பி.பி. ஸ்ரீநிவாசை பற்றி ரவி ஸ்ரீநிவாஸ்


பி.பி. ஸ்ரீநிவாஸ்

பி.பி. ஸ்ரீநிவாஸ்

எனக்கு எல்லாரையும் விட பிடித்த பாடகர் – எஸ்பிபியை விட, டிஎம்எஸ்சை விட, ஏ.எம். ராஜாவை விட, ஜேசுதாசை விட – பிபிஎஸ்தான். அந்த மாதிரி ஒரு இனிமையான குரல் கிடைப்பது கஷ்டம். ஒரு பத்து வருஷம்தான் பிசியாக இருந்திருப்பார் – பிறகு எஸ்பிபி அவரை பின்னே தள்ளிவிட்டார். ஆனால் அந்த பத்து வருஷத்தில் மறக்க முடியாத நிறைய பாட்டுகளை பாடி இருக்கிறார்.

பி.பி.எஸ். பாடிய பாட்டுகள் இரண்டு சிடிக்களாக வந்திருக்கிறது போலிருக்கிறது. அதை பற்றி ரவி ஸ்ரீநிவாஸ் என்ற பதிவர் இங்கே மற்றும் இங்கே இரண்டு சுவாரசியமான பதிவுகள் எழுதி இருக்கிறார், பாருங்கள்!

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to பி.பி. ஸ்ரீநிவாசை பற்றி ரவி ஸ்ரீநிவாஸ்

 1. SURYA says:

  பகிர்விற்கு நன்றி.

  எங்கிருந்தாலும் தேடி தேடி பதிவிடும் உங்களது சிறப்பு.

  வாழ்த்துகள் RV.

  I dig it.

 2. SURYA says:

  நேற்று கூட ஒரு விழாவில் PBS அவர்களை பார்த்தேன்.

  எபோதும் போல் பல வண்ண பேனாக்களுடன் நிறைய புத்தகங்களுடனும் அதே எளிமை.

  He is a great Legend.

 3. சாரதா says:

  //ஒரு பத்து வருஷம்தான் பிசியாக இருந்திருப்பார் – பிறகு எஸ்பிபி அவரை பின்னே தள்ளிவிட்டார். ஆனால் அந்த பத்து வருஷத்தில் மறக்க முடியாத நிறைய பாட்டுகளை பாடி இருக்கிறார்.//

  Obsolutely correct…

  Eventhough SPB is surviving for the past 40 years in Tamil Cinema (1969 Santhi Nilaiyam, Adimai Penn), His songs cannot come near those of PBS, who was busy for just 10 years in sixties.

  • RV says:

   சாரதா, சூர்யா, பிபிஎஸ் பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!

   சாரதா, நீங்களும் தீவிர பிபிஎஸ் விசிறி போல இருக்கிறது.

 4. சாரதா says:

  டியர்

  அப்படீன்னு இல்லை. யார் நன்றாக பாடினாலும் பிடிக்கும் (என் தாய்த்தமிழை செக்கிலிட்டு ஆட்டாதவரையில்). அந்த வகையில் PBS-ஐ ரொம்ப பிடிக்கும், TMS-க்கு அடுத்தபடியாக. அதே சமயம் SPB-யின் நல்ல பல பாடல்களும் பிடிக்கும்.

  சீர்காழியின(இருக்குமிடத்தைவிட்டு) ‘தொண்டுக்கென்றே அலைவான், கே(gE)லிக்கு ஆளாவான்’

  டி.எம்.எஸ்ஸின் (குமரிப்பெண்ணின் உள்ளத்திலே) ‘நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெள்ள மெள்ளவே புரியும்’ (வள்ளுவன் முதல் தமிழாசிரியர் வேலுச்சாமி வரையில் ‘மெல்ல மெல்ல’ என்று சொல்லித்தந்ததாக நினைவு)

  எஸ்.பி.பியின் (கடவுள் அமைத்து வைத்த மேடை) ‘ஒரு கிலி கையோடு ஒரு கிலி கை சேர்த்து’

  ஜேசுதாஸின் (நினைவாலே சிலை செய்து) ‘தெருக்கோயிலே ஓடி வா’

  சுசீலாவின் ‘செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ஷிரித்தது எனைப்பார்த்து’

  போன்றவற்றை மன்னிப்போம். (அப்படிப்பார்த்தால் உதித் நாராயணன் போன்றவர்கள் தமிழைக் கடித்து துப்புவதை எதில் சேர்ப்பது?)

  இதை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது கூட பின்னணியில் PBS-ஸின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது…

  ‘தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
  சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
  அவள் இங்கே என்றாள் நான் அங்கே என்றேன்
  அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம்
  எங்கோ சென்றோம்…
  அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்…’

  உண்மையில் PBS நம்மை மயக்கவில்லையா..?

 5. விமல் says:

  பிபிஎஸ்-இன் சமிபத்திய பேட்டி
  ( ***** நன்றி : தினமலர் ***** )

  காலங்களில் அவள் வசந்தம்…, நிலவே என்னிடம் நெருங்காதே…, ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்…, மயக்கமா கலக்கமா…, மனிதனென்பவன் தெய்வமாகலாம்…, ரோஜா மல‌ரே ராஜகுமாரி… போன்ற எக்கச்சக்க மெலோடி குரலுக்கு சொந்தக்காரர் பி.பி.எஸ். என்று அழைக்கப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ‌ஜெமினி என ப்ளாக் அண்ட் ஒய்ட் ஹீரோக்கள் எல்லோருக்குமே குரல் கொடுத்த பி.பி.எஸ். 40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :-

  22 வயதில் சினிமாவுக்கு வந்தேன். பல ஆயிரம் பாடல்களை பாடி, தமிழர்களின் ஒவ்வொரு நிமிஷத்திலும் கலந்திருக்கிறேன். பெரிய பெரிய ஆள்களிடம் நான் பாராட்டுக்களை வாங்கிவிட்டேன். அதுவே கடைசிக் காலம் வரைக்கும் என்னை இட்டுச் செல்லும். வாழ்க்கையின் லட்சியமே சினிமாவில் பாடுவதுதான். ஆனால் அது என் குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை. நான் வக்கீல் ஆக ஆசைப்பட்டார்கள். அது நடக்கவில்லை. சினிமாவுக்கு வந்ததால் பெருவாரியான மக்களின் அன்பில் நனைந்திருக்கிறேன். அந்த அன்புதான் இப்போதும் என் வாழ்வை அழகாக்கி வைத்திருக்கிறது. எல்லோரையும் அன்பு செலுத்தி, அரவணைக்க ஆசையாக இருக்கிறேன். எல்லோரின் வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறேன். எல்லோரும் நலம் வாழ நான் பாடிய பாடல்கள் துணையாக வரும் என்ற பெரும் நம்பிக்கையுடன் உலாவுகிறேன்.

  இதுவரை எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதில் வருத்தம் எதுவும் இல்லை. எல்லாம் இறை செயல். எது நடக்குமோ, அது நடந்தே தீரும். நீ சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் உன் பெயர் எழுதியிருக்கிறது. இதை யாராவது மாற்ற முடியுமா? ஆனால் ஒரு படைப்பாளி காலங்கள் கடந்து நிற்க அங்கீகாரம் அவசியம். அது எனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் நான் மறக்கடிக்கப்பட மாட்டேன். உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு… என்ற வரிகளை நினைத்துக் கொள்வேன்.

  இப்போதெல்லாம் ரீ-மிக்ஸ் என்ற பெயரில் குரல்களை சிதைக்கிறார்கள். எந்தக் கலைஞனும் தன் குரல் சிதைக்கப்படுவதை விரும்பமாட்டான். ரீமிக்ஸ் செய்து எதையும் கெடுத்து விடாதீர்கள். எங்கள் பாடல்களில் தமிழர் வாழ்வின் பழங்காலம் இருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்துங்கள். இன்னும் எத்தனையோ தமிழர் தலைமுறைகளுக்கு என் குரல் அமைதியும் உற்சாகமும் தரட்டும்.

  இவ்வாறு பி.பி.எஸ். பேட்டியில் கூறியுள்ளார்.

  ரீ-மிக்ஸ் பாடல்கள் குறித்தும், அவர் அங்கீகரிக்கப்படாதது குறித்தும் ஸ்ரீனிவாஸ் ரொம்பவே பக்கவமாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: