எல்.ஆர். ஈஸ்வரி – எல்லார் ஈஸ்வரி


எல்.ஆர். ஈஸ்வரி

எல்.ஆர். ஈஸ்வரி

இன்னும் ஒரு ஓசி போஸ்ட் – 22-12-1974 அன்று விகடனில் வந்த எல்.ஆர். ஈஸ்வரியின் பேட்டி. நன்றி, விகடன்!

உங்களுடைய முதல் பாடல் ரேடியோவில் எந்த நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டது? அதைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?
நான் பாடிய முதல் பாடல் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட போது என்னிடம் ரேடியோவே இல்லை. பக்கத்து வீடுகளில் ரேடியோ வைக்கும்போது, அதை உரக்க வைக்கச் சொல்லிக் கேட்பேன். எப்போதாவது என் பாட்டை ஒலிபரப்புவார்கள்.அதைக் கேட்டுச் சந்தோஷத்தில் நான் துள்ளிக் குதிப்பேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரேடியோ வாங்கக்கூடிய வசதி எனக்கு ஏற்பட்டது. நான் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். இன்று என் சொந்தப் பங்களாவில் ஓரளவிற்கு வசதியாக வாழ்கிறேன் என்றால், அதற்கு என் தெய்வம் திரு. கே.வி. மகாதேவன் அவர்கள்தான் காரணம். நல்ல இடத்து சம்பந்தம் படத்தில் என் திறமையை நம்பி நான்கு பாடல்கள் பாடும் சந்தர்ப்பத்தைத் தந்தார் அவர். அதுதான் என் முதல் படம்.

எத்தனை மொழிகளில் பாடியிருக்கிறீர்கள்?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, துளு, கொங்கணி ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடியிருக்கிறேன். நன்ன கண்ட எல்லி (என் கணவன் எங்கே) என்ற கன்னடப் படத்தில் ஒரே பாடலில் 14 மொழிகளில் பாடியிருக்கிறேன்.

இந்திப் பாடகர், பாடகிகளில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார்?
முகம்மது ரஃபி, மன்னா டே, ஆஷா போன்ஸ்லே. ஆஷா போன்ஸ்லேயை ஒரு பாடல் பதிவில் சந்தித்தேன். நான் பாடிய பட்டத்து ராணி பாடலைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் என்னை ஏராளமாகப் புகழ்ந்தார். அவ்வளவு பெரிய பாடகியிடமிருந்து கிடைத்த பாராட்டை நான் பெற்ற பெரும் பாக்கியம் என்றே எண்ணுகிறேன்.

இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷூக்கும் தங்களுக்கும் ஏதோ தகராறு என்றும், அதன் காரணமாக அவர்கள் இசை அமைக்கும் படங்களில் நீங்கள் பாடுவதில்லை என்றும் கூறப்படுவது உண்மையா?
இப்படிச் சில வதந்திகளைக் கிளப்பிவிடுவதில் சிலர் மனத் திருப்தி அடைகிறார்கள். சங்கர், கணேஷ் இருவருமே என்னை மம்மி என்றுதான் அழைப்பார்கள். கடந்த வாரம் கூட அவர்களின் இசையமைப்பில் நான் இரண்டு பாடல்களைப் பாடினேன்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை நீங்கள் எப்படிக் கொண்டாடுகிறீர்கள்?
நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சர்ச்சுக்குப் போவேன். கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தனியே விசேஷமாகக் கொண்டாடுவது இல்லை. எல்லா மதத்தையும் ஒன்றாகவே கருதுபவள் நான். ஆகவே நான் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என எல்லாப் பண்டிகைகளையுமே கொண்டாடுவேன். நான்தான் ‘எல்லார் ஈஸ்வரி’ ஆயிற்றே!

சில அருமையான எல்.ஆர். ஈஸ்வரி பாட்டுகளை இங்கே கேட்கலாம். எம்எஸ்வி ஒரு முறை தனக்கு பிடித்த பாட்டுகளை தேர்ந்தெடுத்திருந்தார். ஒவ்வொரு பாடகருக்கும் ஒரு பாட்டு மாதிரி – எல்.ஆர். ஈஸ்வரிக்கு அவர் தேர்ந்தெடுத்த பாட்டு கறுப்பு பணம் படத்திலிருந்து வரும் ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாட்டுதான். அந்த பாட்டும் இந்த லிஸ்டில் இருக்கிறது.

துள்ளுவதோ இளமை பாட்டு யூட்யூபில் கீழே.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to எல்.ஆர். ஈஸ்வரி – எல்லார் ஈஸ்வரி

  1. Radha says:

    I love her songs too. Excellent voice. I always enjoy hearing her songs.

  2. K.V.Rudra says:

    பாடல்கள் எல்லாம் அருமை, நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான சந்திப்பு

  3. krishnamoorthi says:

    “மம்மி” ரிடர்ன்ஸ்..? அய்யய்யோ!

    சினிமா சான்ஸ் போன பிறகு மேடை கச்சேரிகளில் “அம்மனோ சாமியோ” பாடலைத் தவறாது பாடி ரசிகர்களை தன்னுடைய ஆட்டத்தினால் பயமுறுத்திய சமயங்கள் நினைவுக்கு வருகிறது. இரட்டையர்கள் பிரிவதற்கு காரணமே இவர்தான் என்ற வதந்தியும் அந்த நாட்களில் உலவினதாக நினைவு.

    போதாக்குறைக்கு ‘ஏற்பாடு’ செய்திருந்தபடி, இந்தப் பாட்டை அவர் பாடும் போதெல்லாம், ஒரு சிலருக்கு ‘சாமி’ வந்து ஆடும் கூத்து இருக்கிறதே…??!!

  4. surya says:

    கர கர குரலுக்கு சொந்தக்காரி. பல ஹிட் கொடுத்தவர். ஆடி மாதம் தீ மிதி திருவிழாக்களில் இவர் படத்துடன் சென்னையில் போஸ்டர்கள் மிரட்டும்.

    கே.பி வித்தியசமான முயற்ச்சியில்
    “காதோடுதான் நான் பாடுவேன்” என்று மெல்லிசையாக பாட வைத்ததுடன் P. சுசீலாவை ” நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்” என்று இரண்டு பேரையும் உல்டாவாக பாடவும் வைத்தவர்.

    நல்ல பதிவிற்கு நன்றி RV..

    வாழ்த்துகள்.

  5. RV says:

    கிருஷ்ணமூர்த்தி,

    எம் எஸ்வி-டிகே ஆர பிரிவுக்கு எல்.ஆர். ஈஸ்வரிதான் காரணமா? என்ன தகராறு?

    சூர்யா,
    காடுதான் நான் பாடுவேன் என்ற அருமையான பாட்டை நினைவு படுத்தி இருக்கிறீர்கள். எல்.அற. ஈஸ்வரியை க்ளப் டான்ஸ் பாடகர் என்று முத்திரை குத்தாமல் இருந்தால் அவர் இன்னும் நிறைய அருமையான பாட்டுகளை பாடி இருப்பார். எனக்கு பிபிஎஸ்-ஈஸ்வரி டூயட்கள் மிகவும் பிடிக்கும் – ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்…

    • krishnamoorthy says:

      ர்ராஜ ர்ராஜ ஸ்ரீ ர்ராஜன வந்தான் என்று அந்த ‘ர’ நாவில் அழுத்தம் கொடுத்துப் பாடின பாட்டுத்தானே! ட்யூன் நன்றாகத் தான் இருந்தது!

  6. surya says:

    ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்…
    அருமையான பாடல்…

    நன்றி RV

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: