கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ரோஜா”ரோஜா திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.  இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி,  மதுபாலா  மற்றும்  ஜனகராஜ் நடித்துள்ளனர். மணி ரத்னம்  இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம்,  டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக  2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்

கிராமத்தில் வாழும் ரோஜாவின் (மதுபாலா) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி (அரவிந்த் சாமி ).ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே,  ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.


சுஜாதா கூறுகிறார்……
மணிரத்னம் பெங்களூர் வரும்போது சிலசமயம் என்னை வந்து சந்திப்பார்.  தன் புதிய படங்களின் கதையை ஒரு முறை என்னிடம் சொல்லி கருத்து கேட்பார்.  அவ்விதத்தில் அஞ்சலி (1990 ), தளபதி (1991 ) போன்ற படங்களின் கதையை நான் முன்பே கேட்டிருந்தேன்.  1992 -ல் “நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் எழுதிப் பார்க்கலாமே” என்றார்.  “இரண்டு ஐடியாக்கள் சொல்கிறேன்.  எது பிடித்திருக்கிறது,  சொல்லுங்கள்”   என்றார்.
[mani.jpg]
“ஒரு பெண்ணின் புதுமணக் கணவனைத்  தீவிரவாதிகள் கடத்திச்சென்று விடுகிறார்கள்.  இதை எழுதுகிறீர்களா ?  இல்லை கிராமத்தில் இரண்டு திருடர்கள்…..  ஒரு முடிவில்லாத சேஸ்.  இது பிடித்திருக்கிறதா ?”  என்றார்.  “இரண்டுமே பிடித்திருக்கிறது.  முதலில் தீவிரவாதிகள் கடத்திய கணவன் கதையை எழுதலாம்”  என்றேன்.வெறுக்கிறாள்.

ரோஜா‘ படத்துக்காக மணி ரத்னமும் நானும் காஷ்மீர் தீவிரவாதம் பற்றி அதன் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் எழுதிய புத்தகத்தை முழுவதும் படித்தோம்.  மேலும் காஷ்மீர் பற்றிய டெலிவிஷன்  செய்திகளையும் நிறையப் பார்த்தோம்.  தீவிரவாதிகள் இந்தியக் கொடியை எரிக்கும் காட்சியும்,  மாருதி வேனில் வந்து கதாநாயகனைக் கடத்திச் செல்லும் காட்சியும் டி.வி. செய்திப் படங்களில் பார்த்து உண்டாக்கியது.  அதே போல மந்திரியின் பெண்  விடுவிக்கப்பட்டதைப் பற்றிய உரையாடலும் முப்தி முகம்மத் சையதுக்கு  நிஜமாக நேர்ந்ததின்  செய்திகளின் ஆதாரத்தில் எழுதியது.

See  full size image

1992 -இல் ரோஜா உருவாக்கப்பட்டது.  என். டி. டி.வி. (NDTV ) அப்போது  வாரா வாரம்  செய்திப் படம் தயாரித்து வீடியோ காசெட்டாக விற்பார்கள்.  பி.எச்.இ.எல்  நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு எஞ்சினியரை  காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு  சென்ற செய்தி பரபரப்பாக இருந்தது.  அந்தச் சமயத்தில் வந்த செய்திச் சுருளில் ஒரு அதிர்ச்சி தரும் காட்சியை மணி ரத்னத்துக்கு போட்டுக் காட்டினேன்.  இந்திய தேசியக் கொடியை  தீவிரவாதிகள் பற்றவைத்து ஏற்றுகிறார்கள்.  “மணி, இந்தக் கட்சியை நம் படத்தில் வைக்க முடியுமா ?” என்று கேட்டேன்.  அவர்,  “வைக்கலாம்,  கொடியை suggestion ஆகக் காட்ட வேண்டும்.  கதாநாயகன் பற்ற வைத்த கொடியை பாய்ந்து அணைப்பதாகக் காட்டினால் சென்சார் அனுமதிப்பார்கள் ”  என்றார்.  ரோஜா படத்தில் இன்றும் பேசப்படும் காட்சி அது.  அரவிந்த் சாமி தளைகளை மீறி பாய்ந்து வந்து எரியும் கொடியை அணைக்கும் காட்சி.

http://imienazwisko.files.wordpress.com/2009/06/ar-rahman_1.jpg

ரோஜா படத்தில் மற்றொரு புதுவரவு நிகழ்ந்தது.  ஒருநாள் ராத்திரி என்னை கே. கே. நகரில் ஒரு சிறிய ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார்.  ஓர் இளைஞரை அறிமுகம் செய்துவைத்தார்.  “இவர் புதிய இசை அமைப்பாளர்.  கேட்டுப் பாருங்கள்”  என்றார்.  அதைக் கேட்டதும் நான் அந்த இளைஞரிடம்  “புகழுக்குத் தயாராகுங்கள்”  என்றேன்.  அந்தப் பாடல் ‘சின்ன சின்ன ஆசை’.  இளைஞர் ஏ.ஆர். ரஹ்மான்.
director_maniratnam_(11).jpg
மணிரத்னம் பாலசந்தருக்காக செய்த ரோஜா மிகப் பெரிய வெற்றியடைந்தது.  அந்தப் பாடல் பாஷை தெரியாத ஜப்பான், ஜெர்மனி போன்ற தேசங்களில்கூட  பிரபலமாகியது.

Maniratnam
மணிரத்னத்துடன் இணைந்து எழுதுவது எனக்குப் பிடித்த விஷயம்.  படத்தின் கதையை சிறிய வாக்கியங்களாக எழுதி தருவார்.  மையக் கருத்தை ஒருமுறை விவரித்து விடுவார்.  “இந்த சீனில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?” என்று கேட்டால் மட்டும் விவரங்களுக்குள் நுழைவார்.  “நீங்கள் எப்படி இதைக் காட்சியாகப் பார்ப்பீர்கள் ?  அதை எழுதிக் கொடுங்கள்” என்பார்.  அப்படி எழுதிக் கொடுப்பதிலிருந்து அவருக்குத் தேவைப்பட்டதை எடுத்துக்கொள்வார்.  பொதுவாக காட்சியாக மாற்றும்போது பேச்சைக் குறைப்பார்.  ‘காட்சியாக சொல்லிவிட்டால் வசனம் தேவையில்லை’  என்று விட்டுவிடுவார்.  அதனால் மணி ரத்னத்தின் படத்திற்கு யார் வசனம் எழுதினாலும் சுருக்க மாகவே இருக்கும்.

பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை முழுவதும் பயன்படுத்தும் டைரக்டர் அவர்.

சின்ன சின்ன ஆசை…   சிறகடிக்க ஆசை……

ருக்குமணி ருக்குமணி…….


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது……


காதல் ரோஜாவே…………

தமிழா  தமிழா…..   நாளை நம் நாளே…

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்: