சபாஷ் மீனா


sabash_meena

இந்த ஆள் மாறாட்ட கதை இன்றைக்கும் பயன்படுகிறது. உள்ளத்தை அள்ளித் தா இதே கதைதான். காதலா காதலா படத்தில் இதன் சாயல் உண்டு.

1958-இல் வந்த படம். பந்துலுவின் சொந்தப் படம். அவரே இயக்கியும் இருக்கிறார். சிவாஜி, சந்திரபாபு, மாலினி, சரோஜா தேவி, குலதெய்வம் ராஜகோபால், பந்துலு டி. பாலசுப்ரமணியம் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி!), எஸ்.வி. ரங்காராவ் நடித்தது. இசை டி.ஜி.லிங்கப்பா. வெற்றிப் படம் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் இந்த படம் தில் தேரா தீவானா என்று ஷம்மி கபூர், மெஹ்மூத் நடித்து வந்தது.

திருச்சியில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த சிவாஜி நாடகம், கீடகம் என்று சந்திரபாபுவோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பொறுப்பு வருவதற்காகவும், அப்படியே பணக்கார ரங்காராவ் வீட்டில் சம்பந்தம் செய்வதற்காகவும் சிவாஜியை அவர் அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் சென்னைக்கு ரங்காராவ் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். சிவாஜி தன் நண்பன் சந்திரபாபுவை அங்கே ஆள் மாறாட்டம் செய்ய வைக்கிறார். சேரியில் ஒரு பெண்ணோடு லவ்வுகிறார். ஏறக்குறைய சந்திரபாபுவை மறந்தே விடுகிறார். ரங்காராவ் மகள் சரோஜா தேவிக்கும் சந்திரபாபுவுக்கும் இங்கே லவ் டெவலப் ஆகிறது. ஆனால் சந்திரபாபுவுக்கு ஒரே பயம். அவர் சரோஜா தேவியின் சொன்னதற்காக ஒரு நாடகத்தில் ரிக்ஷாக்காரன் வேஷம் போடுகிறார். பிறகு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஒரு நிஜ ரிக்ஷாக்காரன் (டபிள் ரோல்) சந்திர பாபு போலிருப்பதால் அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். டாக்டர் ரிக்ஷாக்காரன் ரோலில் மூழ்கிவிட்டதால் அவருக்கு மனம் பேதலித்துவிட்டது என்று சொல்கிறார். பிறகு ஒரே கூத்துதான். கடைசியில் உண்மை தெரிந்து ஜோடிகள் சேர்ந்து சுபம்!

சிவாஜி ஹீரோ என்றாலும் இது சந்திரபாபு படம். கொஞ்சம் நாடகத் தன்மை இருந்தாலும் நிறைய சிரிக்கலாம்.

பந்துலு பாலசுப்ரமணியம் ரங்காராவை பார்க்க வரும் காட்சி சூப்பர்! சிவாஜி ஆஃபீஸில் இருக்கும் பாபுவிடம் போய் அப்பா வந்திருப்பதை சொல்வார். அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் அங்கே நுழைந்ததும் சிவாஜி தான்தான் மானேஜர் போல் நடிப்பார். பிறகு ரங்காராவ் நுழையும்போது பாபு இங்க்லீஷில் போட்டு தாக்குவது அபாரம்! அடுத்த சீனில் பந்துலு, ரங்காராவ் இருவரும் ஒன்றாக உள்ளே நுழைவார்கள். இரண்டு பேரும் பந்துலுவின் பாலசுப்ரமணியத்தின் “மகனிடம்” பேசுவார்கள். வாயையே திறக்காமல் சிவாஜியும் பாபுவும் சமாளிப்பார்கள். அருமையான இந்த காட்சியை கீழே காணலாம்.

பாபுவுக்கு பேய் பிடித்துவிட்டது என்று அவரை தலை கீழே கட்டிப் போட்டிருப்பார்கள். பூசாரி “ஓடிட்ரயா” என்று கேட்பார். பாபு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தலைகீழா கட்டிபோட்டு ஓடிட்ரயா என்றால் எப்படிய்யா என்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.

ரிக்ஷாக்காரன் வீட்டுப் பக்கம் தவறுதலாக போய்விடும் பாபு ரிக்ஷாக்காரன் மனைவியை பார்த்து நீ யாரம்மா என்பார். கூச்சல் போட்டு எல்லாரும் வந்து உன் மனைவி குழந்தைகளையே யாரென்று கேட்கிறாயா என்று அடி போடுவார்கள். பாபு உடனே ஆமாமாம் என் மனைவிதான், என் குழந்தைகள்தான் என்று நாலு குழந்தைகளை அணைத்துக் கொள்வார். அடி போட்டவர்களில் ஒருவன் யோவ் அது என் குழந்தைய்யா என்று ஒரு குழந்தையை பிடுங்கிக் கொள்வான்!

ராண்டார்கை இந்த ரிக்ஷாக்காரன் ரோலை செய்ய பாபு கொஞ்ச நாள் ரிக்ஷா இழுத்து பார்த்தார் என்று சொல்கிறார்!

மாலினி வேறு எந்தப் படத்திலும் நடித்ததாக தெரியவில்லை. சரோஜா தேவி இரண்டாவது கதாநாயகி. அவர் சந்திரபாபுவுக்கு ஜோடியாக வேறு எதிலும் நடித்ததில்லை என்று நினைக்கிறேன். ரங்காராவுக்கு எக்சலண்ட், மார்வலஸ், அதாவது பிரமாதம் என்று இங்க்ளிஷும் தமிழும் பேசும் ஒரு அப்பா ரோல். குலதெய்வம் ராஜகோபாலுக்கு கொஞ்சம் பெரிய ரோல் என்று ஞாபகம். பாபு தனக்கு சிவாஜியை விட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாராம் என்று பக்ஸ் சொல்கிறான்.

நல்ல பாட்டுகள். இப்போது ஞாபகம் வருவது சித்திரம் பேசுதடி. என்ன அற்புதமான பாட்டு? சிவாஜிக்கு கொஞ்சமும் பொருந்தாத குரல் டி.ஏ. மோதி. அவர் காணா இன்பம் கனிந்ததாலே என்று ஒரு பாட்டு பாடி இருப்பார். இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்கலாம். இதைத் தவிர ஆசைக் கிளியே கோபமா என்ற ஒரு நல்ல பாட்டும் நினைவில் இருக்கிறது. பாபுவுக்கு சீர்காழி குரல் கொடுத்திருப்பார்! அதுதான் முதலும் கடைசி முறையுமாக இருக்கும்! அதன் வீடியோவை இங்கே பார்க்கலாம்.

பாபு, பாட்டுகளுக்காக பாருங்கள். பத்துக்கு 7 மார்க். B grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

18 Responses to சபாஷ் மீனா

 1. சுப்ப்பரான படம் .. இப்போ பார்த்தாலும் நல்ல சிரிக்கலாம்.. நீங்க குறிப்பிட்டுருக்குற காட்சிகள் என்னோட பாவௌரிடே-உம் ஆகும் … :-))

 2. krishnamoorthy says:

  மாலினி எம் ஜி ஆரோடு சபாஷ் மாப்ளே படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதுவும் ஒரு காமடிப் படம்தான்.

  சந்திர பாபுவின் திறமையை முழுதாகப் பயன் படுத்திக் கொள்ள தமிழ் சினிமா தவறினாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் தனி முத்திரையைப் பதிக்க பாபு தவறினதே இல்லை.

  தவிர, அந்த நாட்களில் காமடி என்றாலே, slapstick காமெடி என்று தான் இருக்கவேண்டும் என்று இருந்திருக்கும் போல.சினிமாவில், காமெடியன்,ஒரு சர்கஸ் பபூனைப் போலக் கையைக் கலை ஆட்டிக் கொண்டிருந்தாலே போதும் என்று நினைத்திருந்தார்களோ என்னவோ! தவறிப்போய் சில படங்கள், சபாபதி, சபாஷ் மீனா, சபாஷ் மாப்ளே போல சில படங்கள் நல்ல காமெடியாகவும் வந்திருக்கின்றன.

 3. RV says:

  கிருஷ்ணமூர்த்தி,

  நான் சபாஷ் மாப்ளே பார்த்தததில்லை. நீங்கள் எழுதியதை படித்ததும் பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது.

 4. krishnamoorthi says:

  சபாஷ் மாப்ளே!
  M G R காமெடியை முயற்சி பண்ணியது அநேகமாக் இந்தப் படத்தில் தான் என்று நினைக்கிறேன். கொஞ்சம் நன்றாகவே வந்ததும் கூட.

  மாப்பிள்ளை மாப்பிள்ளை வர்றாரு ..தோப்புக்கரணம் நூத்தி எட்டு போடவுமே போறாரு இந்தப் பாடல் கொஞ்சம் பாபுலர்.

 5. tamilini says:

  உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

  பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

 6. நல்லதந்தி says:

  இந்தப் படத்தில் சிவாஜியின் அப்பாவாக நடித்தவர் பந்துலு அல்லர். இவர் பெயர் தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்.
  சபாஷ் மாப்பிளை படத்தை மாலினியே (அவரது கணவர்) தயாரித்து இருந்தார் என்று நினைக்கிறேன்.

  • நல்லதந்தி says:

   அடடா சிவாஜியின் அப்பாவாக நடித்தவரின் பெயரை இன்னும் யாரும் சொல்லவில்லையே. நானே தேடிப்பார்த்து சொல்கிறேன். இந்தப் படத்தில் சிவாஜியின் அப்பாவாக நடித்தவர் D.பாலசுப்ரமணியம். திகம்பர சாமியார் படத்தில் வில்லன் வக்கீலாக வருவாரே அவர்தான். பந்துலு பளிச்சென்று தெரிய நடித்தப் படங்கள் என்றால் ஸ்கூல் மாஸ்டர், நாம் இருவர் படங்களைச் சொல்லலாம். இன்னும் சரியாக சொல்வதென்றால் முரடன் முத்து படத்தில் சிவாஜிக்கு அண்ணனாக வருவாரே அவர்தான்!

 7. RV says:

  நல்லதந்தி,

  நீங்கள் சொல்வது சரிதான், சபாஷ் மீனாவில் வருவது பாலசுப்ரமணியம்தான். ஆனால் முரடன் முத்துவில் பந்துலு என்றுதான் நினைவு!

  • நல்லதந்தி says:

   //ஆனால் முரடன் முத்துவில் பந்துலு என்றுதான் நினைவு!//

   ஆமாம் முரடன் முத்துவில் சிவாஜிக்கு அண்ணனாக வருவது பந்துலு என்றுதான் குறிப்பிட்டு இருந்தேன்!.கவனிக்கவில்லையா நீங்கள் 🙂

 8. surya says:

  பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

  கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

  ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான் கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

  ‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

  ‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

  ‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

  நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

  ‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

  ————————–
  எழுத்தாளர் & என் நண்பர் முகிலின் பதிவிலிருந்து

 9. surya says:

  Dear RV

  சிறந்த எழுத்தாளரும் எனது நண்பருமான திரு.முகில் சந்திரபாபு பற்றி

  கண்ணீரும் புன்னகையும் – நடிகர் ஜே.பி. சந்திரபாபுவின் வாழ்க்கை

  என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

  கிடைத்தால் படிக்கவும்.

  அதிலிருந்து சில குறிப்புகள் கொண்ட பதிவு இபோது..

  http://www.writermugil.com/?p=270

 10. RV says:

  நல்லதந்தி,

  ஒரு வழியாக சபாஷ் மீனாவை திருத்திவிட்டேன். உங்கள் உதவிக்கும் பொறுமைக்கும் நன்றி!

 11. ஒரு காட்சியில் சந்திரபாபுவும் சரோஜா தேவியும் சோபாவில் அமர்ந்திருப்பார்கள்.திடீரென ரங்கா ராவ் சந்திர பாபுவை கூப்பிட சந்திரபாபு பயந்து போய் இரண்டு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சோபாவிலிருந்து பீரோவிற்குள் சென்று ஒளிந்து கொள்வார்.இப்போதும் சில சமயங்களில் நினைத்து சிரிப்பதுண்டு.

  • RV says:

   pிரேம்ஜி, எனக்கும் அந்த சீன் நினைவிருக்கிறது. பாபு கலக்கும் படம் இது. சில பேருக்குத்தான் அந்த மாதிரி ஸ்லாப்ஸ்டிக் வரும். மூன்றெழுத்து படத்தில் அசோகனும் இந்த மாதிரி ஒரு முறை குதிப்பார்.

 12. ச.திருமலை says:

  காணா இன்பம் கனிந்ததேனோ சபாஷ் மீனாவிலா வருகிறது? சிவாஜியும், பத்மினியும் மழையில் நனைந்து மரகதத்தில் பாடும் பாட்டல்லாவா அது? அல்லது இல்லையா?

  அன்புடன்
  ச.திருமலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: