மனோகரா


மனோகரா திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

என் விமர்சனத்தை இங்கே காணலாம்.

தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெருமரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறு கொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், ‘அம்மா’ என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.

இந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது மனோகரா.

மனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே எழுத்து வரச் செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் செய்கிறான் மன்னன். ”என்ன குற்றம் செய்தேன், அரசே! பதில் சொல்லும்!” என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக்கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்ட மாருதமென முன்னேறும் சமயம், ”இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும்? தொலைந்து போனான் அரசன்!” என்று நாம் முடிவு கட்டும்போது, ”என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு! பிறகு என் சவத்தின் மீது நின்றுகொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு!” என்று கூறுகிறாள் அந்தப் பதிவ்ரதா ரத்னம்.

தாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.

மனோகரனைத் தூணிலே சங்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்து வரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.

எந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற் கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறு மையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.

”மகனே, பொறுத்தது போதும், பொங்கியெழு!” என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடை பெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி! தர்மம் சளைத்துவிட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.

சிவாஜி கணேசனும் கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசி விட்டார்கள்.

வசந்தசேனை (டி.ஆர். ராஜகுமாரி) கல்நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ். ராதாகிருஷ்ணன்) பயித்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவ ராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்தகாரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்!

நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு மனோகராவை எடுத்துக் காட்டலாம்.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to மனோகரா

  1. சாரதா சொல்லுகின்றார்:

    ‘மனோகரா’ வின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அதன் அனல் பறக்கும் வசனங்கள். ஆனால் விகடன் விமர்சனத்தை திருப்பி திருப்பி படித்தேன். ஒரு இடத்தில் கூட, வசனம் எழுதிய கலைஞர் திரு. மு.கருணாநிதியைப்பற்றி குறிப்பிட்டிருக்கவில்லை.

    அன்றைய (1956) விகடன் இதழ்கள், திரு எஸ்.எஸ்.வாசன் அவர்களின் பார்வையில் படாமல் வெளியாகியிருக்க வாய்ப்பில்லை. அவருமா இதைக்கவனிக்கவில்லை?. ஆச்சரியம்தான்.

  2. RV சொல்லுகின்றார்:

    சாரதா, எனக்கும் தோன்றிய முதல் விஷயம் இதுதான். வசனகர்த்தாவை பற்றி பேசாமல் மனோகராவுக்கு ட்விட்டரில் கூட விமர்சனம் எழுத முடியாது என்றுதான் நினைத்திருந்தேன்.

    இதே கால கட்டத்தில் கல்கி எழுதிய விமர்சனம் எப்படி இருந்திருக்குமோ தெரியவில்லை. (நான் சில பகுதிகளை பார்த்திருக்கிறேன், அவர் சிவாஜி ராஜ சபையில் சிவாஜியை பற்றி புகழ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லாமல் திண்டாடினார். 🙂

  3. butterflysurya சொல்லுகின்றார்:

    நல்ல பதிவு.

    சிவாஜி & கண்ணாம்பா அற்புத நடிப்பு. அருமையான வசனங்கள். தமிழ் துள்ளி விளையாடும். இனி மேல் தமிழில் இது போன்று வசனங்கள் வரவும் சாத்தியம் இல்லை. எவனும் பார்க்க போவதும் இல்லை.

    இந்த படத்தின் வசனத்தையும், கட்டபொம்மன் வசனத்தையும் பேசி பேசி தான் பல இயக்குநர்களிடம் சான்ஸ் கேட்டதாக சத்யராஜ் பல பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

    “வட்டமிடும் கழுக்கால் வசந்தசேனையால் திட்டமிட்டு அழியப்போவதா திராவிட இனம்” என்று ஜெ படத்தை போட்டு மூன்று தேர்தல்களுக்கு முன் சென்னையெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கண்டிருக்கிறேன்.

    ஆனால் கடைசியில் ஜெ. அமோக வெற்றி பெற்றார்.

    பகிர்விற்கு நன்றி.

  4. butterflysurya சொல்லுகின்றார்:

    IMDB ல் கூட பதிவு இருக்கு. ஆனால் தகவல்கள் இல்லை.

    http://www.imdb.com/title/tt0255344/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: