இதோ வருகிறேன் – பி.ஆர்.பி (BRB)


இப்ப நீ எழுதலைன்னு யாரும் அழவில்லை, என்பவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி: நான் கடந்த இரண்டு வாரமாக வேலையில் மிகவும் திக்கு முக்காடி போய்விட்டேன்.

கார்ப்பரேட் எக்ஸிகுயூட்டீவ்கள் கம்பெனியையும், பங்குதாரர்களையும், பல குடும்பங்களையும் அழித்ததில்லாமல், சம்பந்தமேயில்லாத நம்மையும் அல்லவா இம்சித்துவிட்டார்கள். சர்பேன் ஆக்ஸ்லி (SOX) மசோதவை பற்றி தான் சொல்கிறேன். செத்தும் கெடுத்தான் சீதகாதி வள்ளல்என்று கேள்விபட்டிருக்கிறேன். அந்தக் கதையாக அல்லவா ஆகிவிட்டது! (இதை பிரசுரித்த பிறகு – இந்த பழமொழி ”செத்தும் கொடுத்தான் சீதகாதி வள்ளல்” என்று சாரதா எனனை திருத்தினார். விவரங்கள் கிழே மற்றும் பின்னூட்டத்தில் – நன்றி சாரதா) இவர்கள் போய் விட்டார்கள். அவஸ்தை நமக்கு. இதில் SOX போதாதென்று PCI, IC, TCS போன்ற மற்ற கம்ப்லையன்ஸ் வேறு. இருக்கிற வேலை போதாது என்று இதற்கு எவிடன்ஸ், அதற்கு எவிடென்ஸ் என்று ஆடிட்டர்கள் போட்டு பிழிந்து எடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் கடமையைத் தான் செய்கிறார்கள். ஆனால் ”சத்யம்” என்ற முழுபூசனிக்காய்  சோற்றில் மறைத்த பிரைஸ் வாட்டர்ஹவ்ஸ் போன்ற ஆடிட் அலுவலை பார்க்கும் பொழுது இதெல்லாம் என்ன பயன் எனத் தோன்றுகிறது. “யாரைத்தான் நம்புவதோ பூமியிலே!” (”யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்” இது வெங்கட்ராமன் திருத்தியது – நன்றி வெங்கட்ராமன்) என்றும் பாடத் தோன்றுகிறது. ஆமாம், இந்த பாட்டு எந்த திரைப்படத்தில்?

“நீ ஏன் எழுதவில்லை?என்று உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு: (உலகத்தில் உணவு பற்றாகுறை கடந்த இரண்டு வாரம் மிக அதிகம் என்று கேள்வி படுகிறேன்) அலைகள் இன்னும் இரண்டு வாரம் இருக்கலாம். ஆனாலும் எழுத முயல்வேன்.

சாரதா கூறுகிறார்:

வள்ளல் சீதக்காதி இறந்து விட்டார் என்பதையறிந்த புலவர் வெளியூரில் இருந்து, வள்ளல் வீட்டுக்கு சில தினங்கள் கழித்து வந்துள்ளார். வள்ளல் இறப்பதற்கு முன் தன் குடும்பத்தாரிடம் ஒரு தங்க மோதிரத்தைக்கொடுத்து, புலவர் வந்தால் அவரிடம் கொடுக்கும்படி சொல்லி, இறந்துவிட்டார்.

துக்கம் விசாரிக்க வந்த புலவரிடத்தில் குடும்பத்தார் அந்த மோதிரத்தைக் கொடுத்து விவரம் சொல்ல, புலவர் அதிர்ந்து போய், (இறந்து விட்டார் என்றறிந்து விசாரிக்க வந்த இடத்திலும்) தனக்கென ஒரு பரிசினை விட்டுச்சென்ற வள்ளலை நினைத்து “செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளலே” என்று பாடினாராம்.

Advertisements

பற்றி Bags
Trying out

7 Responses to இதோ வருகிறேன் – பி.ஆர்.பி (BRB)

 1. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
  பறக்கும் பாவை

 2. சாரதா says:

  பழமொழி ‘செத்தும் கெடுத்தான்’ அல்ல ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி வள்ளல்’. வள்ளல் சீதக்காதி இறந்து விட்டார் என்பதையறிந்த புலவர் வெளியூரில் இருந்து, வள்ளல் வீட்டுக்கு சில தினங்கள் கழித்து வந்துள்ளார். வள்ளல் இறப்பதற்கு முன் தன் குடும்பத்தாரிடம் ஒரு தங்க மோதிரத்தைக்கொடுத்து, புலவர் வந்தால் அவரிடம் கொடுக்கும்படி சொல்லி, இறந்துவிட்டார்.

  துக்கம் விசாரிக்க வந்த புலவரிடத்தில் குடும்பத்தார் அந்த மோதிரத்தைக் கொடுத்து விவரம் சொல்ல, புலவர் அதிர்ந்து போய், (இறந்து விட்டார் என்றறிந்து விசாரிக்க வந்த இடத்திலும்) தனக்கென ஒரு பரிசினை விட்டுச்சென்ற வள்ளலை நினைத்து “செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளலே” என்று பாடினாராம்.

 3. Bags says:

  நன்றி வெங்கட்ராமன். (மார்ஃப் ஆகிக்கொண்டே இருக்கிறீர்கள் 🙂 சில சமயங்களில் செலக்‌ஷன்ஸ் சில சமயம் வெங்கட்)

  நன்றி சாரதா! குழப்பிவிட்டேன் – பாட்டையும் சரி, பழமொழியையும் சரி. தப்பு தப்பாக எழுதுவதற்கு, எழுதாமலே இருந்திருக்கலாம். ஆனால் அப்படி எழுதுவதில் நன்மையும் இருக்கிறது. சீதகாதி வள்ளல் கதை தெரியாமலே இருந்திருக்கும். அந்த புண்ணியவானை “செத்தும் கெடுத்தான்” என்றே நினைத்து கொண்டிருப்பேன். சீதகாதி வள்ளல் அவர்களே, இந்த பாமரனை மன்னிக்கவும்.

 4. மணிவண்ணன் says:

  ஏங்க உங்க ஊரில நான் கடவுள் ஓடவில்லையா? வலையுலகமே நான் கடவுளை அடித்து துவைத்து காயப்போடுகின்றது, உங்கள் பங்களிப்பைக் காணவில்லையே 🙂

 5. Bags says:

  நல்ல கேள்வி. எனக்கு இதைப் பற்றி நினைத்து பார்க்ககூட நேரமில்லாமல் வேலையில் மூழ்கிவிட்டேன். சமீபத்தில் ஏழாம் உலகம படித்தேன். அதனால் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. ஜெயமோகன் ”நான் கடவுள்” ஏழாம் உலகத்தின் ஒரு அங்கமே என்று கூறியிருக்கிறார். பாலா பாலா என்று பெயர் அடிபடுகிறது. எனக்கு இவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. இவரியக்கிய வேறு திரைப்படம் எது? இங்கே ஃப்ரிமாண்ட்டில் (Fremont) ஒரு தியேட்டரில் போனால் போகிறது என்று தமிழ் சினிமாக்கள் திரையிடுவார்கள். ரஜினிகாந்த், கமல் படமாக இருந்தால் இங்கெ உள்ள லோக்கல் டிஸ்ட்ரிபியூட்டரிடமிருந்து (நர்மதா டிராவல்ஸ்) ஈ-மெய்ல் வந்துவிடும். இதற்கு ஒன்றும் இல்லை. பார்ப்போம்.

 6. Bags says:

  உங்களுக்கு பதில் எழுதிய பிறகு வலையில் திரட்டிய தகவல்:

  ————————————-
  The US first week schedule as follows. The prints will be moved to next circle of cities, the following week.

  Movie city , Edison , NJ
  Serratheaters, Bayarea, CA
  Norwalk, Los Angeles, CA
  Novi , Detroit , MI
  Funasia in Dallas and Houston, Texas.

  ————————————-
  Serratheaters, Bayarea, CA – இது எங்கே இருக்கிறது என்று பார்க்கவேண்டும். அல்லது அடுத்த ரவுண்டில் பார்க்கவேண்டியது தான்.

  மொத்தம் 235 ப்ரிண்ட் இந்த படத்திற்கு. அதில் ஐந்து அமேரிக்காவில் சுற்றுகிறது போல் தெரிகிறது. சிவாஜியும், தசாவதாரமும் எங்கு பார்த்தாலும் ஓடியது. சிவாஜிக்கு கூட்டம் நம் தமிழக தியேட்டர்கள் போல் ரோட்டில் ஒரு 200, 300 அடிக்கு கியூ. பிளாக்கில் டிக்கட் வேறு. முதலில் $15 (ரூ.750 கிட்டதட்ட) போய்க்கொண்டிருந்தது. 20 நாட்களுக்கு பின்னர் ஒரு 10, 20 பேர்களை வைத்து $5 வாங்கிக்கொண்டு ஓட்டினார்கள்.

 7. surya says:

  கடவுள் பார்க்க போகிறீர்களா..?

  தைரியமாக போய் வாருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: