பல்லாண்டு வாழ்க – என் விமர்சனம்


பல்லாண்டு வாழ்க காலேஜில் ஆடிட்டோரியத்தில் நண்பர்களோடு பார்த்த படங்களில் ஒன்று. என்ஜாய் செய்து பார்த்த படங்களில் ஒன்று. லதா வந்தால் போதும், எல்லாருக்கும் குஷி கிளம்பிவிடும். பாட்டுகளை திரும்பி திரும்பி பார்த்தோம் – பாட்டை கேட்டு ஒரு இருபது வருஷம் ஆகிவிட்டாலும் மாசி மாசக் கடசியிலே மச்சான் வந்தாரு இன்னும் நினைவிருக்கிறது. அதற்கு வயலினில் வரும் டொய்ங் டொய்ங்கும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

திருப்பி திருப்பி எம்ஜிஆர் கண்களை காட்டுவார்கள். அதில் எதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதை கைதிகளால் மீற முடியாமல் இருப்பதாகவும் காட்டுவார்கள். தப்பித்துப் போகும் கைதிகள் கூட அண்ணா சிலையின் கண்களையோ, என்னவோ பார்த்து திரும்பிவிடுவார்கள் என்று ஞாபகம். ஹிந்தியில் சாந்தாராம் பற்றி அப்படி காட்டுவது இன்னும் பொருத்தமாக இருந்தது.

நம்பியார், மனோகர், வீரப்பா, வி.கே. ராமசாமி, தேங்காய், குண்டுமணி ஆகிய ஆறு குற்றவாளிகளை திருத்த முயற்சிக்கும் ஜெயிலராக எம்ஜிஆர். அவரை காதலிக்கும் பெண்ணாக லதா. கனவு காட்சிகள், பாட்டுகள். இன்னும் விவரங்களுக்கு விகடன் விமர்சனத்தை பார்த்து கொள்ளுங்கள்.

படம் நன்றாகத்தான் இருந்தது. தோ ஆங்கெனை விட சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் ரொம்ப அதிகம் இல்லை.

பாட்டுகள் சூப்பர்! மாசி மாசக் கடசியிலே, ஒன்றே குலமென்று பாடுவோம், சொர்கத்தின் திறப்பு விழா, போய் வா நதி அலையே, செல்லப் பாப்பா, புதியதோர் உலகம் செய்வோம் எல்லாமே அருமையான பாட்டுகள். செல்லப் பாப்பா பாட்டில் தகதகதைதை தகதகதைதை என்று வரும் கோரஸ் மிக அபாரமாக இருக்கும்.மாசி மாசக் கடசியிலே பாட்டில் வயலின் கொஞ்சும்.

பாட்டுகளை இங்கு கேட்கலாம்.

1975-இல் வந்த படம். மணியனின் சொந்த படம். இயக்கம் யாரென்று நினைவில்லை. இசை எம்எஸ்விதான் என்று நினைக்கிறேன், கே.வி. மகாதேவனோ என்று ஒரு சந்தேகம். ஹிந்தியில் தோ ஆங்கேன் பாரா ஹாத் என்று சாந்தாராம் எடுத்த படம். சாந்தாராம் எம்ஜிஆர்தான் ஹீரோ என்று தெரிந்ததும் உரிமையை கொடுக்க தயங்கினாராம் – மணியன் சொல்லி இருக்கிறார். பல்லாண்டு வாழ்க படம் சிறப்பு காட்சி அவருக்கு திரையிட்டு காட்டப்பட்டதும் தமிழ் உரிமையை மணியனுக்கு கொடுத்தது பெரிய தவறு என்று சொன்னாராம். தெலுங்கிலும் என்டிஆர், ஜெயசித்ரா நடித்து மணியன் தயாரித்தார். தெலுங்கில் தோல்வி. அதற்கு காரணம் ஜெயசித்ரா சரியாக நடிக்காததுதான் என்று மணியன் குறை சொன்னது நினைவிருக்கிறது.

பார்க்கலாம். எம்ஜிஆருக்கு வித்தியாசமான படம். 6.5 மார்க். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to பல்லாண்டு வாழ்க – என் விமர்சனம்

 1. Ram says:

  padam odichcha? ஹிந்தி படம் நல்ல படம் என்று சொல்லுவார்கள். I wonder why MGR didn’t have good luck with hindi-dubbed movies. Compared to original yadhoon ki bharat, MGR’s naalai namadhe too was a dud.

  • RV says:

   ராம்,

   பல்லாண்டு வாழ்க பதிவுக்கு பதில் அளித்ததற்கு நன்றி!

   படம் ஓடியது. படத்தை தயாரித்த மணியனும் தமிழில் ஓடியது, தெலுங்கில் ஓடவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 2. surya says:

  வழக்கப்படி எம்.ஜி.ஆரின் உட்டாலக்கடி கதைதான். ஆனால் பாட்டுக்கள் இனிமை…

 3. surya says:

  நம்ம பதிவு ஒண்ணு தட்ஸ்தமிழ்.காமில் இன்று வெளி வந்துள்ளது.

  சுட்டி:

  http://thatstamil.oneindia.in/cj/surya/2009/0512-the-father-pedar.html

 4. Das says:

  சூர்யா உங்களது பதிவைப் படித்தேன். நானும் அதற்கு ஒரு மறு மொழி இட்டுள்ளேன். (நினைவில் நின்ற நாவல்)

  நன்றி

 5. surya says:

  நன்றி தாஸ்.

  நாவலின் பெயர் “”உன்னை போல் ஒருவன்”. 1964 ல் சினிமாவாகவும் வெளிவந்தது. காந்திமதி ஹீரோயின்.

  பாடல்கள் கிடையாது. வீணை வித்வான் சிட்டி பாபு இசை.

  ஜனாதிபதியின் மூன்றாம் பரிசை பெற்றது.

  இதை பற்றியும் ஒரு பதிவு என் வலையில் எழுத எண்ணம்.

  நன்றி.

 6. surya says:

  என்ன அதிர்ஷ்டமா..?? புதிய பதிவேதும் இல்லையா..??

  —————————-

  தேர்தல் 2009 …

  உலக சினிமா விமர்சகனின் தேர்தல் கணிப்புகள்…

  மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..

  தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

  http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

  RV / Bags படித்து விட்டு கருத்தை சொல்லவும். நன்றி.

  • RV says:

   சூர்யா,

   காணமல் போனதை கவனித்ததற்கு நன்றி!

   உங்கள் தேர்தல் கணிப்பு அபாரம்!

   உங்கள் மஜிதியின் பெடர் பதிவுக்கு விழுந்து விழுந்து ஒரு பதில் எழுதினேன், அதை அந்த தளம் சாப்பிட்டுவிட்டது. மீண்டும் அந்த தளத்தில் பதில் எழுதவே கடுப்பாக இருக்கிறது. எப்படி இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டீர்கள்?

 7. surya says:

  Dear RV நிறைய சினிமாக்களை பார்ப்பதால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஒரளவு ஊகித்தது நடந்தே விட்டது..
  Thanx a lot for your wishes..

  அந்த தளத்தில் அது ஒரு பெரிய பிரச்சனை..Cool.

  எனது வலையில் ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.

  சுட்டி:
  http://butterflysurya.blogspot.com/search/label/Father

  இந்திய சினிமாவில் ஸ்ரீதர். My all time Fav.
  உலக சினிமாவில் மஜித் மஜீதி. அற்புத படைப்பாளி. அவருடைய அனைத்து திரைப்படங்களிலும் அடிப்படை அன்பு மட்டுமே. மற்றும் இவரது ஒவ்வொரு திரைபடங்களில் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல விரிகிறது

  அவரின் எல்லா படங்களையும் பார்த்தும் இருக்கிறேன்.

  Song of sparrows இந்த படமும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

  http://butterflysurya.blogspot.com/search/label/Song%20of%20Sparrows

  அடுத்து திரைப்பட காதலன் Pedro Almodovar :

  http://butterflysurya.blogspot.com/2009/03/pedro-almodovar.html

  பார்க்கவும். தங்களின் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: