சந்திரபாபு
ஏப்ரல் 22, 2009 12 பின்னூட்டங்கள்
1957-இல் தமிழ் சினிமா பற்றி எழுத இந்த வார இறுதி ஆகும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னொரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன்.
1-3-64-இல் வெளி வந்த பேட்டி. நன்றி, விகடன், விகடன் பொக்கிஷம்!
தூத்துக்குடி காங்கிரஸ்காரர் ஜே.பி. ராட்ரிக்ஸின் பதின்மூன்று குழந்தைகளில் ஆறாவது மகன், சந்திரபாபு. சிறு வயதிலிருந்தே விகடம் பண்ணுவதுதான் அவனுடைய பொழுதுபோக்கு. பிறர் போல் பேசியும் நடித்தும் காட்டச் சளைக்கமாட்டான். ஆங்கில சினிமா பார்த்துவிட்டு வந்தால் போதும், சார்லஸ் போயர், லாரன்ஸ் ஒலிவியர், ஃப்ரெடரிக் மார்ச் ஆகியவர்களை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவான். சரியாகப் பிடித்துவிட்டது சினிமாப் பைத்தியம்! இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. முடிவு – தனி மனிதனாகி விட்டான் கலைஞன் சந்திரபாபு.
ஒரு விதத்தில் சந்திரபாபு சென்னைக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது ஜப்பான்காரன்தான். சென்ற யுத்தத்தின்போது இலங்கையில் குண்டுகள் விழுந்ததும், அங்கு குடியேறியிருந்த ராட்ரிக்ஸின் குடும்பம் இந்தியாவில் வந்து குடியேறியது.
தூத்துக்குடியிலிருந்து தனியாகப் புறப்பட்ட சந்திரபாபு, கையில் ஆறணா காசுடன் எழும்பூரில் வந்து இறங்கினார். எங்கு போவது, யாரைப் பார்ப்பது என்று புரியவில்லை. அப்போது, தந்தை தினமணியில் பணிபுரிந்துகொண்டிருப்பது நினைவுக்கு வர, அங்கே போனார். ஆனால், அங்கு தந்தை இல்லை. வேலையை விட்டு விட்டுப் போய்விட்டார் என்றார்கள். எங்கு குடியிருக்கிறார் என்று கூட ஒருவருக்கும் தெரியவில்லை.
சந்திரபாபுவுக்குத் தலை சுற்றியது. களைப்பு, பசி, ஏமாற்றம்! உடல் பதறியது. நிற்க முடியவில்லை. தடார் என்று தரையில் சாய்ந்துவிட்டார். அருகே இருந்த அன்பர் ஒருவர் – விருத்தாசலம் என்று பெயர் – உதவியுடன் மயிலாப்பூர் மாருதி பார்மஸி வந்து சேர்ந்தார். மலேரியா ஜுரத்துக்கு மருந்து எழுதிக் கொடுத்த டாக்டர், தந்தை இருக்கும் விலாசத்தையும் கொடுத்தார். மருந்து புட்டியுடன் தந்தை வசித்த வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரபாபு.
பின், அங்கிருந்து திருவல்லிகேணி காங்கிரஸ்காரர் ஏ.ஆர்.வி.ஆச்சார் இருந்த லாட்ஜில் குடி புகுந்தார். அப்போதெல்லாம் இந்திப் பாட்டுக்களைப் பிரமாதமாகப் பாடிக்கொண்டு இருப்பார் பாபு. அதிசயப்பட்ட ஆச்சார், அவரை டைரக்டர் கே.சுப்ரமணியத்திடம் கொண்டு விட்டார். அங்கு பலவிதமான நடனங்களைப் பயின்றார் சந்திரபாபு. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் ஒரு நடனப் படத்தில் நடிப்பதாகவும் ஏற்பாடாயிற்று. ஆனால், அது பாதியிலேயே நின்றுபோய்விட்டது.
”அப்புறம் மனம் உடைந்து போய், அலைஞ்சுக்கிட்டிருந்தேன். பி.எஸ்.ராமையாவின் முயற்சியால் ‘தன அமராவதி’ என்கிற படத்தில் ஒரு சான்ஸ் கிடைச்சுது. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே தகராறு பண்ண ஆரம்பிச்சுட்டேன். குடுமி வைக்கிறதுக்காக மொட்டை அடிச்சுக்கணும்னு சொன்னாங்க. நான் மாட்டேன்னேன். அப்போ என் தலை முடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். அதைத் தியாகம் செய்ய மனசு வரலே. அப்போ செட்டிலேயிருந்த பழைய நண்பர் விருத்தாசலம் (அவர்தான் புரட்சி எழுத்தாளர் புதுமைப்பித்தன்) ‘மொட்டை அடிச்சுக்கோ! அதனால என்ன? மறுபடியும் வளர்ந்துட்டுப் போகுது’ன்னார். சரின்னு ஒப்புக்கிட்டேன். ஆனால் மொட்டை அடிச்சுக்கிட்டதுதான் மிச்சம். படம் கோவிந்தா ஆயிடிச்சு! அதற்கப்புறம் எங்கெங்கேயோ போனேன். யார் யாரையோ கேட்டேன். எல்லோரும் என்னைப் பைத்தியக்காரன் மாதிரிதான் ட்ரீட் பண்ணினாங்களே ஒழிய, திறமையுள்ள கலைஞன் மாதிரி மதிக்கலே. கடைசியிலே ஜெமினி அதிபர் வாசனைப் போய்ப் பார்த்தேன். அவரும் உற்சாகமா பதில் சொல்லலே. சரி, இனிமேல் உயிரோடு இருந்து பிரயோசனம் இல்லை என்று முடிவுக்கு வந்து ஜெமினி ஸ்டுடியோவிலேயே விஷம் குடிச்சு மயக்கமா விழுந்தேன். கேமராமேன் தம்புவும், ஜெமினி கணேசனும்தான் என்னை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிக் காப்பாத்தினாங்க. அப்படி ஒரு ட்ராஜிடியிலே ஆரம்பிச்சதுதான் இந்தக் காமெடியனின் வாழ்க்கை.”
ஜெமினியின் மூன்று பிள்ளைகள் படத்தில் ஒரே ஒரு ஸீனில் ஒரு டைரக்டர் வேஷத்தில் நடித்து எஸ்.எஸ்.வாசனின் பாராட்டைப் பெற்றதையும், அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதையும் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார் பாபு.
சகோதரி படத்தில் தன் பாத்திரம் அமைந்த விதம் பற்றிக் கூறினார். படத்தை முடித்து, அதைப் போட்டுப் பார்த்த ஏவி.எம். அவர்கள், அதில் காமிக் சேர்க்கவேண்டும் என்று விரும்பி, சந்திரபாபுவைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டாராம். சந்திரபாபு படத்தைப் பார்த்துவிட்டு, மனத்தில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதற்கு வசனம் எழுதி, எங்கெங்கே நுழைக்கவேண்டும் என்றும் தீர்மானித்து, ஒரே வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.
”நான் ஒரு முட்டாளுங்க… ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்ற பல்லவி என்னுடையதுதான். மிச்சம்தான் கண்ணதாசனுடையது. ஒரே நாள்லே டியூன் போட்டு ரிக்கார்ட் பண்ணி, அந்தக் காட்சியையும் முடித்துக் கொடுத்தேன். அப்படி உருவானதுதான் அந்த அருமையான பால்காரர் வேஷம்!”
சந்திரபாபு வணங்கும் கடவுள்: சார்லி சாப்ளின்.
ஆர்வி: நான் ஒரு முட்டாளுங்க பாட்டை இங்கே கேட்கலாம்.
சந்திரபாபு நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சபாஷ் மீனாதான். அதைப் பற்றி அடுத்த பதிவில்.
மிக அருமையான கலைஞன். நல்லகலைஞனது சொந்த வாழ்க்கை சோகமாகிப் போனது, சந்திரபாபுவின் துரதிர்ஷ்டம். எல்லாம் தெரிந்தும் மாடி வீட்டு ஏழை படமெடுக்கப் போய் இருந்ததையும் கோட்டை விட்டு, போதை மருந்திற்காக ஏங்கித் திரிந்த கடைசி நாட்கள், ……..என்ன சொல்வது?
கிருஷ்ணமூர்த்தி,
அவரது வாழ்க்கை மிக சோகமானதுதான். எத்தனை கலைஞர்கள் இப்படி சொந்த பட கனவால் அழிந்து போயிருக்கிறார்கள்?
அவரது வாழ்க்கை வரலாறு சமீபத்தில் புத்தகமாக வந்திருக்கிறதாமே? நீங்கள் படித்திருக்கிறீர்களா?
நான் படித்த வரை, பாபுவின் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கவில்லை. அவரது மனைவி திருமணத்திற்கு முன்பு இன்னொருவரை விரும்பினாராம். பாபுவும், லண்டனில் வசித்த அவருடன், இணைந்து வாழ வழி செய்தார்.
தாஸ்,
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா பொய்யா தெரியாது.
அற்புத கலைஞன். ஆனால் பின் நாட்களில் மிகவும் துயரமான, அவரை பற்றி மோசமான நிகழ்வுகளை சொல்கிறார் வனவாசத்தில் கவியரசர்.
கவலை இல்லாத மனிதன் திரைப்படத்தை தயாரித்து பாபுவால் தான் நொந்து நூடுல்ஸானதையும் விவரிக்கிறார்.
சூர்யா,
அட! நீங்களும் வனவாசம் படித்திருக்கிறீர்களா? அதில் கவிஞர் குறிப்பாக சொல்லும் பெயர்கள் யார் யார் என்று கொஞ்ச நாள் குழம்பி இருக்கிறேன்.
பானுமதி பற்றிய கட்டுரையை font பிரச்சினையால் படிக்க முடியவில்லை. மாயவரத்தானின் வலைப்பூ சுட்டியை தர முடியுமா?
அறிவாளி எப்போதோ பார்த்தது. அவ்வளவாக பிடிக்கவில்லை என்று ஞாபகம். மீண்டும் பார்க்க வேண்டும்.
ஒரிஜினல் அலி பாபாவிலேயே குத்து பாட்டுகள் நிறைய உண்டு. :-))
தமிழ் சினிமா சைட்டைப் பார்த்துத்தான் படங்கள் லிஸ்டை எடுத்துக் கொண்டிருந்தேன். என்னவோ இப்போதெல்லாம் malware site என்று ஒரு எச்சரிக்கை வருகிறது. அதனால் தமிழ் விக்கிபீடியாவுக்கு மாறிவிட்டேன்.
நான் ஏற்கனவே இந்த ப்ளாக்கில் எழுதி இருக்கிறேன் –
சபாஷ் மீனா படத்திற்கு சிவாஜியைவிட ஒரு ரூபாயாவது அதிகம் கொடுத்தால் தான் ஆச்சு என்று பிடிவாதம் பிடித்து வெற்றியும் பெற்று விட்டதாக ஒரு செய்தி உண்டு. எனக்கு அவ்வளவு என்ன அந்த படத்தில் வித்தியாசமாக பண்ணிவிட்டார் எனத் தெரியவில்லை.
RV. வனவாசம் பல வருடம் முன்பாக படித்திருக்கிறேன். ரெண்டு டிரங்க் பெட்டி பரணில் ஏத்தியாச்சு. கொலு பொம்மை எடுக்கும் போது பரணில் ஏறி சில புத்தகங்களை எடுத்து படித்து வருடா வருடம் அவகிட்ட திட்டு வாங்குவேன்.
மாயவரத்தான் வலைப்பூ சுட்டி:
http://mayavarathaan.blogspot.com/2005/12/245.html
சபாஷ் மீன பற்றிய தகவல்களையும் பார்க்கவும்.
உங்கள் ஈ மெயில் முகவரி தரவும்.
நிறைய எழுதவும்.
வாழ்த்துகள்.
சூர்யா,
என் ஈமெய்ல் rv dot subbu at gmail dot com
ஆர்.வி பிடியுங்கள் இந்த லிங்கை!
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=156&page=3
இந்த பதிவை நான் படித்தது, இரவு
தூங்குவதற்கு முன்பு. படித்த பிறகு தூக்கமே வரவில்லை.
//கண்ணிலே கண்டதும் கனவாய் தோன்றுது
காதிலே கேட்டதும் கதை போலானது
என்னானு தெரியலை. சொன்னாலும் விளங்கலை
என்னைப் போல ஏமாளி எவனும் இல்லை.
ஒண்ணுமே புரியலை. உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்கு..//
இந்த வரிகள் ஏனோ இப்பொழுது நினைத்தாலும் துக்கத்தில் தொண்டையை அடைக்கிறது.காரணம்
எஸ்ராவின் மொழி ஆளுமையா?
**
நன்றி உஷா. ஆமாம் நீங்கள் சொல்வது போலத்தான். எஸ்.ராவின் மொழி ஆளுமை அலாதி..
தேர்தல் நேரத்திலேயும் வாக்காளர்களுக்கும் இந்த பாட்டு பொருந்துகிறது.
RV,
I just read the Randor Guy’s article (to be continued) on Babu http://www.hindu.com/fr/2009/09/25/stories/2009092550660400.htm
Here is the snippet:
Another similar incident, much more shocking, took place in 1965 in New Delhi soon after the Indo-Pakistan war had come to a close. To entertain the Army heroes, a large contingent of movie persons of South India went to New Delhi. The team included top star Sivaji Ganesan, Gemini Ganesh, Savithri, Jayalalitha, Padmini, Devika, P. Suseela, Kannadasan, Al. Srinivasan, M. S. Viswanathan, P.B. Sreenivos and many others. Dr. S. Radhakrishnan invited the team from Madras to the Rashtrapathi Bhavan for an evening.
Chatting with the team, the President asked MSV to sing a song. A harmonium was brought and while MSV played, Chandrababu sang his famous hit song ‘Pirakkum podhum azhuginraai…’. Deeply touched by the song and the way the comedian rendered it, the President showered praise on the singer and the lyricist Kannadasan. Chandrababu jumped onto the President’s lap (all were seated on the floor) and pinching his cheeks, exclaimed in Tamil, “Kanna, nee periya rasiganda!” The philosopher took it in his stride, thoroughly amused of course, while others watched in shock and dismay. That was Chandrababu.
Thanks