கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “நாடோடித் தென்றல்”


[m.bmp]
சுஜாதா கூறுகிறார்….

http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

நாடோடித் தென்றல் படத்துக்காக நான் பெங்களூரில் இருந்தபோது பாரதிராஜா என்னை வந்து சந்தித்து, பிரிட்டிஷ் காலப் பின்னணியில் ஒரு கதை எடுக்கப் போகிறேன்.  அதை எழுத நீங்கள்தான் தகுதியான எழுத்தாளர் என்றார்.  ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கலெக்டர்,  வெள்ளைக்கார மகள்,  பொற்கொல்லன் கதாநாயகன் என்றெல்லாம் நல்ல கதைக்களம் அமைத்து, இந்தச் சூழலில் கதையை யோசிக்கச் சொன்னார்.  கதையில் சுவாரஸ்யம் ஏற்பட கலெக்டரை  ஒரு தேசபக்தன் (கதாநாயகனின் தந்தை) கொன்றுவிடுவதாக அமைக்கலாம் என்று யோசனை சொன்னேன்.
Bharathiraja

பாரதிராஜா ஒரு தேர்ந்த விஷுவல் டைரக்டர்.  அவரை பேப்பரில் கதையின் காட்சியை எழுத வைப்பது ரொம்பக் கடினமான காரியம்.  பதினாறு வயதினிலே மூலம் ஒரு புயல் போலத் தமிழ் சினிமா உலகத்துக்குள் நுழைந்தவர்.  அதன் பின் தொடர்ந்து சில வெற்றிப் படங்களைத் தந்தவர்.  அவருக்குக் கதை என்பது இரண்டாம் பட்சம் தான்.  காட்சிகள், உணர்ச்சிகள் இவைதான் முக்கியம்.  எல்லாக் காட்சிகளையும் கவிதை கலந்து காட்ட வேண்டும்.  ‘இந்த முறை தவறவே தவறாது.  ஏனெனில் இது எனக்கு வெற்றியைத் தந்திருக்கிறது’  என்று அழுத்தமாக நம்பினார்.  இதனால் கதைப் போக்கிற்கும்,  சம்பவங்களுக்கும் அவர் அதிகம் முக்கியத்துவம் தரவில்லை.  காட்சிகளை எழுதாமலேயே படப்பிடிப்புக்குச் சென்று அங்கே போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அபார தன்னம்பிக்கை அவருக்குக் கை கொடுத்து வந்தது.  அது கைவிடத் துவங்கிய சமயம்தான் நான் அவருடன் இணைந்து எழுத வேண்டியிருந்தது.  இதனால் நாடோடித் தென்றலில் அவரது தன்னம்பிக்கை கழன்றுபோய்விட்டதை  என்னால் கவனிக்க முடிந்தது.  அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தவித்தார்.  படம் வெளி வந்த பின்னும் தியேட்டர் தியேட்டராகச்  சென்று முடிவை மாற்றினார்.  அதனால் வேலூரில் ஒரு முடிவு,  மேலூரில் ஒரு முடிவு என்று குழம்பிப் போனார்கள்.

பாரதிராஜா தன் ஒவ்வொரு படத்திலும் புதிய நடிக நடிகையரை அறிமுகம் செய்து வைப்பது வழக்கம்.  அதன்படி ரஞ்சிதா என்னும் நடிகையை  நாடோடித் தென்றலில் அறிமுகம் செய்து வைத்தார்.  கரிய அழகான கண்களுள்ள உயரமான பெண்.  எப்போதும் இங்கிலீஷ் புத்தகம் படித்துக் கொண்டிருந்த நகரத்துப் பெண்.  அவள் படம் முழுக்க ரவிக்கை போடாத கிராமத்துப் பெண்ணாக நடிக்க மிகவும் சங்கடப்பட்டாள்.  நதியில் நனைந்து குளிக்க வேண்டிய கட்டாயக் காட்சிகள் வேறு இருந்தன.  புது நடிகை —  எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் வரவில்லை.  கூட ஒரு Boy Friend .  மைசூரில் படப்பிடிப்பின்போது  ராத்திரி தனியே அழுதுகொண்டிருந்ததைக் கவனித்து விசாரித்ததில் டைரக்டர்,  ‘நடிக்க வரவில்லை.  அடித்துவிட்டேன்.  அதனால் அழுகிறாள்,  இப்போது ஒழுங்காக நடிக்கிறாள்’  என்றார்.   நான் மேற்கொண்டு விசாரித்தால் எனக்கும் ஒன்று விழும் என்று விலகி விட்டேன் !

யாரும் விளையாடும் தோட்டம்…….


மணியே மணிக்குயிலே…….

சந்தன மார்பிலே…..
[sujatha.jpg](கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

பாரதிராஜா பற்றி சுஜாதா

Advertisements

6 Responses to கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “நாடோடித் தென்றல்”

 1. sureshkannan says:

  அன்பான நண்பரே,

  உங்கள பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். குறிப்பாக சிறந்த திரைப்பட பட்டியல்களையும் பழைய தமிழ்த் திரைப்படத்திற்கான விமர்சனங்களையும். திரைப்படம் தொடர்பான சுஜாதாவின் அனுபவங்களைத் தொகுத்து வருவது மிக நல்ல முயற்சி. நன்றி.

 2. srinivas uppili says:

  நன்றி சுரேஷ்கண்ணன். சுஜாதாவின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

 3. hari says:

  i’m a big fan of sujatha! – thanks for posting this!
  the time that we are spending to read your blog is really worth one!

 4. srinivas uppili says:

  நன்றி ஹரி உங்கள் அன்பான பதிலுக்கு…

 5. RV says:

  Congrats!

  Your story titled ‘நாடோடி தென்றல் திரைப்படத்தில் பணியாற்றியதைப் பற்றி சுஜாதா’ made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd April 2010 09:14:01 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/216735

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team

 6. Pingback: Tweets that mention நடிகை ரஞ்சிதாவின் அறிமுகம் குறித்து எழுத்தாளர் சுஜாதா - -- Topsy.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: