சுட்ட பழம்


எந்தப் படங்களிலிருந்து எந்தப் படத்தைச் சுட்டிருக்கிறார்கள் என்று இதோ ஒரு பட்டியல்:

வெற்றி விழா – Bourne Identity

மை டியர் மார்த்தாண்டன் – Coming to America

மகாநதி ஜெயில் காட்சிகள் – If tomorrow comes
(இந்தத் திரைக்கதையில் ரா.கி.ரங்கராஜனுக்குப் பங்குண்டு என்பதையும், அவரே இந்த நாவலைக் குமுதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்)

12B – Sliding doors

ஜேஜே – Serendipity

நியூ – Big

பாட்ஷா – இந்தி ‘Hum’ (அதில் ரஜினி அமிதாப்புக்கு இன்ஸ்பெக்டர் தம்பியாக நடித்திருப்பார்)

சரோஜா – ஜட்ஜ்மெண்ட் நைட்(Judgement Night)

நாயகன் – God Father

நாயகன் – ஒரு பத்து பதினைந்து நிமிட sequence அப்படியே காட்பாதரில் சுட்டது. காட்பாதரின் மகனை எதிராளிகள் கொன்றுவிடுவார்கள்.
பேரனின் பேப்டிசம் நடக்கும்போது இந்த கும்பல் சென்று பழிவாங்கும். தமிழில் பேப்டிசத்துக்கு பதிலாக திவசம். அவ்வளவுதான். ஆங்கில படத்தில் கதவில் எட்டி பார்ப்பவரின் கண்ணில சுடுவார்கள்.   தமிழிலும் அதே.

அக்னி நட்சத்திரம் படத்தில் மகன்கள் அப்பாவை கட்டிலோடு இடம் மாற்றுவது கூட ஃகாட்பாதரில் இருந்து சுட்டது தான்.

திருடா திருடா – Cliff Hanger

ரோஜா – சத்யவான் சாவித்ரியை  உல்டா செய்தது.

தளபதி – மகாபாரத உல்டா

கன்னத்தில் முத்தமிட்டால் கதை “stuart little” கதையை ஒத்து இருக்கும்.

ஆயத எழுத்து – Amerros perros {நிறைய ஒத்து இருக்கும்}

‘குரு’ – ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட ‘சிட்டிசன் கேன்’ என்னும் படத்தின் அதே கதைதான்

ரித்விக் கட்டக் இயக்கிய “மேகதாரா” (1962 என்று ஞாபகம்) பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை”யின் கதையும் காட்சியமைப்புகளும் மேற்சொன்ன படத்தை பெருவாரியாக ஒத்திருந்ததது.

கண்ணெதிரே தோன்றினாள் —- உயிரா? மானமா ? {ஜெய்சங்கர் & முத்துராமன் } அப்ப்டியே காப்பி..

மே மாதம் – Roman Holiday

கஜினி—- Memento

பட்டியல் – Bangkok Dangerous -இன்  தமிழ் பதிப்பு

அவ்வை ஷண்முகி – Mrs Doubtfire

தெனாலி – What about bob

ருத்ரா – பஃபூன் வேஷம் போட்டு கொள்ளையடிக்கும் காட்சி சீன் பை சீன் பில் முர்ரெயின் quick change படத்திலேருந்து சுட்டது

சூரியன் – Point of impact by stephen king

நான் சிகப்பு மனிதன் – Death wish

காதல் கோட்டை – Shop around the corner

தோஸ்த் :சரத் குமார் ரகுவரன் படம். – Double jeapordy

யுவா – Amerros perros

அருணாச்சலம் – Brewster’s Millions

ஆத்மா .- The Miracle

வசூல்ராஜா – Patch Adams

காதல் கொண்டேன் – Klassenfahrt

சதி லீலாவதி – She Devil

மகளிர் மட்டும் – Nine to Five

பச்சைக்கிளி முத்துச்சரம் – Derailed

எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ‘உலகம் சுற்றும் வாலிபன்’  —  ராமண்ணா இயக்கிய ‘மூன்றெழுத்து’

அந்நியன் – சிட்னி ஷெல்டனின் ‘டெல் மீ யுவர் ட்ரீம்ஸ்’

அன்பே சிவம் —  Planes Trains and Automobiles (1987)

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  —  Sense and Sensibility

உள்ளத்தை அள்ளித்தா அப்படியே சபாஷ் மீனா

எல்லாம் இன்ப மயம் அப்படியே ஹலோ பார்ட்னர் கதை.

தெய்வச்செயல் ஹாதி மேரா சாதியாக இந்திக்குச் சென்று மீண்டும் யூ டர்ன் அடித்து தமிழில் நல்லநேரமாக ஆனது.

Advertisements

16 Responses to சுட்ட பழம்

 1. ”ருத்ரா” கௌதமியை மற்றொரு விஜயசாந்தியாக்க, ”நிகிதா” என்ற படத்தின் உல்டாவாக எடுக்க நினைத்து, பாக்கியராஜை ஹீரோவாக்க முடிவு செய்த காரணத்தில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதால் “நிகிதா” படத்தில் உருவவேண்டிய காட்சிகளை அரைகுறையாக உருவி ஹீரோயினிக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைத்து, ஹீரோயிசப் படமாக்க மற்ற ஆங்கிலப் படங்களில் இருந்து சரக்கு எடுத்து.., சும்மா சொல்லக் கூடாது மூளையை ( 🙂 )அவ்வளவு கசக்கி வேலை செய்த படம். கடைசியில் மோரில் ஐஸ்கீரிம் கலந்து குப்பைத் தொட்டியில் கொட்டியது போல் ஆயிற்று!

 2. சொல்ல மறந்து விட்டது. உள்ளத்தை அள்ளித்தா அப்படியே சபாஷ் மீனா. அடுத்தவீட்டுப் பெண்ணை அப்படியே காப்பியடித்து பல படங்கள் வந்தன. நடிகை ஸ்ரீபிரியா கூட அந்தப் படத்தை காப்பியடித்து ஒரு படத்தை டைரக்ட் செய்தார்.(காதோடுதான் நான் பேசுவேன்!!!!சரியாகத் தெரியவில்லை :))

  எல்லாம் இன்ப மயம் அப்படியே ஹலோ பார்ட்னர் கதை. இரண்டுக்கும் கதை பஞ்சு அருணாசலம். பஞ்சு அருணாசலத்தின் பல படங்களும் இப்படி உல்டா செய்தவையே!.

  தெய்வச்செயல் ஹாதி மேரா சாதியாக இந்திக்குச் சென்று மீண்டும் யூ டர்ன் அடித்து தமிழில் நல்லநேரமாக ஆனது. அனைத்துமே தேவரின் படங்கள்.

  சம்சாரம் அது மின் சாரம் கூட ஏற்கனவே வெளி வந்த தமிழ் படத்தின் கதைதான். படத்தின் பெயர் மறந்து விட்டது. இரண்டுக்கும் கதை விசுதான்.

  அபூர்வ சகோதரர்கள், எந்த படமாக ஆனது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

 3. சாரதா says:

  Dear RV..
  உங்கள் லிஸ்ட்டைப்படித்ததும், சுமதி என் சுந்தரி படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம்தான் நினைவுக்கு வருகிறது. சினிமா தயாரிப்பாளரிடம் ப்ரொடக்ஷன் மேனேஜராக இருக்கும் தேங்காய் சீனிவாசன், தன் கம்பெனியின் கதாசிரியர் பற்றி சொல்வார்: “என்னய்யா பெரிய ரைட்டர் இவன். ஒரு கதை சொன்னான். அன்னிக்கு நைட்ஷோ காஸினோ தியேட்டருக்குப்போனால் அதே கதை இங்கிலீஷ் படமா ஓடிக்கிட்டிருக்கு. கொஞ்சம் இங்கிலீஷ் தெரிஞ்சா போதுமே. ஆளாளுக்கு கதை எழுதுவானுங்க”.

  கதாசிரியர் குகநாதன் தான் எழுதிய கதைகளில் பெரும்பாலானவை, ஆங்கில படங்களைத் ‘தழுவி’ (காப்பியை கொஞ்சம் நாசூக்கா சொல்றார்) எழுதப்பட்டவைதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 4. srinivas uppili says:

  நல்லதந்தி, சாரதா,

  உங்கள் இருவருக்கும் நன்றி.

  சட்டென்று நினைவுக்கு வரும் இன்னொரு படம், அன்பே சிவம் — Trains , Planes and Automobiles

 5. RV says:

  சாரதா, ஒரு சிறு திருத்தம். இந்த பதிவு ஆர்வி எழுதியது இல்லை, உப்பிலி ஸ்ரீனிவாஸ் எழுதியது.

  ஸ்ரீனிவாஸ், நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!

  21 கிராம்ஸ் படத்தின் மறுபதிப்புதான் சர்வம் என்று கேள்விப்பட்டேன். நான் இரண்டையும் பார்த்ததில்லை.

  Shop around the Corner – காதல் கோட்டை + She Devil – சதி லீலாவதி: கதை சுருக்கத்தை பார்த்தால் இதெல்லாம் ரொம்ப ஓவர். இருக்கும் ஒற்றுமைகள் மிக குறைவு, முக்கியமானவை இல்லை.

  Sense and Sensibility – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: காப்பிதான். ஆனால் ஜேன் ஆஸ்டனின் புத்தகத்தை எல்லாரும் உரிமை கொண்டாடலாம்.

  Brewster’s Millions – அருணாசலம்: பின் பகுதி அப்பட்டமான காப்பி, முன் பகுதிக்கும் ப்ரூஸ்டருக்கும் சம்பந்தம் இல்லை.

  Corsican Brothers – (பழைய) அபூர்வ சகோதரர்கள்: காப்பிதான். ஆனால் அலெக்சாண்டர் டூமாவின் புத்தகத்தை எல்லாரும் உரிமை கொண்டாடலாம். அதுவேதான் நீரும் நெருப்பும் என்றும் வந்தது.

 6. RV says:

  Congrats!

  Your story titled ‘தமிழ் படங்களும் அவற்றின் ஒரிஜினல்களும்’ made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st April 2010 01:35:02 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/229647

  Thank you for using Tamilish.com

 7. ramji_yahoo says:

  There is nothing wrong in copying or remaking a film, as long as it gives fun to the audience. We do not want directors or actors to invent things.

  Karakattakaarn is nice and enjoyable even all of us know that it is a copy of Tillana Mohanambal.

  MGR, Ramarajan’s most of the films are same story l;ines but still enjoyable, same with T Rajender, Mohan’s films but still enjoyable,. Thats what we want, we do not want inventions or creativity.

 8. சாரதா says:

  தெய்வச்செயல் -> ஆத்தி மேரா சாத்தி -> நல்ல நேரம் -> மா -> அன்னை ஓர் ஆலயம். (அனைத்துமே தேவர் பிலிம்ஸ்)

  ராமுடு பீமுடு (தெலுங்கு) -> எங்கவீட்டுப்பிள்ளை -> ராம் அவுர் ஷியாம் -> வந்தாளே மகராசி -> சீதா அவுர் கீதா -> கங்கா மங்கா (தெலுங்கு) -> வாணி ராணி -> வாழ்வு என்பக்கம் -> தங்கமடி தங்கம் -> தூங்காதே தம்பி தூங்காதே…. (எனக்குத் தெரிந்து ஒரே கதை இத்தனை பிறவி எடுத்து விட்டது. இன்னும் மற்ற மொழிகளில் எத்தனை பிறவி எடுத்ததோ)

  பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும் ஒரே ஆங்கிலப்படத்தைப் பார்த்துள்ளார்கள் என்பதற்கு உதாரணம் :சிகப்பு ரோஜாக்கள், மூடுபனி. (ஆங்கில ஒரிஜினல் பெயர்தான் தெரியவில்லை)

 9. kumaran says:

  Not only this, KANDASAMY also, you can see the film in Star Movies, the hero dresscode and other things are same

 10. Ameer says:

  nanba Bourne identity 2002la vantha padam …
  But Vettry vila ???

 11. King Viswa says:

  //nanba Bourne identity 2002la vantha padam …
  But Vettry vila ???//

  ஐயா, பார்ன் ஐடென்டிடி நாவல் வந்து இருபத்தி ஆறு வருடங்கள் ஆகின்றன. காமிக்ஸ் வந்து இருபத்தி நாலு வருடங்கள் ஆகின்றன. தமிழில் கூட இந்த காமிக்ஸ் வந்து இருபத்தி மூன்று வருடங்கள் ஆகின்றது.

  Here’s The Link: தமிழ் காமிக்ஸ் உலகம்

 12. RV/ Bags நலமா..??

  சமீபத்தில் வெளிவந்த விண்ணைதாண்டி வருவாயா..? Installation of Love – ஸ்லோவேனியன் திரைக்கதையை ஒட்டியே இருந்தது. ஆனால் ஒரிஜினல் நல்லாயிருக்கும்.

 13. prasath says:

  என்ன கொடுமை இது? தமிழில் ஒரு ஒரிஜினல் படம் கூடவா இல்லை? (கி)ராமராஜன் படங்கள், ராம்நாராயணன் பட்ங்கள் எல்லாமே ஒரிஜினல் தானே? கருந்தேள் கன்ன்னாயிரம் எனபவர் தனது வலைப்பதிவில் கமலஹாசனின் காப்பி அடிக்கும் திறமை பற்றி எழுதியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: