கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘திருடா திருடா’திருடா திருடா திரைப்படம் (1993) ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுஜாதா கூறுகிறார்……
மணிரத்னம் பெங்களூர் வரும்போது சிலசமயம் என்னை வந்து சந்திப்பார்.  தன் புதிய படங்களின் கதையை ஒரு முறை என்னிடம் சொல்லி கருத்து கேட்பார்.  இந்த ஐடியா பிடித்திருக்கிறதா என்று கேட்டார்.

“கிராமத்தில் இரண்டு திருடர்கள்…..  ஒரு முடிவில்லாத சேஸ்.  இது பிடித்திருக்கிறதா ?”  என்றார்.
“பிடித்திருக்கிறது.  எழுதலாம்”  என்றேன்.

File:Album thirudathiruda cover.jpg
திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் கதிரும் (ஆனந்த்) அழகும் (பிரசாந்த்) இணைபிரியாத நண்பர்கள்   மேலும் இவர்களின் தோழியான ராசாத்தியும் இவர்களுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றாள்.  காவல் துறையினரிடமிருந்து பலமுறை தப்பிச் செல்லும் இவர்கள் நடனமாடும் பெண்ணொருத்தியைச் சந்திக்கின்றனர்.  மேலும் அவளின் கூற்றுப்போல 1000 கோடிகள் மதிப்புடைய பணத்தினைத் தேடியும் செல்கின்றனர்.  இதன் பிறகு அவள் சர்வதேச அளவிலான திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் திருட்டுக் கும்பலில் ஒருத்தியெனவும் மேலும் அவள் வைத்திருக்கும் அடையாள அட்டை ஒன்றின் மூலமே அக்கும்பல்களின் தலைவனால் கடத்தப்பட்டுச் செல்லப்படும் பணத்தினைப் பெற முடியும் என்பதனையும் அறிகின்றனர்.  இவற்றைத் தெரிந்து கொள்ளும் அத்திருடர்களின் தலைவன் அவனுடைய காடையர் கூட்டத்துடன் தனக்குத் துரோகம் செய்தவளைத் தேடுகின்றான்.  பின்னர் அவர்கள் அப்பணத்தை எடுத்தார்களா இல்லை கதிரும் அழகும் அப்பணத்தைப் பெற்றனரா என்பதே கதையின் முடிவாகும்.

https://i0.wp.com/i33.tinypic.com/2rw0xmu.gif

  • இத்திரைப்படமே இந்தியாவின் அகேலா கிரேன் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.
  • ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சோர் சோர் என வெளியிடப்பட்டது
  • திருடா திருடா படத்தின் திரைக்கதை ராம்கோபால் வர்மா.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் கூறுகிறார்……

Ram Ramachandran
மணி ரத்தினத்தின் ‘திருடா திருடா‘ (1993) படப் பிடிப்பின்போது, திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சில வேண்டாத சம்பவங்கள் நிகழ்ந்தன. திருவட்டார், நாகர் கோவில்-கேரளா பார்டருக்கு மிக சமீபம். சாப்பாட்டில் அரிசி முழுசாக முறைத்துப் பார்க்கும். ஜனவரி வெயில் அங்கே கன்னங்கரேர் என்று ஆளைக் கருக்க வைக்கும்.
பிரமாதமான, புராதனக் கோவில். எக்கச்சக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய பிரகாரம்.
பிரம்மாண்டமான பெருமாளை தரிசனம் பண்ணுவதற்கே மூன்று வாசல்கள். அனந்தசயனமாகப் பாம்பின் மேல் படுத்திருக்கும் பெருமாளை தலை, தொப்புள், கால் என்று மூன்று வாசல்களிலும் உள்ளே போய் தரிசிக்க வேண்டும். காமெராமேன் P.C.ஸ்ரீராம், இயக்குனர் மணி போன்றவர்கள் கோவிலுக்குப் போகப் பிடிக்காத ஜாதிக்காரர்கள் என்பதால், நானும், பிரசாந்தும் மட்டும் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.

கோவில் வெளிப் பிரகாரத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த படப்பிடிப்பை நிறுத்துமாறு திடீரென்று கலாட்டா செய்தார்கள் ஒரு உள்ளூர் கோஷ்டியினர். ‘சுத்த பத்தமில்லாத சினிமாக்காரர்களை கோவிலுக்குள் படமெடுக்க யார் அனுமதி கொடுத்தது?’ என்று யாரோ அதிரடி ஆன்மீகச் செம்மல் துள்ளல் சத்தம் போட, ஒரு பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. சிறிது நேரத்தில், அது உள்ளூர் அரசியல் கலாட்டாவாக (VHP vs Congress) உருவெடுத்தது. கிட்டத்தட்ட காமெரா, லைட் உபகரணங்கள், படப்பிடிப்பு சாதனங்கள் எல்லாமே உடைந்து சேதமாகும் நிலை வந்து விட்டது.
அந்த புராதனக் கோவிலில் விலை மதிப்பற்ற ஸ்வாமி நகைகள் பலவும் சமீபத்தில் திருடு போயிருக்கின்ற விபரமும் எங்களை திடுக்கிடச் செய்தது.
வழக்கம்போல் அவசர போலீஸ் கையைப் பிசைந்து கொண்டு நின்றது.

நேரம் ஆக ஆக, கூட்டம் தீவிரமாகி, கோஷங்கள், “அடிங்கடா, உதைங்கடா” ரேஞ்சுக்குப் போனதும், அன்றைய படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டது.  நாங்களும் வேறு ஒரு லொகேஷனுக்கு போய்ச் சேர்ந்து, படப்பிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தோம்.

கொஞ்சம் நிலவு…..

வீரபாண்டிக் கோட்டையிலே…..

தீ  தீ  தித்திக்கும் தீ…..

ராசாத்தி என் உசிரு என்னுதில்ல…..

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்……

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

சுட்ட பழம்


எந்தப் படங்களிலிருந்து எந்தப் படத்தைச் சுட்டிருக்கிறார்கள் என்று இதோ ஒரு பட்டியல்:

வெற்றி விழா – Bourne Identity

மை டியர் மார்த்தாண்டன் – Coming to America

மகாநதி ஜெயில் காட்சிகள் – If tomorrow comes
(இந்தத் திரைக்கதையில் ரா.கி.ரங்கராஜனுக்குப் பங்குண்டு என்பதையும், அவரே இந்த நாவலைக் குமுதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்)

12B – Sliding doors

ஜேஜே – Serendipity

நியூ – Big

பாட்ஷா – இந்தி ‘Hum’ (அதில் ரஜினி அமிதாப்புக்கு இன்ஸ்பெக்டர் தம்பியாக நடித்திருப்பார்)

சரோஜா – ஜட்ஜ்மெண்ட் நைட்(Judgement Night)

நாயகன் – God Father

நாயகன் – ஒரு பத்து பதினைந்து நிமிட sequence அப்படியே காட்பாதரில் சுட்டது. காட்பாதரின் மகனை எதிராளிகள் கொன்றுவிடுவார்கள்.
பேரனின் பேப்டிசம் நடக்கும்போது இந்த கும்பல் சென்று பழிவாங்கும். தமிழில் பேப்டிசத்துக்கு பதிலாக திவசம். அவ்வளவுதான். ஆங்கில படத்தில் கதவில் எட்டி பார்ப்பவரின் கண்ணில சுடுவார்கள்.   தமிழிலும் அதே.

அக்னி நட்சத்திரம் படத்தில் மகன்கள் அப்பாவை கட்டிலோடு இடம் மாற்றுவது கூட ஃகாட்பாதரில் இருந்து சுட்டது தான்.

திருடா திருடா – Cliff Hanger

ரோஜா – சத்யவான் சாவித்ரியை  உல்டா செய்தது.

தளபதி – மகாபாரத உல்டா

கன்னத்தில் முத்தமிட்டால் கதை “stuart little” கதையை ஒத்து இருக்கும்.

ஆயத எழுத்து – Amerros perros {நிறைய ஒத்து இருக்கும்}

‘குரு’ – ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட ‘சிட்டிசன் கேன்’ என்னும் படத்தின் அதே கதைதான்

ரித்விக் கட்டக் இயக்கிய “மேகதாரா” (1962 என்று ஞாபகம்) பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை”யின் கதையும் காட்சியமைப்புகளும் மேற்சொன்ன படத்தை பெருவாரியாக ஒத்திருந்ததது.

கண்ணெதிரே தோன்றினாள் —- உயிரா? மானமா ? {ஜெய்சங்கர் & முத்துராமன் } அப்ப்டியே காப்பி..

மே மாதம் – Roman Holiday

கஜினி—- Memento

பட்டியல் – Bangkok Dangerous -இன்  தமிழ் பதிப்பு

அவ்வை ஷண்முகி – Mrs Doubtfire

தெனாலி – What about bob

ருத்ரா – பஃபூன் வேஷம் போட்டு கொள்ளையடிக்கும் காட்சி சீன் பை சீன் பில் முர்ரெயின் quick change படத்திலேருந்து சுட்டது

சூரியன் – Point of impact by stephen king

நான் சிகப்பு மனிதன் – Death wish

காதல் கோட்டை – Shop around the corner

தோஸ்த் :சரத் குமார் ரகுவரன் படம். – Double jeapordy

யுவா – Amerros perros

அருணாச்சலம் – Brewster’s Millions

ஆத்மா .- The Miracle

வசூல்ராஜா – Patch Adams

காதல் கொண்டேன் – Klassenfahrt

சதி லீலாவதி – She Devil

மகளிர் மட்டும் – Nine to Five

பச்சைக்கிளி முத்துச்சரம் – Derailed

எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ‘உலகம் சுற்றும் வாலிபன்’  —  ராமண்ணா இயக்கிய ‘மூன்றெழுத்து’

அந்நியன் – சிட்னி ஷெல்டனின் ‘டெல் மீ யுவர் ட்ரீம்ஸ்’

அன்பே சிவம் —  Planes Trains and Automobiles (1987)

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  —  Sense and Sensibility

உள்ளத்தை அள்ளித்தா அப்படியே சபாஷ் மீனா

எல்லாம் இன்ப மயம் அப்படியே ஹலோ பார்ட்னர் கதை.

தெய்வச்செயல் ஹாதி மேரா சாதியாக இந்திக்குச் சென்று மீண்டும் யூ டர்ன் அடித்து தமிழில் நல்லநேரமாக ஆனது.