அரசியல் பாடப் புத்தகத்தில் இடம் பெறும் திரைப்படங்கள்


மீண்டும் லிஸ்டுக்காக பாஸ்டன் பாலாவுக்கு நன்றி! இந்த படங்கள் பாடப் புத்தகங்களில் பேசப்படுகின்றனவாம். ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன் லிஸ்ட் கீழே.

ரோஜா – சின்ன சின்ன ஆசை என்று பாடிக்கொண்டு மதுபாலா வரும்போது தியேட்டரில் விசில் பறந்தது நினைவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் முதல் படம். மதுபாலா கலக்கிவிட்டார். ஆனால் படம், அதுவும் காஷ்மீர் பகுதி சுமார்தான்.

ஹகீகத் (ஹிந்தி, 1964)- பால்ராஜ் ஸாஹ்னி நடித்தது. நல்ல படம் என்று கேள்வி. பார்த்ததில்லை.

ஆக்ரோஷ் (ஹிந்தி, 1980) – கோவிந்த் நிஹ்லானி படம் என்று நினைவு. இதெல்லாம் எங்கே கிடைக்கிறது?

சிம்மாசன் (மராத்தி) – கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை.

கரம் ஹவா (ஹிந்தி, 1973) – மிக நல்ல படம். பால்ராஜ் ஸாஹ்னி, ஃபரூக் ஷேய்க், ஏ.கே. ஹங்கல் நடித்தது. எம்.எஸ். சத்யு இயக்கம்.

ஜஞ்ஜீர் (ஹிந்தி, 1973) – அமிதாபுக்கு angry young man இமேஜ் கொடுத்த முதல் படம். அன்று இருந்த சுவாரசியம் இன்று இல்லை, ஆனால் பார்க்கலாம்.

ஹஜாரோன் க்வாயிஷேன் ஐஸி – கேள்விப்பட்டதில்லை.

பதேர் பாஞ்சாலி – மிக நல்ல படம். சத்யஜித் ரே எடுத்த முதல் படம். ஆனால் இதை விட எனக்கு இதன் இரண்டாம் பாகமான அபராஜிதோ மிக பிடிக்கும். மூன்றாவது பாகத்தின்(அபூர் சன்சார்) முதல் பகுதி – ஷர்மிளா தாகூர் கலக்கும் பகுதி – மிக பிடிக்கும்.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to அரசியல் பாடப் புத்தகத்தில் இடம் பெறும் திரைப்படங்கள்

  1. ஞாநி சொல்லுகின்றார்:

    ஹஜாரோன் க்வாயிஷேன் ஐஸி என்று நானும் எந்த படமும் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை ஹசார் சவ்ராசி கி மா ( mother of 1084) என்ற படத்தை இப்படித் தவறாகக் குறிப்பிட்டிருக்கலாம். இது வங்க எழுத்தாளர் மகாஸ்வேத தேவியின் கதையை கோவிந்த் நிஹ்லானி படமாக்கியது. நந்திதா தாஸ் அறிமுகமான படம். ஜெயா பச்சன் நீண்ட காலத்துக்குப் பின் மறு அறிமுகமான படம். இது நாடகமாகவும் புகழ் பெற்றது. இதை தமிழுக்கேற்ற வடிவமாக்கி நான் எண் மகன் என்ற தலைப்பில் எங்கள் பரீக்‌ஷா குழுவின் சார்பில் அண்மையில் நிகழ்த்தியிருக்கிறோம். எழுபதுகளில் கொல்கத்தாவில் நக்சல்பாரிகள் வேட்டையாடப்பட்ட சூழலில் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தாய் , கொல்லப்பட்ட தன் மகனைப் பற்றி அறிந்துகொள்ளும் விதமாக எழுதப்பட்ட கதை இது. என்னுடைய எண் மகன் சிறு நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

    ஞாநி

  2. ஞாநி சொல்லுகின்றார்:

    Hazaron Khwaishen Aisi என்று ஒரு படம் இருக்கிறது ! அது சுதீர் மிஸ்ரா எடுத்த படம். 2005ல் வெளியானதாக விக்கிபீடியா சொல்கிறது. நெருக்கடி நிலை சமயத்தில் அவரவர் கனவுகளுடன் புறப்பட்ட முன்று நண்பர்கள் பிண்னால் என்ன ஆனார்கள் என்பதுதான் கதையாம்.

    ஞாநி

    • RV சொல்லுகின்றார்:

      ஞானி அவர்களே, பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
      ஹஜார் சௌராஸி கி மா என்னிடம் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறது. உங்களுடைய மொழிபெயர்ப்புதானா என்று தெரியவில்லை, புத்தகம் எங்கே என்று தேடித் பார்க்க வேண்டும். என் அம்மா சிபாரிசு செய்த புத்தகம், அதனால்தானோ என்னவோ, இன்னும் படிக்க கை வரவில்லை. 🙂 நான் படமும் பார்த்ததில்லை.

      பாஸ்டன் பாலா, நன்றி நான்தான் சொல்ல வேண்டும்…

  3. ஞாநி சொல்லுகின்றார்:

    அன்புள்ள ஆர்வி உங்களுக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்று எழுதவேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு gnani@gnani.netக்கு அனுப்ப முடியுமா?

    ஞாநி

  4. SnapJudge சொல்லுகின்றார்:

    சுட்டியும், விளக்கமும், அனுபவமும் தரும் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி

  5. ஞாநி சொல்லுகின்றார்:

    ஆர்வி
    உங்களிடம் அம்மா கொடுத்திருக்கக்கூடிய மொழிபெயர்ப்பு கிருஷ்ணமூர்த்தி மகாஸ்வேத தேவியின் குறு நாவலுக்கு செய்த மொழிபெயர்ப்பாகத்தான் இருக்க முடியும். நான் செய்தது நாடகத்துக்கு. அதுவும் மொழி பெயர்ப்பு அல்ல. transcreation. தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப நாடகத்தின் பாத்திரப்பெயர்கள் முதல் மாற்றியமைத்திருக்கிறேன்.

    ஞாநி

    • RV சொல்லுகின்றார்:

      ஞானி, 1084-இன் அம்மா பற்றி விளக்த்துக்கு நன்றி! உங்கள் transcreation புத்தகமாகவோ, இல்லை நெட்டிலோ கிடைக்குமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: