பட்டணத்தில் பூதம்


பட்டணத்தில் பூதம் கதையைப் பற்றி சாரதா விலாவாரியாக எழுதி இருக்கிறார். விகடன் விமர்சனத்தில் அந்தக் காலத்தில் இது எப்படி வரவேற்கப்பட்டது என்று தெரிகிறது. இனி மேல் புதிதாக என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

பாட்டுகள்: கோவர்த்தனம் ஏன் பெரிய இசை அமைப்பாளராக வளர முடியவில்லை என்று வியந்திருக்கிறேன். இதிலும் சரி, இது வருவதற்கு ஐந்தாறு வருஷம் முன் வந்த கைராசி படத்திலும் சரி பாட்டுகள் பெரிய ஹிட். ஆனால் கோவர்த்தனம் எம் எஸ்வியின் உதவியாளராகத்தான் முடிந்தார். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கு இவர் ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான சுதர்சனத்தின் தம்பி. பல தொடர்புகள் இருந்திருக்கும்.

பூவும் பொட்டும் விமர்சனத்தில் நான் கோவர்தனத்தை பற்றி எழுதிய சில வரிகள் –

கோவர்தனம் ஒரு almost man. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர். சுதர்சனத்தின் தம்பி. 1953இலேயே தனியாக ஜாதகம் என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைத்த முக்கால்வாசி படங்களின் இசை வெற்றி அடைந்திருக்கிறது. கைராசி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களும் வெற்றி அடைந்தன. ஆனால் அவரது வாழ்க்கை உதவி இசை அமைப்பாளராகவே முடிந்துவிட்டது. சி.ஆர். சுப்பராமன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம்எஸ்வி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ் எல்லாருக்கும் உதவி! தேவாவுக்கு கூட உதவியாக இருந்தாராம்! இவ்வளவு திறமை இருந்தும் ஏன் அவரால் ஒரு இரண்டாம் தட்டு இசை அமைப்பாளராகக் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது ஒரு புதிர்தான்.

இளையராஜா வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் அவரும் கோவர்தனமும் சேர்ந்து ஒன்றாக இசை அமைப்பதாக இருந்ததாம். பஞ்சு அருணாசலம் வற்புறுத்தியதால் இளையராஜா தனியாக இசை அமைத்தாராம்.

கண்ணதாசன் காமராஜரிடம் தான் காங்கிரசில் சேர விரும்புவதை குறிப்பாக சொல்லவே அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று பாட்டு எழுதினாராம். எனக்கு நம்பிக்கை இல்லை. இது வந்தபோது கண்ணதாசன் தீவிர காங்கிரஸ்காரர் என்று நினைக்கிறேன். அப்படியே இல்லாவிட்டாலும் எழுதும் பாதி பாட்டு ரிலீஸ் ஆவதில்லை; படங்கள் எல்லாம் எப்போது ரிலீஸ் ஆகுமோ சொல்ல முடியாது. மேலும் காமராஜுக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். கண்ணதாசன் படம் ரிலீசாகி, பாட்டு ஹிட்டாகி, அதை காமராஜ் கேட்டு, இவரது உள்குத்தை புரிந்து கொண்டு இவரை சேர்த்துக் கொள்வார் என்று நினைத்திருந்தார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கண்ணதாசனோ, கோவர்த்தனமோ, காமராஜரோ, இல்லை யாராவது சினிமாக்காரர்களோ இப்படி சொல்லி இருக்கிறார்களா? இல்லை இது சும்மா யாரோ கிளப்பிவிட்ட கதையா?

சிவகாமி மகனிடம்தான் சிறந்த பாட்டு. கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா, நான் யார் யாரென்று சொல்லவில்லை இரண்டும் நன்றாக இருக்கும். உலகத்தில் சிறந்தது எது சுமார். இதழ்கள் விரித்தது ராஜா என்றும் ஒரு பாட்டு இருக்கிறதாம். கேட்ட மாதிரியே இல்லை. எல்லா பாட்டையும் இங்கே கேட்கலாம்.

படத்தின் சிறந்த காட்சியே அந்த செய்தித்தாளிலிருந்து எம்ஜிஆர் கிளம்பி வந்து நான் ஆணையிட்டால் என்று முழங்குவதும் சிவாஜி பாட்டும் நானே என்று பாடுவதும்தான். மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கும். ஸ்ரீனிவாஸ் வீடியோ சுட்டி கொடுத்திருக்கிறார்.

கே.ஆர். விஜயா சிக்கென்று அழகாக இருந்த காலமும் உண்டு. 4 சிம்ரன் ஒன்றாக நிற்பது போல இருந்த காலமும் உண்டு. நல்ல வேளையாக இந்த படம் வந்த போது ஒல்லிதான். இதற்கப்புறம் நீச்சல் உடை போட்டுக் கொண்டு வரவில்லை என்று சாரதா எழுதி இருந்தார். இரண்டு மூன்று வருஷம் கழித்து எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நீச்சல் உடை தேவைப்பட்டிருக்கும்! நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற வரிக்கு அவரை ஆடவிடலாம்!

படம் பிராஸ் பாட்டில் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாம். எஃப். அன்ஸ்டே எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. ராண்டார்கை இதைப் பற்றி விரிவாக சொல்கிறார். அவர் கட்டுரையில் அன்ஸ்டேயின் பெயர் தவறாக அச்சாகி இருக்கிறது. மேலும் ப. பூதம் படம் வந்த வருஷம் 1964 இல்லை, 67.

பாஸ்கெட்பால் காட்சியை ஆப்சென்ட் மைண்டட் ப்ரொஃபசர் படத்தில் பார்த்திருக்கலாம். எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.

நாகேஷ் காமெடி தேறவில்லை. ஜெய், விஜயா பார்க்க இளமையாக, அழகாக இருப்பார்கள். ஒரு நீளமான கிளிப் கீழே – ஜெய்யும் நாகேஷும் ஜாவரை முதல் முறை சந்திக்கிறார்கள்.

1967-இல் வந்த படம். ஜெய்ஷங்கர், நாகேஷ், கே.ஆர். விஜயா, பாலாஜி, வி.கே. ராமசாமி, வி.எஸ். ராகவன், ஜாவர் சீதாராமன் நடித்திருக்கிறார்கள். கதை ஜாவர். இயக்கம் எம்.வி. ராமன். இசை கோவர்த்தனம். வெற்றிகரமாக ஓடிய படம். பத்துக்கு 6.5 கொடுக்கலாம். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களில் பட்டியல்

தொடர்புடைய சுட்டிகள்:
பட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்
பட்டணத்தில் பூதம் விகடன் விமர்சனம்
பாட்டுகளை கேட்க
ராண்டார்கை குறிப்பு
Brass Bottle படம் IMDB தளத்தில்
F. Anstey பற்றிய விக்கி குறிப்பு
பூவும் பொட்டும் விமர்சனம்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

11 Responses to பட்டணத்தில் பூதம்

 1. Rajagopalan says:

  Anbulla RV

  Yes.I remember seeing this movie in 1967

  I dont know whether it was a “pongal/deepavali/ Tamil New year release” but remember seeing this movie at “yagappa Theatre” in tanjore,second show!

  Thanks again. it is nice to come here to your blog to walk down the memory lane.

  Biggest treasure is the link to writings of sharada,romba nandri nanbare.

  anbudan.

  raju-dubai

 2. RV says:

  ராஜு,

  அடுத்தது நீங்கள்தான் பாக்கி. நீங்களும் நாலு guest post எழுதுங்களேன்!

 3. rajagopalan says:

  avasyam muyarchi pandren

  anbudan
  \
  raju

  • Rajagopalan says:

   RV

   continuing with “Pattinathil Bootham”, you are right about the Music director Govardhanan. I was amazed by the music for the film and his earlier score in “Kairaasi” (kannum kannum pesiyadu unnaal anro….)and used to wonder, why he continued to remain MSV’s assistant.

   What I recall about that movie is the exaggerated “shrug” by Balaji and the reading of the expense statement by V.K.Ramaswamy(biscuits-coffee-oval-cashews etc etc), the dance by jothilakshmi, (she was quite lithsome those days!), the train scene where K.R.Vijaya and Jaishankar will be drinking coffee and mildly “swaying” to indicate a “moving train”.

   Romba “bore” adithu vitteno?

   anbudan.

   raju

 4. சாரதா says:

  Dear RV & Rajagopalan…

  இசையமைப்பாளர்கள் ஆர்.கோவர்த்தனம் மற்றும் ஜி.கே.வெங்கடேஷ் இருவரும் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களிடம் மட்டும் அஸிஸ்டெண்ட்டாக இருந்ததாக உங்கள் பதிலில் தொனிக்கிறது. கொடுமை என்னவெனில் அற்புதமான இசையமைப்பாளர்களான இருவரும் பிற்காலத்தில் ‘இசைஞானி இளையராஜா’விடமும் பணியாற்றியவர்கள்… அதுவும் அஸிஸ்டெண்ட்டாகவே (பரிதாபம்). எம்.எஸ்.வி.யாவது அவர்களின் சமகாலத்தோழர் எனலாம். ஆனால் இளையராஜா..?. அவரும் அவ்விருவரையும் தனக்கு உதவியாளர்களாகவே வைத்திருந்தது அநியாயம் என்றே தோன்றுகிறது. (மெல்லிசை மன்னர் மார்கெட் சரிந்த காலத்தில் ஜோசப் கிருஷ்ணாவும் ‘அந்தப்பக்கம்’ போவார் என்று எதிர்பார்த்தனர். ‘பிச்சையெடுத்தாலும் எடுப்பேனே தவிர அண்ணனை விட்டுப்போக மாட்டேன்’ என்று சொன்னவர் இறுதி மூச்சு வரை M.S.V-யை விட்டுப்போகவில்லை. சிலகாலம் முன்பு மறைந்துவிட்டார்).

  கோவர்த்தனம் இசையென்றதும் பட்டணத்தில் பூதம் தவிர்த்து, சட்டென தோன்றுவது ‘அன்புள்ள அத்தான் வணக்கம்’, ‘காத்திருந்தேன் காத்திருந்தேன்’, ‘காதலெனும் ஆற்றினிலே’ (கைராசி), ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்’, ‘எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா’ (பூவும் பொட்டும்) உட்பட சில பாடல்கள்.

 5. RV says:

  ராஜு, எனக்கு உங்கள் அளவு நினைவில்லை. மீண்டும் எப்போதாவது படம் பார்க்க வேண்டும்.

  சாரதா, நீங்கள் சொல்வது மிகச்சரி. பூவும் பொட்டும் விமர்சனத்தில் நான் கோவர்த்தனத்தை பற்றி எழுதியது – // கோவர்தனம் ஒரு almost man. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர். சுதர்சனத்தின் தம்பி. 1953இலேயே தனியாக ஜாதகம் என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைத்த முக்கால்வாசி படங்களின் இசை வெற்றி அடைந்திருக்கிறது. கைராசி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களும் வெற்றி அடைந்தன. ஆனால் அவரது வாழ்க்கை உதவி இசை அமைப்பாளராகவே முடிந்துவிட்டது. சி.ஆர். சுப்பராமன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம்எஸ்வி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ் எல்லாருக்கும் உதவி! தேவாவுக்கு கூட உதவியாக இருந்தாராம்! இவ்வளவு திறமை இருந்தும் ஏன் அவரால் ஒரு இரண்டாம் தட்டு இசை அமைப்பாளராகக் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது ஒரு புதிர்தான்.
  இளையராஜா வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் அவரும் கோவர்தனமும் சேர்ந்து ஒன்றாக இசை அமைப்பதாக இருந்ததாம். பஞ்சு அருணாசலம் வற்புறுத்தியதால் இளையராஜா தனியாக இசை அமைத்தாராம். //

  பூவும் பொட்டும் விமர்சனம் இங்கே – https://awardakodukkaranga.wordpress.com/2008/08/27/பூவும்-பொட்டும்-poovum-pottum/

  • Rajagopalan says:

   நண்பர் RV அவர்களுக்கு

   தமிழில் நான் எழுதும் முதல் மடல் உங்களுக்கு தான்

   அன்புடன்

   ராஜு-துபாய்

   • RV says:

    ராஜு, I am honored. என் அனுபவத்தில் சொல்கிறேன் – முதல் வரி எழுதுவதுதான் கஷ்டம், அப்புறம் கஷ்டமெல்லாம் பழகிவிடுகிறது 🙂

 6. Rajagopalan says:

  அன்புள்ள நண்பர் Rv

  நான் என் நண்பர் கோபால் அவர்களைப்பர்த்தி தங்களிடம் சொல்ல விரும்புகிறேன் .கோபால் இங்கு துபாயில் உள்ளார் .He is the administrator for the site “www.pradosham.com”.ஒவ்வொரு ப்ரடோஷமும் துபாய் மற்றும் அபுதாபியில் நல்ல
  முறையில் கொண்டடபடுகிறது .திருநெல்வேலி கிருஷ்ணபுரம் சேர்ந்தவர்.என்னை போல் பழைய சினிமா பைத்தியம் (Misery loves company-doesnt it?) அவர் வீட்டில் old tamil movies CD/dvd இறைந்து கிடக்கும் .பார்த்தால் “பேஜார் ” ஆகிவிடும்!

  அவர் எங்கள் ” வட்டத்தில் ” நிறைய எழுதுகிறார். அவரது ஒரு படைப்பை உங்களுக்கு அனுப்பிவைக்க ஆசை படுகிறேன் .இடம் பொருள் ஏவல் தெரியாமல் வந்து விட்டேன் என்று உங்களுக்கு பட்டால் மன்னிக்கவும்.

  அன்புடன்

  ராஜூ-துபாய்
  கோபால்ஜி

  அருமையான பதிவு. அப்பிடியே நெகிழ்ந்து போய் விட்டேன் .
  “மேலிருந்து கீழ் வர்ணபூச்சு பார்வை ” அருமையான வர்ணனை .அடிக்கடி உங்கள் நினைவுகள் மலர என் பிரார்த்தனை .உங்கள் நெல்லிக்காய் சமாச்சாரத்தை என் நண்பர் Rv அவர்களுக்கு அனுப்பபோறேன் .நான் பெற்ற இன்பம் அவரும் படட்டுமே !
  ராஜு

  On Tue, 16 Mar 2010 15:40:26 +0530 wrote
  >
  நெல்லிக்காயை டாங்கர் பச்சடி பண்ணுவார்கள், தயிரில், ஒரு கரண்டி உளத்தம் பொடியை போட்டு, மிகச்சுவையாக இருக்கும். இது மங்கள நாளில் மட்டுமே கிடைக்கும். மற்ற நாட்களில் நெல்லிக்காயை எப்படி சுவைப்பது?

  நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி தோன்றும் -சின்னவயதில் (மசக்கையெல்லாம் இல்லை). இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த நெல்லிக்காய் மரம் முட்களால் ஆனது, அதில் ஏறி அதை பறிக்கவும் முடியாது. அதனை பரித்து சாப்பிடவும்வேண்டும், என்ன செய்ய. அதற்க்கு உதவுவதுதான் இந்த நண்பன் நீளமான “துரட்டி”..

  “மாமி, உங்காத்தில் நெல்லிக்காய் துரட்டி இருக்கா?” என்று கேட்டு வீடுவீடாக படையெடுத்து, ஒரு வீட்டில் கிடைக்கும். இந்த நெல்லிக்காய் மரமமொரு விசித்திரமானது. அது நம் சேட்டைகைளை சுண்டப்போடவோ என்னவோ, மரம் மிக உயரமாகவும், முட்களால் ஆங்காங்கே ஆயுதங்களை தாங்கியும் இருக்கும். அதனால் இதில் ஏறி பரிக்கமுடியாது. மரம் எல்லார் வீட்டிலுமமிருகாது. அந்த கிராமத்திலேயே ஒரு மஹா கஞ்சன் வீட்டில் இருந்தால் நம் பாடு அதோகதிதான். இந்த இரண்டு நெல்லிக்காய்களில் மாணாக்கர்கள் விரும்புவது அறநெல்லிக்காய் எனப்படும் சிறு நெல்லிக்காயையே. பலர் வீடுகளில் இந்த துரட்டி சின்னதாகவே இருக்கும், எட்டவும் செய்யாது. துரட்டியின் முனை மிகச்சிறிய “கேள்விக் குறி” போல்

  இரும்புக்கொண்டியினால் பொருத்தப்பட்டிருக்கும்.

  பழங்காலத்தில் (1980 வரை கூட பழங்காலந்தான்), துணியை மடியாக உணர்த்த இரண்டு அல்லது நான்கு குறுக்குக் கம்பிகளை வீட்டின் பின் கட்டுகளில் கட்டியிறுப்பார்கள். துவைத்த துணியை உணர்த்த வேண்டுமாயின், ஒரு மூங்கில் கழியை வைத்து, மொத்தமாக சேர்த்து முனையில் குத்தி ஒரு எம்பு எம்பி கம்பியின் மேலே போட்டு, பின் அதை அனாசயமாக விரித்து விடுவார்கள். நம்மூர் பாட்டிகள் மிக அற்புதமாக இவற்றை கையாள்வார்கள். சோம்பேறித்தனத்திற்காக அதை பசங்களிடம் கொடுத்து “நீ உணர்த்தப்பா” என்று கூற மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது இதைச்செய்து பாருங்கள் – உங்கள் கைவலிக்கும், தலை சுற்றும். சரி, தொடங்கிய பிரச்சனைக்குவருவோம்.

  இந்த மூங்கில் சாய்த்து வைத்திருக்கும் மூங்கிலை எடுத்துக்கொண்டு போய், இரவல் துரட்டியில் கட்டி, ஒரு பாலத்தை ஏற்படுத்தி, கிளைகளுக்குள் துழாவி, நெல்லிக்காயை சாய்த்து, பின் அதை மண் போக தட்டி, அலம்பி, பங்கு போட்டு தின்பது சுவையாக இருக்கும். இதில் துரட்டியில் மூங்கிலை சரியாக கட்டாவிட்டால் கீழ்ப்பகுதி சாய்ந்துவிடும்,

  பலம் கொண்டமட்டும் இரண்டு இணைப்புகளையும் கட்டவேண்டும், ஏனென்றால் மூங்கில் பகுதி வழவழப்பாக இருக்கும்.

  வீட்டில் துணி உணர்த்த மூங்கில் கம்பை காணாது தேடி, நாங்கள் அதை திருப்பிக் கொண்டு வைக்கும்போது பிடிபட்டு அந்த மூங்கிலாலேயே அடிவாங்கிய அனுபவம் உண்டு. முன்பெல்லாம் எதற்க்கு எடுத்தாலும் அடிதான். ஒவ்வொருவரின் முதுகும் வீட்டின் பெரியவருக்கு ஒரு சலவைக்கல்.

  வருடாந்திர விடுமுறை வரும்போது வயல்களுக்கு நடுவே உள்ள பெரிய கிணறுதான் எங்களுக்கு சொர்க்கம். காலையில் ஒரு ஆறு மணிக்கு போனால், குளித்துவிட்டு வரும்போது சுமார் பத்து மணி ஆகிவிடும். இந்த கிணற்றுக்கு நெல்லிக்காய் கிணறு என்று பெயர். முக்கால் வாசி நாள் தண்ணீர் நிரம்பி இருக்கும். சலனமில்லாமல், ஒரு கண்ணாடியை விரித்தார்போல் தண்ணீர் இருக்கும். ஒரு பெரிய நெல்லிக்காய் மரம் பூத்துக்குலுங்கிக் கொண்டிருக்கும் கரையில். இதில் என்ன விசேஷம் என்றால், மரத்தின் வேர் மட்டுமேகரையில் இருக்கும். அதன் கிளை பரந்து விரிந்து கிணற்றின் மேலே படர்ந்து இருக்கும். அதில் ஏறவோ, நெல்லிக்காயை பறிக்கவோ அனுமதி கிடையாது.

  இதற்கு ஒரு உபாயம் செய்வோம். நாங்கள் ஒரு 5/6 பேர் இருப்போம். ஒருவன் கல்லைக்கொண்டு கிளையில் ஓங்கி எரிந்துவிட்டு “தொப் தொப்” என்று கிணற்றில் குதிப்போம். நெல்லிக்காய் எல்லாம் கீழே தண்ணீரில் வீழ்ந்து மூழ்க ஆரம்பிக்க, நாங்களோ ராகட்டை கிணற்றுக்குள் செலுத்தியது போல், நெல்லிகாயை துரத்தி பிடித்து சுவைப்போம். இதில் போட்டி வேறு – யார் எவ்வளவு அதிகமாக பிடிக்கிறார்கள் என்று. சில மரங்களில் வெளிர் பச்சையில் இருக்கும் நெல்லி புளிக்கும், சில மரங்களில் சுவையாக இருக்கும். இதில் கொஞ்சம் உரப்புப் பொடி, உப்பு எல்லாம் போட்டு சுவைத்துள்ளோம். அல்வா சாப்பிடுவது போல் சாப்பிட்டுள்ளோம்.

  இப்போது யாராவது “சார், நெல்லிக்காய் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டால் அவரை மேலிருந்து கீழ்வரை ஒரு வர்ணபூச்சு பார்வையோடு நிறுத்திக்கொள்கிறேன். வசந்த கால நினைவுகள் நினைவிலேயே தூங்குகிறது.

  கோபால்

 7. Rajagopalan says:

  அன்புள்ள RV

  நலம்,நலமா?
  கோபாலின் பதிவை கூட்டாஞ்சோறு பக்கத்தில் பதித்தமைக்கு நன்றி .கோபாலிடம் சொன்னேன் .”யார் தருவார் இந்த அரியாசனம்.”. என்று பாடி சந்தோஷத்தை சொன்னான் .நீங்களே RV யுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ளவும் என்று சொன்னேன்.சரி என்றி சொல்லி இருக்கார்.
  எங்களை கௌரவித்ததர்க்கு நன்றி .

  அன்புடன்

  ராஜூ -துபாய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: