பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்கள்


பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ்ராஜ் பார்த்ததிலே பிடித்த பத்து திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் விகடனில் வந்து பாஸ்டன் பாலாவால் மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த படங்களுக்கு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

பராசக்தி – கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம். இந்த படத்துக்கு விமர்சனம் இங்கே. நீதி மன்ற வசனம் இங்கே.

வீர பாண்டிய கட்டபொம்மன் – உணர்ச்சி கொந்தளிப்பும் பார்க்கக் கூடியதே. பாருங்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை – அருமையான மசாலா. என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே.

கை கொடுத்த தெய்வம் – சின்ன வயதில் பிடித்திருந்தது. சாவித்ரி, ரங்காராவ், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, புஷ்பலதா எல்லாருமே நன்றாக நடித்திருப்பார்கள். சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டுமே பார்க்கலாம். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம்.

காதலிக்க நேரமில்லை – ஜாலியான யூத் படம். விமர்சனம், குறிப்புகள் இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே.

நீர்க்குமிழி – முதல் பாதி சிரிப்பு, இரண்டாம் பாதி அழுகை என்று ஒரு ஃபார்முலா. பார்க்கலாம்.

தில்லானா மோகனாம்பாள் – ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. நாகேஷ் அற்புதமாக நடித்திருப்பார். என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே, நாதசுரக் கலைஞர்கள் பற்றி இங்கே.

16 வயதினிலே – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

உதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை.

ஒரு தலை ராகம் – முப்பது வருஷங்களுக்கு முன்னால் நானும் தினமும் ட்ரெயின் ஏறி ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் போனவன். இந்த படம் அதனாலேயே பிடித்திருந்தது. மன்மதன் ரட்சிக்கனும், வாசமில்லா மலரிது மாதிரி அருமையான பாட்டுகள்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்கள்

 1. surya says:

  பத்தும் பார்த்து இருக்கிறேன். அனைத்தும் எனக்கும் பிடித்தவையே..

 2. krishnamoorthy says:

  இது என்னுடைய ரெண்டு பைசே!

  பராசக்தி ——————-அன்னைக்குத் தேதி ஆச்சரியம். இன்னைக்கு வெறும் குப்பை.

  வீ.கட்டபொம்மன்—-கலர்ல எடுத்ததும், ஓவர் ஆக்டிங்கும் சேர்ந்து ஜெயித்த படம்.
  “சிவகங்கை சீமை”கருப்பு வெள்ளையா இருந்தாலும், பாத்திரப்
  படைப்பு, வசனம், பாடல்கள் இப்படி எல்லா விதத்திலும் நிறைவாக
  எடுக்கப் பட்ட படம். அது என்னவோ, கண்ணதாசன், கையைச்
  சுட்டுக் கொள்வதற்காகவே எடுத்த படங்களில் இதுவும் ஒன்று.
  சிவகங்கைச் சீமையோடு ஒப்பிடும் போது, பொம்மன் கொஞ்சம்
  கம்மி தான்!

  எ.வீ.பிள்ளை————ஒரு சக்சஸ் பார்முலா கதை. இதையே உல்டா அடித்து,
  ஹிந்தியில் சீதா அவுர் கீதாவாகி, தெலுங்குக்குப் போய் அப்புறம்
  தமிழில் வாணி ராணி என்று வெளிவந்தது. ஒரு ஓரத்தில்
  சிவாஜியும் வேஷம் கட்டின படம். வாத்தியார் வாத்தியார் தான்!

  கை.கொ.தெய்வம் –சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டும் பார்க்கலாம்

  கா.நேரமில்லை——-ஸ்ரீதர் கொடுத்த ஹிட் இன்றைக்கும் இனிக்கிறது.

  நீர்க்குமிழி—————-நாடகத்தை அப்படியே படமாக்கின மாதிரி ஒரு செயற்கை
  இருந்தாலும், கையைக் காலைத் தையத் தக்கா என்று ஆட்டிக்
  கொண்டு தை நாகேஷ் ஆக இருந்தவரை, நல்ல நடிகராகக்
  கட்டிய படம்.பாலச்சந்தர், கொஞ்சம் தனித்துத் தெரிய
  ஆரம்பித்ததும் இந்தப் படத்தில் இருந்து தான்.

  தி.மோகனாம்பாள்—நல்ல கதை, திரைக்கதையைக் கோரம் செய்யாமல் ஒரு
  அளவோடு நிறுத்திக் கொண்டதாலும், ஒவ்வொருவரும்
  தன் பாத்திரத்தை நன்றாகச் செய்ததாலும் நிறைவாக இருந்த
  படம். ஆர்வி, சூர்யா இருவரும் கவனியுங்கள், சிவாஜியின்
  ஓவர் ஆக்டிங்கையும் மிஞ்சி ஜில் ஜில் ரமாமணியும், ‘இந்த
  வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ? வைத்தியும்,
  மேலக்கார முத்து ராக்கு அண்ணனும் மனதில் இடம் பிடித்த
  படம்!

  16 வயதினிலே ——-பரட்டையாக நடித்தவர் தேறி விட்டார். சப்பாணி தான் என்ன ,
  இன்னமும் அதே ரெண்டுங்கெட்டான் மாதிரியே நடிப்பு,
  வாழ்க்கை இரண்டிலுமே!

  உ பூக்கள் ————— அந்த நேரத்துப் புதுமை, புது முயற்சி. இன்றைக்கு உட்கார்ந்து
  பார்க்க முடியாது.

  ஒருதலை ராகம் —-பாட்டுக்கள் அத்தனையும் ஹிட்! இன்றைக்கும் கண்ணை மூடிக்
  கொண்டு ரசிக்கலாம்.’நானொரு ராசியில்லா ராஜா; என்று பாட
  வைத்து, வீட்டிற்குள் உட்காட வைத்து விட்டார் பாவி என்று TMS
  மேடை தோறும் புலம்ப வைத்த படம். அன்றைக்குச் சரி, இன்று..?

  அதுசரி, பிரகாஷ்ராஜுக்கு இந்தப் பத்து படங்கள் தான் பார்த்ததில் பிடித்தது என்றால், அவர் பார்க்க வேண்டிய நல்ல படங்கள் தமிழில் இன்னும் மீதமிருக்கிறது.

 3. KALA says:

  kris: you have forgotten one thing ‘sivaganga seemai ‘ even it is b/w ,and even kannadhasan has lost on revenue WE ARE DISCUSSING ABOUT THAT FILM EVEN TODAY its the victory of the classic.In kai kodutha deivam friends formula out put was fantastic SSR SHIVAJI dictioned the characters.mighty shivaji himself was out numbered by SSR in someplaces.atlast shivaji has met counter part nearest to him ATLEAST.same with SAVITHRI M.R.RADHA combination scenes.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: