நம்பியார்


பல நாட்களாக பக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் உண்மையான கருத்தை மறைப்பது பொய். எனக்கு நம்பியார் என்ற நடிகரை பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. எல்லா படங்களிலும் ஏறக்குறைய ஒரே நடிப்புதான். கையை பிசைந்து கொண்டு, ஜம்புவையும் மருதுவையும் (அது ஏன் அடியாட்களுக்கு சுப்பிரமணி, ராமசாமி என்றெல்லாம் பேர் வைக்க மாட்டார்களா?) யாரையாவது அடிக்க சொல்வது எல்லாம் ஒரு வேஸ்ட். திறமையான வில்லன் நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் ஈடாகாது. அந்த காலத்து நடிகர்களான எம்.ஆர். ராதா, பி.எஸ். வீரப்பா போன்றவர்களை இவரை விட பார்க்கலாம். என்ன, மனோகரை விட பெட்டர். எனக்கு அசோகனை பார்த்தால் சிரிப்பு வரும், இவரை பார்த்தல் அதுவும் வருவதில்லை. பக்ஸ் சொன்ன உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கூட, “அந்த பெட்டியை கொடுத்துடு” வசனத்தை விட அசோகன் உருகி உருகி “முருகன், நீங்க பெரிய மேதை முருகன்” என்று சொல்வதுதான் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

ஆனால் மக்கள் மத்தியில் வில்லன் என்றால் நம்பியார்தான். எம்ஜியார் நம்பியார் காம்பினேஷன் மாதிரி வராது என்று சொல்வார்கள். எம்ஜிஆர் நல்ல நடிகர் இல்லாவிட்டாலும் எல்லாருக்கும் பிடித்தவர். அந்த மாதிரிதான் நம்பியாரும். எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படமான ஆயிரத்தில் ஒருவனில் அவரும் நன்றாக செய்திருந்தார். எங்க வீட்டுப் பிள்ளையில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை, ஆனால் பிரபலமான ரோல்.

நம்பியாரின் பொற்காலம் என்றால் அது ஐம்பதுகள்தான். அவரும் அப்போது நன்றாக வசனம் பேசக்கூடிய ஒரு நடிகர். வேலைக்காரி, சர்வாதிகாரி, மந்திரி குமாரி, உத்தம புத்திரன் போன்ற படங்களில் நன்றாக செய்தார். (மந்திரி குமாரியில் அவரை கள்ள பார்ட் நடராஜன் மிஞ்சிவிட்டார்.) அவரும் எம்ஜிஆரும் ராஜா ராணி படங்களில் கத்தி சண்டை போடுவது சாதாரணமாக நன்றாக இருக்கும். அரச கட்டளையில் அவரும் எம்ஜிஆரும் ஒரு அசத்தலான சண்டை போடுவார்கள். ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு பேரும் கலக்குவார்கள்.

நினைவில் நிற்கும் இரண்டு விஷயங்கள்:
1. எம்ஜிஆரிடம் ஒரு பாட்டி “உனக்குத்தான் ராசா எங்க வோட்டு, ஆனா இந்த நம்பியார்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” என்று சொன்னாராம்.
2. எதோ ஒரு படத்தில் வடிவேலு அவரிடம் “எம்ஜிஆர் போன பிறகு உனக்கு ரொம்ப துளுத்து போச்சு!” என்பார்.

நெஞ்சம் மறப்பதில்லை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். அதில் அவர் வரும் காட்சிகள், குறிப்பாக கடைசியில் அவர் புதைகுழியில் மூழ்கும் காட்சி உறைய வைக்கும். அந்த பெருமை ஸ்ரீதருக்கும் வின்சென்டுக்கும் உரியது என்றாலும், நம்பியாரை நினைவு கூரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று.

அவர் நடித்து நான் பார்க்க விரும்பும் படம் திகம்பர சாமியார். பிரிண்ட் இருக்குமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து மக்களை பெற்ற மகராசியில் அவருக்கு ஒரு டூயட் உண்டு – “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” வேறு பாட்டு ஏதாவது உண்டா தெரியவில்லை.

கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவர் பல மாற்றங்களை பார்த்திருப்பார். சொந்த வாழ்க்கையில் புனிதர் என்று சொல்வார்கள். சினிமா உலகத்தில், அதுவும் நாற்பதுகளிலிருந்து நடித்து வரும் ஒருவருக்கு இப்படிப்பட்ட இமேஜ் இருப்பது அதிசயம்தான். நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு என் அஞ்சலி.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

17 Responses to நம்பியார்

 1. Bags says:

  >>>அசோகன் உருகி உருகி “முருகன், நீங்க பெரிய மேதை முருகன்” என்று சொல்வதுதான் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

  இந்த சீன் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அதை கற்பனை செய்து பார்த்தாலே சிரிப்பு பொங்கி வருகிறது.

 2. Das says:

  RV, I suppose you would have noticed the following names:
  1. If he is a hero, his name will be rAjA, Anand, Vijay
  2. If he is a poor friend, his name is selvam, rAmu
  3. For villains, it will be antony, john, jambu/marudu ofcourse
  4. For villain’s girl friends, reeta, jansi etc.!

 3. nagarajan says:

  Nambiar’s acting in ‘Missiammaa’ was good. He acted as comedy villian – only few scenes.

  A gentle role in Pasa Malar.

  Coming back through ‘Thooral Ninnu Pochchu'(1983)’

 4. Vijay Dev says:

  >>>> எனக்கு தெரிந்து மக்களை பெற்ற மகராசியில் அவருக்கு ஒரு டூயட் உண்டு – “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” வேறு பாட்டு ஏதாவது உண்டா தெரியவில்லை.

  There is one song in “Nallavan Vaazhvan”.

 5. nakeeran says:

  //ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் உண்மையான கருத்தை மறைப்பது பொய்//
  Generally they say that one cannot talk negative of a person after his death or in his absence because it does not give him opportunity to defend.

  What you call as Truth is in a way subjective too.

  Only very few offered variety in Tamil films.
  Human nature is often to get bored with repetitiveness.
  I have never understood the idea of “addiction” in that context(exceptions are cigarette,alcohol where some physical changes takes place)

  Not getting bored with repetitive actings of
  MGR,Nambiar,Asokan (How come you still find humour in his acting without getting tired of it?) …
  all the way upto Vijay is a puzzle to me.

  //நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்த //
  Very true.
  He sort of started a movement on pilgrimmage to Iyappan temple.

 6. RV says:

  Das, you hit the nail on the naming conventions!

  Usha, interesting post. We never know the complete truth, do we?

  Nagarajan, I don’t remember him in Missiamma. My problem with Vijaya movies like Missiamma, Maya Bazar etc. is that I remember the Telugu versions much more vividly.

  Vijay Dev, Thanks for the info. I don’t remember any song from Nallavan Vazhvan. What is the song, do you remember by any chance?

  Nakkeeran, Of course, our opinions are subjective. But hiding our opinion just because the person is dead is just lying.

  Asokan is truly amazing. Bags and I find his serious acting very funny. Of course, he didn’t intend it to be funny…

 7. சாரதா says:

  நம்பியார் சுத்த சைவம். அதை தன்னுடைய இளமைக் காலத்திலிருந்து இன்று வரை கடை பிடித்து வருபவர். இத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். இருந்தும் விடாப்பிடியாக தன் கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர். தன்னுடைய பணிரெண்டாவது வயது வரையில் பால் கூட அருந்த மாட்டாராம், அது மாட்டுரத்தம் என்ற உணர்வின் காரணமாக என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

  எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது. (பிற்காலத்தில் அவரது மகன் பா.ஜ.க.வில் இருக்கிறார்).

  நம்பியார் எந்த ஊருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும், தன் மனைவி கையால சமைத்துத்தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் தன் மனைவியை அழைத்துப்போவார். ஒருமுறை ஒரு தயாரிப்பாளர், நம்பியாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார். “நான் மட்டும்தான் உங்கள் படத்தில் நடிக்கிறேன், என் மனைவி நடிக்கவில்லை. அவரை எனக்கு உணவு சமைப்பதற்காக, அதாவது சொந்தக்காரணத்துக்காக அழைத்து வருகிறேன்” என்று கூறி, அதற்கான விமான டிக்கெட் தொகையை தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொண்டார். (இந்தக்காலத்தில் இப்படியும் ஒருவர்..!!!!!)

  இவரிடம் நடிகர்கள் மட்டுமல்லாது, மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.

  ஒரு இணைப்பு செய்தி: 1973-ம் ஆண்டுக்கான ‘சிறந்த மேக்கப்மேன்’ விருது பெற்றவர் நம்பியாரின் மேக்கப் மேன் திரு. ராமு. படம்: உலகம் சுற்றும் வாலிபன். (தகுதியானவருக்கு கிடைத்த தகுதியான விருதுகளில் இதுவும் ஒன்று. அந்தப்படத்தில் மட்டும் நம்பியார் தன் குரலைக் காட்டாமல் இருந்திருந்தால், அது நம்பியாரே அல்ல என்று என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்யலாம். அவ்வளவு நேர்த்தியான மேக்கப்).

  ‘ஒம்று சேர்ந்த அன்பு மாறுமா’ பாடல் மட்டுமல்லாது, மாடர்ன் தியேட்டர்ஸ் ‘கவிதா’ படத்தில் வரும் ‘பறக்கும் பறவைகள் நீயே’ என்ற டூயட் பாடல் நம்பியாருக்குத்தான். அத்துடன் தூறல் நின்னு போச்சு படத்தில் ‘யேன் சோக கதையைக்கேளு தாய்க்குலமே’ பாடலிலும் ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பாடலிலும் பாக்யராஜுடன் இவரும் பாடியிருப்பார். (‘மன்னாதி மன்னனை பார்த்தவன் நான், அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்’ என்று துவங்குவது இவர்தான்)

 8. natyanchali says:

  ஆமாம் !பொழுபோககைச் சார்ந்தவர்தானே நம்பியார் அதனால்தான்!

 9. nakeeran says:

  //
  Nakkeeran, Of course, our opinions are subjective. But hiding our opinion just because the person is dead is just lying.
  //
  RV,
  That’s unfair.
  You always have the option of keeping quiet
  on that aspect.
  Instead when you talk negative of a dead person, you simply not giving opportunity to
  explain.
  Take for example Rajanayagam post’s which you refered.
  That is total tarnishing of his image and unfortunately he is not there to explain it.

  If people criticize you behind your back and
  conclude/take decisions based on that with out giving you an opportunity to explain then you will know the pain.

  In my view one should always be given opportunity to explain/defend.
  If that cannot be given, issue should
  be discarded.

 10. RV says:

  I don’t see what defense can be used against a opinion like “His acting is repetitive” – it is my opinion based on facts available to me, and what can be the defense? The director asked for it? That doesn’t change my opinion!

  And if I use this logic, I will have to shut down this blog – every review of old movies I write would say something like Sivaii hams in this movie, or MGR doesn’t know how to cry or whatever!

  I also don’t think Nambiar, if he were alive, would respond to me. :-))

  I also don’t think that Rajanayahem post tarnishes Nambiar’s image – it is just a mildly interesting facet of a public figure (if true)

 11. nakeeran says:

  The problem is some stupids (who ever responsible for the raja nayaham post)
  confuse bad habits with to Bad person.

  Just because a person smokes, he is not bad.
  Just because a person drinks he is not bad.
  Just because a person speaks bad words he is not bad.
  If a person exploits others innocence/ignorance (like for exaple Karunanidhi) then he is bad.

  Calling Nambiar as “Pasu thol potriya puli”
  for the allged bad habit is clear non-sense.

  The funny thing is many of those replied to that post straight away believesthat, that info must be true. Even more stupidity.

 12. nakeeran says:

  RV
  For some strange reason I could not copy
  your statements to reply.

  We cannot assume what reply he might give and say that won’t change our opinion.

  The problem I see is we are moving and forth between general to specic case.
  That might confuse both of us.

  My statemens on why we should avoid talking
  negative of dead person is General principle.

  Ofcourse there can be exceptions to any rule.
  If you are taking exception to that rule
  in Nambiar case, that is upto you.

  You don’t have to shut down this to follow
  general principle bacause many of the
  issues discussed here like
  1. That Sivaji is overacting,has big belly
  2. MGR does not know to cry
  all well discussed many times in their life time itself.

  But I don’t know how Asokan Aavi will treat you for calling him a comedian when he seriously tried to be a villain.

  Nambiar may/may not ignore your observation (I mean if somebody takes the matter to him)
  Or probably people might have already told him that his acting is repetitive.

 13. RV says:

  Nakkeeran,

  I disagree with your basic premise – we cannot talk negatively about any dead person. I place a higher priority on honesty over politeness.

  A honest evaluation of any pubic figure would have negative comments – after all, we are all human beings, and it is impossible for us not to have made a single mistake in our life.

  You imply that it is ok to criticize somebody if that criticism has been leveled against that person during his/her lifetime. I don’t quite buy this – this limits me to repeating what somebody else has said earlier. Thyagaraja Bagavathar’s movies were universally praised when they come out – should somebody today not point out any flaws in such movies?

  I think your real point is that in the immediate aftermath of a death, it is not quite nice to read criticism of the person. I don’t agree with that either, but I can see your point…

 14. nakeeran says:

  //
  I disagree with your basic premise – we cannot talk negatively about any dead person. I place a higher priority on honesty over politeness.
  //

  The issue is neither honesty nor politeness.
  The issue is fairness.
  It is unfair to criticize someone who is
  not in a position to defend/explain.

  //
  A honest evaluation of any pubic figure would have negative comments – after all, we are all human beings, and it is impossible for us not to have made a single mistake in our life.
  //

  The issue here is not whether or not a person could have lived with out commiting
  single mistake.
  The issue is giving him an opportunity
  to explain whether he committed or not and if so what was the circumstance.

  //Thyagaraja Bagavathar’s movies were universally praised when they come out – should somebody today not point out any flaws in such movies?
  //

  In life, things are not always black and white. There seems to be always grey areas particularly when it comes to decision making.
  Thats why they say “Dharmam sootchuma maanathu”

  Decision purely depends on one own intellectual capacity to analyse the issue and one’s own conscience.
  There is no rules of conduct book on when to
  do what.

  One may lie.
  But then he may lie to save someone.

  Can we call him a liar ?
  Ofcourse yes.
  But if we had given him a chance to explain, he would have explained the circumstances.
  Probably then we may stop calling him a liar.

  If I were you,
  I won’t hesitate to
  find technical faults in such movies.
  I won’t hesitate to criticize in general all
  old movies as a group.
  I may criticize hair style,costumes of yester years.
  But I will not criticize Bhagavathar personally.
  I will not criticize anything which could offend him personally when he is not in a position to defend.

  But you may not agree with me on this.
  But as I said it is up to you.

 15. raju says:

  நான்கு மேதைகள் மோதல்?!
  பிற்காலப்படமான ‘ மிருதங்க சக்கரவர்த்தி’ யில் சிவாஜியோடு மேடைக் கலைமோதலில் “கேட்கத் திகட்டாத கானம்..” உண்டு. டூயட் இல்லைதான். ஆனாலும் ‘இருவர் பங்களிப்பு’ எனும் ஆங்கிலப்பொருள் கொண்டால் ஒருவிதத்தில் டூயட்தான்.!! பின்புலத்தில் உமையாள்புரம் சிவராமன் மற்றும் பாலமுரளி கிருஷ்ணா மோதிக் கொள்வார்களே பார்க்கணும்.! கண்கள் பல, காதுகள் பல போதவே போதா !

  -வெ.சீ.ராஜூ.

 16. Pingback: தி. ஜானகிராமன் பற்றி அசோகமித்ரன் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: