மதனா எழில் ராஜா


சிறு வயதில் மிகவும் விரும்பிக் கேட்ட பாட்டு. பாட்டிலேயே ஏதோ கதை தொக்கி நிற்கிறதே! அதுவும் மின்னல் இடை அழகும் அன்ன நடை அழகும் கண்கள் கண்டதுண்டோ என்று ஜிக்கி பாடுவார்; உடனே ஆ, நீங்களா என்று அதிர்ச்சியுடன் பெண் குரல்; ஆண் ஆமாம் நான்தான் என்று சாட்டையை சொடுக்குவார். உண்மையில் இந்த இடம்தான் அப்படியே மறக்க முடியாமல் இருக்கிறது. பாட்டின் ஆரம்பத்தை விட இந்த இடம்தான் அப்படியே நினைவில் இருக்கிறது.

நினைவு வரும் வேறு சில வரிகள் –
என்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்கள் கண்டதுண்டோ?

படம் பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் மிக ஆசை. ஆனால் படம் என்ன என்று அப்போது சரியாகத் தெரியாது. இப்போது செல்லப் பிள்ளை என்று தெரிகிறது. இசைப் பைத்தியமான என் மாமியார் கண்டுபிடித்து சொன்னார். கே.ஆர். ராமசாமி, சாவித்ரி நடித்திருக்கிறார்கள். ராண்டார்கை ஒரு பதிவு எழுதி இருக்கிறார். என் சிறு வயதில் எந்த டென்டுக் கோட்டையிலும் வந்த ஞாபகமும் இல்லை. உடுமலை நாராயண கவி எழுதியதாம்; சுதர்சனம் இசை. பாட்டு, வீடியோ இணையத்தில் கிடைக்க மாட்டேன் என்கிறது. யாராவது லிங்க் கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்!

தொடர்புடைய பதிவு:
ராண்டார்கையின் குறிப்புகள்

கண்ணதாசனும் வி.பி. ராமனும்


போன பதிவில் மோகன்ராமின் தளத்தை பற்றி எழுதி இருந்தேன். மோகன்ராம் நடிகர் என்ற ஒற்றைப் பரிணாமம் மட்டுமே உள்ளவர் இல்லை. அவர் XLRI போன்ற தரம் வாய்ந்த அமைப்பில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார். மானேஜ்மென்ட் கன்சல்டன்ட். தபால்தலை சேகரிப்பாளர். சிவாஜி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். வருஷா வருஷம் நடக்கும் சிவாஜி விழாவில் பெரும் பங்கு ஏற்பவர். சிவாஜிக்கு சிலை வைத்ததிலும் பெரிய பங்கு உண்டு போலத் தெரிகிறது. அவரது தம்பி இப்போது அட்வகேட் ஜெனரலோ என்னவோ பதவியில் இருக்கிறார்.

மோகன்ராம் பிரபல வழக்கறிஞரும், தி.மு.க.வில் உயர் பொறுப்பில் இருந்தவருமான வி.பி. ராமனின் மகன். வி.பி. ராமன் எம்ஜிஆரிலிருந்து ஆரம்பித்து பல பிரபலங்களுக்கு வக்கீலாக இருந்தவர். அவரது புத்தி கூர்மை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. கண்ணதாசனுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. வாடா போடா லெவல் நட்பு மாதிரி தெரிகிறது.

மோகன்ராம் கண்ணதாசனுக்கு வி.பி. ராமனுக்கும் நடுவே நடந்த ஒரு “ஊடல்” நிகழ்ச்சியை பற்றி இங்கே குறிப்பிடுகிறார். இருவரது தன்மையையும் அது மிக சிறப்பாக காட்டுகிறது. கட்டாயமாக படியுங்கள்! ஃபோட்டோக்களுக்காவாவது பாருங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
மோகன்ராமின் தளம்

மோகன்ராமின் பதிவுகள்


பக்ஸ் சினிமா வரலாறு என்று ஒரு சீரிசை ஆரம்பித்தான். அதை பற்றி இப்போது மோகன்ராமும் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

மோகன்ராம் சினிமா டிவி பார்க்கும் எல்லாருக்கும் பரிச்சயமான ஒரு முகம். அவர் எம்பிஏ படித்தவர், ஒரு காலத்தில் மிக பிரபல வக்கீலாக இருந்தவரும், திமுகவில் சேர்ந்து பணியாற்றியவருமான வி.பி. ராமனின் மகன், தமிழ் சினிமாவில் இன்று மறக்கப்பட்ட பலருக்கும் தபால் தலை, First Day Cover ஆகியவற்றை வெளியிட்டு அவர்களை கௌரவிக்க மிக தீவிரமாக முயல்பவர் என்பது அவ்வளவாக தெரியாமல் இருக்கலாம். அவரது பதிவுகளில் உள்ள ஃபோட்டோக்களுக்காகவே பார்க்கலாம். இது வரை இரண்டு பதிவுகள் வந்திருக்கின்றன. (1, 2) பாருங்கள்!