தேர்தல் பட லிஸ்ட்


தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த லிஸ்டை கவனித்தேன். தமிழில் தேர்தல் படங்களுக்கு பாஸ்டன் பாலா ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். வழக்கம் போல ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பாதி படம் நான் பார்த்ததில்லை, வேறு யாராவது குறிப்பு எழுத வருகிறீர்களா?

முகமது பின் துக்ளக் – சோ: எனக்கு சினிமாவை விட நாடகம் பிடிக்கும். தமிழின் சிறந்த நாடங்களில் ஒன்று. சோ கலக்கி விடுவார். துக்ளக் தேர்தல் கூட்டங்கள் மகா ஜாலியாக இருக்கும்.

ஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்: பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா?

கண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி: இது என்ன குருதிப் புனலின் திரை வடிவமா? பார்த்ததில்லை.

ஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்: பார்த்ததில்லை.

அக்ரஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்: நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா?

தியாக பூமி – கல்கி: எனக்கு இந்த புத்தகம் பிடிக்கும். பார்க்க ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதா? ஆனால் இந்த கதையில் தேர்தல் கீர்தல் எதுவும் கிடையாதே?

சிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி: நல்ல பாட்டுகள், வெளி நாட்டு படப்பிடிப்பு, பார்க்கக் கூடிய மசாலா படம். இந்த படத்திலும் தேர்தல் ஒன்றும் கிடையாதே?

நிஜங்கள்: கேள்விப்பட்டதே இல்லை.

தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்: தமிழின் தலை சிறந்த நாடகம் + திரைப்படங்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். தேர்தலை அத்திப்பட்டிக்காரர்கள் “பாய்காட்டுவார்கள்”.

மக்களாட்சி – ஆர் கே செல்வமணி: இதெல்லாம் ஒரு படம், இதற்கெல்லாம் கருத்து ஒரு கேடு.

முதல்வன் – ஷங்கர்: பொதுவாக எனக்கு ஷங்கரின் படங்கள் பிடிக்கும். இந்த படம் மிக பிடித்திருந்தது. படம் பார்க்கும்போதெல்லாம் இந்த ரோலில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும்.

இருவர் – மணிரத்னம்: ஒன்றும் பிரமாதம் இல்லை. படம் பார்க்கும் பொது ஒவ்வொரு மைனர் காரக்டரும் உண்மையில் யார் என்று யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.

அச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்: அருமையான பாட்டு போட்ட வி.எஸ். நரசிம்மன் எங்கே போனார்? பார்க்கலாம்.

தேசிய கீதம் – சேரன்: என்னவோ நினைத்து என்னவோ நடந்துவிட்டது. கதை சரி இல்லாத பிரச்சினைதான்.

அமைதிப்படை – சத்யராஜ்: பார்த்ததில்லை.

சத்யா – கமல்ஹாசன்: நல்ல முடிச்சு. கமல் அருமையாக நடித்திருப்பார். சிட்டிக்கு நல்ல ரோல். வளையோசை கலகலகலவென அருமையான பாட்டு. ஹிந்தி ஒரிஜினலான அர்ஜுனும் நன்றாக வந்திருக்கும்.

என் உயிர்த் தோழன் – பாரதிராஜா: என்றாவது பார்க்க வேண்டும்.

பாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி: பார்க்கக் கூடிய மசாலா படம்.

அருணாச்சலம் – ரஜினி: ஜாலியான ரஜினி படம்.

மகாநடிகன் – சத்யராஜ்: சிரிப்பே வராத படம். சத்யராஜ் லொள்ளு பண்ணமாட்டார், பார்ப்பவர்களை கொலை பண்ணுவார்.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to தேர்தல் பட லிஸ்ட்

  1. SnapJudge says:

    இதில் நிறைய படம் நானும் பார்த்தது இல்லை. ட்விட்டரில் நண்பர்கள் கொடுத்த பரிந்துரைகளும் இணைத்துள்ளேன்!

  2. Bags says:

    நாடோடி மன்னன்?

  3. இந்த லிஸ்ட்க்கும் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம்..??

    எதுவும் தமிழனை பாதிக்காது. 30 வருட கழக ஆட்சிகளால் மொத்தம் மழுங்கி விட்டது.

    Sorry.. மழுங்கடிக்கப்பட்டு விட்டது.

  4. RV says:

    பாஸ்டன் பாலா, என்னுடைய புரிதலில்தான் தவறு. இவை எல்லாம் உங்கள் லிஸ்ட் என்று நினைத்தேன். என்னடா மக்களாட்சி மாதிரி ஒரு படத்தை எல்லாம் லிஸ்டில் போட்டிருக்கீங்களே என்று கொஞ்சம் கடுப்பு. 🙂

    வண்ணத்துப் பூச்சியார், இந்த படங்களில் எல்லாம தேர்தல் பற்றி காட்சிகள் வருவதுதான் சம்பந்தம். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: