1950-இல் வந்த படங்கள்


1950-இல் 13 படங்கள்தான் வெளி வந்திருக்கின்றன. இதய கீதம், ஏழை படும் பாடு, கிருஷ்ண விஜயம், சந்திரிகா, திகம்பர சாமியார், பாரிஜாதம், பொன்முடி, மச்ச ரேகை, மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி, ராஜ விக்ரமா, லைலா மஜ்னு, விஜயகுமாரி அவ்வளவுதான். சின்ன லிஸ்டாக இருப்பதால் முழுதாக கொடுத்திருக்கிறேன். எத்தனை படத்துக்கு இன்னும் பிரிண்ட் இருக்கிறதோ? யாராவது பார்த்தவர்கள் இருந்தால் படங்களை பற்றி சொல்லுங்கள்.

விக்டர் ஹ்யூகோ எழுதிய Les Miserables நாவல ஏழை படும் பாடு நாகையா, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்து ஏழை படும் பாடு என்று வந்தது. இந்த படத்தில் ஜாவர் என்ற ரோலில் நடித்ததால்தான் ஜாவர் சீதாராமன் என்ற பட்டப் பெயர் அவருக்கு கிடைத்தது. இன்றும் பேசப்படுகிறது.

நம்பியார் பல வேடங்களில் நடித்த திகம்பர சாமியார் இந்த வருஷம்தான் வந்தது. இது வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய அந்த காலத்தில் புகழ் பெற்ற மர்ம நாவல்.

பாரதிதாசன் எழுதிய நூல் பொன்முடி என்று படமாக்கப் பட்டது.

எம்ஜிஆர், வி.என். ஜானகி நடித்த மருத நாட்டு இளவரசி இந்த் வருஷம் வந்ததுதான்.

இவ்வளவு இருந்தும் இவற்றில் நான் பார்த்தது மந்திரி குமாரி ஒன்றுதான். அதனால் எந்த படத்தை பற்றி எழுதுவது என்று பெரிதாக ஒன்றும் யோசிக்க வேண்டியதில்லை. அது அடுத்த பதிவில்.

அடுத்த கட்டம்


சன் டிவி திரைப்படங்களை telecast செய்த போது வரிசையாக எழுத முடிந்தது. இப்போதோ அப்படி கோர்வையாக எழுத முடியவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒவ்வொரு வருஷமும் வந்த படங்களில் நான் பார்த்தவற்றில் எது சிறந்ததோ அதைப் பற்றி இனி மேல் ரெகுலராக எழுதலாம் என்று இருக்கிறேன். 1950-இலிருந்து தொடங்கப் போகிறேன்.

எந்த வருஷம் எந்த படம் வந்தது என்பதற்கு ஆதாரம் தமிழ் சினிமா சைட்தான்.

Obviously, நான் எல்லா படங்களையும் பார்த்ததில்லை. நான் தேர்ந்தெடுக்கும் படத்தை விட நல்ல படம் அந்த வருஷம் வந்திருக்கலாம். இல்லாவிட்டால் நான் தேர்ந்தெடுக்கும் படத்துக்கு ஏற்கனவே விமர்சனம் இருக்கலாம். அப்படி என்றால் அடுத்த படத்துக்கு தாவி விடுவேன்.