நீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்


Neerum Neruppumபடம் வந்தபோது – அக்டோபர் 71இல் விகடனில் வந்த விமர்சனம். விமர்சனத்தை எழுதியவர் எம்.கே. ராதா! ராதாதான் இந்தப் படத்தின் ஒரிஜினலான அபூர்வ சகோதரர்கள் படத்தின் ஹீரோ, அதில் அவர் டபிள் ரோல் செய்திருந்தார். நன்றி, விகடன்!

என் விமர்சனத்தை நான் முன்னாலேயே எழுதிவிட்டேன், அதை இங்கே காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.

முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.

‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.

திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!

மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.

மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.

பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.

பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: நீரும் நெருப்பும் – ஆர்வியின் விமர்சனம்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to நீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்

  1. //பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.//

    அந்தக் காலத்திலேயே ரசிக்க முடியவில்லை என்றால் இன்று?

  2. anonymous says:

    It was because of MGR’s excessive interference the songs did not came out well. He did not let MSV compose in his style. MSV himself has deeply regretted in several of his interviews. ‘Kanni oruthi’ is a nice song though. In fact, when Yaadon Ki Bharat was remade in Tamil MSV hesitated to do the music of the film. As he was worried the Neerum Neruppum story will repeat. As everyone knows YKB songs were immensely popular. He told firmly that there should be absolutely no interference from MGR. MGR agreed. But the man simply could not resist himself from attending the composing sessions. The funny thing he used to hide and watch it. MGR had such a great passion for music.

  3. shanmugam says:

    எம் ஜி ஆர் ஆதிக்கம் நிறைந்த ஒரு பாடல் நிச்சயமாக பிரபலமானது
    இலங்கை வானொலியில் காலை வேளைகளில் தவறாமல் ஒலித்த
    டி.எம்.எஸ்ஸின் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம்காலை நேரக்காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து’
    இலங்கையில் நன்றாக வசூலித்ததாம்
    ஈஸ்வரியின் குரலில் வந்த ‘ஒரு அவியல் ஒரு மசியலை விட பி பானுமதியின் ‘லட்டு லட்டு பிரமாதம் தான் யூ டியுப்பில் பார்த்த ஞாபகம்

    • RV says:

      சண்முகம், நீங்கள் சொன்ன இரண்டு பாட்டும்தான் ஓரளவாவது தேறும். ஆனால் நான் அவற்றை சிறந்த பாட்டு என்று சொல்லமாட்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: