கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘முதல்வன்’


[muthalvan.jpg]


சுஜாதா கூறுகிறார்….

‘முதல்வன்’ திரைப்படத்தின்  உருவாக்கத்தில் (வசனம்)  பங்கு கொண்டவன் என்ற தகுதியில்,  தமிழ் சினிமாவின் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது.

‘முதல்வன்’ ஒரு பெரிய நடிகருக்காகப் ‘பண்ணப்பட்ட’  கதை.  அதைக் கேட்டு அவர் மிகுந்த சிந்தனைக்குப் பின்,  ‘இந்தக் காலகட்டத்தில் நான் இந்தப் படத்தில் நடித்தால் பிரச்னைகள் வரும்’  என்று வருத்தத்தோடுதான் நிராகரித்தார்.  இதை அவர் துவக்க விழாவிலேயே சொன்னார்.  நிஜவாழ்வும்,  சினிவாழ்வும் தமிழ்நாட்டில் இரண்டறக் கலந்திருப்பதினால் வரும் தயக்கம்.  அவர் எடுத்த முடிவு சரியா என்பதைப் படம் வந்ததும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

https://i2.wp.com/icdn.raaga.com/Catalog/CD/T/T0000002.jpg

கதை சுவாரஸ்யமாக இருந்ததால்,  ‘பெரிய நடிகர் இல்லாமல்,  ஒரு நல்ல நடிகர் இருந்தாலே போதும்’ என்று சொன்னேன்.  ஷங்கர் இறுதியில் தன்னுடைய முதல் வெற்றிப் படமான ‘ஜென்டில்மேன்’ னில் நடித்த அர்ஜுனைத் தேர்ந்தெடுத்தார்.  கதாநாயகிக்கு ‘இந்தியனி’-ல் நடித்த மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்தார்.
முதல்வன்’ ஒரு எளிய கருத்தைச் சொல்லும் படம்.  புராணக் கதைகளில் தீடீரென யானை வந்து மாலை போட்டதும்,  ‘நீதான் இந்த நாட்டுக்கு ராஜா’  என்று சொல்வார்களே….  அது போன்ற கதை.   தற்செயலாக ஒருவனுக்கு ஒரே ஒரு நாள் முதல்வராக இருக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிற ஒரு fairy tale .  அதன் விளைவுகளை,  ஷங்கரின் பாணியில் பிரமாண்டமான காட்சிகள்,  பிரமிப்பூட்டும் படப்பிடிப்பு,  டி.டி.எஸ்.,  ஏ.ஆர்.ரஹ்மான்  போன்ற சமாச்சாரங்களுடன் சுவாரஸ்யம் குறையாமல் சொல்கிறார்.
இதற்கு வசனம் எழுதும்போது,  தமிழ்நாட்டு அரசியலின் எந்த நிழலும் படாமல்,  எந்த மாநிலத்திலும் நிகழக்கூடிய  கற்பனைக் கதையாகத்தான் எழுத வேண்டியிருந்தது.  கதையின் களம்தான் தமிழ்நாடு,  அரசியல் இந்தியா.முதல்வனின் டிஸ்கஷன்  ஊட்டியில் ஏப்ரல் மாதம் நடந்தது.  ஒரு வருஷத்துக்கு மேல் முனைந்த கதையை,  இப்போது திரை வடிவில் பார்க்கையில்,  ஒரு ஓட்டல் அறையில் மனதில் புறப்பட்ட கதையைக் கோடிகள்  கொடுத்து,  நாடு முழுவதும் திரை விரித்துக் காட்டும் இந்த ‘அல்கெமி’ யின் விதிகளும்,  விபத்துகளும்  அவஸ்தைகளும் புரிகின்றன.

Mudhalvan

முதல்வன்‘  வீசிடீயும் வீடியோவும் மதுரையில் கேபிளில் திரும்பத் திரும்ப காட்டப்பட்ட நிகழ்ச்சிகளையும்,  அவற்றின் உள்நோக்கம் பற்றியும் செய்திகள் பல பத்திரிகைகளில் வந்துவிட்டன.  எனக்கு இதில் வியப்பாக இருந்தது,   சினிமாவில் சொன்னது மிகையில்லை….  ஏறக்குறைய அதே பாணியில் சினிமாவுக்கு வெளியிலும் சம்பவங்கள் நடந்ததுதான்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்மையில் அவர் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது.

முதல்வன்‘ல நீங்க நடிச்சிருக்கலாமே?”  என்றேன்.
“ஐயோ,  வேண்டாங்க….   அர்ஜுன் நடிச்சதுக்கே இவ்வளவு ஸ்ட்ராங்கா  ரீயாக் ஷன்   இருந்திருக்கு.  பத்து நாளா  யோசிச்சு தான் வேண்டாம்னேன்ங்க.   நான் நடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும் !””நிஜமாவே சி.எம்.  ஆகியிருப்பீங்க”  என்றேன்.சிரித்து,  “அது ஒண்ணு மட்டும் நிச்சயமா வேணாங்க!”    என்றார்.

இயக்குனர் ஷங்கர் கூறுகிறார்…..
https://i0.wp.com/www.envazhi.com/wp-content/uploads/2009/06/images2.jpg
சாருக்காக உருவாக்கப்பட்ட கதைதான் முதல்வன். அதை அவர்கிட்ட சொன்னப்போ ஒவ்வொரு காட்சிக்கும் அவர் முகத்தில் தெரிந்த ரீயாக் ஷன் பார்த்து, இந்தப் படத்தை சார் நிச்சயம் பண்றார்னு முடிவே பண்ணிட்டேன்.ஆனா அவர் சில நடைமுறை சிக்கல்களை எனக்கு புரிய வைச்சார். படம் வெளியானப்ப அதை நானும் புரிஞ்சிக்கிட்டேன். அர்ஜூன் இந்தக் கதைக்கு தன்னைப் போலவே பொருத்தமாக இருப்பார் என்று என் மனதிலிருந்ததை அப்படியே சொன்னார் ரஜினி. முதல்வன் பெரிய வெற்றிப் படம்தான். அதை ரஜினி சாரை வைத்து நான் பண்ணியிருந்தா, அது வேற ஒரு சிகரத்தைத் தொட்டிருக்கும்..”, என்றார் ஷங்கர்.

Mudhalvan

முதல்வன் படத்தில் ஒரு சீன்.  ஒரு நாளைக்கு முதல்வனாக நியமிக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் மக்களிடமிருந்து தொலைபேசியில் வரும் புகார்களை வாங்கிக்கொண்டு உடனே அவைகளை நிவர்த்திக்க ஏற்பாடு செய்கிறான்.  இந்த சீனை டைரக்டர்  ஓர் அலுவலகத்தில் வைத்திருந்தால்,  இதன் அழுத்தம் குறைந்திருக்கும்.  மாறாக மேம்பாலத்தருகே போக்குவரத்தின் நடுவே மேசை போட்டு மக்களிடையே தெருவில் தற்காலிகமாக டெலிபோன்களை அமைத்துத் திறந்த வெளியில் மக்கள் முன்னிலையில் வைத்தது அந்த சீனின் தாக்கத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது.
முதல்வனே…….

ஷக்கலக்க பேபி…….

அழகான ராக்ஷசியே…..

குறுக்கு சிறுத்தவளே……

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

‘முதல்வன்’ படத்தை சூப்பர் ஸ்டார் தவிர்த்தது சரியா? ஒரு அலசல்!!   http://onlysuperstar.com/?p=1532