பாலு மகேந்திரா பற்றி சுஜாதா


பாலு மகேந்திரா பற்றி  சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்)

See  full size image

தூர்தர்ஷனின் சிறப்பு தமிழ்ச் சிறுகதைகள் வரிசையில்  ‘பரிசு’ சிறுகதையை பாலுமகேந்திரா தொலைப்படமாக்கி இருக்கிறார்.  அது தொடர்பாக என்னைப் பேட்டி எடுத்தார்.  பேட்டி என்பதைவிட,  இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என்னை ஒரு அறையில் செயற்கை விளக்கில்லாமல் ஜன்னலோரம் உட்கார்த்தி வைத்து,  ஒரே ஓர் தெர்மோகோல் வைத்துவிட்டு,  காமிரா கோணத்தைச் சற்று திருத்தி அமைத்துவிட்டு எதிரே உட்கார்ந்து கொண்டார்.  பல விஷயங்கள் பற்றிப் பேசினோம்.  பேட்டி முடிந்து படம் போட்டுக் காட்டினபோது,  ‘அட…. இது நானா….?’   என்று ஆச்சரியமாக இருந்தது.  எல்லோரும் பயன்படுத்தும் காமிராதான்.  தெர்மோகோல்  ஏராளமாக சென்னையில் கிடைக்கிறது.   இருந்தும்,  எதை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஒரு பாலுமகேந்திரா தான் இருக்கிறார்.

https://i0.wp.com/www.thehindu.com/fline/fl2213/images/20050701003911106.jpg

பாலுவுடன் பழக்கம் என் ஆரம்ப எழுத்துக் காலங்களிலேயே தொடங்கியது.

https://i0.wp.com/4.bp.blogspot.com/_wZojNfQxBRg/S6kKPgBesFI/AAAAAAAAAAs/I9pd8K-fW80/s320/Sankarabharanam.jpg
விசாகப்பட்டணத்தில் அவர் ‘சங்கராபரணம்‘ படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘மறுபடியும் கணேஷ்‘ படித்துவிட்டு,   அதைப் படமாக எடுக்கப்போவதாக அனுமதி கேட்டு அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்.
https://i2.wp.com/www.salilda.com/images/kokila.jpg
பெங்களூருக்கு அவர் ‘கோகிலா‘ படம் எடுக்க வந்திருந்தபோது,  கமல்ஹாசன் அவரை எனக்கு அறிமுகம் செய்வித்தார்.   மூவரும் நிறையப் பேசினோம்.
Balu%20Mahendra
பின்னர்,  ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘வை   பாலு மகேந்திரா எடுப்பதாக,   நடராஜன் (பிற்பாடு பிரமிட்)   தயாரிப்பதாக,  காலஞ்சென்ற ஷோபா அதில் நடிப்பதாக இருந்தது.   திறமையாக திரைக்கதை அமைத்து ரொம்ப உற்சாகமாக இருந்தார்.   ஒரு கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
https://i1.wp.com/4.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S7IU043UgKI/AAAAAAAAAqc/T0UFoIv6ZHc/s1600/shoba-prada.jpg
பாலு அதற்குப் பதில் ‘மூடுபனி‘   எடுத்தார்.    பின்னர்,  பல சந்தர்ப்பங்களில் நான் திரைக்கதை எழுத,  அவர் படம் எடுக்கும் நிலைக்குக் கிட்டே கிட்டே வந்தோம்.   அவருக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைத்துக் கொடுக்க வேண்டும்  என்கிற என் ஆசை பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது.   ஓரளவுக்கு பாலு மகேந்திரா கதை நேரத்தில் என் சிறுகதைகள் பத்தையும்,   ஒரு குறுநாவலையும் சின்னத்திரைக்கு செய்து கொடுத்தார்.   சற்றே சமாதானமானோம்.

See  full size image
அந்தச் சமயத்தில் ஷோபாவைச் சந்திக்க நேர்ந்தது.  சட்டென்று அறைக்குள் நுழைந்து பாலுவின் கழுத்தை ‘அங்கிள்’  என்று கட்டிக்கொண்டார்.  என்னுடன் வந்திருந்த என் மனைவி வீட்டுக்கு வந்ததும்,  ‘இது அங்கிள் உறவு இல்லை’  என்றாள்.  சில தினங்கள் கழித்து குமுதம் இதழில் இருவரும் மணந்து கொண்ட செய்தி போட்டோவுடன்  வந்திருந்தது.   அடுத்த ஆண்டு அந்தப் பெண்ணின் தற்கொலைச் செய்தி.
https://i0.wp.com/www.southdreamz.com/wp-content/uploads/2008/06/shobha_nationalaward.jpg
அந்த இளம் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று வியந்திருக்கிறேன்.   அதுபற்றி பாலு சொனன தகவல்கள் அந்தரங்கமானவை.  அவருடன் என் நட்பின் மரியாதை கருதி அவற்றை நான் எழுதவில்லை.

சுஜாதாவின் பல நாவல்கள், படமாக்கப்படும்போது  அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கப்படுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார்.   அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம்.   ஆயினும் அவரே  ‘தன் நாவல்கள் இவரால் படமாக்கப் படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின் அது பாலு மகேந்திரா தான்.

See  full size image

அம்பலம் மின்னிதழில் சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே  பாலு மகேந்திரா பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”என் நாவல்கள் எதுவும் அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில். எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை.   தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார். இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.”

சுஜாதாவின் ‘நிலம்’

‘நிலம்’ கதையும் சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொனியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மீகக் கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது.   அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார்.   நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்மப் பிரயத்தனங்கள் தான் மீதிக் கதை.