குமாஸ்தாவின் பெண்


ராண்டார்கை திரும்பவும் ஒரு ரொம்ப பழைய படத்தை பற்றி ஹிந்துவில் வரும் Blast from the Past பத்தியில் எழுதி இருக்கிறார். குமாஸ்தாவின் பெண். 1941-இல் வந்திருக்கிறது. படத்தின் பேரை எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது. “Remembered for: its interesting storyline, impressive performances by Rajamma, Shanmugham and KRR.” என்று எழுதுகிறார். இவர் இந்த படத்தை, performance-ஐ எல்லாம் பார்த்தாரா இல்லை எங்கேயாவது படித்ததை வைத்து ஓட்டுகிறாரா என்று தெரியவில்லை. இந்த மாதிரி பழைய படம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பிரிண்ட் இருக்கிறதா?

டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி, கே.ஆர். ராமசாமி, எம்.வி. ராஜம்மா (இவர் பந்துலுவின் மனைவி என்று நினைக்கிறேன்), எம்.எஸ். திரௌபதி நடித்திருக்கிறார்கள். நாடகமாகவும் சக்கைப்போடு போட்டதாம். இயக்குனர் ஏ.பி. நாகராஜன்தான் நாடகத்தில் ஸ்த்ரீபார்ட்!

ராண்டார்கையின் account சுவாரசியமாக இருக்கிறது. இதில் ஒரு டைரக்டரை வேறு கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்களாம். அவர் எழுதியதை படித்தால் மெலோட்ராமா நாவலாக, சினிமாவாக இருக்கும் போல தோன்றுகிறது.

நான் பார்த்த மிக பழைய தமிழ் படம் 1941-இல் வந்த சபாபதிதான். 40-களில் வந்த மங்கம்மா சபதம், நந்தனார் (தண்டபாணி தேசிகர் நடித்தது, கே.பி. சுந்தராம்பாள் நடித்தது இல்லை) நாம் இருவர், வேதாள உலகம், அபூர்வ சகோதரர்கள் (அமேரிக்காவில் வீடியோ கிடைத்தது), சந்திரலேகா, நல்லதம்பி பார்த்திருக்கிறேன். நீங்கள் பார்த்த மிக பழைய தமிழ் படம் எது? உங்களுக்கு ஞாபகம் இருப்பதை எழுதுங்களேன்!

தொடர்புடைய பதிவுகள்:
ராண்டார்கை பத்திகள் – அபிமன்யு, ராஜி என் கண்மணி
சபாபதி (Sabapathi)
சந்திரலேகா

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to குமாஸ்தாவின் பெண்

 1. சாரதா says:

  1941-ல் வெளியான ‘குமாஸ்தாவின் பெண்’ பற்றி படத்தின் தலைப்பைக் கேள்விப்பட்டதோடு சரி. ஆனால் இந்தக்கதையில் என்ன ஈர்ப்பு இருந்ததோ தெரியவில்லை. 1975-ல் ஏ.பி.நாகராஜன் இதே கதையை ‘குமாஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் மீண்டும் தயாரித்தார். கமல் கூட நடித்திருந்ததாக நினைவு. ஆனால் 34 வருட கால ட்ரெண்ட் மாற்றத்தில் படம் மக்களிடையே சென்றடையவில்லை. ‘அவள் ஒரு தொடர்கதை, முத்தான முத்தல்லவோ, வாழ்ந்து காட்டுகிறேன், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, மயங்குகிறாள் ஒரு மாது’ போன்ற வித்தியாசமான கதைகள் வரத்துவங்கிவிட்ட காலகட்டத்தில், ஏ.பி.என்.னின் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ எடுபடவில்லை. ஆனால் அதே ஆண்டில் ஏ.பி.என். தயாரித்து இயக்கிய ‘மேல்நாட்டு மருமகள்’ நல்ல வெற்றியடைந்தது.

 2. kuttysamy says:

  ரசித்தேன் .வாழ்த்துக்கள் ……வேதாள உலகம், சந்திரலேகா, நல்லதம்பி பார்த்திருக்கிறேன்….

 3. Rajagopalan says:

  Remember seeing chandralekha, nandanaar(sundari bai looks so cute therein)aayiram thalai vaangiya aboorva sinthamani to name a few…

  i have a question….

  please let me know where the song “iravum nilavum valarattume” from film karnan was shot.The temple structure is very much chalukyaish… was it konark or Belur /Helbedu from karnataka?

  Please clarify

 4. raji says:

  Well…I am reading your posts on old movies now for a week. Very interesting..and even more interesting is the fact that I have watched more than 90% of the movies you have commented….wait I am only 33 yrs old. 🙂
  nalla pathivugal
  The oldest movie i have watched is mangamma sabatham, meera, Srivalli, old ambigapathy etc.
  In mangamma sabatham i remember a dialogue ranjan will say “ivaa oothunaa avaa varuvaa”..to vasunthara devi when she would try to escape the house in which she would be kept arrested.So every single time she try to escape the lady escorts would play a strange instrument which i have seen only in Tamil Cinema and then the male soldiers would come 🙂
  then later my dad told us (me and my siblings) that dialogues use to be in brahmin Tamil in those days movies.hahaha we all laughed hearing that dialogue, since we all were stunned till that scene seeing the dialogue style and this one was heights of all.

 5. srinivas uppili says:

  ராஜகோபாலன்,

  ஒரிசாவின் புகழ் பெற்ற கொனார்க் சூரியக் கோயிலில் படப்பிடிப்பு நடந்தது. இரவும் நிலவும் வளரட்டுமே என்ற அருமையான பாடலின் படப்பிடிப்பும் போர்க்களக்காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. இரவும் நிலவும் பாடலைத் தமிழில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடினார்கள். தெலுங்கில் பி.சுசீலா உண்டென்றாலும் ஆண்குரலுக்குப் பாலமுரளி கிருஷ்ணா.

 6. RV says:

  ராஜி, நீங்கள் சொல்வது போல பிராமண dialect நாற்பதுகளின் படங்களில் சாதரணமாக பார்க்கலாம்தான்.

 7. Srinivasan says:

  அன்புள்ள ராஜு,

  இதோ மற்றொரு தளத்தில் படித்த செய்தி…

  இந்தப் பாடல் எங்கு படமாக்கப்பட்டது என்பதை நண்பர் RV , திருமலை ராஜன், நல்லதந்தி அல்லது சாரதா அவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்…..

  இரவும் நிலவும் வளரட்டுமே – ராகம் – சுத்த சாரங்கி

  பெரும்பாலோருக்கு பிடித்த பாடல் காட்சி. கர்நாடகாவில் உள்ள பேலூர் – ஹளபேடு கோவிலில் படமாக்கப்பட்ட காட்சி. சுசீலா ஆலாபனை ஆரம்பிக்கும் போதே தியேட்டர் களை கட்டி விடும். நடிகர் திலகத்தின் ராஜ நடை, காலை வளைத்து நிற்கும் போஸ், நாயக நாயகியரை மட்டும் போஃக்கஸ் செய்யாமல் அரண்மனையின் சிற்ப அழகையும், பிரமாண்டத்தையும் பார்வையாளன் உணரும் வண்ணம் அமைக்கப்பட்ட காமிரா கோணங்கள், நடிகர் திலகம் – தேவிகா இடையிலான கெமிஸ்ட்ரி இவை அனைத்தும் வெளிப்படும் ஒரு சிறந்த பாடல்.

  அன்புடன்,
  ஸ்ரீநிவாஸ்

 8. //ராஜி, நீங்கள் சொல்வது போல பிராமண dialect நாற்பதுகளின் படங்களில் சாதரணமாக பார்க்கலாம்தான்.//

  படங்களில் மட்டுமல்ல!. ஆ.வி, கல்கி, இதழ்களிலும் பிராமணத்தமிழ் மட்டுமே இருக்கும். அதற்குக் காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாற்பதின் இறுதியில் வெளிவரத்துவங்கிய குமுதம் இதழ்களில் கூட ஆரம்பத்தில் பிராமணத்தமிழ் இருந்தது. அதற்கு காரணம், மற்ற இதழ்களும், படிப்பவர்களில் பிராமணர்கள் அதிகம் இருந்ததாலும் இருக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: