ஆயிரத்தில் ஒருவன்


எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.

1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக் கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லைநண்பர் ராஜு உறுதி செய்கிறார். பிற்காலத்தில் கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சினிமா ஷூட்டிங்கில் இருந்தவர்தான் எம்ஜிஆர் என்று தாக்குவார் – அந்த சினிமா ஷூட்டிங் இதுதான்.

கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.

ரஃபேல் சபாடினி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவலின் பெயர் காப்டன் ப்ளட் (Captain Blood). அந்தக் காலத்தில் மேற்கிந்திய தீவுகளில் இருந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரனான சர் ஹென்றி மார்கனின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பிற்காலத்தில் மார்கன் மேற்கிந்திய தீவுகளின் கவர்னர் ஆனார். இந்த நாவல் எர்ரால் ஃப்ளின் நடித்து திரைப்படமாக முப்பதுகளில் வந்தது. எம்ஜிஆரின் ஆதர்ச நடிகர்கள் டக்ளஸ் ஃபேர்பாங்க்சும் எர்ரால் ஃப்ளின்னும்தான். சபாடினியின் இன்னொரு புத்தகமான சீ ஹாக் (Sea Hawk)புத்தகத்திலிருந்து சில சீன்களை எடுத்து – – குறிப்பாக ஜெயலலிதாவை ஏலம் விடும் சீன், அவர் ஆடாமல் ஆடுகிறேன் என்று பாடுவார் அந்த சீன் – இந்த புத்தகத்துடன் சேர்த்து உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.

எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதெங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்க வரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக் கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோகரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? ரஜினியும், விஜயும் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீராகத்தான் செலவழித்திருக்கிறார்.

எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை“, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்“, “ஆடாமல் ஆடுகிறேன்“, “ஏன் என்ற கேள்வி“, “ஓடும் மேகங்களே“, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

இன்னும் ஒரு பாட்டு இருக்கிறதோ? சரியாக நினைவு வரவில்லை.

பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

சிறந்த பொழுதுபோக்கு படம். கட்டாயம் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

20 Responses to ஆயிரத்தில் ஒருவன்

  1. Surya says:

    எனக்கும் மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர் திரைப்படம் இதுதான். இந்த திரைப்படத்தில் அவரது Character மிக மிக அற்புதம். அதாவது சுயநலமில்லாத தலைவனாக சித்தரிப்பது, இதுதான் கம்யூனிஸம் என்ற எண்ண தோன்றியது. அப்படி ஒரு தலைவர்தான் இன்றைய இந்தியாவின் தேவை.

    இதே போல் காரக்டெர் கொண்ட திரைப்படம் அன்பே சிவம் கமல் காரெக்டர். திரைப்படத்தை Compare பண்ண வேண்டாம்.

    வாழ்த்துக்கள்.

  2. k.pathi says:

    romba mukkiyam! Thamizhan sagiran,neengal ennadavendral,jeyavin anka asaivai suvaikkireerkal:Thirunthave matteerkala?

  3. RV says:

    K. Pathi,

    Thanks for the feedback.

    You are absolutely right in saying that there are more important things in life. But it is my choice to write about less important things. It is your choice to ignore them, or spend your time reading them and posting comments.

  4. Bags says:

    ஆர்.வி. பதில்களுக்கு அதிகமாக (In addition to RVs comments – I am discovering that I don’t know Tamil too 🙂 ) :
    நன்றி கே.பதி.
    >>>”தமிழன் சாகிறான்”
    எங்கே? ஈழத் தமிழர்களை சொல்கிறீர்கள் என்றால், ஆம் பரிதாபத்திற்குரியது தான். வருந்த வேண்டிய ஒன்றுதான். இப்படி தீவிரவாதிகள் கையில் மாட்டிக்கொண்டு பணயக் கைதிகளாக இலங்கை தமிழினம் கஷ்டப் படுகிறது.

    இங்கே நாங்கள் எழுதுவது அமைதி உலகிக்கிற்கும், பொழுதுபோக்கு கருதியும் தான். இலங்கை தமிழன் சாகிறான் என்றால் நாம் என்ன செய்துவிட முடியும்? ஓட்டு இருந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஓட்டு மூலமாக “அப்பாவிகளை கொல்லாதே, தீவிரவாதிகளை மட்டும் கொல்லாமல் விட்டுவிடாதே, ஆனால் ஒரு அப்பாவி சாகக்கூடும் என்றாலும், அங்கே இருக்கும் தீவிரவாதிகளையும் விட்டு விடு” என்றெல்லாம் சொல்லாம். மற்றபடி தமிழன் சாகிறான் என்பதால் நாமும் ஒப்பாரி வைக்கவேண்டுமா?

    —————————————–
    டாக்டர். மன்மோகன்சிங் அறிக்கை, (அதாவது தீவிரவாத கும்பல்களுக்கெல்லாம் இந்திய அரசாங்கம் துனண போகாது”) பாராட்டுக்குரியது. இலங்கை தீவிரவாதக் கும்பல் தான் ஹமாஸ் போன்று பொதுமக்களையும், நோயாளிகளையும் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு மிரட்டுகிறதே ஒழிய இலங்கை அரசு இஸ்ரேலிய ராணுவம் போல் பொது மக்களை கொன்று குவிக்கவில்லை. அது வரையில் பாராட்டுக்குறியது. சும்மா தமிழன், நம் இனம் என்று சொல்லிக்கொண்டு LTTEற்கு வக்காலத்து வாங்காதீர்கள். உலகத்தில் எல்லா உயிர்களும் விலை உயர்ந்ததே. அப்பாவி உயிர்களும், குடும்பங்களும் காட்டுமிராண்டி தீவிரவாதக் கும்பல்களால் அழிக்கப்படும்போது மக்கள் தீவிரவாத கும்பல்களை புறக்கணிக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தீவிரவாதக் கும்பல்களை இம்முறை ஒழித்துவிடகூடும். ஆனால் எதிர்காலத்தில் கடந்த 60 வருட அனுபவத்தை மனதில் கொண்டு தமிழர்களை பாரபட்சம் இல்லாமலும் சம உரிமைகள் அளித்தும் நடத்த பழகிக் கொள்ள வேண்டும். (எனது தாத்தா கொலும்புவிலிருந்து 50களில் ஓடி வந்தவர்தான்) மற்ற நாடுகளில் உள்ள் ”தமிழ் பாசமிக்க” மக்கள் அதை அடைவதற்க்காக இலஙகை அரசையும், இந்திய அரசையும் வற்புறுத்த வேண்டுமேயொழிய தீவிரவாதிகளுக்கு ஜால்ரா தட்டக் கூடாது.

  5. காத்தவராயன் says:

    எனக்கு ஒரு சந்தேகம்……..
    ஓடும் மேகங்களே பாடலை எழுதியது வாலியா? கண்ணதாசனா?

    சந்தேகம் வரக்காரணம்:
    1. என்னிடம் உள்ள HMV கேசட்டில் பாடலாசிரியர் கண்ணதாசன்னு போட்டு இருக்காங்க.
    2. சன் டி.வி கவிச்சோலை(வாலி) நிகழ்ச்சியில் இந்த பாடலை பார்த்ததாக ஞாபகம்.
    3. சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனுக்கு வாலி கொடுத்த பேட்டியில் இப்பாடலை மேற்கோள்காட்டியிருந்தார்.
    4. இணையதளத்தில் தேடினாலும் அதே குழப்பம்.

    இப்பாடலை வாலிதான் எழுதினார் என்பதற்கு உறுதியான வேறு ஆதாரம் உங்களிடம் உள்ளதா????

    பாடல் நடையை பார்க்கும் போது வாலி என்றே எனக்குத்தோன்றுகிறது.

    • RV says:

      காத்தவராயன்,

      உறுதியான ஆதாரம் ஒன்றுமில்லை. நடையை வைத்துதான் நானும் வாலி என்று நினைக்கிறேன். எங்கேயோ படித்த செய்தி ஒன்று – அப்போது கண்ணதாசனுக்கும் எம்ஜிஆர்க்கும் தகராறாம். அதனால் அவர் இந்த படத்தில் பாட்டு எழுதவில்லையாம். எம்எஸ்வியின் முயற்சியால் நாணமோ பாட்டு மட்டும் எழுதினாராம்.

      • surya says:

        காத்தவராயரின் சந்தேகத்தால் எனக்கு இருப்பு கொள்ளவில்லை… பல நண்பர்களை கேட்டு விட்டேன். பிரபல பதிவர் கானாபிராபாவிடமும் கேட்டேன்.

        அந்த பாடலை எழுதியது கண்ணதாசன் தான் என்கிறார்கள்.

        http://www.raaga.com/channels/TAMIL/movie/T0000031.html

        வாலி போன் நம்பர் தெரிந்தால் அவரிடமே கேட்டு விடலாம்.

  6. RV says:

    சூர்யா, காத்தவராயன்,

    என்ன இது இப்படி இரண்டு பேரும் சேர்ந்து குழப்பி விட்டுவிட்டீர்களே? 🙂 இந்த பாட்டை எழுதியவர் வாலிதான் என்று நினைத்திருந்தேன்…

  7. சாரதா says:

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்துக்கு எனது விமர்சனம், இந்த இணைப்பில்…

    http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=14288&start=0

  8. raju says:

    நண்பர் ஆர்வீ
    ஆயிரத்தில் ஒருவன் டைரக்ட் செய்தது பந்தலு தான்.
    படப்பிடிப்பு கார்வார் கடல் பகுதியில் எடுத்ததாக தினமணி சுடரில் (sunday film supplementary from தினமணி கதிர்) படித்த ஞாபகம்.

    ராஜு-துபாய்

    • RV says:

      ராஜு, துபாய் தேவலை என்றால் நிலைமை மோசமாகத்தான் இருக்க வேண்டும்!

      ஆ. ஒருவன் பதிவையும் ஒரு வழியாகத் திருத்திவிட்டேன்.

  9. chandru says:

    அவரல்லவோ சூப்பர்மான்? ரஜினியும், விஜயும் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

    ithu 1000000000000000% unmai.umai

  10. john says:

    தமிழன் சாகிறான் என்றால் நாம் என்ன செய்துவிட முடியும்? enna oru mosamana sindhanai ? ithai solli thanae ellorum namakenna endru thapithu kollkireergal? bullshit…

  11. john says:

    stop criticizing others and value you!!! தமிழன் சாகிறான் என்றால் நாம் என்ன செய்துவிட முடியும்? if this could have thought by Arignar anna ? Thevar? Kamarajar?Jeevanantham? MGR?

  12. john says:

    எனது தாத்தா கொலும்புவிலிருந்து 50களில் ஓடி வந்தவர்தான்…odi vanthavarkalukellam avarkallin unnarchi puriyadhu..

  13. பிங்குபாக்: எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் மூலக்கதையை எழுதிய ரஃபேல் சபாடினி | சிலிகான் ஷெல்ஃப்

RV -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி