அடிமைப் பெண் – என் விமர்சனம்சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to அடிமைப் பெண் – என் விமர்சனம்

 1. Ram says:

  Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
  அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

  உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

  விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

 2. Bags says:

  தாயில்லாமல் நானில்லை என்ற பாடலும் நல்ல பாடல்.

 3. //1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம்//

  இந்தப் படத்தை அவர் இயக்கவில்லை இயக்கியது கே.சங்கர்.

  //இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்)//

  எம்.ஜி.ஆர் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற வெற்றிப் படமான உலகம் சுற்றும் வாலிபனை இயக்கியதும் எம்.ஜி.ஆர் தான்.

  அப்பா… மீண்டும் உங்கள் இடுகையில் பெயர் பிடித்த நல்லதந்தி! 🙂

 4. சாரதா says:

  அடிமைப்பென் படத்தில் ‘ஏமாற்றாதே… ஏமாற்றாதே’ மிகவும் அருமையான பாடல். தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பாகாத பாடலும் கூட. ஒருத்தர் குழியில் விழுந்தால், எல்லோரும் குழியில் விழுவது என்ற நம் மூதாதையரின் வழிகாட்டல்படி, திருப்பி திருப்பி ‘ஆயிரம் நிலவே வா’ அதைவிட்டால் ‘தாயில்லாமல் நானில்லை’ இவற்றையே ஒளிபரப்புவர். அந்தக்கால ‘வினைல் ரிக்கார்ட்’ எனப்படும் (Columbia & HMV) மண் இசைத்தட்டில், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே இடம் இருந்ததால், பாடலின் அற்புதமான முன்னிசைகள் (Pre-lude) மற்றும் இடயிசைகள் (Inter-lude) நிறைய அடிபட்டுப்போகும். இதனால் எம்.எஸ்.வி.யும் கே.வி.எம்.மும் நிறைய நஷ்டமடைந்தனர். பாடல் வரிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இசைக்கோலங்கள் வெட்டப்பட்டு விடும். (சில பாடல்களில் இடமின்மையால் சரணங்கள் கூட கட் செய்யப்படும்) முழுசாக படங்களில் மட்டுமே பார்க்க (கேட்க) முடியும். இந்தக்காலத்திலோ, சி.டி.க்களில் அத்தனை ‘பிட்’டுகளும் இடம் பெற்றுவிடுகின்றன. ஆனால் தரம்.. அந்தோ. அப்படி அற்புத இசைக்கோலங்கள் அடிபட்ட பாடல்களில் ‘ஏமாற்றாதே’ பாடலும் ஒன்று. படத்தில் பார்க்கும்போது மகாதேவனின் இசையமைப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். ஒரு மாதிரியான அரேபிய இசையைக் கலந்து கொடுத்திருப்பார்.

  பாடலின் இன்னொரு முக்கிய விசேஷம், ஜெயலலிதாவின் அருமையான நடனம். இப்பாடலுக்கு பல காஸ்ட்யூம்களில் வந்து ஆடுவார். அதிலும் இடுப்பு, முழங்கால், பாதம் போன்ற் இடங்களில் சின்ன்ச்சின்ன முரசுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை அடித்துக்கொண்டே அவர் ஆடுவது இன்றைய நடிகையர் யாராலும் செய்ய முடியாத ஒன்று. நைட் எஃபெக்ட்டில் பாடல் அழகாகப்படமாக்கப்பட்டிருக்கும்.

  ‘எப்போதோ சின்ன வயசுல பார்த்தது’ என்று சொல்லிக்கொண்டிருக்காமல், இதுபோன்ற நல்ல படங்களை இப்போது மீண்டும் பாருங்கள். தப்பில்லை.

 5. Das says:

  ஏமாற்றாதே பாடலில் இடையில் வரும் வரிகள் “நீ கடவுளை பார்த்தது கிடையாது, அவர் கருப்பா சிவப்பா தெரியாது” என்பதற்கு வாயசைக்கையில் “தலைவர்” முக மூடியை சிறிது விலக்கிக் கொள்வாராம், அவரது ரசிகர்கள் கரகோஷம் விண்ணை முட்டுமாம்!!

  • சாரதா says:

   நீங்கள் குறிப்பிடும் அந்த வரிகளும், காட்சியும் “ஏமாற்றாதே” பாடலில் வருவது அல்ல.

   கிளைமாக்ஸில் வரும், ‘உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது’ என்ற பாடலில் இடம்பெற்றது.

 6. Gobinath says:

  எனக்கு பிடித்த எம்ஜிஆர் படங்களில் இதுவும் ஒன்று

 7. Pingback: பாஹுபலி | அவார்டா கொடுக்கறாங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: