நாடோடி – விகடன் விமர்சனம்


படம் வந்தபோது – மே 1966இல – விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி!
.
முனுசாமி – மாணிக்கம்

முனுசாமி: தாழ்ந்த சாதியிலே பிறந்த தியாகுவை, உயர்ந்த சாதியிலே பிறந்த மீனாங்கற பெண் காதலிக்குது. சாதி வெறி பிடிச்ச மீனாவின் தந்தை தர்மலிங்கம் இதைத் தடுக்கிறாரு. அதனாலே மீனா உயிரை விட்டுடுது.

மாணிக்கம்: அடப் பாவமே! ஆமா, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு வருதே! எந்தக் காலத்துக் கதை இது?

முனு: கிராஸ் பண்ணாதே! கதையைக் கேளு. மீனாவுக்கு ராதான்னு ஒரு தங்கை. மீனாவின் காதலன் தியாகுவை, தானே மணந்து சாதி வெறியைத் தரை மட்டமாக்கப் போறேன்னு அது அப்பங்காரனைப் பார்த்துச் சவால் விடுது.

மாணி: இது என்ன சவால்? இந்தப் பொண்ணு அவனை மணந்துக்கிட்டா, சாதி வெறி தரை மட்டமாயிடுமா?

முனு: பார்த்தியா! பணம் குடுத்துப் படம் பார்த்த நானே இதெல்லாம் கேட்கமுடியலே! நீ என்னமோ…

மாணி: சரி, அப்புறம்?

முனு: ஒரு வில்லன்.

மாணி: நம்பியார்தானே?

முனு: ஆமாம். அவரும் ஒரு தாழ்ந்த சாதிக்காரரு. தர்மலிங்கத்தாலே ஜெயிலுக்குப் போறாரு. அதனால தர்மலிங்கத்தின் பேரிலே அவருக்கு படா கோவம். தியாகுவா வர எம்.ஜி.ஆரும், ஜம்புவா வர நம்பியாரும் ஒரே ஜெயில்லே சந்திக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பொது எதிரி தர்மலிங்கம். ஜம்பு விடுதலை ஆகி வெளியே போனதும், முதல் காரியமா தர்மலிங்கத்தைப் பழி வாங்கறதுக்காக அவர் பெண் ராதாவைக் கடத்திக்கிட்டுப் போய் குகையிலே வெச்சு, கண்ணைக் குருடாக்கிடறாரு. குருடுன்னா எப்போதும் குருடு இல்லே! வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட்டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு! அந்தக் குகைக்கு எம்.ஜி.ஆர் வந்து சேர்ராரு. அங்கே ராதாவைச் சந்திக்கிறாரு, அவளை வில்லனுக்குத் தெரியாம கடத்த முயற்சிக்கிறாரு. அது தெரிஞ்சதும் எம்.ஜி.ஆர். கண்ணுக்கும் மருந்து போட்டு குருடாக்கிடறாரு வில்லன்.

மாணி: முடிவா என்னதான் சொல்றே?

முனு: ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

One Response to நாடோடி – விகடன் விமர்சனம்

  1. சாரதா says:

    ஒருகாலத்தில் விகடன் விமர்சனங்கள் எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமாக இருந்திருக்கின்றன என்பத்ற்கு ‘நாடோடி’ விமர்சனம் ஒரு சான்று. விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா?. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா?.

    உதாரணமாக, அப்படத்தில் ஏழு பாடல்களை அட்டகாசமாக பண்ணியிருந்த ‘மெல்லிசை மன்னர்’ M.S.விஸ்வநாதன் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. என்ன அருமையான பாடல்கள்…

    1) அன்றொரு நாள் இதே நிலவில் ..TMS & Suseela
    2) அன்றொரு நாள் இதே நிலவில் ..Suseela & Eswari
    3) உலகமெங்கும் ஒரே மொழி ..TMS & Suseela
    4) திரும்பி வா ஒளியே திரும்பி வா ..TMS & Suseela
    5) நாடு… அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏதுவீடு ..TMS & Suseela
    6) ரசிக்கத்தானே இந்த அழகு… Suseela
    7) பாடும் குரலிங்கே பாடியவன் எங்கே ..Suseela
    8) கண்களினால் காண்பதெல்லாம் ..TMS & Suseela (படத்தில் இல்லை)

    இத்தனைக்கும் அவர் ராமமூர்த்தியை விட்டுப்பிரிந்து தனியாக Hits கொடுத்துக்கொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, பாரதி நடிப்பைபற்றியோ, பந்துலுவின் இயக்கம் பற்றியோ ஒரு வரியும் இல்லை. பாட்டுப்புத்தகத்தில் கதைச்சுருக்கம் படித்தது போலுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: