விவேக்குக்கு பத்மஸ்ரீ


விருதுகள் சரியானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். அதை விட முக்கியமான விஷயம் தவறானவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது. சிவாஜி ஒரு முறை கூட சிறந்த நடிகர் விருது பெறவில்லை என்பது மோசமான விஷயம். அதை விட மோசமான விஷயம் எம்ஜிஆருக்கு ரிக் ஷாக்காரனுக்காக கொடுக்கப்பட்டது.

விவேக்கை விட பல மடங்கு தகுதி வாய்ந்த நாகேஷுக்கு பத்மஸ்ரீ விருது இன்னும் கொடுக்கப்படவில்லை. எம்எஸ்வி, டிஎம்எஸ், பாலச்சந்தர், ஸ்ரீதர், பாரதிராஜா, எஸ்பிபி, பத்மினி, சுஹாசினி, எஸ். ஜானகி போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. சிவாஜியும் பத்மஸ்ரீ, கமலும் பத்மஸ்ரீ, விவேக்கும் பத்மஸ்ரீயா? என்னய்யா ஒரு விவஸ்தையே இல்லாமல் இருக்கிறதே? இனி மேல் கமல் பத்மஸ்ரீ கமலஹாசன் என்று போட்டுக்கொள்வதை நிறுத்திவிடலாம்.

இதற்காக நான் விவேக்கை குறை சொல்ல மாட்டேன். அவரை பரிந்துரைத்த கலைஞர் அரசைத்தான் குறை சொல்வேன். இந்த விருது இவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது? கருத்து கந்தசாமி பல படங்களில் நம்மை கருத்து சொல்லி கழுத்தை அறுத்ததற்காகவா? இல்லை இவரும் கலைஞருக்கு நன்றாக ஜால்ரா அடித்தாரா?

ஏற்கனவே கலைமாமணி விருது சந்தையில் கூறு கட்டி விற்பதைப் போல ஆகிவிட்டது. இந்த விருதுகளையும் அப்படி ஆக்கிவிடாதீர்கள்.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to விவேக்குக்கு பத்மஸ்ரீ

 1. Bags says:

  இதை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. விவேக் ஒரு நல்ல எண்ட்ர்டெய்னர். அது தெரியும்.

  டைமிங் இந்த மாதிரி அவார்டுகளில் நிறைய வேலை செய்கிறது. 2002ல் Training Day என்ற படத்திற்காக டென்ஸில் வாஷிங்டனுக்கும், Monster’s Ball என்ற படத்திற்காக ஹேலி பெரிக்கும் (இருவரும் கருப்பர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்) ஆஸ்கர் அவார்ட் கொடுக்கப்பட்டது. Training Day ஒரு கொடுமையான திரைப்படம். Denzel அதில் ஒன்றும் பிரமாதமாக தன் திறமையை வெளிப்படுத்தவில்லை. Monster’s Ball ஒரு வகையான திரைப்படம் (ஆஸ்கர் படம் என்று குழந்தைகளை வைத்துக்கொண்டு பார்த்துவிடாதீர்கள்). Halle Berry நடிப்பு பரவாயில்லை. (சில சீன்களில் சிவாஜி போல் இருந்தது) ஆனால் ஆஸ்கர் தரமா என்பது சந்தேகமே. செப் 11, 2001ல் தீவிரவாதிகளால் அமேரிக்கா தாக்கப்பட்டு அதனால் கொந்தளித்துக்கொண்டும், சுயபட்சாபமும் (சரியான வார்த்தையா? – ஆங்கிலத்தில் self pity) அடைந்துக் கொண்டிருந்த நேரம். அமேரிக்க ஒற்றுமையை பிரகடனப் படுத்தும் விதமாக ஆஸ்கர் அள்ளி வீசப்பட்டது. (Russel Crowe ஏமாற்றம் முகத்தில் நன்றாகத் தெரிந்தது – அந்த முகபாவத்திற்கு ஆஸ்கர் கொடுத்திருக்கலாம் 🙂 )

 2. selections says:

  //சுயபட்சாபமும்// – சுயபச்சாதாபம்!
  இந்த விவேக்(VivekH!) சர்ச்சை இப்போதைக்கு (அட்லீஸ்ட் வலைப்பதிவில் மட்டுமாவது!) ஓயாது எனத் தோன்றுகிறது!

 3. R.Gopi says:

  When Rajni was conferred with PADMA BUSHAN in the year 2002 (??), Kamal stopped naming him as PADMASRI in movie titles.

 4. Nagarajan says:

  Nagesh got Padmashri Award, in 1995. In the same year, he got the best supporting role award at the national level for his performance in ‘Nammavar’

 5. Surya says:

  இந்த அவார்டெல்லாம் கொடுத்ததா..??

  விவேக் “வாங்கியிருப்பார்”

 6. anonymous says:

  Not sure if vivek deserves it or not. But I guess Padmashri has lost its credibility long back.

  Also I can’t believe Krishna has been given Padmabushan this year. What the hell?

  He is not that talented to be given Padmabushan.

 7. RV says:

  Anonymous,

  I agree about Krishna. It looks like he was given an award for being around for a long time.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: