தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு


இட்லி வடையில் பார்த்தேன், மணிவண்ணனும் எழுதிவிட்டார்.

பாலாஜி என் கண்ணில் குறிப்பிடப்பட வேண்டிய நடிகர் எல்லாம் இல்லை. ஒரு also ran-தான். அவர் நடித்த படங்கள் என்று யோசித்துப் பார்த்தால் நினைவுக்கு வருவது பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா, சகோதரி, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை, திருடன், தியாகம், என் கடமை (வில்லன்), சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் மாதிரி வெகு சில படங்கள்தான். எல்லா படங்களிலும் சும்மா வந்து போவார். எனக்கு தெரிந்து அவர் ஹீரோவாக நடித்தது மனமுள்ள மறு தாரம் என்ற ஒரு மொக்கைப் படம்தான் (திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் என்ற அருமையான பாட்டு உள்ளது). அவர் எம்ஜிஆருடன் நடித்தது என் கடமை படத்தில் மட்டும்தானோ?

ஆனால் ஒரு தயாரிப்பாளராக அவர் சாதனை புரிந்திருக்கிறார். பாலாஜி-சிவாஜி காம்பினேஷன் ரீமேக் படங்களாக எடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். அவர் எடுத்த படங்கள் ஒரு பத்து பதினைந்து வருஷங்கள் தோல்வியே அடைந்ததில்லை. ரீமேக்தான் செய்வார். வெற்றி பெற்ற படங்களாக பார்த்து தமிழுக்கு கொண்டு வருவார். சாதாரணமாக சிவாஜி ஹீரோ. எம்எஸ்வி இசை. சிவாஜியை வைத்து அவர் எடுத்த மொக்கைப் படங்களான நீதிபதி, தீர்ப்பு எல்லாம் கூட செமை ஓட்டம் ஓடியது. சிவாஜியை வைத்து அதிக படங்கள் தயாரித்தவர் இவர்தானாம் – 17 படங்கள். என்ன படம் என்று யாராவது லிஸ்ட் கொடுங்கப்பா/கொடுங்கம்மா!

மனிதருக்கு midas touch இருந்தது. நீதி, எங்கிருந்தோ வந்தாள், திருடன், தியாகம், தீபம் என்று சிவாஜி கூடவும், தீ, பில்லா, விடுதலை என்று ரஜினி கூடவும், சவால், சட்டம் என்று கமல் கூடவும் வெற்றி மேல் வெற்றி. பில்லா ரஜினியை சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்.

அவர் எடுத்த முதல் படத்தில் ஜெமினி ஹீரோவாம் – அண்ணாவின் ஆசை என்று பேராம்.

ஒரு பேட்டியில் அவர் ஒரு முறை தன ரீமேக் ரகசியத்தைப் பற்றி சொன்னார். ஒவ்வொரு முறையும் பம்பாய் போய் இறங்கும்போது டாக்சி டிரைவரிடம் பேச்சு கொடுப்பாராம். என்ன படம் நன்றாக இருக்கிறது, என் இப்படி சொல்கிறீர்கள் என்று அவரிடம் ஒரு பேட்டி எடுப்பாராம். அதை வைத்துதான் இந்த படத்தை ரீமேக் செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பாராம். அவருக்கு அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியது.

மோகன்லாலின் மாமனார். அவர் மகன் சுரேஷ் பாலாஜியும் தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். அவரது குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

சில பாலாஜி பாட்டு வீடியோக்கள் கீழே.

ஆண்டொன்று போனால் வயதொன்று ஆகும்

பொன் ஒன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

அத்திக்காய் காய் காய்

நண்பர் சூர்யா இந்த தகவல்களை தருகிறார்: சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்றாலே சிவாஜி கதாநாயகன். கதாநாயகனின் பெயர் ராஜா, கதாநாயகி பெயர் ராதா, வசனம் ஏ.எல்.நாராயணன், இசை எம்.எஸ்.விஸ்வநாதன் என்று ஒரு சில விஷயங்கள் படம் வெளியாகும் முன்னரே எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
ஏ.சி.திரிலோக்சந்தர், சி.வி.ராஜேந்திரன், ’பில்லா’ கிருஷ்ணமூர்த்தி என்ற வரிசையில் ஒரு குறிப்பிட்ட இயக்குனர்களையே அவர் பயன்படுத்தி வந்தார்.
ரஜினி, கமல், சிவகுமார், மோகன், சத்யராஜ் என்று பலரை வைத்தும் பின்னாளில் அவர் படங்கள் எடுத்தபோதும், இத்தனை வருடங்களில் அவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுத்ததே இல்லை. இதே போல சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் சிவாஜியை வைத்து ஒரு படம் கூட தயாரித்ததே இல்லை.
ரிஷிகேஷ் முகர்ஜியின் நமக் ஹராம் என்ற படத்தை பாலாஜி உனக்காக நான் என்று தமிழில் எடுத்தபோது, அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் சிவாஜியும், ராஜேஷ் கன்னா நடித்த வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடிக்கலாம் என்று ஒரு வதந்தி அப்போதைய பத்திரிகைகளில் பரவியது நினைவுக்கு வருகிறது. இறுதியில் அதில் நடித்தவர் ஜெமினி கணேசன்.
Gods must be crazy என்ற ஆங்கிலப்படத்தை இந்தியாவில் வினியோகம் செய்யும் உரிமையைப் பெற்று அனைவரையும் மிரள வைத்தவர் பாலாஜி.
பிற்காலத்தில் அவரது பல படங்கள் வியாபார ரீதியாகத் தோல்வியுற்றதும், வனவாசம் போல ஒதுங்கியிருந்தார்.
ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தைக்கு, தமிழ் திரைப்பட உலகில் ஒரு தயாரிப்பாளர் தகுதியானவர் என்றால், அது பாலாஜியாகத் தானிருக்க முடியும்.

நண்பர் தாஸ் இந்த தகவல்களை தருகிறார்: நாகேஷ் பாலாஜிக்கு நன்றி கடன் பட்டிருந்தார். அவர் முன்னுக்கு வர பாலாஜி மிகவும் உதவி புரிந்தார். தனக்கு எடுப்பது போல் நாகேஷுக்கும் துணி எடுத்துக்க் கொடுப்பாராம். தனது வீட்டிலேயே நாகேஷை தங்க வைத்து போஷித்தார்.

நண்பர் ரவி ஆதித்யா பாலாஜி பற்றி இங்கே ஒரு அருமையான பதிவை எழுதி இருக்கிறார்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

29 Responses to தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு

 1. Surya says:

  சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்றாலே சிவாஜி கதாநாயகன். கதாநாயகனின் பெயர் ராஜா,
  கதாநாயகி பெயர் ராதா, வசனம் ஏ.எல்.நாராயணன், இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
  என்று ஒரு சில விஷயங்கள் படம் வெளியாகும் முன்னரே எல்லாருக்கும்
  தெரிந்திருக்கும்.

  ஏ.சி.திரிலோக்சந்தர், சி.வி.ராஜேந்திரன், ’பில்லா’
  கிருஷ்ணமூர்த்தி என்ற வரிசையில் ஒரு குறிப்பிட்ட இயக்குனர்களையே அவர்
  பயன்படுத்தி வந்தார்.

  ரஜினி, கமல், சிவகுமார், மோகன்,சத்யராஜ் என்று பலரை வைத்தும் பின்னாளில்
  அவர் படங்கள் எடுத்தபோதும், இத்தனை வருடங்களில் அவர் எம்.ஜி.ஆரை வைத்து
  ஒரு படம் கூட எடுத்ததே இல்லை.

  இதே போல சாண்டோ.எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் சிவாஜியை வைத்து ஒரு படம் கூட தயாரித்ததே இல்லை….

  ரிஷிகேஷ் முகர்ஜியின் ’நமக் ஹராம்,’ என்ற படத்தை பாலாஜி ’உனக்காக நான்’
  என்று தமிழில் எடுத்தபோது, அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் சிவாஜியும்,
  ராஜேஷ் கன்னா நடித்த வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடிக்கலாம் என்று ஒரு வதந்தி
  அப்போதைய பத்திரிகைகளில் பரவியது நினைவுக்கு வருகிறது. இறுதியில் அதில்
  நடித்தவர் ஜெமினி கணேசன்.

  ’Gods must be crazy’ என்ற ஆங்கிலப்படத்தை இந்தியாவில் வினியோகம்
  செய்யும் உரிமையைப் பெற்று அனைவரையும் மிரள வைத்தவர் பாலாஜி.

  பிற்காலத்தில் அவரது பல படங்கள் வியாபார ரீதியாகத் தோல்வியுற்றதும்,
  வனவாசம் போல ஒதுங்கியிருந்தார்.

  ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தைக்கு, தமிழ் திரைப்பட உலகில் ஒரு
  தயாரிப்பாளர் தகுதியானவர் என்றால், அது பாலாஜியாகத் தானிருக்க முடியும்……

 2. பாலாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் குறிப்பிட விட்டுவிட்டீர்கள்.

  அண்ணன் தங்கைக்கு ஒரு சிவாஜி-சாவித்ரி என்றால், அண்ணன் தம்பிக்கு, திரையில், பாலாஜி-சிவாஜிதான்.

  எனது கணிப்பில் மிகவும் அழகான வில்லனும் இவரே! தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டாம். இவர் கமலை வைத்து எடுத்த மங்கம்மா சபதம் படுதோல்வி அடைந்தது. சிவாஜி, ரஜினியை வைத்து எடுத்தப் படங்கள் வெற்றி மேல் வெற்றி. குறித்த காலத்தில் படத்தை முடித்து வெளியிடுபவர் என்ற பெயர் பெற்றவர். அதனால்தான் இப்போது உள்ள ட்ரெண்டை பார்த்து படம் எடுக்காமல் ஒதுங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

  இருவாரம் முன்னர்தான் பாலாஜியின் ”திரும்பி பார்க்கிறேன்” ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 74வயதானாலும், நிறைவான வாழ்வையே பெற்றிருந்தார் என்றே நினைக்கிறேன்.

 3. krishnamoorthy says:

  சிவாஜியை வைத்துக் கூடத் தொடர்ந்து வெற்றிப்படங்களை [வசூல் அடிப்படையில்
  மட்டும்] தர முடியும் என்று நிரூபித்த ஒரே தயாரிப்பாளர்.
  வேறு எந்த வகையிலும், பெரிதாகவோ, சிறிதாகவோ கூட சாதித்ததாக நினைவுக்கு வரவில்லை!

  இந்த ஒரே சாதனைக்காக மட்டுமே இங்கேயும் நினைவு கூறப் பட்டிருக்கிறார் போல!

  வழக்கமாக எல்லா நடிகைகளும், கல்யாணத்திற்குப் பிறகு நடிக்கமாட்டேன் என்று “ஸ்டேட்மெண்டு” உதார் விடுவது போலவே, ரேவதியும் உதார் விட்டபோது, அவரை எப்படியும் நடிக்க வைக்கிறேன் பார் என்று சவால் விட்டதாக, பாலாஜியைப் பற்றி அந்த நாட்களில் ஒரு கிசு கிசு இருந்ததாக நினைவு.

  மரத்தைச் சுற்றி டூயெட் பாடி ஜெமினி காதல் மன்னனாக ஆன மாதிரி, கண்களை உருட்டி மிரட்டி கேணத்தனமாக நடித்த டூயெட் “அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே” பாடலை மறந்து விட்டீர்களே:-)

  • krishnamoorthy says:

   அத்திக்காய் இருப்பதை கவனிக்கத் தவறி விட்டேன். அதனால் ஒன்றும், பாலாஜிக்கு செய்த அஞ்சலி பங்கப்பட்டுப் போய் விடவில்லை.

 4. Surya says:

  ரவி ஆதித்யா என்பவரின் வலைப்பூ பாலாஜியின் நினைவான பதிவு:

  http://raviaditya.blogspot.com/2009/05/blog-post.html

 5. நல்ல பதிவு.

  //மனிதருக்கு midas touch இருந்தது//
  அப்படி சொல்ல முடியாது.அவர் காலகட்டத்தில் கலர் படங்கள் ரொம்ப கம்மி.அப்போது தமிழகம் இந்தி பட மயக்கத்தில் இருந்தது.காரணம் கலர்.அங்கு இளமை/சிவப்பு தோல் கதாநாயகர்கள்/நாயகிகள். Richness in the movie.நம் ஊரில் டோப்பா தலையர்கள்.

 6. நன்றி சூரியா. மேலும் லேட்டஸ்ட்டாக ‘the hindu” பேட்டியை பதிவில் update செய்துள்ளேன்.படித்தீர்களா?

 7. Das says:

  நாகேஷ் பாலாஜிக்கு நன்றி கடன் பட்டிருந்தார். அவர் முன்னுக்கு வர பாலாஜி மிகவும் உதவி புரிந்தார். தனக்கு எடுப்பது போல் நாகேஷுக்கும் துணி எடுத்துக்க் கொடுப்பாராம். தனது வீட்டிலேயே நாகேஷை தங்க வைத்துபோஷித்தார்.

 8. surya says:

  நன்றி ரவி. பார்த்தேன். பின்னூட்டமும் இட்டுள்ளேன்.

  நம்ம கடை பக்கமும் வந்து பாருங்க…

 9. RV says:

  விட்டுப்போன எல்லாருக்கும் ஒரே மறுமொழியாக எழுதிவிட்டேன். சோம்பேறித்தனம்தான்.

  சூர்யா, ஃபில்ம் நியூஸ் ஆனந்தன் பற்றிய செய்திக்கு நன்றி. அதையும் பதிவில் சேர்த்துவிட்டேன். பாலாஜி, சி.வி. ராஜேந்திரன், ஊட்டி வரை உறவு செய்தியையும் சேர்த்துவிடுகிறேன்.

  சத்தியமூர்த்தி, பாலாஜி பற்றிய மறுமொழிக்கு நன்றி! தி. மோகனாம்பாளிலும் அவர் வந்து போவார். 😉

  கிருஷ்ணமூர்த்தி, வாயை பிடுங்க முயற்சி செய்கிறீர்கள்! // சிவாஜியை வைத்துக் கூடத் தொடர்ந்து வெற்றிப்படங்களை [வசூல் அடிப்படையில் மட்டும்] தர முடியும் என்று நிரூபித்த ஒரே தயாரிப்பாளர். // சிவாஜி ஹீரோவாக 200 படங்குக்கு மேல் நடித்திருக்கிறார். எல்லா தயாரிப்பாளர்களும் படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, சிவாஜி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஏதாவது நேர்த்திக் கடன் செலுத்தினார்களா?

  ரவிசங்கர், பாலாஜி பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் எனக்கு அவருக்கு மிடாஸ் டச் இருந்ததாகத்தான் தோன்றுகிறது.

  தாஸ், நாகேஷ் பற்றியும் பாலாஜி பதிவில் சேர்த்துவிடுகிறேன்.

 10. Ram says:

  யாருப்பா இந்த கிருஷ்ணமூர்த்தி?: சிவாஜியை வைத்துக் கூடத் தொடர்ந்து வெற்றிப்படங்களை [வசூல் அடிப்படையில்
  மட்டும்] தர முடியும் என்று நிரூபித்த ஒரே தயாரிப்பாளர். MGR ரசிகரா?
  ***
  பாலாஜிக்கு மட்டுமல்ல………. எங்கள் நடிகர் திலகம் பீம்சிங் & A.P. நாகராஜன் அவர்கள் production-illum தொடர்ந்து மெகா வெற்றி கொடுத்தவர். Balaji-NT combination is far better than MGR-Devar combination, both in terms of quality & BO.

  • RV says:

   ராம்,

   பாலாஜி பற்றிய பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!

   கிருஷ்ணமூர்த்தி வாயை பிடுங்க முயற்சி செய்கிறார்! 🙂

 11. krishnamoorthy says:

  //எல்லா தயாரிப்பாளர்களும் படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, சிவாஜி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஏதாவது நேர்த்திக் கடன் செலுத்தினார்களா?//

  நேர்த்திக்கடன் இல்லை. தலைவிதி!

  சிவாஜி படங்களில் எவ்வளவு ஊத்திக் கொண்டது, ஜெயித்த படங்கள் கூட அவருக்காக மட்டுமே ஓடியதா என்பதெல்லாம் ஊருக்கே தெரிந்த ரகசியம். பிலிம் காட்டினவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

  அவரே எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்ட ‘என் தமிழ் என் மக்கள்’ படத்தைப் பார்த்து விட்டு அப்புறம் நடிப்புத் திலகத்தின் சாதனைகளை எழுதுங்களேன்!

  //MGR ரசிகரா?//
  இதை விடக் கேவலமாக என்னைத் திட்ட முடியாதென்றே நினைக்கிறேன்.
  விசிலடிச்சான் குஞ்சு போல,நீங்கள் தான் துடிக்கிறீர்களே தவிர, எனக்கு அந்த மாதிரி அபிமானம் எல்லாம் கிடையாது:-))))

  • RV says:

   கிருஷ்ணமூர்த்தி,
   // சிவாஜி படங்களில் எவ்வளவு ஊத்திக் கொண்டது, ஜெயித்த படங்கள் கூட அவருக்காக மட்டுமே ஓடியதா என்பதெல்லாம் ஊருக்கே தெரிந்த ரகசியம். பிலிம் காட்டினவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். //
   இதில் ரகசியம் என்ன? நீங்கள்தான் சொல்லுங்களேன்! அவர் ஹீரோவாக நடித்த இருநூற்று சொச்சம் படங்களில் எத்தனை படம் வெற்றி என்று நினைக்கிறீர்கள்?

 12. krishnamoorthi says:

  இது மாதிரித் தகவல்களைத் தருவதற்கென்றே பிலிம் காட்டுகிற நிறையப் பேர் இருக்கிறார்களே! இதையும் ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன், கவனிக்கவில்லையா?

  எம் கே டி பாகவதர் படங்கள், சில ஒரு வருடத்தையும் தாண்டி ஓடின. மங்கம்மா சபதம் ரஞ்சன், புஷ்பவல்லி நடித்தது கூடத்தான் நன்றாக ஓடியது.

  அன்றைய காலத்தில் சினிமா என்பது, திரையில் அசைகிற, பேசுகிற, பாடுகிற பிம்பங்களைக் கண்டு வியந்த பாமரர் கூட்டம் நிறைய இருந்தது என்பதால் மட்டுமே. இன்றைக்கு, அதே படம், ஒரே காட்சி, அது கூட வேண்டாம்,. ஒரே ஒரு ரீல் மட்டுமே உங்களால் பொறுமையாகப் பார்க்க முடியுமா என்று சொல்லுங்கள்:-))

  பாட்டுப் பாடுவது மட்டுமே சினிமா என்றிருந்த காலம் முடிந்து, வசனம் பேசுவது என்ற கட்டத்திற்கு வந்த போது சிவாஜி மீது அதிக வெளிச்சம் விழுந்தது என்பது வரை உண்மை. அடுத்தவர் எழுதிய வசனத்தை, ஏற்ற இறக்கங்களுடன் பேசியதில் சிவாஜி, கொஞ்சம் தனித்துத் தெரிந்தார் என்பதும் உண்மை.

  சினிமா என்பது வசனம் பேசுவது, பதிபக்தி க்ளைமாக்சில் அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு கொட்டுகிற மழை பின்னணியில் புரண்டு புரண்டு வசனம் பேசிய காலம் எல்லாம் கடந்து போய் விட்டது, [என்றோ பார்த்தது, இப்போது நினைத்தால் கூட சிரிப்புத் தான் வருகிறது]

  சிவாஜி நடிப்பு என்பது கடந்து போன காலம், குழிக்குள் புதைந்துபோனதைத் தோண்டி எடுத்து, இவ்வளவு உருகி உருகிச் சொல்வானேன் என்பது தான் என்னுடைய கேள்வி.

 13. RV says:

  // ிவாஜி நடிப்பு என்பது கடந்து போன காலம், குழிக்குள் புதைந்துபோனதைத் தோண்டி எடுத்து, இவ்வளவு உருகி உருகிச் சொல்வானேன் என்பது தான் என்னுடைய கேள்வி. //
  எனக்கு பழைய படங்களை பிடித்திருக்கிறது. உங்களுக்கு ஏன் கத்திரிக்காய் சாம்பார் பிடிக்கும் என்று நான் கேட்க முடியுமா என்ன?

 14. surya says:

  அய்யா கி.மு. இந்த பதிவுகளின் நோக்கமே பழைய படங்களை அலசுவதுதான்.

  வருங்கால சந்ததிக்காக தஞ்சாவூர் கல்வெட்டிலா பதிக்க முடியும்..?? நவீன யுகத்தில் வலைமனையில் பதிக்க முடியும்.

  புதைந்து போக கூடாது என்ற ஆதங்கமே..

  • krishnamoorthy says:

   சூர்யா அவர்களே!
   அலசுங்கள் காயப்போடுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் இன்றைக்கு relevance இருக்கிறதா என்று தானே கேட்டேன்!
   என்னைக் கி.மு என்றழைக்கும் நீங்கள் கி.பியில் இருப்பது மாதிரி தெரியவில்லையே! கற்காலத்தில் இருக்கவே பிரியப் படுகிறேன் என்பது போல இருக்கிறது உங்கள் வாதம்:-)
   தஞ்சாவூர் கல்வெட்டு மட்டுமில்லை, கிடைக்கிற எதில் வேண்டுமானாலும் புதைத்து வைத்துக் கொள்ளுங்கள்!!

   ஆர் வி அவர்களே!
   கத்தரிக்காய் சாம்பார் பிடித்திருப்பது உங்களுக்குத் தான், எனக்கில்லை. ஏனென்று நான் கேட்கவில்லை. கத்தரிக்காய் கரப்பான் பண்டம், allergic என்று மட்டும் தான் சொல்கிறேன்.

 15. surya says:

  RV.. எனக்கு முள்ளங்கி சாம்பார் பிடிக்காது எனபதை தெரிவித்து கொள்கிறேன்.

 16. RV says:

  கிருஷ்ணமூர்த்தி,

  பழைய படங்கள் பற்றி பேசுவது பயனில்லாத செயல் என்று நினைக்கிறீர்கள். உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி.

  எனக்கு பிடிப்பதை செய்வது பயன் உள்ளதுதான் என்று நான் நினைக்கிறேன்.

 17. krishnamoorthi says:

  சூர்யா,
  சிரிங்க சிரிங்க, சிரிச்சிக்கிட்டே இருங்க! கண்ணாடியிலே உங்க முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தா சிரிப்பு வராம என்ன செய்யும்:-)

  ஆர. வி ஐயா,
  பழைய படங்கள் என்றில்லை, பழைய விஷயங்கள் பற்றி பேசுவதில் தவறொன்றுமில்லை.உங்களுடைய இந்த வலைப் பகுதியே பழைய படங்களைப் பற்றிச் சொல்ல முற்படுவது தான் என்பதை அறிந்தே, அவ்வப்போது வந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

  விஷயங்களை, அதனதன் தராதரம் பொறுத்தே மதிப்பிட வேண்டும் என்பது மட்டுமே என் கருத்து. சிவாஜி கணேசன், ஒரு நல்ல கலைஞன் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்த நல்ல கலைஞனது ஏற்றம் 1970 களோடு முடிந்து விட்டது.

  1980 களில் இருந்து தமிழ் சினிமா வெறும் வசனங்கள், கை வீசம்மா கை வீசு டைப் ஓவர் ஆக்டிங் சிவாஜியைத் தாண்டி வெகு தூரம் போய் விட்டது. வேகமாக மாறிக் கொண்டிருந்த சூழலை, சிவாஜியால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காகவே, இங்கே வந்து பின்னூட்டங்களிட்டுக் கொண்டிருந்தேன்.

  உடல் நலம் சரியாகி விட்டதா?
  உடல் நலம் நன்றாகத் தேறியிருந்தால் மட்டும்:

  “என் தமிழ் என் மக்கள்” படத்தைப் பார்க்கச் சொல்லி, இங்கே மட்டுமல்ல, வேறோர் பதிவிலும் சொல்லியிருந்தேன். ஒரு நல்ல கலைஞன் வெறும் சர்க்கஸ் கோமாளியாகிப் போனதை, அந்தப் படமே சொல்லும்!

  • RV says:

   கிருஷ்ணமூர்த்தி,

   சிவாஜி ஒரு நல்ல கலைஞர் என்று நீங்களும் நினைப்பது குறித்து மகிழ்ச்சி. நான் அவரது சகாப்தம் திரிசூலம் படத்துடன் முடிந்தது என்று நினைக்கிறேன். அதற்கப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர் படங்கள் வெற்றி பெற்றாலும், அவர் சில படங்களில் நன்றாக நடித்தாலும், அவர் காலம் முடிந்துவிட்டது. நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்கள் போல.

   ஆனால் உங்கள் பதில்களில் அவரது எந்த படமும் உருப்படியானது இல்லை என்ற தொனி இருக்கிறது. உதாரணமாக பாலாஜி அவரை வைத்து எடுத்த வெற்றிப்படங்கள் எல்லாம் எழுபதுகளோடு சரி. அதற்கப்புறம் சிவாஜியை வைத்து அவர் ஒன்றிரண்டு வெற்றிப் படங்கள் எடுத்திருந்தாலும் அவர் ரஜினி, கமல் என்று போய்விட்டார். ஆனால் நீங்கள் பாலாஜி சிவாஜியை வைத்தும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் என்று எழுதினீர்கள். இது அறுபதுகளின் பிற்பாதியிலும் எழுபதுகளிலும் கூட சிவாஜிக்கு மார்க்கெட் இல்லை என்ற அர்த்தம் வருகிறது இல்லையா?

   சிவாஜி திறமை உள்ளவர் என்பது வேறு, அவர் திறமையாக நடித்தார் என்பது வேறு. ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்தெ அவர் ஓவர் ஆக்டிங் தொடங்கிவிட்டது. நான் பெற்ற செல்வம் போன்ற படங்களுக்கு நான் எழுதி இருக்கும் விமர்சனங்களை பார்க்கலாம்.

   என்றாவது ஒரு நாள் என் தமிழ் என் மக்கள் படத்தையும் பார்த்து தொலைக்கிறேன்.

 18. surya says:

  RV.. இந்த பதிவிற்கு 20 பின்னூட்டங்கள்..

  வாவ்..

 19. surya says:

  Dear RV

  பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம்…

  எனது பதிவு இங்கே..

  http://mynandavanam.blogspot.com/search/label/NHM

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: