மாடர்ன் தியேட்டர்ஸ்


mt

சேலத்தில் நானும் RVயும் படித்த கல்லூரிக்கு (அரசு பொறியியல் கல்லூரி, சேலம்),  போகும் வழியில் ”ஐந்து ரோடு”ஐ கடந்தவுடன் ஒரு நான்கைந்து மைலில் வலது புறத்தில் ஒரு அருமையான ஒரு ஃபார்ம் ஹவுஸ் போல் ஒன்று தோன்றும். வயல் வெளியின் நடுவினில் ஒரு மஞ்சள் நிற கட்டடம் அமைந்திருக்கும். அது தான் மாடர்ன் தியேட்டர்ஸ். (இது மாடர்ன் தியேட்டர்ஸ் அல்ல!.நீங்கள் பார்த்தது இரத்னா ஸ்டூடியோ!.மாடர்ன் தியேட்டர்ஸ் எற்காடு ரோடில் உள்ளது.நல்லதந்தி என்ற வாசகர்)

நான் படித்த காலத்தில் இவ்வளவு சினிமா ஆர்வம் இல்லை. அதனால் இந்த உண்மை கல்லூரியில் “படித்தகொண்டிருந்த” பொழுது, வெகு நாட்களுக்கு எனக்குத் தெரியாமலேயே இருந்தது. இப்பொழுது இருக்கும் ஆர்வம் அப்பொழுது இருந்திருந்தால் எப்படியாவது ஒரு முறை மாடர்ன் தியேட்டர்ஸ் உள்ளே சென்று பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். (என் ஜாதகம் அமர்க்களமாக இருந்திருந்தால் நான் மாடர்ன் தியேட்டர்ஸிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு ஹீரோ சான்ஸ் வாங்கி சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரி ஃபேமஸ் ஆகி, ரசிகர் மன்றம் அமைத்து பின்னர் ஒரு கட்சி அமைத்து, முதல் மந்திரி ஆகி, “கொண்டு வரப் போறேன் சட்டம், நல்ல நன்மை புரிந்திடும் திட்டம்” எனப் பாடி…..”நினைப்பு தான் மனுஷன் பொழைப்பக் கெடுக்குது” – இது என் மனைவி). சரி. தமிழகத்திற்க்கு கொடுத்து வைக்கவில்லை.

மாடர்ன் தியேட்டர்ஸின் அதிபதி திருச்செங்கோட்டைச் சார்ந்த டி. ஆர். சுந்தரம். முதலில் ஏஞ்சல் ஃபில்ம்ஸ் என்ற நிறுவனத்தில் பணி புரிந்து வந்த அவர், மாடர்ன் தியேட்டர்ஸை 1937ல் நிறுவினார். இவர் ஹாலிவுட்டிலிருந்து வந்திருந்த எல்லிஸ் ஆர். ட்ங்கன் போன்ற ஜாம்பவான்களை எல்லாம் தான் தயாரித்தப் படங்களில் பணி புரிய வைத்திருக்கிறார். இவர் செஞ்சுரி அடித்து விட்டார். மொத்தம் 117 படங்கள் தயாரித்திருக்கிறார்.

உலக அழகி கிளியோபட்ரா ஒரு திரைப்படத்திற்க்காக கழுதைப்பாலில் குளித்தாராம். டி. ஆர். சுந்தரம் அந்த காட்சியை தமிழ் திரைப்படத்தில் 1000 கழுதைகளை மாடர்ன் தியேட்டர்ஸிர்க்கு கொண்டு வந்து, பால் கரந்து அதில் ஒருவரை குளிக்க வைத்து படம் எடுத்திருக்கிறார். தொழில் என்று வந்து விட்டால் இப்படியல்லவா அதில் பக்தி இருக்க வேண்டும்?

மேல் நாட்டுக்கலைஞர்களை தருவித்து தனது முதல் படமான “சதி அகல்யா”வை எடுத்தார். ”சந்திரபாரதி சினிடோன்” என்ற கம்பெனிக்காக இன்னொரு வெர்ஷன் எடுத்தாராம். அலி பாபாவும், நாற்பது திருடர்களும்” இவர் தயாரித்த முதல் வர்ணத் திரைப்படம். இதை மலையாலத்தில் ”கண்டம் பச்ச கோட்” என்று தயாரித்தாராம்.

மேலும் Alexandre Dumasஇன் “The Man in the Iron Mask”ஐ தழுவி “உத்தம புத்திரன்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். மந்திரி குமாரி, பாக்தாத் திருடன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, இவைகளும் இவருடைய தயாரிப்பே.

மாடர்ன் தியேட்டர்ஸ் இப்பொழுது இல்லை. இப்பொழுது ரியல் எஸ்டேட் ஆகி ஃப்ளாட் ப்ரொமோட் பண்ணி விட்டர்கள். ”ஓரு முறையாவது சென்று பார்த்திருக்கலாமே” என்ற வருத்தம் மட்டும் இருக்கிறது.

பற்றி Bags
Trying out

7 Responses to மாடர்ன் தியேட்டர்ஸ்

 1. நல்லதந்தி says:

  //சேலத்தில் நானும் RVயும் படித்த கல்லூரிக்கு (அரசு பொறியியல் கல்லூரி, சேலம்), போகும் வழியில் ”ஐந்து ரோடு”ஐ கடந்தவுடன் ஒரு நான்கைந்து மைலில் வலது புறத்தில் ஒரு அருமையான ஒரு ஃபார்ம் ஹவுஸ் போல் ஒன்று தோன்றும். வயல் வெளியின் நடுவினில் ஒரு மஞ்சள் நிற கட்டடம் அமைந்திருக்கும். அது தான் மாடர்ன் தியேட்டர்ஸ்.//

  இது மாடர்ன் தியேட்டர்ஸ் அல்ல!.நீங்கள் பார்த்தது இரத்னா ஸ்டூடியோ!.மாடர்ன் தியேட்டர்ஸ் எற்காடு ரோடில் உள்ளது.மற்றபடி தங்களுடைய தகவல்கள் சரியென்றே நினைக்கிறேன்.மாடர்ன் தியேட்டர்ஸ் தான் தமிழ் ஸ்டூடியோக்களில் முதன் முதலில் 100 படங்களுக்கு மேல் எடுத்த ஸ்டூடியோ.60 களிலேயே 100 படங்களை எடுத்து விட்டார்கள்.
  இவர்கள் பல முதல் களைக் கண்டவர்கள்.தமிழில் முதல் முதலாக கலர் படத்தை எடுத்தவர்கள் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.முதல் மலையாளப் படத்தை எடுத்தவர்கள்.சிங்களப் படத்தை எடுத்தவர்கள்.தமிழ் நாட்டில் முதல் ஆங்கிலப் படத்தை எடுத்தவர்கள்.இப்படி இந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் புகழ்ச்சியை அடுக்கிக் கொண்டே போகலாம்.

  நல்லதந்தி!

 2. Bags says:

  நன்றி நல்லதந்தி. இது இத்தனை நாட்களும் எனக்குத் தெரியவில்லையே!

 3. Balaji G says:

  வணக்கம்….

  உங்களின் பதிவைப் பார்த்தேன்..

  மிகவும் சந்தோசமாக இருக்கிறது… ஏனென்றால் நானும் சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவன் தான்… 2007 ல் பொறியியல் பட்டத்தைப் பெற்றேன்…
  இப்போதுதான் வலைப்பதிவை தொடங்கி இருக்கிறேன்… வ்ழி காட்டுங்கள்…

 4. Bags says:

  ஆஹா! ஜுனியர்!
  எனக்கும் சந்தோஷமே!
  உங்கள் blogஐ tamilveli யில் பதிந்துவிட்டீர்களா?
  மேலும் இந்த Blog lessons பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

 5. மணிவண்ணன் says:

  மார்டன் தியேட்டர் சுந்தரம் சவுக்கால் அடித்து வேலை வாங்குவார் என்பார்கள் உண்மையா?

 6. RV says:

  பக்ஸ், கலக்கறப்பா!

 7. Surya says:

  மிக குறைந்த செய்திகள்..

  ஆமாம். மாடர்ன் தியேட்டர்ஸ் அளவில்லா சிறப்புகளையும் முன்னோடிகளையும் கொண்டது.. மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி கண்ணதாசனின் ‘வனவாசம்” மற்றும் கருணாநிதியின் சுயசரிதையிலும் நிறைய எழுத பட்டுள்ளது..

  “மார்டன் தியேட்டர் சுந்தரம் சவுக்கால் அடித்து வேலை வாங்குவார் என்பார்கள் உண்மையா?”

  அப்படி எல்லாம் இல்லை.. மிகவும் கண்டிப்பானவர்..

  அவரிடமே பல சேட்டைகளை செய்தவர் நமது கண்ணதாசன்..

  பல புத்தங்களில் சுந்தரம் அவர்களை பற்றி பெருமையாகவும், தனக்கும் அவருக்கும் வேண்டாதவர்கள் தமக்கு எதிராக நிறைய கோள் மூட்டி தனனை மாடர்ன் தியேட்டர்ஸ்லிருந்து வெளியேற்ற்றியதை மன வருத்தத்துடன் கூறி இருப்பார்.

  மாடர்ன் தியேட்டர்ஸ் க்கு மட்டும் 10 பக்கங்கள் ஒதுக்க வேண்டும் சார்…

  அவ்வளவும் பெருமை கொண்டது அது..

  சூர்யா
  http://butterflysurya.blogspot.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: