கிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் – பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்


நண்பர் கிருஷ்ணமூர்த்தி பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களை பற்றி ட்விட்டர் ஸ்டைலில் ஒரு மறுமொழி இட்டிருக்கிறார். எனக்கு பிடித்திருந்தது. அதை எல்லாரும் சுலபமாக பார்க்க பதிவாக போட்டுவிட்டேன்.

கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் என் கருத்துகள் இல்லை. என் கருத்துகளை பார்க்க இந்த பதிவை படியுங்கள்.

அவர் நம் வாயை பிடுங்குவதற்காகவே சில சர்ச்சைகளை – குறிப்பாக சிவாஜியை பற்றி – கிளப்புபவர் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. 🙂 ஆனால் சுவாரசியமாக எழுதுவார். ஓவர் டு கிருஷ்ணமூர்த்தி!

இது என்னுடைய ரெண்டு பைசே!

பராசக்தி: அன்னைக்குத் தேதி ஆச்சரியம். இன்னைக்கு வெறும் குப்பை.

வீ.கட்டபொம்மன்: —-கலர்ல எடுத்ததும், ஓவர் ஆக்டிங்கும் சேர்ந்து ஜெயித்த படம்.
சிவகங்கை சீமை கருப்பு வெள்ளையா இருந்தாலும், பாத்திரப்படைப்பு, வசனம், பாடல்கள் இப்படி எல்லா விதத்திலும் நிறைவாக எடுக்கப்பட்ட படம். அது என்னவோ, கண்ணதாசன், கையைச் சுட்டுக் கொள்வதற்காகவே எடுத்த படங்களில் இதுவும் ஒன்று. சிவகங்கைச் சீமையோடு ஒப்பிடும் போது, பொம்மன் கொஞ்சம் கம்மிதான்!

எ.வீ.பிள்ளை: ஒரு சக்சஸ் பார்முலா கதை. இதையே உல்டா அடித்து, ஹிந்தியில் சீதா அவுர் கீதாவாகி, தெலுங்குக்குப் போய் அப்புறம் தமிழில் வாணி ராணி என்று வெளிவந்தது. ஒரு ஓரத்தில் சிவாஜியும் வேஷம் கட்டின படம். வாத்தியார் வாத்தியார்தான்!

கை.கொ.தெய்வம்:: சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டும் பார்க்கலாம்

கா.நேரமில்லை: ஸ்ரீதர் கொடுத்த ஹிட் இன்றைக்கும் இனிக்கிறது.

நீர்க்குமிழி: நாடகத்தை அப்படியே படமாக்கின மாதிரி ஒரு செயற்கை இருந்தாலும், கையைக் காலைத் தையத் தக்கா என்று ஆட்டிக்கொண்டு தை நாகேஷ் ஆக இருந்தவரை, நல்ல நடிகராகக் காட்டிய படம். பாலச்சந்தர் கொஞ்சம் தனித்துத் தெரிய ஆரம்பித்ததும் இந்தப் படத்தில் இருந்துதான்.

தி.மோகனாம்பாள்: நல்ல கதை, திரைக்கதையைக் கோரம் செய்யாமல் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டதாலும், ஒவ்வொருவரும் தன் பாத்திரத்தை நன்றாகச் செய்ததாலும் நிறைவாக இருந்த படம். ஆர்வி, சூர்யா இருவரும் கவனியுங்கள், சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கையும் மிஞ்சி ஜில் ஜில் ரமாமணியும், ‘இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ? வைத்தியும், மேலக்கார தவில்கார முத்துராக்கு அண்ணனும் மனதில் இடம் பிடித்த படம்!

16 வயதினிலே: பரட்டையாக நடித்தவர் தேறி விட்டார். சப்பாணிதான் என்ன , இன்னமும் அதே ரெண்டுங்கெட்டான் மாதிரியே நடிப்பு, வாழ்க்கை இரண்டிலுமே!

உ. பூக்கள்: அந்த நேரத்துப் புதுமை, புது முயற்சி. இன்றைக்கு உட்கார்ந்து பார்க்க முடியாது.

ஒரு தலை ராகம்: பாட்டுக்கள் அத்தனையும் ஹிட்! இன்றைக்கும் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கலாம். ’நானொரு ராசியில்லா ராஜா” என்று பாட வைத்து, வீட்டிற்குள் உட்காட வைத்து விட்டார் பாவி என்று TMS மேடைதோறும் புலம்ப வைத்த படம். அன்றைக்குச் சரி, இன்று..?

அது சரி, பிரகாஷ் ராஜுக்கு இந்தப் பத்து படங்கள் தான் பார்த்ததில் பிடித்தது என்றால், அவர் பார்க்க வேண்டிய நல்ல படங்கள் தமிழில் இன்னும் மீதமிருக்கிறது.

என் இரண்டு பைசே: நான் சிவகங்கை சீமை பார்த்திருக்கிறேன். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

20 Responses to கிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் – பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்

 1. ivansivan says:

  நான் ஒன்றும் சிவாஜியுடைய ரசிகனோ,கமல் ரசிகனோ அல்ல தான். தங்களின் எல்லை தாண்டிய பயங்கர வாதம் என்னை இங்கே எழுத தூண்டுகிறது.சினிமா நன்கு தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் “16 வயதினிலே” சப்பாணி எப்படி பட்டவன் என்று!!! தாங்கள் இன்னமும் நாயகன்,அன்பே சிவம்,அபூர்வ சகோதரர்கள் பாக்கலைனு நினைக்குறேன். கட்டபொம்மன் மாதிரி வரலாற்று கதைக்கு கண்டிப்பா ஒரு இயல்பை மீறிய நடிப்பு தேவைனு தான் நினைக்குறேன்.அது கண்டிப்பா யாருக்கும் odd ஆ தெரியல.
  அன்னைக்கு தேதில எடுக்க பட்ட படத்துக்கு இன்றைய மன நிலையில விமர்சனம் எழுதிறது மிக தவறானதாகும். கடைசியா தன் சொந்த வாழ்கை விமர்சனம் பற்றி கமல் ஹாசன் சொன்ன பதில் “நீங்க கொடுக்கிற காசுக்கு என் படங்களை விமர்சியுங்கள். என் சொந்த வாழ்கை பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது”. எனக்கு சரின்னு படுது,உங்களுக்கு??????????

  மேற்கூறிய என் வார்த்தைகள் உங்களை சங்கட படுத்திஇருந்தால் மன்னிக்கவும். விமர்சனங்களில் கண்ணியம் இருக்கணும்ங்கிறது என் தாழ்மையான வேண்டுகோள்!!!!!!!!!

  • RV says:

   இவன்சிவன்,

   கிருஷ்ணமூர்த்தி provoke செய்யும்படி எழுதி இருக்கலாம். அதுதான் அவர் எழுத்தின் சுவாரசியமே என்று நான் நினைக்கிறேன்.

   // ன்னைக்கு தேதில எடுக்க பட்ட படத்துக்கு இன்றைய மன நிலையில விமர்சனம் எழுதிறது மிக தவறானதாகும்.//
   இது எனக்கு இசைவானது இல்லை. இந்த தளத்தின் நோக்கமே பழைய படங்களை இன்றைய மன நிலையில் விமர்சனம் செய்து எது இன்றைக்கும் பார்க்கலாம் என்று சொல்வதுதான். பாகவதர் படங்களை இன்று பார்ப்பது கஷ்டம்தான். ஆனால் அதே காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சபாபதி, சந்திரலேகா போன்றவை இன்றும் பார்க்கக் கூடிய, நல்ல படங்கள். கிருஷ்ணமூர்த்தி சிவாஜியை விமர்சிப்பதும் இப்படித்தான். அன்றைய காலகட்டத்தில் நல்ல நடிப்பு என்று கருதப்பட்டது இன்று மிகை நடிப்பாக தெரிவதுதான் அவர் சொல்வதின் முக்கிய பாயின்ட்.

   ஒரு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கை அவர் இஷ்டம்தான். ஆனால் நம் ஊர் நடிகர்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை நடத்துவது இல்லை. நிகழ்ச்சிகளுக்கு கவுதமியோடு இணைந்து அவர் ஏன் வருகிறார்? பக்கத்து வீட்டு பையன் எதிர் வீட்டு பெண்ணோடு சினிமா போனால் கூட நாலு பேர் பேசத்தான் செய்வார்கள். அது அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை என்று விட்டுவிடுவதில்லை.

 2. krishnamoorthy says:

  இவன்சிவன் ஐயா!

  கமல் மாதிரி உடான்ஸ் விடறவங்களுக்காக ரொம்ப வருத்தப் படறீங்க!
  நான், ஜனங்களுக்காக வருத்தப் படறேன். ஒரு தனி மனிதனா, அடுத்தவன் வீட்டில,மூக்கை நுழைக்காத வரைக்கும், நீங்க சொல்றது எல்லாம் சரிதான்!ஒரு தனி மனிதனா, கமல் எப்படித் திரிஞ்சாலும், மேஞ்சாலும் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இருக்கப் போவதில்லை. ஆனா, இவங்களைப் பாத்து, காப்பியடிச்சுச் சீரழியன்னே ஒரு கூட்டம் இருக்குதே, அதைப் பத்தித் தான் கவலை, அதுக்காகத் தான் இந்த விமரிசனம், கோபம் எல்லாம்.

  அதுவும் தமிழ்நாட்டுல,சினிமாக்காரன் எல்லோருக்குமே ஒரு மாதிரி ‘நானே ரட்சகனும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறேன்’ என்கிற மாதிரி ஒரு நினைப்பு!

  இந்த பயாஸ்கோப்பு காமிக்கிற பயலுவ எல்லாம், நமக்கு போதிக்க வந்த குரு மாதிரி, நம்மை ரட்சிக்கிற ரட்சகர்கள் மாதிரி இம்சை கொடுக்கும் போது, கொஞ்சம் பொறுமை போயிடுது. என்ன பண்ணலாம்?

  ஒரு தண்டனையா இல்லை, ஒரு பிராயச்சித்தமாக, சிவாஜி கணேசன் தயாரித்த, நடித்த “என் தமிழ் என் மக்கள்’ படத்தைப் பாருங்கள், அப்புறம் என் விமரிசனம் சரியா இல்லை தவறா என்று தீர்ப்புச் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்.

 3. krishnamoorthy says:

  //ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக அந்த விடுதலை வீரரை நான் சென்னைக்கு வரக் கேட்டிருந்தேன். . அவருக்கு வயது எண்பதுக்கு மேல். உடல் தளர்ச்சி பெரிதாக இல்லாவிட்டாலும் கடும் மன தளர்ச்சியில் இருந்தார். சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் அவ்ருடைய பிள்ளையும் பேரனும். நிகழ்ச்சிப் பதிவு முடியும்வரை என் வீட்டில் தங்கியிருந்தார்கள். எல்லாம் முடிந்து ஊருக்குத் திரும்பும் தினத்தன்று ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன்னால் அவர் என் அறைக்கு பேரனுடன் வந்தார். என்னிடம் ஒரு உதவி வேண்டுமென்று தயங்கித் தயங்கிச் சொன்னார். என்னவென்று கேட்டேன் பேரனுக்கு சினிமாவில் சேர ஆசை. எப்படியாவது கமல்ஹாசனிடம் சொல்லி சேர்த்துவிடவேண்டுமென்று கேட்டார் ஆங்கிலேய ஆட்சியில் தேசத்துக்காகஅடி உதை அவமானங்களை சந்தித்திருந்த அந்த விடுதலை வீரர். ஏற்கனவே பல முறை பேரன் சென்னைக்கு வந்து முயற்சித்த கதையையும் சொன்னார். விடுதலை வீரருடன் ரயிலில் வந்தால் உடன் வரும் உதவியாளருக்கு டிக்கட் இலவசம் என்பது அரசு அளித்திருக்கும் சலுகை. எனவே அடிக்கடி இந்த விடுதலை வீரரை பேரன் சென்னைக்கு அழைத்து வந்து நாள் முழுக்க ரயில்வே நிலையத்திலேயே உட்காரவிட்டுவிட்டு, கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கேட்கப் போய்விடுவான். இரவு ரயிலில் ஊர் திரும்பும் வரை ரயிலடியில் விடுதலை வீரர் கிடக்க வேண்டியதுதான்.//

  முந்தின பதிலை அனுப்பிவிட்டு, இட்லிவடையில் ஞானியின் இந்த கட்டுரையை வாசித்தேன். முழுப் பதிவையும் பார்க்க:

  http://idlyvadai.blogspot.com/2009/05/blog-post_30.html

 4. Das says:

  பராசக்தி இன்றோ ஒரு குப்பை – சரியாகத்தான் கணித்திருக்கிறார் !
  தி.மோ – கணேசனின் மிகை நடிப்பையும் மீறியது பப்பியின் நடிப்பு. வைத்தா மட்டுமே சிறப்பு

  கிருஷ்ணமுர்த்தி தயவு செய்து “என் தமிழ் என் மக்களுக்கு” ஒரு விமர்சனம் எழுதவும்!

 5. RV says:

  தாஸ், உங்களுக்கு பராசக்தி பிடிக்காதா? ஆச்சரியம்!

  கிருஷ்ணமூர்த்தி, எனக்கும் தாஸ் சொன்ன பிறகுதான் தோன்றுகிறது. என் தமிழ் என் மக்களுக்கு ஒரு விமர்சனம் எழுதுங்களேன்!

  ஞானியின் கட்டுரை உருக்கமாக இருந்தது. ஆனால் அதில் கமலின் தவறு எதுவும் இல்லையே! பெரியவருக்கு தன் பேரன் சினிமாவில் நுழைய ஆசைப்படுகிறானே, அதற்கு நம்மையும் வருத்துகிறானே என்று தோன்றலாம். பேரனுக்கோ தன் தாத்தாவிடம் உதவி கேட்காமல் யாரிடம் கேட்பது என்று தோன்றலாம். அவ்வளவுதானே!

 6. krishnamoorthy says:

  விமரிசனம் எழுதுகிற அளவுக்கு “என் தமிழ் என் மக்கள்” ஒன்றும் பெரிய காவியமோ, ஓவியமோ அல்ல. தன்னை மிகப் பெரிய அரசியல் வித்தகர் என்ற எண்ணம் ஏழரையாக எப்படியோ சிவாஜிக்கு வந்து விட்டது. காமராஜர் இருந்த வரை, அவரோடு இருந்தார். அப்புறம் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். சீந்துவாரில்லை. தனிக் கட்சி ஆரம்பித்தார்.அதன் கொள்கை விளக்கம் முழக்கமாக எடுக்கப் பட்டது தான் “என் தமிழ் என்மக்கள் படம்” படத்தில் அவர் பெரிய அரசியல் வித்தகர், ராஜீவ் காந்திக்கு உபதேசம் செய்கிற மாதிரி காட்சிகள்.

  ஒரு நல்ல நாடக நடிகன் என்ற நிலையை, சினிமாவுக்கு வந்து வெகு நாளைக்கப்புரமும் சிவாஜி தாண்டவில்லை என்பது ஒரு சோகம். அவர் சம காலத்தவரான எம் ஜி ஆர் அரசியலில் சாதித்த மாதிரி தன்னாலும் சாதிக்க முடியும் என்ற அசட்டு நம்பிக்கை. சொந்தக் குடும்பத்திலேயே போணியாகவில்லை. படம் எடுத்துக் கிழித்தது போதும், கட்சி நடத்திக் கவுத்ததும் போதும் என்று மகன்கள் காலைக் கட்டிப் போட்டது தனிக் கதை, இந்தக் கோமாளியை நம்பி, கட்சியில் சேர்ந்து உழைத்த மேஜர் சுந்தரராஜன் வீணாய்ப் போனதும், சிவாஜி கெட்டது இவரால் தான் என்று பழி சுமந்ததும் கிளைக் கதை.

  சிவாஜி புகழை இன்னமும் பாட விரும்புகிறவர்களுக்குச் சரியான தண்டனை, என்தமிழ் என்மக்கள் படத்தைத் தொடர்ந்து மூணு ஷோ பார்க்க வைப்பது தான்!!
  அதே மாதிரிக் கமலுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்குப் பரிசு தசாவதாரத்தைத் தொடர்ந்து மூணு ஷோ பார்க்க வைப்பது தான்!

 7. RV says:

  கிருஷ்ணமூர்த்தி,

  நீங்கள் சொல்லி சொல்லித்தான் இப்படி ஒரு படம் வந்திருப்பதே தெரியும். அதனால் இப்படி எல்லாம் இங்களை த்ராட்டில் விடாதீர்கள். ஒரு முழு விமர்சமும் எழுதிவிடுங்கள்!

 8. krishnamoorthy says:

  ஆக, என்தமிழ் என் மக்களுக்கு விமரிசனம் எழுதி,எனக்கு நானே ஆப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றீர்கள்!

  • Ram says:

   dear krishnamoorthy,

   if you are a blind-folded MGR fan, let it be. The very fact that this list has got 4 NT movies (out of 10) shows the credentials of his quality. You can twist the movies in any way you want – especially branding it as over-acting, but the fans never cared it. Why do you have to go after every NT movie and suggesting readers see என்தமிழ் என்மக்கள்? In a contrast, I would suggest the same readers see MGR crappy movies such as petral thaan pillaiya, தேர்த்திருவிழா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, nallavan vaazhvaan, pallandu vaazhga, idhaya veenai, kanavan, oli vilakku, and so on? Not only see those movies, I would suggest you write a detailed review on them.

   Moreover, the NT movies mentioned here not only ran during first release, but they also ran when they were re-released. For example, as you know, in 80s, VPK ran 100 days in major cities in TN.

   NT’s kai kodathu deivam is a great movie even in today’s standard. Here, NT had a under-play role, in which the movie centered around Savitri. But, still it is pleasant to watch the acting of everyone involved, including SSR. If you say that this movie could be watched only for one song, it shows the taste of yours.

   Every movie of MGR had great songs, which played major role in his success, including Enga veettu pillai. While writing about EVP, you said that NT played a side role in vani rani. We, NT fans agree, but that side role itself convinced distributors to buy the movie and made sure that the movie was a success. Still, i dont see why you have to pull NT in EVP’s review.

   Every one agrees that NT was a failure in politics. If he had chosen the roles carefully (like MGR) and entered politics in peak days, he might have achieved success in politics. Then, the point is you might have not got some of his anti-good movies such as vasantha maaligai, sorgam, etc.

   Because you are bringing politics here, let me make this point: Every one knows that MGR still has a big mass in TN, especially in villages. Still today, why couldn’t his party ADMK win elections consistently just the way he did when he was alive? The world is changing and i dont think if MGR were alive today, he would have repeated the same success.

   என்னை பொறுத்தவரை: MGRக்கு நடிகர் என்கிற முறையில் பெருசாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை; அரசியல்வாதி என்கிற முறையில் தான் அவருடைய படங்கள் ஓடி உள்ளது. The problem with TN is movies & politics are inseparable; in that angle, as you do here blindly, a great actor NT has been constantly getting thrashed.

   Stop thrashing NT just with yard stick of என்தமிழ் என்மக்கள். see the good side of his movies and versatility that NT provided for future tamil actors.

   good luck in trashing NT.. i know you will still do it!!

   • krishnamoorthy says:

    அன்புள்ள திரு ராம்,

    நடிகர் திலகத்தைக் கொஞ்சம் விமரிசித்ததற்கே இவ்வளவு கொந்தளித்திருக்கிறீர்கள். உங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். அதே நேரம், கூத்தாடிகளை நாடு வீட்டில் கொண்டு வந்து வைத்ததால் ஏற்பட்டிருக்கிற சீரழிவினால் இரண்டு, மூன்று தலைமுறைகள் வீணாகப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிற எவருக்கும் என்னை விட அதிகமாகக் கோபம் வரும் என்பதைப் புரிந்து கொள்வீர்களா?

    என்னை எம் ஜி ஆரி ரசிகன் என்று கணித்திருக்கிறீர்கள். நான் எந்த நடிகன் பின்னாலும், எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிற்கிற விசிலடிச்சான் குஞ்சு அல்ல.விஷயங்களின் தராதரத்தின் அடிப்படையிலேயே, என்னுடைய கருத்துக்களை முடிவு செய்கிறேன். குருட்டுத்தனமான அபிமானங்களில், உண்மையை இழந்துவிடக் கூடாது என்று தான் சொல்கிறேன். தவறா?

    அப்புறம், பிரகாஷ்ராஜ் பட்டியல் பத்தில் நான்கு சிவாஜி படம் என்பதே, அவருடைய தரம் எத்தகையது என்பதைச் சொல்லும் என்கிறீர்கள். என்ன ஒரு வினோதமான, லாஜிக்?
    விசிலடிச்சான் குஞ்சுகளுக்குக் கூட வராத கற்பனை, உங்களை மாதிரி சிவாஜி ரசிகனுக்கு வந்திருப்பது ஒன்றே, உண்மை என்ன என்பதைப் புட்டு வைக்கும் என்கிறேன் நான்.

    என்தமிழ் என் மக்கள் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கச் சொல்கிறேனென்று என் மீது ரொம்பவுமே வருத்தப் பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய வாதம், இதே மாதிரி சொதப்பிய எம் ஜி ஆர் படங்கள் எதையும் பார்க்கச் சொல்லவில்லையே என்று போகிறது. மறுபடியும், மிக மோசமான லாஜிக். இவன் செய்தது தவறு என்று சொல்லும் போது, அடுத்தவன் செய்த தவறு கண்ணில் படவில்லையா என்று கேட்பது தவறை நியாயப் படுத்துகிற மிக மோசமான முயற்சியே தவிர வேறென்ன?

    என் தமிழ் என் மக்கள் படத்தைப் பற்றி நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். சிவாஜி, தன்னைப் பற்றி தன்னுடைய அரசியல் ஞானத்தைப் பற்றி, மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்ட விதத்தில் இருந்த கோளாறுகளை, அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுவதாக அந்தப் படம் இருந்தது. தன்னை ஒரு அரசியல் சாணக்கியனாக நினைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யத் துணிந்து கோமாளியாக மட்டுமே ஆகிப் போனதை அந்தப் படம் அப்பட்டமாகக் காட்டியது.அரசியலில் மட்டுமல்ல,

    சினிமாவில் கூட, மாறிவரும் ரசனைகள், சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமலேயே, வெறும் நாடகக் கலைஞனாகவே நின்று விட்டார் என்று சொன்னதில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பதை நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!

    சிவாஜியிடம் நிறையத் திறமை இருந்தது உண்மை. தனக்குத் தெரிந்தது மட்டுமே உலகம் என்று கிணற்றுத் தவளையாக ஆகிப் போன துரதிர்ஷ்டம் ஒரு கலைஞனுக்கு நேரிட்டதில் எனக்கு எந்த சந்தோஷமுமில்லை.

 9. surya says:

  RV .. என்ன நடக்குது..???

  • krishnamoorthy says:

   என்ன நடக்கணும்னு எதிர்பார்க்கிறீங்களோ அது தான் நடக்குது!

   //அவர் நம் வாயை பிடுங்குவதற்காகவே சில சர்ச்சைகளை – குறிப்பாக சிவாஜியை பற்றி – கிளப்புபவர் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு//

   இப்படி ஆர்வி ஐயா ஆசைப் பட்ட மாதிரி இல்லை, இங்கே என் வாயைப் பிடுங்குவது மாதிரியே உள்டாவாகிப் போய்க் கொண்டிருக்கிறது:-)

   • RV says:

    ராம், கிருஷ்ணமூர்த்தி, சூர்யா, கொஞ்ச நாளாகும் இதற்கு எல்லாம் பதில் எழுத.

 10. Das says:

  கதை கதையாம் காரணமாம்! “என் தமிழ் என் மக்கள்” பிறந்த (சோக) கதை!

  Tamil Nadu Congress decided to ally with Jayalalitha’s fragment of ஐஅட்ம்க். This move was opposed by Sivaji Ganesan and hence he left the party along with his supporters to form the new party Thamizhaga Munnetra முன்னணி. To popularise the party Ganesan produce a movie titled En Thamizh En Makkal .
  The party lost every seat it contested for in the 1989 elections. Sivaji himself lost at Thiruvayaru to DMK by a margin of 10,643 votes.
  Soon after the election he dissolved the party and asked his party cadres to join Janata Dal[15] which he himself did.
  Later in his life Sivaji Ganesan regretted to have ever floated his own party and reportedly said
  “ Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.[11] ”
  On other occasion he added:
  “ The votes that I secured came from people of another party. It is true that I was defeated. This was a big disappointment and a very difficult situation that I faced. What could one do? When we take wrong decisions, we have to face disappointments.[11]

 11. surya says:

  என்ன நடக்கணும்னு எதிர்பார்க்கிறீங்களோ அது தான் நடக்குது!///

  மு.கொ….யாரும் எதையும் எதிர்பார்க்கவில்லை.

  உங்களை கேட்கவும் இல்லை. ஏன் சம்மன் இல்லாமல் ஆஜராகறீங்க…

 12. RV says:

  ராம், கிருஷ்ணமூர்த்தி, சூர்யா,

  என்னவோ எனக்கு இந்த எம்ஜிஆர் சிவாஜி “சண்டைக்கு” பதில் சரியாக அமையமாட்டேன் என்கிறது. சீக்கிரம் எழுதுகிறேன். அதுவரை கூல் டௌ அன்! அதற்கு பிறகு என்னுடன் சண்டை போடலாம்!

  தாஸ், என் தமிழ் என் மக்கள் பற்றிய விவரங்களுக்கு நன்றி! கிருஷ்ணமூர்த்தி, இப்படி விமர்சனம் எழுதாமல் நழுவுகிறீர்களே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: