை கைப்பிடிப்பதுதான் கதை. ஒரு வரியில் சொல்லிவிடக்கூடிய இந்த கதையை திரைகதையினால் மூன்று மணி நேர எண்டர்டெய்ன்மண்டாக மற்றுவதில் தான் ஒரு இயக்குனரின் ingenuity தெரிகிறது. இதைத் தான் ஸ்ரீதர் வெளிப்படுத்திஇருக்கிறார்.

இதில் நுணுக்கமான ஒரு டெக்னிக் ஸ்ரீதர் கையாண்டிருக்கிறார். வழக்கமாக ஒரு சோகமான மெய்ன் கதை இருக்குமிடத்தில் ஒரு மாற்றத்திற்க்காக ஒரு காமெடி ட்ராக் இருக்கும். உதாரணத்திற்கு கல்யாணப்பரிசில் மன்னார் & கோ மற்றும் போலி பைரவன். ஆனால் இதில் மெய்ன் கதையே காமெடி தான். காமெடியில் ஒரு காமெடி ட்ராக். சிலர் இதை ஸ்ரீதர் கோட்டை விட்ட விஷயம் என்று கூறலாம். என்னை பொறுத்தவரையில் இரண்டுமே (main and comedy tracks) வெளுத்து வாங்கியது. அதனால் இந்த டெக்னிக் சக்ஸஸ் தான்.

பொள்ளாச்சிக்கு அருகில் அருமையான மலைகள், மற்றும் தண்ணீர் நிறைந்த இயற்க்கை சூழலில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான, பெரும்பாலும் அரசியல்வாதிகளும், junketல் செல்லும் பெரிய சர்க்கார் பதவியில் இருக்கும் ஆஃபீஸர்களும் அனுபவிக்க கட்டபட்ட ஒரு Traveller’s Bungalow (TB) பாலையாவின் வீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஓரு சீனில் இரவில் எல்லோரும் டின்னர் சாப்பிடும் காட்சி. ரம்யமான் சூழ்நிலயை படத்தில் பிரதிபலித்திருக்கிறார்கள். அனேகமாக அது சினிமா ஷூட்டிங்கிற்க்கு வந்த அனைவரும் enjoy பண்ணிய ஒரு டின்னராக இருந்திருக்க வேண்டும்.

ரவிச்சந்திரனும், காஞ்சனாவும் அறிமுகமாக இருந்தாலும் நன்றாக திரைகதையுடன் ஒன்றி இருக்கிறார்கள். ரவிச்சந்திரனின் நடனம் கொஞசம் அலட்டலாக இருந்தாலும் அந்த காலத்து தேவ் ஆனந்த், சஷிகபூர் style போன்று இருப்பதால் ரசிகர்களுக்கு பழக்கமாகி இருக்க வேண்டும். அவர் பாலையா மற்றும் முத்துராமனுடன் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

காஞ்சனா மென்மையான அக்கா ரோலில் வந்து முத்துராமனை காதலித்துவிட்டு செல்கிறார். பசுமையான இயற்ககை காட்சிக்கு இவருடைய ஈஸ்ட்மென் பிங்க் கலர் கலர்ஃபுல் தான்.

ராஜஸ்ரீ தங்கை ரோல். இவர் ரவிசந்திரனுடன் இரண்டு, மூன்று பாடல்கள் பாடிச் செல்கிறார். இவருடைய காதல் கதையை முடிப்பதற்க்கு முத்துராமனை பாலையாவிடம் கதைவிட வைத்து ஸ்ரீதர் கதைவிட்டிருக்கிறார்.

இப்படி இவர்கள் விட்டுக்கொண்டிருக்கும் பொழுது நாகேஷ் தந்தை பாலையாவிடம் சினிமா எடுக்கப் போகிறேன் என்று கதைவிட்டுக்கொண்டிருப்பார். இவருடைய சினிமா கம்பெனி பெயர் “ஓஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்”. இவருடைய காமெடி அன்று பெரிய அளவில் ஹிட்.  முத்துராமனை பார்ப்பதற்க்காக காத்துக்கொண்டிருக்கும் பாலையாவிற்க்கு கதை சொல்கிறேன் பேர்வழி என்று அவரை பயமுறுத்தும் காட்சி இவர் கொடுத்த ஹிட்.

அவர் சச்சுவை ஹீரோயினாக ஆக்கியதும் போடும் கண்டிஷன்களும் சினிமாவிற்க்கு ஃபாலோ பண்ண வேண்டிய ரூல்ஸை சொல்லும் விதம் மிகவும் அற்புதமாக அமைந்திருக்கும். சினிமாவிற்க்கு ஃபைனான்ஸ் பண்ண யாரும் இல்லததால் ”ஒஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்” அவருடன் தங்கி விடுகிறது.

பாலையா அப்பாவியாக நடித்து வெளுத்து கட்டியிருக்கிறார். அவருடைய பண ஆசை அவருடைய அறிவை மயக்கிவிடுகிறது. அவர் வா, போ, என்று தன் சின்னமலை எஸ்டேட் மேனேஜர் அசோக்கிற்க்கு  (ரவிச்சந்திரன்) கட்டளையிட்டு கொண்டிருப்பார். ஆனால் செல்வந்தர் சிதம்பரத்தின் (முத்துராமன்) மகன் எனத் தெரிந்ததும் ஆச்சரியத்தில் ”அசோகர் உங்க மகரா?” என்று கேட்பது அருமையான் ஹாஸ்யம். (கல்லூரியில் படிக்கும் போது இந்த ஒரு காட்சி எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.) இப்படி பல காட்சிகள்.

நடிப்பு செல்வந்தர் சிதம்பரமாக வரும் முத்துராமன் அபாரமாக நடித்திருக்கிறார். முத்துராமனின் மிடுக்கான நடிப்பு எதோ உண்மையில் 1960களில் ஒரு பெரிய செல்வந்தர் பேசுவது போல் இருந்தது. டைமிங் அருமையாக synchronize ஆகியிருக்கிறது.

சென்னை காசினோ தியேட்டரில் வெளியிடப்பட்டு முதல் 25 நாட்கள் அனைத்து ஷோவும் ஹவுஸ் புல்லாகி ரிகார்ட் ஏற்படுத்திய படம்.

(இன்னும் ஒரு சிறிய பார்ட் எழுதுவதாக இருக்கிறேன். அது அடுத்த வாரம்.)

பற்றி Bags
Trying out

14 Responses to காதலிக்க நேரமில்லை – Part 3

 1. Manivannan says:

  எத்தனை காலம்தான் ஸ்ரீதரை வைத்து வண்டியை ஓட்டுவீங்க. ஸ்ரீதர் போர் அடிக்க ஆரம்பிட்துவிட்டார்.:-)

  வேறு ஏதாவது ஆரம்பியுங்க, பக்ஸ் எழுதுவது என்பது என்னவாயிற்று?

 2. nakkeran says:

  until some other old personality dies 🙂

 3. bmurali80 says:

  இந்த பதிவு என்ன நேயர் விருப்பம் நிகழ்ச்சி போல ஆகி விட்டது? அடுத்து என்ன ? 😛

 4. RV says:

  என்னங்க மணிவண்ணன், காதலிக்க நேரமில்லை போஸ்ட் எல்லாம் பக்ஸ் எழுதியதுதானே? என்ன கன்ஃப்யூஸ் ஆயிட்டீங்க?

 5. மணிவண்ணன் says:

  அக்டோபர் 20 எழுதிய “தன்னிலை விளக்கங்கள்” என்னும் போஸ்ட்டில்
  இந்த வார திட்டம்:
  1. பக்ஸ் சினிமா சினிமா தொடர் பதிவு பற்றி எழுதுவான்.
  என்று எழுதியிருந்தீர்கள். அதுதான் ஞாபகப்படுத்தினேன் 🙂
  பக்ஸ் சினிமா பற்றிய தொடர்தானே எழுதவேண்டும், ஸ்ரீதர் பற்றிய தொடரில்லையே? 🙂
  அல்லது ஸ்ரீதர் மட்டும்தான் சினிமா என் முடிபு செய்துவிட்டீர்களா? 🙂

 6. RV says:

  என்னங்க மணிவண்ணன், அதை பக்ஸ் எழுதி ரொம்ப நாளாச்சே? https://awardakodukkaranga.wordpress.com/2008/10/22/சினிமா-சினிமா-பதிவு/

 7. nakkeran says:

  AAha,

  Kuzhappitaingayya kuzhappitaynga

  kuzhappurangayya kuzhappuranga

  Result of overdose of Sridhar.

  I heard few more old film personalities are in serious condition.

 8. RV says:

  நக்கீரன்,

  குழப்பிட்டாங்க இல்லீங்க, குழம்பிட்டீங்க.

 9. nakkeran says:

  RV,
  Manivannan seems to be very keen person
  in your blogs.
  Obviously he is tired of Sridhar’s anjali.
  read his following line.

  “எத்தனை காலம்தான் ஸ்ரீதரை வைத்து வண்டியை ஓட்டுவீங்க. ஸ்ரீதர் போர் அடிக்க ஆரம்பிட்துவிட்டார்.:-) ”

  Instead you picked up other part of his message i.e (“வேறு ஏதாவது ஆரம்பியுங்க, பக்ஸ் எழுதுவது என்பது என்னவாயிற்று? ) and start dragging on that.

  Even other part of message only shows his
  desperation for something new.

  From that point of view, it is you who is
  “Kuzhappufying” him 🙂

  Poor Manivannan.
  Give him a break.
  He loves both your writing.
  He needs some thing different.

  Even bmurali is asking “What is next ?”

  Common RV.
  So many depend on your wonderful nostalgic
  reviews.

  They are better than borrowed articles from
  Vikatan.

 10. மணிவண்ணன் says:

  https://awardakodukkaranga.wordpress.com/2008/10/22/சினிமா-சினிமா-பதிவு/
  ஓஓஓஓஓ Ok இதுவா அது?
  “சினிமா சினிமா தொடர் “ஐ (சங்கிலி தொடர்) நான் சினிமா பற்றிய தொடர் (சினிமா வரலாறு) என நினைத்துவிட்டேன்.

  BTW: இந்த ஐடியாவும் (சினிமா பற்றிய தொடர்) நன்றாகத்தான் இருக்கு. 🙂

 11. மணிவண்ணன் says:

  மணிவண்ணன் சொல்வதென்னவென்றால்:
  நவம்பர் 10, 2008 at 10:17 பிற்பகல்
  https://awardakodukkaranga.wordpress.com/2008/10/22/சினிமா-சினிமா-பதிவு/
  ஓஓஓஓஓ Ok இதுவா அது?
  “சினிமா சினிமா தொடர் “ஐ (சங்கிலி தொடர்) நான் சினிமா பற்றிய தொடர் (சினிமா வரலாறு) என நினைத்துவிட்டேன்.

  BTW: இந்த ஐடியாவும் (சினிமா பற்றிய தொடர்) நன்றாகத்தான் இருக்கு.

 12. நானும் 15 முறை பார்த்திருப்பேன். கணக்கில்லை. ஊட்டி வரை உறவும் இதுவும் அலுக்கவே இல்லை இன்று வரை.

  வாழ்த்துக்கள்

 13. surya says:

  அசோசியேட் டைரக்டராக – C.V.ராஜேந்திரன் பணியாற்றிய முதல் படம்.

  தனது தம்பியாக இருந்தாலும் பல முறை கேட்டும் அவருக்கு திறமை வந்த பிறகே அசோசியேட் ஆக்கினார்.

  சென்னை காசினோ தியேட்டரில் வெளியிடப்பட்டு முதல் 25 நாட்கள் அனைத்து ஷோவும் ஹவுஸ் புல்லாகி ரிகார்ட் ஏற்படுத்திய படம்.

  இதில் நடன மாஸ்டராக இருந்த தங்கப்பனிடம் பின்னாளில் கமல் உதவி இயக்குநராக சில வருடங்கள் பணியாற்றினார்.

 14. k.s.mani says:

  tone of the reason for the success is film taken in Eastmen color in super contrast way

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: