நாகேஷ் – அஞ்சலி


என்எஸ்கே, சந்திரபாபு, கவுண்டர், வடிவேலு என்று பல ஜீனியஸ்கள் இருந்தாலும், தமிழின் டாப் காமெடியன் நாகேஷ்தான். நம்மை சிரிக்க வைத்தவரை நினைத்து அழுவதை விட அவரின் சிறந்த நடிப்பை நினைத்து புன்சிரிப்பதுதான் அவருக்கு சரியான மரியாதை.

அவருக்கு பத்மஸ்ரீ கொடுக்கப்படாது பற்றி சமீபத்தில்தான் குறைப்பட்டுக்க்கொண்டேன். அவருக்கும் அந்த குறை உண்டு. மனோரமாவை பத்மஸ்ரீ பெற்றதற்காக வாழ்த்தும்போது அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அந்த குறை இருப்பது தெளிவாக தெரிந்தது. அடுத்த வருஷத்துக்குள் அவரை மறந்து விடுவார்கள்.

டாப் டென் காமெடிகள்:

1. 1964, காதலிக்க நேரமில்லை – அவர் பாலையாவுக்கு கதை சொல்லும் சீன். என் அம்மாவால் இதைப் பற்றி பேசும் போது சிரிக்காமல் இருக்கவே முடியாது.

2. 1964, படகோட்டி, மீனவர் தலைவர். கலக்குவார்.

3. 1966, மோட்டார் சுந்தரம் பிள்ளை – துப்பறியும் சாம்பு

4. 1967, திருவிளையாடல் தருமி. – “குறை இருந்தால் அதற்கேற்ற படி பணத்தை கழித்துக் கொண்டு மிச்ச பணத்தை தருவது” என்று சொல்லுவதை முதல் முறை கேட்டபோது குபீர் சிரிப்பு சிரித்திருக்கிறேன். அந்த காட்சியின் வசனங்கள் எல்லாம் மனப்பாடமாக பேசுவோம். திருவிழா என்றால் இதை கட்டயாமாக ஒலிபெருக்கியில் போட்டுவிடுவார்கள் (டிவி வராத காலம்)

5. 1967, பாமா விஜயம்: எனக்கு பிடித்த பாலச்சந்தர் படம் இதுதான். நாகேஷ் பிய்த்து உதறுவார்.

6. 1967, அன்பே வா – ராமையா!

7. 1968, எதிர்நீச்சல்: சவுகார்தான் படத்தில் டாப். ஆனால் நாகேஷும் குறை சொல்ல முடியாத நடிப்பு.

8. 1970, மெட்ராஸ் டு பாண்டிச்சேரி – கண்டக்டர் என்றால் அவர்தான்

9. 1996, அவ்வை ஷண்முகி – குடிகார மேக்கப்மன் ஜோசஃப்

10. 2002, பஞ்ச தந்திரம் – அவர் கமலை கேள்வி கேட்டு மடக்கும் காட்சிகள் அபாரமானவை.

குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிப்பு

1. 1964, நீர்க்குமிழி: அருமை!

2. 1965, மேஜர் சந்திரகாந்த்: முதல் பாதியில் கலக்குவார். பின் பாதியில் கொஞ்சம் மிகை நடிப்புதான் – ஆனாலும் நல்ல நடிப்பு.

3. 1966, யாருக்காக அழுதான் சோசப்பு

4. 1968, தில்லானா மோகனாம்பாள்: படத்தின் டாப் நடிகர் இவர்தான். சிவாஜி, பத்மினி ஆகியோரின் மிகை நடிப்புடன் இவரை ஒப்பிட்டுப் பாருங்கள்.

5. 1975, சில நேரங்களில் சில மனிதர்கள் – கண்டதை சொல்லுகிறேன் பாட்டு முடிவில் பேப்பர்கள் பறக்கும். அதை பிடிக்க கடுமையான முயற்சி செய்து ஒன்றே ஒன்றுதான் காப்பாற்ற முடியும். திடீரென்று அதுவும் பறந்துவிடும். அதற்கு டாட்டா காட்டுவார்.

6. 1994, நம்மவர்: பெண் இறந்த பிறகு நடிப்பது மறக்க முடியாதது.

தாராசுரம் குண்டு ராவ் சென்னையில் ரயில்வே குமாஸ்தாவாக வேலை பார்த்திருக்கிறார். அந்த காலத்தில் அவரது ரூம்மேட்கள் ஸ்ரீகாந்தும் வாலியும். வி. கோபாலகிருஷ்ணன் பல உதவிகள் செய்திருக்கிறார். நாடகங்களில் நடித்துக்கொண்டு சினிமா சான்சுக்காக காத்திருந்திருக்கிறார். முதல் படம் தாயில்லாப் பிள்ளையாம்.

அழகுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அம்மை தழும்புகள் நிறைந்த முகம். ஒல்லியான உருவம். இப்படிப்பட்ட ஒருவர் அறுபதுகளில் நடிகராக உருவானது அதிசயம்தான். அறுபதுகளில் நடிகராக வர அழகான உருவம் அவசியம். சிவகுமார், ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த் போன்றவர்களை விடுங்கள். காமெடியன்கள் கூட – சோ ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் – பார்க்க சுமாராக இருப்பார்கள். நாகேஷ் ஒரு இன்ச் மேக்கப்புடன் வந்தாலும் பக்கத்து வீட்டு குமாஸ்தா மாதிரிதான் இருந்தார். ஆனால் அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

எனக்கு தெரிந்து அவர் கண்டுகொள்ளப்பட்ட முதல் படம் நெஞ்சில் ஓர் ஆலயம். காதலிக்க நேரமில்லைக்கு பிறகு சந்திரபாபு, தங்கவேலு எல்லாரையும் பின் தள்ளி விட்டு டாப் காமெடியன் ஆனார். அந்த வருஷம் வந்த படகோட்டி, சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி எல்லாம் அவரை உச்சத்தில் வைத்தன.

பாலசந்தருடன் அவருக்கு இருந்த அண்டர்ஸ்டாண்டிங் சூப்பரோ சூப்பர். பாலச்சந்தர் அவருக்கு பல படங்களில் ஹீரோ வாய்ப்பு கொடுத்தார் – நீர்க்குமிழி, பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நவக்ரகம், எதிர் நீச்சல் போன்ற படங்களில் கலக்கினார். மேஜர் சந்திரகாந்த், பூவா தலையா மாதிரி படங்களில் இணை கதாநாயகன். ஹீரோவாக நடித்துக்கொண்டே பல படங்களில் காமெடியனாகவும் நடித்தார். திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், அதே கண்கள், மூன்றெழுத்து, நான், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி மாதிரி படங்களில் அவர் மிகவும் ரசிக்கப்பட்டார்.

அறுபதுகளின் கடைசியில் சோ கொஞ்ச நாள் முன்னணியில் இருந்தார். ஆனால் எழுபதுகளின் மத்தியில் தேங்காய் டாப்புக்கு வரும் வரை நாகேஷை யாரும் அசைக்க முடியவில்லை. தேங்காய், சுருளி, ஒய்.ஜி. மஹேந்திரன், கவுண்டர்-செந்தில், ஜனகராஜ் என்று டாப் பொசிஷன் கை மாறிக்கொண்டே போனது. அவர் தன்னை குண சித்திர நடிகராக மாற்றிக் கொண்டார்.

அபூர்வ சகோதரர்களில் முதல் முறையாக வில்லனாக நடித்தார். அபூர்வ சகோதரர்களிலிருந்து அவர் நடிப்பில் இன்னும் மெருகேறியது. அதற்கு முன் அவர் நடித்த படங்களில் அவரது பாத்திரம் நன்றாக இருந்தால் கலக்குவார். இல்லாவிட்டால் வந்து போவார். (ஹலோ பார்ட்னர் மாதிரி படங்களில் அவர் என்ன ஆஸ்கார் விருது நடிப்பா காட்ட முடியும்?) ஆனால் இந்த படத்துக்கு பிறகு ஒரு சொத்தை ரோலிலும் அவரது அனுபவம் தெரியும். படம் நினைவுக்கு வரவில்லை, அவர் பல படங்களில் ரவுடிக்கு அசிஸ்டன்டாக வருவார். நன்றாக நடிப்பார். மைக்கேல் மதன காமராஜன் மாதிரி படங்களில் சின்ன ரோல்தான் – ஆனால் அற்புதமாக நடிப்பார். அவர் காமேஸ்வரனைப் பார்த்து பார்த்து சந்தோஷப்படும் காட்சி அமர்க்களம்! கமலுடன் அவருக்கு நல்ல கூட்டணி அமைந்தது. நம்மவர், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் கலக்கினார்.

அருமையாக நடனம் ஆடுவார். இங்கே ஒரு பாட்டு.

அவரிடமும் மிகை நடிப்பு உண்டு. எல்லா காமெடியன்களையும் போல அவரும் நிறைய படங்களில் – குறிப்பாக எழுபதுகளின் முதல் பகுதியில் – சொதப்பி இருக்கிறார். பிற்காலப் படங்களில் அவருக்கு வாய் கொஞ்சம் குழற ஆரமித்துவிட்டது. ஒரு மாதிரி சமாளித்து நடிப்பார்.

அவரது குறைகளை விட அவரது நிறைகள் பல மடங்கு அதிகம். மிக அற்புதமான நடிகர். திறமையை பொருத்த வரையில் சிவாஜி வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். ஹாலிவுட்டில் இல்லாமல் தமிழ் நாட்டில் பிறந்தது அவர் துரதிர்ஷ்டம், நமது அதிர்ஷ்டம்.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

13 Responses to நாகேஷ் – அஞ்சலி

 1. beemorgan says:

  அந்த மாபெரும் கலைஞனுக்கு பொருத்தமான அஞ்சலி.. பதிந்தமைக்கு நன்றி..!

 2. Kathiravan says:

  Aruputhamana Article about Nagesh

 3. Das says:

  RV,

  sirappAna Arambam. mElOttamAka mudiththu vidAmal, avarathu kuRippidaththakka kathApAththirankaLai alasavum. He had a deep friendship with JK. I haven’t seen “yArukkAga azhudAn”. I am inviting everyone to share whatever they can on this oppaRRa kalaignan. In my personal view, I would rate him above everyone else. This may be controversial for some.

  Das

 4. மணிவண்ணன் says:

  பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாத கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.
  நீங்கள் கூறியது யாவும் மறுக்கமுடியாத உண்மை.
  அத்துடன் எனது பட்டியலில் இரண்டு படங்கள் (குணசித்திர நடிகராக – Specially பாடல்கள்)
  1. உனக்காக நான் படம் – இறைவன் உலகத்தைப் படைத்தானா? பாடல் (சோகத்தை பிழிந்து எடுத்துவிடுவார் – ஜேசுதாஸ் – அதுக்கேற்ற அருமையான நடிப்பு)
  2. பாடும் வானம்பாடி – வாழும் வரை போராடு என்ற பாடல் – தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்டும் பாடல்.

  பாடலை இங்கு காணலாம்:

  இவரது மகன் ஆனந்த்பாபு பற்றி பல வதந்திகள், அண்மையில் தான் திருந்திவிட்டதாக எதோ ஒரு பத்திரிகையில் (குமுத்மோ ஆனந்தவிகடனோ) பேட்டி கொடுத்திருந்தார்.

  படம்- உனக்காக நான்
  பாடியவர்-யேசுதாஸ்
  எழுதியவர்-கண்ணதாசன்

  இறைவன் உலகத்தைப் படைத்தானா?
  ஏழ்மையை அவன்தான் படைத்தானா?
  ஏழையைப் படைத்தவன் இறைவன் என்றால்
  இறைவன் என்பவன் எதற்காக?

  பொன்னகை அணிந்த மாளிகைகள்
  புன்னகை மறந்த மண்குடிசை
  பசி வர அங்கே மாத்திரைகள்
  பட்டினியால் இங்கு யாத்திரைகள்

  இருவேறுலகம் இதுவென்றால்
  இறைவன் என்பவன் எதற்காக?

  உயரே பறக்கும் காற்றாடி
  உதவும் ஏழை நூல்போலே
  பட்டம் போலவர் பளபளப்பார்
  நூல் போலே இவர் இளைத்திருப்பார்

  இரு வேறியக்கம் இதுவென்றால்
  இறைவன் என்பவன் எதற்காக?

  இறைவன் இங்கே வரவில்லை
  எனவே நான் அங்கு போகின்றேன்
  வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே
  மறுபடி ஒருநாள் நான் வருவேன்.

 5. RV says:

  பீமார்கன், கதிரவன், தாஸ், வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!

  மணிவண்ணன், பாட்டை கேட்டிருந்தாலும், வரிகளை உன்னிப்பாக கவனித்ததில்லை. அருமையான பாடல். இதை ஒரு போஸ்டாக போடப் போகிறேன்.

 6. Bags says:

  அதிகம் யாரும் கேள்விபடாத படம். பாலசந்தரின் ”யாருக்காக அழுதான்?” என்ற திரைப்படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். எல்லோரும் பிரமாதமான் படம் என்றார்கள். அந்த வயதில் (14) எனக்கு புரியவேயில்லை.

 7. Das says:

  Bags,

  yArukkAga azhudAn is by JK I think. I may be wrong. If I remember right, it is a movie about an innocent man who loses his wife or gets cheated? Does anyone remember this story/movie?

  Some interesting tidbits about JK:

  http://forums.sulekha.com/forums/books/Jayakanthan-s-Experiences-in-Movieland.htm

 8. Bags says:

  Thanks Das. Yes. JK is the story writer. Balachandar could be the director. Now I am not sure. 🙂 But like you said, that movie is a great tragedy.

 9. RV says:

  யாருக்காக அழுதான் ஜெயகாந்தனின் சிறுகதை. திரைப்படத்தை இயக்கியதும் அவரேதான் என்று நினைக்கிறேன். நாகேஷ் ஒரு லாட்ஜில் எடுபிடி வேலை செய்பவர். பாலையா திருட, பழி நாகேஷ் மீது விழுந்து விடும். நாகேஷை எல்லாரும் போட்டு அடிக்க, பாலையா பணத்தை திருப்பி வைத்துவிடுவார். நாகேஷை எல்லாரும் “மன்னித்து” விட்டுவிடுவார்கள். நாகேஷுக்கு உண்மை தெரியும். அவர் பட இறுதியில் அழுவார். யாருக்காக அழுதார்? தனக்காகவ இல்லை பாலையாவுக்காகவா?

 10. Das says:

  RV,

  In the list you have missed “uththiravinRi uLLE vA”, a nAgEsh classic. He would say to VMurthy, “avanai nAn sAkiRa varaikkum kolluvENdA” about mAli as he is upset that jAnoo is after ravi.

 11. RV says:

  Das,

  Indeed I did miss Uttharavinri ulle va. Bags loves this movie and he too forgot about it! Thanks for the reaminder

 12. முகில் says:

  நல்ல தொகுப்பு.

  ///அவரிடமும் மிகை நடிப்பு உண்டு. எல்லா காமெடியன்களையும் போல அவரும் நிறைய படங்களில் – குறிப்பாக எழுபதுகளின் முதல் பகுதியில் – சொதப்பி இருக்கிறார். பிற்காலப் படங்களில் அவருக்கு வாய் கொஞ்சம் குழற ஆரமித்துவிட்டது. ஒரு மாதிரி சமாளித்து நடிப்பார்.///

  நுணுக்கமான விமர்சனம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: