அன்னையின் ஆணை


பராசக்தி பற்றி எழுத இன்னும் முடியவில்லை. அதற்குள் விகடனின் அன்னையின் ஆணை விமர்சனம். 20-7-1958-இல் வந்தது. கிருஷ்ணமூர்த்தி, கவனியுங்கள். புத்தம் புது படம்!

விகடனுக்கு நன்றி!

சந்தர்: ஹலோ சேகர், எங்கே இப்படி?
சேகர்: மார்லன் பிராண்டோ படம் ஒண்ணு ஓடுகிறதே, அதைப் பார்க்கப் போயிருந்தேன்!
சந்தர்: என்ன மிஸ்டர் அளக்கறே? எனக்குத் தெரிந்து அப்படி ஒரு படம் எங்கேயுமே ஓடலியே?
சேகர்: தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசன் நடித்த படம்!
சந்தர்: ஓ… சிவாஜியா? ஏன் அந்த மார்லன் பிராண்டோ தான் ஆங்கில நாட்டின் சிவாஜிகணேசனாக இருக்கட்டுமே! நீயா அவருக்குப் பட்டங்களெல்லாம் கொடுக்காதே!
சேகர்: நான் கொடுக்கலே. படத்திலேயே கொடுத்திருக்காங்க! ‘சாம்ராட் அசோகன்’ நாடகம் ஆன பிறகு, கணேசனை இப்படிப் புகழ்ந்து பாராட்டுகிறார் கருணாகரர்.
சந்தர்: சரி, ஸ்டோரி என்ன?
சேகர்: கொஞ்சம் புதுமை! பிளாஷ்பாக் கதையும் நேர்முறைக் கதையையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள்.
சந்தர்: ‘அவுட்லைன்’ சொல்லேன்?
சேகர்: பலரை வஞ்சித்து வாழுகிறார், பணக்கார பரோபகாரம். மானேஜர் சங்கர் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். விஷயம் அறிந்த சங்கர், சண்டைக்குப் போகிறான். ஆனால், தந்திரமாக அவன் மீதே கொலைக் குற்றம் சாட்டி விடுகிறார் பரோபகாரம். சங்கர் சிறைப்படுகிறான்.பிரசவ வேதனையில் இருக்கும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு, ஒரு நாள் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான். ஆனால், போலீசாரால் சுடப்பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது… வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்… இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.
சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?
சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்! கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோகனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! ‘பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் ‘வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்’னு அலட்சியமாக…
சந்தர்: வில்லன் யார்?
சேகர்: பரோபகாரம் ரங்காராவ்தான் வில்லன். நம்பியார் அவருக்கு மேலே பெரிய வில்லன். எம்.என். ராஜத்தை மயக்கி, கடைசியில் வேறு வழியில்லாமல் மணந்துகொண்டு, பரோபகாரத்திற்கும் அவர் மகள் சாவித்திரிக்கும் தீங்கு செய்கிறார். இந்தப் படத்தில் எல்லோர் நடிப்புமே அற்புதம். ஆனால், அன்னையின் ஆணையை நிறைவேற்ற பரோபகாரத்தைப் பழிவாங்கும் படலம்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்…
சந்தர்: சிகரமா..?
சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

11 Responses to அன்னையின் ஆணை

 1. krishnamoorthy says:

  கவனிச்சுட்டேன்.
  சந்தர்-சேகருக்குத் தெரியாத, அன்றிலிருந்து இன்றுவரை எல்லாத் திரைப்படக் கதாசிரியர்களும், இயக்குனர்களும் செய்த்வருகிற, காப்பியடிக்கிறது, அதையும் ரொம்ப கோரமாக் காப்பியடிக்கிறது, இதுதான் அன்னையின் ஆணையின் ஒன் லைன் தீம்.

  ரங்காராவைப் பழி வாங்குகிற படலம் அப்படியே, Alexander Dumas எழுதிய The Count of Monte Cristo விலிருந்து மிக மட்டமாக உல்டா அடிக்கப் பட்டது. ஒரிஜினல் கதையைப் படித்திருந்தீர்களேயானால், இந்த மாதிரிப் புத்தம் புதிய காப்பிக்கு ரொம்ப சூடாக விமரிசனம் எழுதியிருக்கவே மாட்டீர்கள்! நடிப்பு என்பதே மிகைப்படுத்துவது தான் என்றாலும் அளவுகடந்த மிகைப்படுத்துதல், அலட்டல்களால் சிவாஜி கணேசன் நடத்திய [அ]கோரித் தாண்டவம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  • Karthikeyan says:

   Ivan hero ennamo periya pudhu kadhaila nadichu keezhichita maadhiri paesaraan…Arignar Anna ezhudhiya Sivaji kanda Samraajiyam Drama la dialogue booka paathu oadi ponavan dhaan ivanoda hero…Thooo….Avanellam oru hero…!! Andha samayathula Sivaji Ganesandhaan Annavoda Manathe Kaapathinaar !! Varalaaru theriyaadha Pulluruvi Krishnamoorthy….

 2. RV says:

  டங்க்ளார்சை சிறையில் வைப்பது பற்றி சொல்கிறீர்கள். அதனால் என்ன? அபூர்வ சகோதரர்கள், உத்தம புத்திரன், நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களும் முறையே கார்சிகன் பிரதர்ஸ், மான் இன் த ஐயர்ன் மாஸ்க், ப்ரிசனர் ஆஃப் ஜெண்டா, காப்டன் ப்ளட் மற்றும் ஸீ ஹாக் ஆகிய புத்தகங்களில் இருந்து உருவாக்கப்பட்டவைதானே! மேலும் டங்க்ளார்ஸ் சிறைப்படுவது மாண்டி க்ரிஸ்டோவில் ஒரு சிறு பகுதிதானே!

  எனக்கு இந்த விமர்சனத்தில் பிடித்த இடமே சிவாஜியின் ஸ்டைலை சிலாகிப்பதுதான். அதே இடத்தை நான் பார்த்து ஸ்டைலாம் என்று நக்கல் அடித்தேன். ரசனைகள் எவ்வளவு தூரம் மாறி இருக்கின்றன என்பதை அது நன்றாக தெளிவுபடுத்துகிறது. சிவாஜி அன்றைய ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதை கொடுத்திருக்கிறார். இன்றைய ரசிகர்கள் மாறி விடுவார்கள் என்று அவருக்கும் தெரியவில்லை.

 3. krishnamoorthy says:

  சிவாஜியிடம் இருந்த பெரும் குறையே, ஓவர் அலட்டல் தான். அடக்கி வாசிப்பது என்பது என்பது அவரிடத்தில் இருந்ததே இல்லை. இதற்குப் போட்டியாகத் தேங்காய் சீனிவாசன், அசோகன் என்று பலரும் ஓவர் அலட்டல் நடிப்பை அள்ளி வீச சிவாஜியின் தனி அடையாளம் என்பதே கொஞ்சம் காணாமல் போயிற்று. இந்த லட்சணத்தில், அண்ணாச்சி தனிக் கட்சி ஆரம்பித்து, அதன் கொள்கை விளக்கமாக ‘என் தமிழ் என் மக்கள்’ என்று ஒரு படம் வேறு எடுத்து ரசிகர்களை நொந்து நொம்பலமாக்கினது தனிக்கதை.

  இதை அழுத்திச் சொல்வதற்குக் காரணமே, சிவாஜி என்றுமே ரசிகர்களுடைய ரசனையைப் புரிந்து கொண்டது இல்லை; தனக்கு என்ன தெரியுமோ அது தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்பிய …………….. அவ்வளவுதான்!

  இதில் சிவாஜியை மட்டுமே குறை சொல்வதில் பயனில்லை. அவருக்காகக் கதை எழுதியவர்கள், இயக்கியவர்கள் எல்லோருமே, அந்த ஓவர் அலட்டலில் இருந்து வெளிவர அவருக்கு உதவவில்லை. இருவர் உள்ளம்படத்தைஇயக்கிய திரு L V பிரசாத் அவர்கள், பல காட்சிகளில்இந்த சீனில் கதாநாயகி தான் முன்னிறுத்தப் பட வேண்டும், அடக்கி வாசிஅடக்கி வாசி என்று வலியுறுத்தி, ஏதோ கொஞ்சம் சிவாஜியும், அந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் அடக்கி வாசித்ததாகவும் நினைவு.

 4. RV says:

  நான் இங்கே உங்களிடமிருந்து கொஞ்சம் வேறுபடுகிறேன். நானும் சிவாஜியின் மிகை நடிப்பை கண்டு நொந்தவந்தான். ஆனால் பல படங்களில் அந்த நடிப்பு சோபிக்கவும் செய்தது. உத்தம புத்திரன் வில்லன், மனோகரா, கௌரவம், கட்டபொம்மன் மாதிரி படங்களில் அது பொருத்தமாகத்தான் இருந்தது. அசோகனின் மிகை நடிப்புக்கு நானும் பக்சும் cult followers என்றே சொல்லலாம். அசோகன் இருந்தால் போதும், எங்களுக்கு வேறு காமெடியன்கள் தேவை இல்லை.

  ஆனால் நான் சிவாஜி மிக திறமை வாய்ந்த நடிகர் என்றுதான் சொல்வேன். கப்பலோட்டிய தமிழனிலும், நவராத்திரியில் சில ரோல்களிலும், தெய்வ மகனில் தம்பியாகவும், இப்போது ஞாபகம் வராத சில படங்களிலும் அவர் அடக்கி வாசிக்கத்தான் செய்தார். (இருவர் உள்ளத்தில் கோர்ட் சீனில் அப்பா என் கல்லறையில் ஒரு பூ வையுங்கள் என்று உருகிய ஞாபகம்) அவரால் முடியும், அனால் அவரும், அவரது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று நினைத்தார்கள். ரசிகர்களும் அதை ஒரு காலத்தில் விரும்பினார்கள் என்பதைத்தான் இந்த விமர்சனம் காட்டுகிறது.

 5. rinks says:

  Haha. Interesting indeed! I have actually never seen my father appreciating Sivaji’s acting! But whenever we discuss about his overacting at home. He would also quote Sivaji’s acting and body language as the younger son in deiva magan as his favorite. Apparently, it was one of the rare characters where he actually happened to like him. I personally found his mannerisms quite gay. I don’t know what to call it… whether its a matter of difference of taste or generation gap.

  Coming back to Annaiyin Aanai. I suppose it was good for a one time watch! But he did some horrible overacting in the flashback scenes in the father role. His portrayal of Samrat Asokan in the college play-act was also pretty OTT in my opinion.

  இது எங்கோ படித்ததாக நினைவு. அவரும் சாவித்திரியும் உணர்ச்சிவசப்பட்டு அடித்துக்கொள்ளும் காட்சி. அவரோட மார்பெல்லாம் ரத்தம் வழியும். அதை அலட்டிக்காமல் கழிவு கொண்டு வருவார். பிறகு சாவித்திரியை வந்து ஆத்திரம் தீர அடிப்பார். அது வந்து அவரோட நிஜமான ரத்தம் என்று படித்தேன். அந்த காட்சியில் சாவித்திரி ரொம்ப involve ஆகி அவரை உண்மையாகவே கீறி விட்டாராம். lol. அந்த அம்மையாருக்குள்ளும் அன்று என்ன புகுந்ததோ தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் ! அதே போல் “எதிர்பாராதது” திரைப்படத்தில் பத்மினியிடம் அடி வாங்கும் காட்சியில். பத்மினி அவரை பிடித்து சம மொத்து
  மொத்தி விட்டாராம். சிவாஜி என்ன அலறியும் இயக்குநர் கட் சொல்லவில்லையாம். அவர் முகம் வீங்கி ரத்தம் வழிந்திருக்கிறது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம் . அடி வாங்கியது என்னமோ நான் ஆனால் முதல் சிகிச்சை(டாக்டர் வந்து ஊசி போட்டிருக்கிறார்) வழங்கபட்டதென்னமோ அந்த அம்மையாருக்கு என்று கிண்டலாக சொல்லியிருந்தார் !

 6. RV says:

  ரிங்க்ஸ்,

  தெய்வ மகனில் நடித்தது போல் இன்று நடித்தால் gay என்று சொல்லி விடுவார்களதான். ஆனால் இன்றைய மதிப்பீடுகள் எப்படி மாறும் என்று அவரால் எப்படி அன்று கண்டுபிடிக்க முடியும்? அவர் அந்த படத்தில் இயக்குனர் ஸ்ரீதரை போல் நடித்தார் என்று சொல்வார்கள். அடக்கி வாசித்ததற்கு ஒரு உதாரணமாகவ அதை குறிப்பிட்டேன்.

  பத்மினி சிவாஜியை அடித்து விட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டதை பற்றி நானும் எங்கேயோ படித்திருக்கிறேன்.

  சீக்கிரம் அன்னையின் ஆனைக்கும் என் விமர்சனத்தை எழுதி விட வேண்டியதுதான்! எனக்கு இந்த ஓரங்க நாடகங்களால் எப்போதுமே குழப்பம். எந்த படத்தில் சிவாஜி நாடகம், எந்த படத்தில் அசோகன், எந்த படத்தில் சலீம், எந்த படத்தில் செங்குட்டுவன் என்று குழம்புவேன். இதில்தான் அசோகனாக நடித்ததா?

 7. krishnamoorthi says:

  அதுக்கும் முன்னாலே அண்ணாச்சி தன்னைப் பத்தியும், தமிழ்நாட்டைப் பத்தியும் என்ன நெனச்சிருந்தார்னு தெரிஞ்சுக்க அவர் தயாரிப்பான “என் தமிழ் என் மக்கள்” படத்தைஒரு தடவை பாத்துட்டு அப்புறமா, அன்னையின் ஆணை, தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை இதுக்கெல்லாம் விமரிசனசம் நல்லாவே எழுதுங்க.

  • RV says:

   கிருஷணமூர்த்தி,

   சரி என் தமிழ் என் மக்களையும் ஒரு நாள் பார்த்து தொலைக்கிறேன். ஏன் மேல் எங்க உங்களுக்கு இவ்வளவு கோபம்? 🙂 இல்லை நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் அப்படின்னு ஒரு ஃபீலிங்கா? 🙂

   • Karthikeyan says:

    Adhu veru ondrum illai Mr.R.V…..Krishnamoorthy is bubbling with inferiority complex when he thinks about HIS favourite hero, who was not capable of anything but to only fool people. One of the fooled people is Mr.Krishnamoorthy….
    These guys will talk about only two things……One is Sivaji’s election result and Sivaji’s EnThamizh En Makkal….Do they have guts to review the way, Uzhaikkum Karangal/Naalai Namadhey/Pallandu Vaazhga/ Meenava Nanban etc., ? From 1936 till 1977, Krishnamoorthy’s favourite hero was able to do only 136 films JUST 136 Films in 41 years and all over 85% of them are masala films dependent on Heroine’s glamour, fights and songs that was specifically written to fool people like Krishnamoorthy. Nadippa Paththi Pesa Ivanungalukku Enna Thagudhi Irukku?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: