கீச்சக வதம் – திரையுலக வரலாறு I


தமிழ் திரைப்பட வரலாறு பற்றி எத்தனையோ அறிஞர்கள் ரசிகர்களுக்கு எடுத்துறைத்திருக்கிறார்கள். எனது பாணியில் நானும் கொஞ்சம் சொல்லலாம் என முடிவெடுத்துவிட்டேன்.

தமிழில் முதன் முதலில் வந்த திரைப்படம் “கீச்சக வதம்”. அதென்ன பெயர் கீச்சக வதம்? இதிகாசம் படித்தவர்களுக்கு இதற்கு பதில் தெரியாமலிருக்காது. 12 வருட வனவாசத்துக்கு பிறகு பாண்டவர்களும், பாஞ்சாலியும் விராடனுடைய அரண்மனையில் மாறுவேடத்தில் தஞ்சம் புகுந்தார்கள். ஒவ்வொர்வரும் ஒவ்வொரு பணியில் அமர்ந்து கொண்டார்கள். பீமன் குக் ஆகிவிட்டான். தனது பெயரை வலலன் என் மாற்றிக் கொண்டான். பாஞ்சாலியும் சாய்ராந்திரி எனப் பெயரை மாற்றிக் கொண்டு மகாராணி சுதேஷ்னாவிற்கு வேலைக்காரியாக இருந்தாள். சுதேஷ்னாவிற்கு கீச்சகன் என ஒரு சகோதரன் இருந்தான். அவன் மகாராணி சுதேஷ்னாவின் தயவால் சாய்ராந்திரியை தன் அறைக்கு வரவழைத்தான் அவளை பிடிக்க முயன்றான். இதை கேள்விப்பட்ட வலலன் வெகுண்டான். தந்திரமாக கீச்சகனை நடன மாளிகைக்கு அழைத்தான். அங்கே ஒரு துணியை சுற்றிக் கொண்டு சாய்ராந்திரி போன்று நின்றுகொண்டு கீச்சகன் கிட்டே நெருங்கியவுடன் “கும் கும், சதக் சதக்…” இது வதம் தான் கீச்சக வதம். கதை கேரளாவில் இன்றும் கதக்களி நடன நாடகமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. தமிழில் மறக்கப்பட்டுவிட்டது.

1918ல் வந்த திரைப்படம். நாடக நடிகர் ராஜு முதலியார் கீச்சகனாகவும், நாடக நடிகை ஜீவரத்னம் பாஞ்சாலியாகவும் நடித்தார்கள்.

இதை தயாரித்தவர் வேலூர் வாசியான ரங்கசாமி நடராஜ முதலியார். இவர் சென்னைக்கு வந்து தனது மாமா மகன் தர்மலிஙக முதலியாருடன் சேர்ந்து  சைக்கிள் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். கடையின் பெயர் ”வாட்சன் & கம்பெனி”. ஒரு சைக்கிள் ரூபாய் 25 தான்.
”ரப்பர் வண்டி” (சைக்கிள்) பிஸினஸ் காசு பார்க்க ஆரம்பித்தது. சைக்கிள் காராகியது. கார் அமேரிக்க கார் ஆகியது. ரோமர், டேன் & சன்ஸ் கம்பெனியை வாங்கி ருபாய் 1000த்திற்கு காரை விற்றார்கள். இந்த காலகட்டத்தில் ஊமை படங்கள் பார்த்துக்கொண்டிருந்தார் நடராஜ முதலியார். பேசும் படம் எடுக்க ஆசைப்பட்டார். கர்சன் துரை நிகழ்ச்சிகளை நியூஸ் ரீல் ஆக்கி கொண்டிருந்த ஸ்டுவர்ட் ஸ்மித் என்பவரை நண்பராக்கி அவருடன் பூனாவிற்க்கு சென்று ஒரளவு கற்றுக் கொண்டு சென்னைக்குத் திரும்பி ”இந்தியா ஃபில்ம் கம்பெனி” என்று திரைப்பட தொழில் துவங்கினார். மூப்பனாரிடம் ரூபாய் 2000த்திற்க்கு ஒரு 35 மில்லிமீட்டர் ஊமைப்பட வில்லியம்ஸன் காமிரா வாங்கினார். அதில் பிறந்தது தான் “கீச்சக வதம்”.

பிற்சேர்க்கை:

சாரதா கூறுகிறார்

இந்த ‘கீசக வதம்’ நாடகம், ‘பாபு’ திரைப்படத்தில் (நவராத்திரியில் வந்ததுபோல) தெருக்கூத்து நாடகமாக இடம் பெற்றிருக்கும். சிவாஜி (பீமன்), நாகேஷ் (கீசகன்), விஜயஷ்ரீ (சைரந்திரி), வி.கே.ஆர். ஆகியோர் அந்த தெருக்கூத்தில் நடித்திருப்பார்கள்.)

பற்றி Bags
Trying out

8 Responses to கீச்சக வதம் – திரையுலக வரலாறு I

 1. மணிவண்ணன் says:

  அப்பாடா ஒரு மாதிரியாக பிளாக் அப்டேட் ஆகிவிட்டது, நான்கு நாட்களாக பார்த்தேன் ஒன்றும் தேறவில்லை, இன்றுதான் கடைசி என நினைத்து வந்தேன். good அப்பேட் பண்ணிவிட்டீங்க.

  அட்டகாசமான ஆரம்பம், தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  BTW:
  இப்படி ஒரு தொடர் எழுதலாம் என் ஐடியா கொடுத்த எனக்கு அவார்ட் ஒன்னும் தரக்கூடாதா? 🙂
  At least, இந்த தொடரை என்ன்க்காவது அர்ப்பணிக்ககூடாதா? 🙂

 2. RV says:

  பக்ஸ், பிரமாதம்! கலக்கறப்பா!

 3. சாரதா says:

  இந்த ‘கீசக வதம்’ நாடகம், ‘பாபு’ திரைப்படத்தில் (நவராத்திரியில் வந்ததுபோல) தெருக்கூத்து நாடகமாக இடம் பெற்றிருக்கும். சிவாஜி (பீமன்), நாகேஷ் (கீசகன்), விஜயஷ்ரீ (சைரந்திரி), வி.கே.ஆர். ஆகியோர் அந்த தெருக்கூத்தில் நடித்திருப்பார்கள்.

 4. RV says:

  சாரதா, நீங்கள் சொல்வது நினைவிருக்கிறது. நாடகம் முடிந்து, சிவாஜி ஹீரோயினை கெடுக்க வருபவரை கொன்று விடுவார் என்று நினைவு…

 5. Bags says:

  சாரதா, தகவலுக்கு நன்றி. உங்கள் தகவலை மெய்ன் போஸ்டில் சேர்த்துவிட்டேன்.
  RV, ”சாரதா கூறுகிறார்” என்ற பகுதியை நாம் இனிமேல் ஒரு standard பகுதியாக அமைத்து விடுவோம்.

 6. RV.. இதை முகப்புத்தகத்தில் (FB) பதிக்க அனுமதி தேவை..?

  • RV says:

   சூர்யா, பக்சுக்காக இதை எழுதுகிறேன். கீசக வதம் பற்றி தாராளமாக பதியுங்கள்!

   • RV says:

    சூர்யா, ஸ்லோவேனியன் படம் எல்லாம் எங்கே பிடிக்கிறீர்கள்?

    அப்புறம் உங்கள் reco-வால், மஜீத் மஜீதியின் இரண்டு படம் பார்த்தோம் – அந்த ஷூ தொலைந்து போகும் படமும், Baran என்ற படமும். பரன் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை, ஆனால் அந்த இன்னொரு படம் பிரமாதாம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: