கண் போன போக்கிலே கை போகலாமா?


2008-இல் சன் டிவியில் வார நாட்களில் பழைய தமிழ் படமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு பழைய படம் – திராபையாக இருந்தாலும் – பார்க்க பிடிக்கும். சும்மா விளையாட்டாக பார்த்த படத்துக்கு எல்லாம் விமரிசனம் எழுத ஆரம்பித்தேன். அதையும் படிக்க ஒரு பத்து பேர் வந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது.

சன் டிவி படம் போடுவதை நிறுத்தியதும் இந்த ப்ளாக்கின் input stream வற்றிவிட்டது. அப்புறம் எங்கேயாவது (விகடன் பொக்கிஷத்தில் வரும் விமர்சனம், ராண்டார்கை ஹிந்துவில் எழுதும் பத்திகள், யாராவது எனக்கு பிடித்த படம் என்று போடும் லிஸ்ட்) ஏதாவது கண்ணில் பட்டால் அதைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அது ரெகுலராக எழுத முடிவதில்லை. கண்ணில் பட்டால்தானே எழுதத் தோன்றுகிறது? கர்நாடகாவில் வெள்ளம் வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும், அந்த மாதிரிதான் யாராவது ஏதாவது எழுதினால் நானும் அதை வைத்து மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன். இதில் நடுவில் கம்ப்யூட்டர் தகராறு வேறு, மாதக் கணக்கில் எழுத முடியவில்லை.

என் கனவுலகத்தில் பழைய சினிமா என்று இந்த ப்ளாகுக்கு வந்து நீங்கள் தேடினால் – “சபாபதி” என்று வைத்துக் கொள்வோமே? – என் விமர்சனம், எனக்கு பிடித்த சில பதிவர்கள் – சூர்யா மாதிரி – ஏதாவது எழுதி இருந்தால் அந்த பத்தி, பழைய பத்திரிகை விமர்சனம் (விகடன், குமுதம், கல்கி, கணையாழி மாதிரி பத்திரிகைகள்), பாட்டு, வீடியோ லிங்க் எல்லாம் கிடைக்க வேண்டும். இது கஷ்டம்தான். இப்போது இருக்கும் பத்திகளையே navigate செய்வது நச்சுப் பிடித்த வேலை. கனவுலகம் வெகு தூரத்தில் இருக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம், டே என்னை ஏய்க்காதே! ஹ! ஹ! ஹஹ்ஹஹா! என்று என் மனசாட்சியும் சிவாஜி மாதிரி சிரிக்கிறது.

இந்த வருஷம் ரெகுலராக எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாரத்துக்கு ஒரு பத்தி என்றாலும் சரி, நாளைக்கு பத்து பத்தி என்றாலும் சரி, என்ன வரப் போகிறது, எப்போது வரப் போகிறது என்று தெளிவாக சொல்லி விட விரும்புகிறேன். முதலில் என்ன எழுத வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் இல்லையா?

இதை படிக்கும் 42 பேருக்கு ஒரு கேள்வி. என்ன மாதிரி பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்கிறது? நீங்கள் இது வரை படித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்றிரண்டு பத்திகள் என்ன என்று சொல்லுங்கள். அது ஓரளவு உதவியாக இருக்கும். உங்கள் பதில் நிச்சயமாகத் தேவை. இல்லை என்றால் மீண்டும் கண் போன போக்கிலே கை போக வேண்டியதுதான்!

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to கண் போன போக்கிலே கை போகலாமா?

 1. Gokul says:

  For me, the most interesting part of your blog is the “Madhippeedugal” section. The way each personality is approached (like Kalaignar, MGR etc) was very informal yet sounded professional.

  From my end, I would like to advise you to start a series-kinda thing on “How Cinema influenced your child/adult-hood and hence offering you an understanding of society and Politics”. Because, I think that is your USP … the way you recall things of the past (history/politics/cinema) and express in informal terms.

  Do plan a series on this thing if you have enough time left in your schedule. This kinda posts will only help the next generation understand the Tamilnadu of the 70s and 8os.

 2. சாரதா says:

  டியர் RV

  ‘சன் டிவி சினிமா கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய விமர்சனங்கள் நிச்சயம் படிக்க நன்றாக இருந்தன/ இருக்கின்றன. குறிப்பாக 1960 முதல் 1980 வரையிலான இருபது வருடப்படங்கள் பற்றிய அலசல். இந்த ‘காலக்கெடு’விற்குள் வந்தவை பற்றி, எழுதியது போக மிச்சமானவற்றை எழுதினால் சுவையாக இருக்கும். (என் ரசனை மாதிரி எல்லோர் ரசனையும் இருக்கணும் என்ற அவசியம் இல்லை. மாறுபடலாம். அதே சமயம் அவர்களுக்குப்பிடித்ததும் என் மனதைத்தொடாமல் போகலாம்). மற்றவர்களின் எதிர்பார்ப்போடு என் எதிர்பார்ப்பையும் ஒரு மூலையில்/மூளையில்(?) போட்டு வையுங்களேன். (இதில் சின்ன சுயநலமும் உண்டு. இவற்றைப்பற்றி எழுதினால், அதில் நானும் தொற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. சுயநலம் இல்லாத பொது நலம் உலகத்திலேயே கிடையாதாமே).

 3. சாரதா says:

  பதில் எழுதினால் பிழையென்று காட்டுகிறது. நான் முன் எழுதிய பதிலையும் காட்ட மறுக்கிறது. கணிணியைப்புரிந்து கொள்வது கஷ்டம்ப்பா (என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு மட்டும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: