ஜம்பு புகழ் கர்ணன்


என் கல்லூரி நாட்கள் மிக சந்தோஷமானவை. சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தேன். பெரிய நட்பு கும்பல். ஹாஸ்டல் வாழ்க்கையின் சுதந்திரம். வார்டனை எல்லாம் நான் பார்த்ததே கிடையாது.

எங்கள் கும்பலுக்கு ஒரு ஆதர்ச படம் உண்டு என்றால் அது ஜம்புதான். இரண்டு மூன்று முறை ஜங்க்ஷன் உமா தியேட்டரில் வந்தது. நான் அதை பார்க்காமல் மிஸ் செய்துவிட்டேன். என் கல்லூரி வாழ்க்கையின் நம்பர் ஒன் regret இதுதான். படிக்கவில்லை என்பதெல்லாம் அப்புறம்தான். மெல்லிய வெள்ளைத் துணி, ஆறு, மழை என்று சில இலக்கண விதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட படம் என்று எல்லாரும் சொல்வார்கள்.

கர்ணனை பற்றி ஒரு பதிவு பார்த்தேன். எனக்கு இருக்கும் மன பிம்பத்தை விட அவர் எவ்வளவோ பெரிய ஆளுமை உள்ளவர் என்று தெரிந்தது. சிறு வயதில் எங்க பாட்டன் சொத்து என்ற ஆக்ஷன் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அது எங்கள் ஊர் டெண்ட்டு கொட்டாயில் வரவே இல்லை. அதுவும் இவர் இயக்கியதுதானாம்.

அருமையான பதிவை எழுதிய முரளி கண்ணனுக்கு நன்றி!

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

18 Responses to ஜம்பு புகழ் கர்ணன்

 1. tamilini says:

  உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

  பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

 2. மிக்க நன்றி ஆர்வி. தங்களைப் போன்றவர்களின்
  உற்சாக வார்த்தைகளே என்னை தொடர்ந்து
  இயங்க வைக்கின்றன.

 3. அருமையான பதிவை எழுதிய முரளி கண்ணனுக்கு என்னுடைய நன்றிகளும்!
  உங்கள் எண்ணங்களை பகிர்ந்ததற்க்கும்!!

 4. RV says:

  கலையரசன், முரளி, மறுமொழிக்கு நன்றி!

  கலையரசன், நீங்கள் முரளிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். முரளி, அருமையான பதிவை எழுதி இருக்கிறீர்கள்!

 5. வணக்கம் ஆர்.வி…
  நானும் அதே கல்லூரிதான்…2001 paassed out…U?

 6. RV says:

  தமிழ் பறவை,

  நான் படித்தது 82-86. பழைய கல்லூர்ரி மாணவரை இங்கே சந்தித்தது மிக்க மகிழ்ச்சி!

  உங்கள் தளத்தை அவசர அவசரமாக ஒரு பார்வை பார்த்தேன். கவிதை, இசை ஆகியவற்றில் பெரிய ருசி உள்ளவர் போல. வாழ்த்துக்கள்!

 7. krishnamoorthy says:

  /என் கல்லூரி நாட்கள் மிக சந்தோஷமானவை//

  விடலைப் பருவம், பொறுப்பு எதுவும் இல்லாத பருவம், சந்தோஷமாகத் தான் இருக்கும். இது நம் எல்லோருக்குமே பொதுவான உண்மை.

  //எங்கள் கும்பலுக்கு ஒரு ஆதர்ச படம் உண்டு என்றால் அது ஜம்புதான்//
  ,
  இதுவும் விடலைத்தனத்தின் உச்சகட்டம் தான். அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளத் துடிக்கும் பரபரப்பு, பார்த்தபின்னாலும் அப்படி என்னதான் இருந்தது என்பது புரியாமல் மாய்ந்து மாய்ந்து மறுபடி பார்க்கத் தூண்டும்.

  கர்ணன் ஒரு திறமையான ஒளிப்பதிவாளர். நிறைய உத்திகளைக் கையாண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகள், குதிரை சேசிங், சம்பந்தா சம்பந்தமில்லாமல் மலை உச்சி வரும், பள்ளத்தாக்கும் வரும். அதே மாதிரியே, நடிகைகளையும் நனைய விட்டு அதையும் மலை உச்சி, பள்ளத்தாக்கு மாதிரியே காமெரா ஆங்கிளில் காட்டி பயமுறுத்துவது அவருக்கு ஒரு பிடித்தமான விளையாட்டாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

 8. மிக்க மகிழ்ச்சி ஆர்.வி. சார்…வலையுலகில் மகேஷ் எனும் ஒரு தம்பியும்( ‘ரசிகன்’ என்னும் வலைப்பூ வைத்திருக்கிறார்).. நமது கல்லூரியின் மாணவர்தான் அவர். நம் கல்லூரி மாணவர்களை வலையுலகில் பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது…நன்றி…

 9. RV says:

  கிருஷ்ணமூர்த்தி, விடலைப் பருவம் பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
  சார், சும்மா எழுதுங்க! என் தமிழ் என் மக்கள் உங்களைத் தவிர வேறு யாரும் பாப்பாங்கன்னு எனக்கு தோணலே. நீங்க எழுதினாதான் உண்டு.

  தமிழ் பிறவி, காலேஜுக்கு எல்லாம் போவீங்களா? அலும்னை மீட்டுக்கு போவீங்களா?

 10. surya says:

  RV.. ஜம்புவில் ஒரு பாட்டு என்று நினைவு

  “” மச்சான் தொட்டா மச மச.. மனசுக்குள் ஏதோ கச முச..””

  சரியா..??

  • Bags says:

   சூர்யா, இன்னும் லோகத்தில் கலி தீரலையோ? 🙂

   மச்சான் தொட்டா மச மச பாட்டு மட்டும் நினைவு வைத்திருக்கிறீர்களே! பை த வே, எனக்கும் நினைவு இருக்கிறது. 🙂

 11. RV says:

  சூர்யா, இந்த மச்சான் தொட்டா மச மசா பாட்டை எல்லாம் வேறு கேட்டிருக்கிறீர்களா? எல்லாம் உங்கள் தலைவிதி!

 12. படத்தை பல தடவை பார்த்த உங்களுக்கு நினைவில்லையான்னு கேட்டேன்..??

  தமிழனாய் பிறந்ததை விட விதி வேறொன்றும் இல்லையே..??

  • RV says:

   சூர்யா,

   நான் எங்கே பார்த்தேன்? மிஸ் செய்துவிட்டேனே! நீங்கள் நான் அப்படி எழுதி இருப்பதை கவனிக்கவில்லையா? ஆனால் பார்த்துவிட்டுவந்து ஒரு வாரம் இரண்டு வாரம் ஹாஸ்டல் பாத்ரூம்களில் பாட்டு கேட்கும். 🙂

 13. ஹாஸ்டல் பாத்ரூம்களில் பாட்டு மட்டும் தானா..??

 14. guru says:

  your are right the famous GANGA IS ALSO FROM THE GRATE KARNAN ONLY

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: