பக்கத்து வீட்டு நாகேஷ்


போன வாரம் முழுவதும் எனக்கு வேலை அதிகம். அது இந்த வாரமும் தொடர்கிறது. (போன வாரம் தான் லே ஆஃப் நடந்து முடிந்திருக்கிறது). இந்தப் பிரச்சனைகளின் இடையே நாகேஷ் மறைந்த விஷயம் என்னுள் தாக்கம் ஏற்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் ஆகியது. இப்பொழுது அதை நினைத்துப் பார்க்க சிறிது அவகாசம் கிடைத்திருக்கிறது. ஏன் இந்த அவகாசம் கிடைத்தது என்று வருந்தும் அளவிற்கு நாகேஷ் என்னை தாக்கிவிட்டார்.

எனக்கு நாகேஷையும், அவரது நடிப்பையும் எப்பொழுதும் பிடிக்கும். நாகேஷின் ஸ்பெஷலிட்டி என்னவென்றால், அவருடைய சரளமும், அவருடைய டைமிங்கும் ஆகும். அவருடைய டைமிங் பற்றி சிலர் என்னுடன் உடன் படமாட்டார்கள். ஆனால் எனக்கு அவரது டைமிங் மீது சிறந்த அபிப்ராயம் உண்டு. எதாவது வசனம் மாறிவிட்டது என்றாலோ அல்லது சக நடிகர்கள் சொல்ல வேண்டிய வசனங்களில் இடைவெளி விழுந்து விட்டாலோ பார்வையாளர்கள் உணராதவாறு அதிலிருந்து மீளுவது பெரிய விஷயம். நாகேஷ் திரைப்படங்களில் க்ரேஸஃபுல்லாக இந்த சிக்கல்களில் வெளிவருவதுடன், சக நடிகர்களின் தவறுகளையும் தந்து சரளமான வசனங்களால் ரசிகர்கள் உணராதவாறு மறைத்து விடுவார்.

நாகேஷ் நடித்த திரைப்படங்களில் ரசிகர்களுக்கும், அவருடைய கதாபாத்திரத்திற்கும் இடைவெளி மிகவும் குறைந்தவிட்ட ஒரு பிரம்மை எழும். ஆதாவது மாது (எதிர் நீச்சல்) ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் போலவும், சுந்தரம் (சர்வர் சுந்தரம்) ரெஸ்டாரெண்டில் நம் டேபிளுக்கு சப்ளை செய்வது போலவும் ஒரு எண்ணம் உருவாகும். டைரக்டர், கதாசிரியர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றாலும் நடிகரின் உற்சாகமும், கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடிக்கும் திறமையும் இருந்தாலொழிய இது போன்ற வெற்றியை அடைய முடியாது. நாகேஷ் அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்.

கமீடியன், ஹீரோ, வில்லன், பெண் வேஷம் ஆகிய அனைத்து பாத்திரங்களிலும் வெளுத்துக் கட்டியவர். நான் சிறு வயதில் பொதுவாக தனியாக சினிமாவிற்கு செல்வது கிடையாது. தனியாக சென்றால் எப்படி பட்ட படமானாலும் போர் அடிக்கும் என்ற எண்ணம். ஆனால் நாகேஷ் சினிமாக்களுக்கு மட்டும் தான் தைரியமாக தனியாக செல்வேன். (ஒரு தியேட்டர் முதலாளி பணம் வருகிறதோ இல்லையோ, நாகேஷ் ரீ-ரன் அடிக்கடி போடுவார் – எதிர் நீச்சல், நீர்குமிழி போன்ற படங்கள். என்னைப் போன்ற ஆசாமி போலும்) மிகவும் ரசித்து பார்ப்பேன். நாகேஷ் நடித்த காதலிக்க நேரமில்லை, உத்தரவின்றி உள்ளேவா (RV எனக்கு இந்த கேசட்டை பரிசாக கொடுத்தான்) போன்ற படங்களை பல முறைப் பார்த்திருக்கிறேன். நாகேஷுடைய நடிப்பை நுணுக்கமாக பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் வியப்படைய செய்யும் சரளம். அதைப் போல் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்கமாட்டாரா என்ற எண்ணம் அடிக்கடி எழும்.

சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் போன்ற நடிகர்கள் நாகேஷுடன் சேர்ந்து நடித்த படங்கள் பல. கடைசியாக கமலுடன் பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அவ்வை சண்முகி போன்ற படங்களில் நடித்தார். இவர் ரஜினிகாந்துடன் நடித்த படம் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

அவரது மறைவு நெருங்கிய நண்பர் மறைந்த போன்ற ஒரு துயரத்தை தருகிறது.

பற்றி Bags
Trying out

6 Responses to பக்கத்து வீட்டு நாகேஷ்

 1. Surya says:

  நாகேஷ் மறைவு கேட்டு இரண்டு நாட்கள் மிகவும் வருத்தப்படேன்.ஆனால் இன்று அவரை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. நம்முடைய மனதெல்லாம் அவர் நிறைந்து விட்டுதான் இருக்கிறார் என்பது போல ஒரு எண்ணம். அந்த மாபெரும் நடிக்கு மரணமேயில்லை..

  சில நாட்கள் டூரில் இருந்தேன். தங்கள் பதிவைதான் எப்பொழுது படிப்பேன் என்றிருந்தேன்.

  உஉவா படத்தில் ஒரு சீன்: திடிரென ரவிசந்திரன் தந்தை {Guess V.S.R. or LIC Veeraraghavan} வந்து விடுவார். ஆண்டாள் என்ற கேரக்டரில் சற்று மன நலம் குன்றியவராக ரமாபிரபா கலக்குவார்.

  அப்பொழுது இந்த வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என அவர் அப்பா அறிய கூடாது என்பதற்காக அவர்கள் அடிக்கும் லூட்டிகள் சூப்பர்.

  கடைசியாக அவர் கிளம்பும் போது பெண்ணின் ரவிக்கையை அப்பாவி கோர்ட் பாக்கெட்டில் மாட்டிவிடும். அதை எடுக்க நாகேஷ் படும்பாடு ..

  அவருக்கு அறியாமல் அதை எடுத்து விட்டு அவர் திடிரென் திரும்பும் போது ” டெல்லியில நல்ல மழையா ..?? என்று கேட்கும் சீன்.. சொல்லிமாளாது..

  டயலாக்:

  ஆண்டாள்: ராமர் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி..

  நாகேஷ்: சீதைக்கு சரி.. ஆண்டாளுக்கு என்ன.. ஸ்ரீவில்லிபுத்தூர் போகவேண்டியதுதானே..??

  என அடுக்கி கொண்டே போகலாம்.

  ரஜினியுடன் “தில்லுமுல்லு”.. கலக்கல்..

 2. RV says:

  சூர்யா,

  அருமையான மறுமொழி! நன்றி.

  உ.உ.வாவில் வருபவர் வீரராகவந்தான். (மேஜரின் மாமாவோ என்னவோ) பக்ஸ், உ.உ. வாவுக்கு ஒரு விமர்சனம் எழுதுகிறாயா?

  உ.உ. வாவில் நாகேஷும் ரமாப்ரபாவும் ஒரு ஹோட்டலுக்கு போகும்போது ரமாப்ரபா ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒருவனைப் பார்த்துவிட்டு நாதா அது வேண்டும் என்பார். நாகேஷ் அது எச்சில் வேறு வாங்கித் தருகிறேன் என்று சொல்வார். குபீர் சிரிப்பு சிரித்த இடம்.

  // சில நாட்கள் டூரில் இருந்தேன். தங்கள் பதிவைதான் எப்பொழுது படிப்பேன் என்றிருந்தேன். //
  எங்களுக்கு இப்படி ஒரு வாழ்வா? You are too kind.

 3. Surya says:

  Thanx RV..

  மற்ற குழுக்களிலும், பதிவுகளிலும் கும்மிதான் அதிகமா இருக்கு..

 4. Bags says:

  >>>பக்ஸ், உ.உ. வாவுக்கு ஒரு விமர்சனம் எழுதுகிறாயா?
  கட்டாயம் எழுதுகிறேன்

 5. vimal says:

  he acted lot of films with rajini like

  1. padikkadhavan
  2. thillu mullu
  3. apporva ragangal
  4. Athisaya Piravi

 6. Das says:

  நாகேஷின் வசனங்களுக்கு ஒரு sample

  பாட்டு வாத்தியார் நாகேஷ் வீட்டுக்கு ஒரு மாணவி வருவார்:

  “வா ஜெயா! ஓ, உங்க அப்பாவோட வந்திருக்கியா, அப்போ vaangO ஜெயா!!”

  “பொண்னை பெத்ததோட விடப்படாதா! கூடவே சுத்தணுமா!!?”
  ———————————————–
  சிறுமி: “ஐய இந்த மாமாவுக்கு பாட்டே தெரியலை, (உன்னைக் கண் தேடுதே) பாட்டில இந்த இடத்தில விக்கணும்!”

  “ஆமா, உங்க அப்பன் கொடுக்கிற பத்து ரூவா காசுக்கு விக்கவும் விப்பான், வாந்தியும் எடுப்பான்!!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: