Water (2005)


டைரக்டர் – தீபா மேத்தா

கதை பால்ய விவாக கொடுமையினால் பாதிக்கப்பட்ட சுய்யா (சரளா – குழந்தை நட்சத்திரம்) என்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது. 1930களின் இறுதியில் வட இந்தியா. வக்கீல் நாராயண் (ஜான் ஆப்ரகாம்) கண்ணில் படுகிறார் அழகான கல்யாணி (லிஸா ரே). காதல் மலர்கிறது. நாராயன்னின் தாய் (வஹீதா ரஹ்மான்) வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த தன் மகன், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் சந்தோஷம் அடைகிறார். பிறகு என்ன திருமணம் தானே? அது தான் இல்லை.

ஒரு பெரும் பிரச்சனை. கல்யாணி, சுய்யாவை போல், கணவன் யார் என்றே தெரியாமல் பால்ய விதவையாக, ”சமுதாயத்திற்கு ஆகாது” என்று ஒதுக்கப்பட்ட விதவைகள் சென்று சேரும், விதவைகள் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்து இப்பொழுது ஒரு பெண்ணாக உருவாகியிருக்கிறார். நாரயண் கல்யாணியை மணப்பது 1938ல் ஒரு பெரும் புரட்சியாக இருந்தாலும், பிரச்சனை அதைவிட இடியாப்பச் சிக்கல்.  ஆஸ்ரமத்தின் பாஸ் (பெண் மொட்டை Boss) மதுமதி (மனோரமா) – மூத்த விதவைப் பாட்டி – அக்கறையில் இருக்கும் செல்வாக்கு மிகுந்த ஊர் ”பிராமணர்களுக்கு” ஆஸ்ரமத்தின் இளம்விதவைகளை அனுப்பி வருமானத்திற்கு வழி செய்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் கல்யாணி ஒருவர். காந்திய வழியில் வாழும் நாராயன்னுக்கு அது ஒரு பிரச்சனையில்லை. ஊர் “பிராமணர்களில்” ஒருவர் தன்னுடைய தந்தை. அது தான் சிக்கல்.  அவர் ஒத்துக் கொண்டாலும் கல்யாணி என்ன சொல்வார்?

ஆஸ்ரமம் என்று பெயர்தானே தவிர அது ஒரு டஞ்சன். பல சைஸில், பல வயதில் விதவைகள். ஒவ்வொருவருக்கும் மனதில் ஒவ்வொரு ஏக்கங்கள். தீபா மேத்தா மனதில் உரைக்கும்படி காட்சி அமைப்புகளை ஏற்ப்படுத்தியிருக்கிறார். பழமைவாதிகளும் மனம் நெகிழும் படி ஒன்றும் அறியா விதவைகளின் அவலங்கள் திரைகதை படுத்தப்பட்டிருக்கிறது. அனேகமாக நடிகர்கள் அனைவரும் மிகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். சுய்யா ஆத்திரம் (மதுமதியின் உடலை அமுக்கி விடும் பொழுது), கனிவு (ஒரு விதவைப் பாட்டிக்கு லட்டு வாங்கி கொடுக்கும் பொழுது) முதலிய பாவங்களை அருமையாக வெளிப்படித்தியிருக்கிறது.

சகுந்தலா (ஸீமா பிஸ்வாஸ்) சுய்யாவை காப்பாற்றுவதற்க்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக இல்லாமல், அறிவு பூர்வமான விவாதங்களிர்க்காக கையண்டிருப்பது  பிரில்லியண்ட் டாக்டிக். விவாதம் அளவாக இருந்தது. ஆழமாக இல்லாததால் வாய்ப்பை நழுவ விட்டது போல் தோன்றுகிறது. பல காட்சிகளை இலங்கையில் படமாக்கியிருக்கிறார்கள். ரம்மியமான சூழ்நிலைகளை மனதில் சாட்சாத்கரம் செய்து அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தீபா மேத்தா ஒரு ஜீனியஸ் தான்.  அனுராக் காஷ்யப் வசனம். அருமையான மரம் ஒன்று காண்பிகிறார்கள். உண்மையான மரமா, செயற்கை மரமா என்று தெரியவில்லை.

ஒரு ஹெவி சப்ஜெக்ட் என்றாலும் இரண்டரை மணி நேரம் quality timeஆக இருந்தது மனதுக்கு திருப்தி. இப்படி ஒரு சினிமா பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது போல் ஒரு உணர்வு. எந்த மொழிப்படம் என்ற உணர்வே இல்லை. மீண்டும் ஒரு முறை கண்களையும் காதுகளையும் தீட்டிக் கொண்டு மனைவியுடன் பார்க்கவேண்டும்.

நண்பர் உப்பிலி சீனிவாஸுடன் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது, அவருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று கூறினார். சப்ஜெக்ட் சிலருக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன். பாரலல் சினிமா மனநிலைகளயும் சார்ந்தது என்று நீண்ட சிந்தனைக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன். (விஜய் சினிமா போல் பூலியன் மதிப்பீடுகள் இருக்கமுடியாது. அதுவே Water போன்ற படங்களின் வெற்றியும் ஆகிறது.)

மார்க் – பத்துக்கு எட்டு.

தொடர்புடைய சுட்டி

திரைப்படத்தில் பங்கேற்றவர்களின் நீண்ட  பட்டியல்

பற்றி Bags
Trying out

12 Responses to Water (2005)

 1. நல்ல படத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நன்றி.

  முதல் பாராவில் கதையின் முடிவைச் சொல்லிவிட்டீர்கள். ஒரு திரைப்படத்தையோ, நாவலையோ பற்றி விமர்சனம் / அறிமுகம் செய்யும்போது அதன் ஆதார முடிச்சை அவிழ்ப்பது போல் எழுதுவது நல்ல முறையல்ல என்பதால் இந்த பின்னூட்டம் 🙂

  தீபா மேத்தாவின் திரைப்படங்களைப் பற்றி நான் இடுகை எழுதியிருக்கிறேன். எல்லாம் ஒரு விளம்பரம்தான் 🙂 போஸ்டருக்கு பொறுத்தருள்க.

  நீரும், நெருப்பும், நிலமும் மற்றும் சில பெண்களும்

  • Bags says:

   Sridhar Narayanan,

   என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. முடிவை சொல்லிவிடகூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பவன் நான். அப்படியும் தவறி இருக்கலாம். ஆனால் முதல் பாராவில் “அது தான் இல்லை” என்று எழுதியிருப்பதை குறிப்பிடுகிறீர்கள் என்றால் அது முடிவில்லை என்பது தான் என் புரிதல்.

   Fire என்ற திரைப்படம் பல வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். எற்றுக் கொள்ளும் பக்குவம் அப்பொழுது எனக்கு இல்லை.

 2. Pingback: அவார்டா கொடுக்கறாங்க? « கூட்டாஞ்சோறு

 3. Rajagopalan says:

  Dear Friend Bags

  I am Raju, a CA from Tanjore, now in dubai
  I read this blog as I am an old movie buff.I have written to RV on a a couple of occasions-introducing myself as brother in law of Pramod-RV’s senior from salem college.

  coming to Uppili srinivasan,is he the same guy who studied from REC Trichy in 77-81 period? From Tambaram?If yes, he is a very close friend of my cousin anand subramaniam(pappu-at home)

  keep writing. i enjoy your reviews of all old movies.

  anbudan.
  raju-dubai

 4. Bags says:

  Dear Raju,

  Yes I remember you sending a mail to us earlier about Pramod. I studied with RV in GCE Salem and Pramod was senior to us during that time. We have sent a mail to Pramod too.

  This Uppili is different I guess. He belongs to Kumbakonam but lived in Madras. I will find out and let you know. Or he may reply if reads this.

  Thanks
  Bags

 5. RV says:

  ராசு,

  எங்க உங்களை கொஞ்ச நாளா காணும்? அது சரி, எங்களையே கொஞ்ச நாளா காணலை..

  • Rajagopalan says:

   Hello RV

   vanakkam,nalam,nalamaa?

   i keep visiting”awarda….” time and again.

   pramod did acknowledge receipt of communication from you.pramod leads a hectic life, i understand-his present job involves lot of traveling.

   As for me, nitya kandam poornaysu.The economic downturn in dubai is alarming. you have to be here to see it to believe it.I have lost two of my assistants-chucked off.. so ,Goundamani solluvadu pol”all in all alagu raja naan than”.That way, my job is secured.

   Son nikhil graduates at Leeds in Oct,2010.Planning to visit UK and hop across to USA.Mudindaal, avasiyam sandipom.

   anbudan.

   raju-dubai

   anbudan.

   raju-dubai

 6. RV says:

  ராஜு,

  ப்ரமோதுக்கு மெயில் அனுப்பினேன், ஆனால் பேச முடியவில்லை. விரைவில்…

  கட்டாயம் இந்தப் பக்கமும் தலை காட்டுங்கள்! உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள்!

 7. சாரதா says:

  ‘8 Comments’ என்று பார்த்ததும், ‘சரிதான், Water படத்தைப்பற்றி அலசி ஆராய்ந்து, அறுத்துக் கிழித்திருப்பார்கள் போலும்’ என்று வந்து பார்த்தால், முக்கால்வாசிக்கு மேல ‘நலம், நலமறிய ஆவல்’.

  Water படத்தை நானும் பார்க்க நேர்ந்தது. இதே படத்தை ஒரு ஆண் எடுத்திருந்தால் (நானும் ஒரு பெண்ணாக இருந்தாலும் உண்மையை சொல்ல வேண்டுமல்லவா?), மகளிர் அமைப்புகளும், பி.ஜே.பி கட்சியினரும் போராட்டக் கொடிதூக்கியிருப்பார்கள். பெண் என்பதால் அடங்கிவிட்டனர் போலும். அதுசரி. பெண்ணென்றால் பேயே இரங்கும்போது பி.ஜே.பி. எம்மாத்திரம்?.

 8. Bags says:

  >>>‘8 Comments’ என்று பார்த்ததும், ‘சரிதான், Water படத்தைப்பற்றி அலசி ஆராய்ந்து, அறுத்துக் கிழித்திருப்பார்கள் போலும்’ என்று வந்து பார்த்தால், முக்கால்வாசிக்கு மேல ‘நலம், நலமறிய ஆவல்’.

  🙂 அதில் பாதி நாங்கள்.

  அலசி, ஆராய்ந்து, அறுத்துக் கிழிக்கும் கூட்டங்கள் எல்லாம் அறுப்பதற்க்கு ரம்பம் வாங்கப் போயிருப்பார்களோ?

  நீங்கள் அறுத்துக் கிழிப்பீர்கள் எனப் பார்த்தால்…ஆம் கிழித்திருக்கிறீர்கள்…பிஜேபியை 🙂
  உங்கள் க்ருத்தை தெரிந்துக் கொள்ள ஆவலாயிருக்கிறோம்.

 9. RV says:

  சாரதா, படத்தைப் பற்றி அறுத்து கிழிக்காமல் நலம் நலமறிய ஆவல் என்று அறுக்கிறோம் என்கிறீர்கள். 🙂

  இப்போதெல்லாம் படங்களைப் பற்றி tfm சைட்டில் எழுதுகிறீர்களா? நீங்கள் சிவாஜி படங்களைப் பற்றி எழுதியதை எல்லாம் தொகுக்கும் எண்ணம் ஏதாவது இருக்கிறதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: