கோல்மால் ரிடர்ன்ஸ் (Golmaal Returns)


2008இல் வெளி வந்த படம். அஜய் தேவ்கன், கரீனா கபூர், துஷார் கபூர், அர்ஷத் வார்சி, ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் பலர் நடித்தது. யாரி இயக்கியது என்று பார்க்கவில்லை.

சாதாரணமாக இங்கே உள்ள இந்திய மளிகை கடையில் நாற்பது ரூபாய்க்கு மளிகை வாங்கினால் ஓர் டிவிடி இலவசம். அப்படி எடுத்து வந்த டிவிடிதான். பார்க்க வேண்டும் என்று எடுக்கவில்லை. ஆனால் சிரித்துக் கொண்டே இருந்தோம்.

மூளையை கழற்றி வைத்துவிட்டு பார்க்க வேண்டிய படம். ஆனால் ஜாலியான படம். காலேஜில் நண்பர்களோடு பார்த்தால் குஷி கிளம்பும்! கிரேசி மோகன் நாடகம் போல.

டிவி சீரியல் பைத்தியமான கரீனாவுக்கு கணவன் அஜய் மீது எப்போதும் சந்தேகம். இன்ஸ்பெக்டர் அர்ஷத் வார்சிக்கு அஜய் மீது விரோதம். பிறகுதான் அவர் அஜயின் தங்கையை காதலிப்பது தெரியவருகிறது. ஒரு நாள் இரவு அஜய் வேறு ஒரு பெண்ணுடன் தங்கி விட, கரீனாவின் சந்தேகத்தை தீர்க்க ஒரு போலி அந்தோனி கண்சால்வசை உருவாக்குகிறார். அஜயின் கூட வேலை செய்பவர் ஒருவர் கொலை செய்யப்பட, அர்ஷத் வார்சி அஜயை துரத்த, நடுவில் உண்மையாகவே ஒரு அந்தோனி முளைத்து வர, போலி அந்தோனி…. அட போங்கய்யா! கதை எல்லாம் முக்கியமில்லை.

நடுவில் ஒரு முறை அஜய் இறந்துவிட்டதாக எண்ணி கரீனா துஷார், அர்ச்திடம் அடிக்கும் லூட்டி சீன், ஊமையான துஷார் ஒரு முறை அஜயிடம் ஃபோநில் பேசுவது, கடைசியில் க்ளைமாக்ஸ் தூக்கு சீன் எல்லாம் அபாரமானவை.

பாட்டெல்லாம் எனக்கு ஞாபகமில்லை.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் சும்மா சிரிக்க நல்ல படம். பாருங்கள். 10க்கு 7 மார்க். B grade.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to கோல்மால் ரிடர்ன்ஸ் (Golmaal Returns)

  1. இந்தி படம் பார்க்கிற அளவுக்கு தைரியமில்லை.

  2. RV says:

    சூர்யா,

    ட்ரை பண்ணி பாருங்க! என் குடும்பத்தினருக்கும் ஹிந்தி தெரியாது, சப்டைட்டில் வச்சுதான் ஓட்டறாங்க. அதுவும் என் பத்து வயது பெண் ஹிந்தி படங்களுக்கு பெரிய ஃபேன்!

  3. Bags says:

    சப்டைடில் இல்லாவிட்டாலும் 90% ஹிந்தி படங்களில் அதிகம் மிஸ் பண்ண மாட்டோம். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: