நம்பியார் – குடி, தடி, தாடி வேஷங்கள்


மீண்டும் விகடனுக்கு நன்றி!

நம்பியார் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே:

முப்பது வருடங்களுக்கு முன் நவாப் ராஜ மாணிக்கத்தின் நாடகக் கம்பெனி நீலகிரிக்குப் போயிராவிட்டால், சினிமா உலகிற்கு மஞ்சேரி நாராயணன் நம்பியார் கிடைத்திருக்கமாட்டார். கம்பெனியிலிருந்த சிறுவர்களைப் பார்த்துத் தானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்படவே, திடீரென்று ஒரு நாள் போய்ச் சேர்ந்து விட்டார்.

”நாடகத்தில் என்ன வேஷம் போடுவீர்கள்?”

”குடி… தடி… தாடி முதலிய வேஷங்கள்…”

”அப்படின்னா?”

”குடிமக்களில் ஒருவன், தடியைப் பிடித்துக் கொண்டு அரச சபையில் நிற்கும் சேவகன், ரிஷிகள், முனிவர்கள்…”

1935-ம் வருஷம் மைசூரில் கம்பெனி காம்ப் இருந்தபோதுதான், பம்பாய் ரஞ்சித் ஸ்டுடியோவில் பக்த ராமதாஸ் படமாக்கப்பட்டது. நம்பியார் நடித்த முதல் தமிழ்ப் படம் அதுதான். அதில் அவர் தெலுங்கில் வசனம் பேசியிருக்கிறார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் 40 ரூபாய்!

ஆர்வி: எவ்வளவு பெரிய ரோல் என்று தெரியவில்லை. ஆனால் நாற்பது ரூபாய் சம்பளம்! அந்த காலத்து விலைவாசிகளை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

தமிழ் படத்தில் தெலுங்கு வசனம் பேசி நடித்திருக்கிறார்! அப்போதெல்லாம் தமிழ்-தெலுகு பாய் பாய் போல!

குடி, தடி, தாடி என்ற ரோலை நான் மிகவும் ரசித்தேன். இந்த ரோல் போடுவதற்கென்றே அந்த கால நாடகக் கம்பெனிகளில் ஆட்கள் வைத்திருந்தார்கள் என்றால் அவர்கள் மிகவும் திட்டமிட்டு நாடகம் நடத்தி இருக்க வேண்டும்! நான் தேடியவரை எனக்கு கிடைத்த சாதாரண குடிமகன் நம்பியார், தடியோடு நம்பியார், தாடியோடு நம்பியார் ஸ்டில்கள் கீழே.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to நம்பியார் – குடி, தடி, தாடி வேஷங்கள்

 1. BaalHanuman says:

  நம்பியார் பற்றி சாரதா கூறுகிறார்….

  ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் நல்லவராக (போலீஸ் அதிகாரியாக) வரும் நம்பியார், ஒரு கட்டத்தில் பொறுக்கிகளின் கையில் சிக்கி கதறிக்கொண்டிருக்கும் (எம்.ஜி.ஆரின் தங்கை) சாரதாவைக் காப்பாற்ற ஜீப்பில் இருந்து குதித்து ஓடும்போது, அதே ரசிகர்கள் நம்பியாருக்காக கைதட்டினார்கள். (எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆர். படங்களில் நம்பியாருக்கு கைதட்டல் விழுந்த படம் இதுவாகத்தான் இருக்கும்).

 2. BaalHanuman says:

  நம்பியார் அவர்களின் நடிப்பு எந்தளவுக்கு மக்களிடையே பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை சொல்வார்கள்

  MGR முதன்முதலாக முதல் அமைச்சராக ஆனபோது ஒரு மூதாட்டி ஒருவர் வந்து MGR -ன் கையைப் பிடித்துக் கொண்டு ‘யாரை வேண்டுமானாலும் நம்பு அந்த நம்பியாரை நம்பிடாதே!’ என்று அறிவுரை சொன்னாராம்.

 3. Ganpat says:

  //MGR முதன்முதலாக முதல் அமைச்சராக ஆனபோது ஒரு மூதாட்டி ஒருவர் வந்து MGR -ன் கையைப் பிடித்துக் கொண்டு ‘யாரை வேண்டுமானாலும் நம்பு அந்த நம்பியாரை நம்பிடாதே!’ என்று அறிவுரை சொன்னாராம்.//
  இதைவிட கொடுமை இந்த மூதாட்டிக்கு ஒரு ஒட்டு வேறு உண்டு .
  2G என்ன 999G கூட நடக்கும் நம் நாட்டில்!!
  வாழ்க இந்திய ஜனநாயகம்!

  • சாரதா says:

   அதனால்தான் மக்களின் அபிமானத்தை மிகச்சரியாகப் ‘பயன்படுத்திக்’ கொண்டவர்களில் எம்.ஜி.ஆர். என்ற மனிதரை யாராலும் நெருங்க முடியவில்லை.

   அவர் கதாநாயகனாக நடிக்கத்துவங்கிய முதல் படத்திலிருந்து, மிகக்கடைசிப்படம் வரையில், எந்த கால கட்டத்தில் வந்த, எந்தப்படத்தை எடுத்துக்கொண்டாலும் (அது 50 ஆக இருக்கட்டும், 60-ஆக இருக்கட்டும், 70 ஆக இருக்கட்டும்) அவர் ஏற்கும் கதாபாத்திரம், அதன் குணாதிசயம், அவர் பேசும் வசனம், அதில் வரும் ஒவ்வொரு வார்த்தை, அவரது பாடல்கள், அதில் இடம்பெறும் ஒவ்வொரு வரிகள், அவரைப்பற்றி மற்ற கதாபாத்திரங்கள் பாடும் பாடல் வரிகள்…… இவை ஒவ்வொன்றுமே மக்களின் ‘ஓட்’டுக்களை குறி வைத்தே அமைக்கப்பட்டிருக்கும்.

   (அதனால்தான், ‘திரைப்படம் வேறு, நிஜவாழ்க்கை வேறு’ என்று மக்கள் இனம்பிரித்துப் பார்ப்பார்கள் என்று நம்பி அரசியலில் இறங்கியவர்கள் எடுபடாமல் போனார்கள். 77-ல் கிடைத்த அரியணை, 50-லிருந்தே போடப்பட்டு வந்த பலமான அஸ்திவாரம்).

   • Ganpat says:

    ஒரு எடிசன்;
    ஒரு கண்ணதாசன்
    ஒரு வாலி
    ஒரு விஸ்வநாதன்(ராமமூர்த்தி)
    ஒரு செளந்திரராஜன்

    இவர்களை சரிவர பயன்படுத்திக்கொண்டால் மாநில முதலமைச்சர் என்ன ,நாட்டின் ஜனதிபதியாக கூட ஆகலாம்.

   • BaalHanuman says:

    எம்.ஜி.ஆர் பற்றி பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்….
    ===============================================
    எம்.ஜி.ஆர் ஒரு விசித்திர மனிதர். மேலோட்டமாகப் பார்க்கும்போது எனக்கு அவர் ஒரு கோமாளியாக மட்டுமே தெரிந்தார். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்.ஜி.ஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.

    ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்.ஜி.ஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    தமிழ்ச் சினிமாக்களில் எம்.ஜி.ஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.

    தனிப்பட்ட முறையில் எந்த எம்.ஜி.ஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன்.

    அரசியல் தளத்தில் எம்.ஜி.ஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்.ஜி.ஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது பெரும் ஆச்சரியம்தான்.

    எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.

    என்றாவது, யாராவது ஒருவர் எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு மக்கள் தலைவர் என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.

    அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் லாயக்கற்றவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது. அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக்கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். பைத்தியம் பிடித்த ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும்! நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்!)

    அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    வாத்யார் என்றாலே பொதுமக்களுக்கு அவர் ஒருவர்தான். (இந்தப் பெயர் ஏன் வந்தது?)

 4. Ganpat says:

  இதில் இத்தனை ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
  பத்ரி எல்லாவற்றையும் அறிவு பூர்வமாக பார்க்கிறார்.இந்தியர்கள் எல்லாவற்றையும் இதய பூர்வமாக பார்க்கின்றனர்.Period
  ஒரு கேள்வி பதில் (பல ஆண்டுகளுக்குமுன் படித்தது) ஞாபகத்திற்கு வருகிறது.
  Q:MGR ஒரு மேனன் என்கிறாரே, நடிகர் சந்திரபாபு.?
  A:உண்மைதான்! அவர் ஒரு Phenomenon!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: