நமீதாவும் உலக சினிமாவும்வேகமாக நமக்கு பின்னால் போய்கொண்டிருக்கிற 2008 ஹாலிடேஸ்ஸில் நானும் RVயும் குடும்பத்துடன் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். திரைப்படம் பார்த்தவாரே பல கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நிகழும். (மனைவிகள் விருப்பத்தை எங்கள் விருப்பமாக்கிக் கொள்வதால் திரைப்பட செலக்‌ஷன் பற்றி அவ்வளவு தர்க்கமோ விவாதமோ எழாது. ஆனால் இப்படி எழுதியாதால் விவாதம் எழலாம்). விவாதங்கள் அதிகமாக இருந்தால் நாங்கள் பார்க்கும் படம் வெறுப்பேற்றியதென்று அர்த்தம். விவாதம் சூடு பிடித்தப் பொழுது திருப்பாச்சி அரிவாளால் சன் டிவியில் எங்களை அறுத்து கொண்டிருந்தார்கள். பல திசைகளில் போய்கொண்டிருந்தோம். அதில் ஒன்று கிட்டதட்ட இந்த தலைப்புதான்.

என்னுடைய கவலையை RVஇடம் சொல்லி வருத்தப்பட்டேன்.

“ஏன் இப்பொழுதெல்லாம் ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா மற்றும் அனுராதா போன்றவர்கள் தமிழ் திரையுலகத்தின் கவர்ச்சி சாம்ராஜ்யத்தை குத்தகைக்கு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்? என்றேன்.

என் சோகத்தை புரிந்துக் கொண்ட RV தன் கவலையை மறைத்தவாறு “கவலைப்படாதே, இப்பொழுதான் கதாநாயகிகள் முதல் எல்லோரும் கவர்ச்சி சாம்ராஜ்யத்தில் நுழைந்து விட்டார்களே! என சமாதானம் செய்தான். அவன் கவலை இதை விட பெரியது என்பது எனக்குத் தெரியும். அவனுக்கு “ஜம்புபோன்ற திரைபடங்கள் ஏன் வருவதில்லை என்ற ஒரே சோகம். இருவரும் மனக்கவலையை மறக்க வேறு டாப்பிக்கிற்கு தாவி விட்டோம்.

ஆம். RV சொன்னது சரிதான். மற்றவர்களும் கவர்ச்சியை தாரளமாக வினியோகிக்கிறார்கள். இப்படி எல்லோரும் short term குத்தகைக்கு எடுத்துவிட்ட தமிழ் கவர்ச்சியுலகில் நமீதா மட்டுமே ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா போன்று long term ரகமாகத் தெரிகிறது. இப்போதைக்கு என் கவலையை தீர்த்து வைத்த நமீதாவிற்கு ஜே!

இந்த நமீதா ட்ரெண்டு அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. கால்கட்டத்திற்கு தகுந்தவாறு அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது. நான் இங்கே ஒரு பெல் கர்வை (bell curve) பார்க்கிறேன். எம்ஜியார் கதாநாயகனாக தோன்றிய காலத்திலே இதற்க்காக இலங்கையில் இருந்து இறக்குமதி செய்தார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக துணிவு பெற்றத் தமிழ் திரையுலகம் அண்டை மானிலங்களில் இறக்குமதி செய்தார்கள். பெல் கர்வின் ஏறுமுகம் இங்கே. 80களில் எக்கசக்கமாக இது போன்ற நமீதா டிரெண்ட் இருந்தது. பெல் கர்வின் பீக் இங்கே. பின்னர் நமீதா ட்ரெண்ட் குறைய தொடங்கியது. நமீதா மட்டும் இப்பொழுது இருக்கிறார். இது பெல் கர்வின் இறங்கு முகம். இது கான்சர்வேட்டிவ் தமிழ் நாட்டிலே கான்சர்வேட்டிவ் தமிழ் ரசிகர்களுக்காக கன்சர்வேட்டிவ் தமிழ் தயாரிப்பாளர்களும், கான்சர்வேட்டிவ் தமிழ் டைரக்டர்களும் சேர்ந்து கான்சர்வேட்டிவ் தமிழ் பெண்களேயே இதில் குதிக்கவைத்துவிட்டதால் நடந்த விபத்து. இனிமேல் ஒருவர் மட்டும் குத்தகை எடுக்கும் காலம் கடந்த காலமாகி விடுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

இந்த கவர்ச்சி தமிழ் திரையுலகத்தின் “சாபக்கேடு(?) மட்டுமில்லை. அணைத்து மாநிலங்களும் இதில் மாட்டிக்கொண்டது. ஏன் அனைத்து நாடுகளும் தான். இது போன்ற கவர்ச்சி காட்சிகள் ப்ரொட்யூசர்களுக்கு டைரக்டர்கள் கொடுக்கும் பேக்-அப் ப்ளான். கதை, இசை, சண்டை போன்றவைகள் காலைவாரி விட்டாலும் கைகொடுக்கும் ஒரே அம்சம் இந்த கவர்ச்சி நடனங்கள் தான். அதாவது இன்ஷூரன்ஸ் இல்லாத தமிழ் படங்களுக்கு இது மகத்தான இன்ஷூரன்ஸ். கவர்ச்சி நடிகைகளுக்கு கொடுக்கும் சம்பளப் பணம் இதன் பிரீமியம்.

நமீதாக்கள் இல்லாவிட்டால் தமிழ் சினிமா மட்டும் இல்லை உலக சினிமாக்களே இல்லை.

PKS பார்க்கல? இதெல்லாம் ஒரு பழமொழி மாதிரிடா. அனுபவிக்கணும். ஆராயக்கூடாது! என்று எனக்கு RV புத்திமதி சொன்னான்.

பற்றி Bags
Trying out

9 Responses to நமீதாவும் உலக சினிமாவும்

 1. Bags says:

  Thanks Surya for contributing the title. Let’s see if the readership jumps by leaps and bounds, for better or worse 🙂

 2. Bags says:

  RV Keep an eye on the stats 🙂

 3. RV says:

  பக்ஸ்,

  கலக்கரப்பா! ஆனால் என் ஜம்பு பற்றி எல்லாம் பேசி கு.கு. உண்டாக்கறே? நீ இப்படியே கு.கு. உண்டாக்கிடிருந்தா சீக்கிரமே நான் “நீ நல்லவனா கெட்டவனா” அப்படின்னு கேக்க வேண்டி வரும்!

  காலேஜில் என் பெரிய வருத்தம் கூட்டத்தோட சேர்ந்து ஜம்பு பார்க்காம விட்டதுதான் (சரியா படிக்காதது பத்தி எல்லாம் பெரிய வருத்தம் இல்லே)

 4. Hema says:

  Bags,

  This is really too much. The pictures are X rated – this blog has to be censored “A”

 5. மணிவண்ணன் says:

  //அவனுக்கு “ஜம்பு” போன்ற திரைபடங்கள் ஏன் வருவதில்லை என்ற ஒரே சோகம்//
  படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது போலுள்ளது. 🙂
  சமீபத்திய ஜம்பு(கள்)- சுட்டபழம், சிலம்பாட்டம், சத்யம் (இதில் ஆண்பிள்ளை ஜெயமாலாவையும் பார்க்கலாம்), அப்புறம் வேலு பிரபாகரன் ‘காதல் அரங்கம்’ என்றூ ஒரு படம் எடுக்கின்றார் என்று கேள்வி

 6. Bags says:

  Hema,

  Reader Surya is responsible for this. I am innocent. 🙂

 7. Surya says:

  Bags இதை எதிர்பார்க்கல.. இதைவிட மோசமான தலைப்பு நூறு தர முடியும். அதையும் உங்களால் எழுத முடியும்..

  Hema ur right. Too much..

  கலி முத்திடுத்து… வேறென்ன சொல்ல…

  ராமா. நன்னா இரு.. {Nagesh in climax பஞ்சதந்திரம். இதையும் RV பார்த்திருப்பார்}

  Ok. its ok. Cool. It’s all in the game.

 8. ரசிகர்கள் இரண்டு விதம்.. 1) கவர்ச்சி பிடிக்கும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்பவர்கள். 2) எல்லாவற்றையும் ரசித்துவிட்டு ‘ஐய்யே’ சொல்பவர்கள்.

  காலங்காலமாக கவர்ச்சி என்பது பல்வேறு வடிவங்களில் ஈர்த்து வந்துகொண்டே இருக்கிறது.இன்று உவ்வேயாக இருப்பது நாளை ஓக்கே!

  நான் ஒருகாலத்தில் பள்ளியை கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் முதன்முதல் பார்த்த அசைவப்படம் ஜோதி லட்சுமியின் “பெண்ணின் சவால்”!

  அதைப் பற்றிய ஒரு சுவையான பதிவு இருக்கிறது. காலமும் களமும் அனுமதிக்குமானால் பதிகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: