பட்டணத்தில் பூதம் – விகடன் விமர்சனம்
மார்ச் 6, 2010 3 பின்னூட்டங்கள்
பட்டணத்தில் பூதம் (நன்றி – ஆனந்த விகடன் – விகடன் பொக்கிஷம் (24 -02 -2010 )

காதலரைப் பிரிப்பதும், கடைசியில் அவர்களை ஒன்று சேர்ப்பதும், மூவாயிரம் வருடங்கள் ஒரு ஜாடியில் அடைபட்டுக் கிடந்த பூதத்தின் முக்கிய வேலை. அது நமக்கு முழு நேரப் பொழுதுபோக்கு.
ஆகா! எத்தனை விதமான தந்திரக் காட்சிகள்! எத்தனை அழகான வண்ணக் காட்சிகள்! பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே! பத்திரிகை விளம்பரத்தில் இருக்கும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பாடுகிறார்களே!
படத்தில் இருக்கும் கார் ஒன்று உயிர் பெற்று, பெரிதாகி, போர்டிகோவில் வந்து நிற்கிறது. ஹெலிகாப்டர், படகைத் துரத்துகிறது. அந்த ஹெலிகாப்டரை எதிர்த்து கார் ஒன்று வானத்தில் பறந்து செல்கிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்! துப்பாக்கிச் சண்டை – ஆவி கக்கும் பயங்கர டார்ச், மின்சாரக் கதவு… இங்கிலீஷ் சினிமா கெட்டுது போங்கள்!
நாகேஷ் அந்த ஜாடியைக் கையில் வைத்துக் கொண்டு, விருந்து சாப்பிட முடியாமல் திண்டாடும்போது வயிறு வலிக்கச் சிரிக்கிறோம். முதலில் காதல் மன்னனாக இருக்கும் ஜெய்சங்கர், பின்னால் புரட்சி நடிகராக மாறுகிறார். நீச்சல் உடையில் இருக்கும் கே.ஆர்.விஜயா மழையில் நன்றாக நனைகிறார். அப்படியிருந்தும் ஜலதோஷம் பிடிக்கவேயில்லை! வில்லன் பாலாஜி தோள்பட்டையைக் குலுக்கும் ஸ்டைலுக்கு, கை குலுக்கி ‘சபாஷ்’ சொல்ல வேண்டும். முன்பு ஆங்கிலத்தில் பேசிய பூதத்தை இப்போது தமிழில் பேச வைத்திருப்பவர் ஜாவர் சீதாராமன். பூதமாக வரும் அவருடைய நடிப்பு அற்பூதம்!
பூதத்தின் சாதனை, ஒளிப்பதிவாளரின் வெற்றி!
-ஜெய் ரவிகாந்த் நிகாய்ச்!
பட்டணத்தில் பூதம் படத்தின் இசை அமைப்பாளர் திரு . ஆர் . கோவர்த்தனம் .
ஆர் .கோவர்த்தனம் அவர்கள் ” ட்யூன்” போட்டு விட்டு பாடலை எழுதச் சொல்வதில் அவருக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை ,
அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களுக்கும் , பாடல்கள் தான் முதலில் எழுதப்பட்டது . பிறகு தான் பாடலுக்கு ” ட்யூன் ” போடப்பட்டது !
அதனால் அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களும் ஜீவனுடன் இருக்கின்றன !
இப்படி ஒரு கொள்கையை வைத்திருந்த ஆர். கோ . அவர்களுக்கும் ஒரு சோதனை வந்தது !
” பட்டணத்தில் பூதம் ” படத்திற்கு அவர் இசை அமைத்தபோது , அவர் வழக்கம் போல பாட்டு எழுதச் சொல்லி “ட்யூன் ” போட்டார் .
ஆனால் ஒரே ஒரு ” டூயட்” பாடலுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்க அப்படத்தின் இயக்குனர் விரும்பினார் !
எனவே கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார் ! கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க முயன்றார் ! முடியவில்லை !
மறுபடியும் முயன்றார் ! முடியவில்லை ! கண்ணதாசனின் பாடல் வரிகளை மாற்றிக் கொடுத்தால் முடியும் .
ஆனால் கண்ணதாசன் அப்பாடலை மிகச சிறப்பாக எழுதிஇருந்ததால், கோவர்த்தனம் அதனை மாற்ற மறுத்துவிட்டார் .
( அதற்கு ஒரு காரணம் இருந்தது , அது பின்னர் உங்களுக்கு தெரியவரும் ! )
எனவே , இயக்குனரின் அனுமதி பெற்று , ” கஜல் ” இசையைத் தள்ளி வைத்து வீணையுடன் கூடிய மெல்லிசையை பயன்படுத்தி , ஓர் அழகான பாடலை நமக்கு கொடுத்தார் !
அந்தப் பாடல்தான் :
‘பட்டணத்தில் பூதம்’ (1967) படத்தில் இடம் பெற்ற,
சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – எனை
சேரும் நாள் பார்க்க சொல்லடி!
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி”
67 பொதுத் தேர்தலின் போது தீவிர தேர்தல் பணிக்காக தன்னை அழைக்க காமராஜருக்கு கண்ணதாசன் விடுத்த விண்ணப்பமாக அப்போது இவ்வரிகள் அர்த்தம் கொள்ளப்பட்டது.
செய்தித்தாளில் வீடியோ – பட்டணத்தில் பூதம் படத்தின் புகழ் பெற்ற “தந்திரக் காட்சி”
சுஜாதா பதில்கள் – பாகம் 1 (உயிர்மை பதிப்பகம்)
மா.வி. கோவிந்தராசன், ஆரணி.
“பட்டணத்தில் பூதம்” என்கிற திரைப்படத்தில் பூதமாய் வருகிற ஜாவர் சீதாராமன் ஒரு செய்திப் பத்திரிகையைப் பார்ப்பார். அந்தப் பத்திரிகையில் சினிமா பார்ப்பதுபோல பாடல் காட்சி (பாட்டும் நானே பாவமும் நானே) வரும். அதுபோல இன்றைய விஞ்ஞானம் தருமா ?
அதுபோல இன்றைய விஞ்ஞானம் தந்துகொண்டிருப்பதுதான் இன்டர்நெட் இதழ்கள். இதில் சோகம் இன்னமும் அந்த “பாட்டும் நானே” பாடலைத்தான் கட்டிக்கொண்டு அழுகிறோம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்
தொடர்புடைய பதிவுகள்: பட்டணத்தில் பூதம் – சாரதா விமர்சனம்
NO
“அதுபோல இன்றைய விஞ்ஞானம் தருமா ?”
எந்தக் கால்த்தில் இருக்கிறீர்கள் சார் ,,,கீழே கொடுத்துள்ள வலைத்தளம் சென்று பாருங்கள்,,விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி உள்ளது என்பது புரியும்,, அதுவும் சிக்ஸ்த் சென்ஸ் ஒரு இந்தியரின் கண்டுபிடிப்பு
Dear Charles,
I agree with you.
But, pl. note that this question was asked by this மா.வி. கோவிந்தராசன், ஆரணி on 28-11-1999.
அன்புடன்,
ஸ்ரீநிவாஸ்