இளையராஜா வீடியோக்கள்


இன்றைக்கு மூன்று வீடியோக்கள்.

முதல் வீடியோவில் இளையராஜா முத்தைத் தரு பாட்டுக்கு வேறு வேறு மெட்டு போட்டுக் காட்டுகிறார். கலக்கிவிட்டார். அதுவும் ஸ்டேஜில் இப்படி திடீரென்று சொல்லும்போது மெட்டு போடுவது ஜீனியஸ்!

இரண்டாவது வீடியோவில் ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று பாட்டை அவர் பாடிக் காட்டுவது நன்றாக இருக்கிறது. அதையேதான் மாங்குயிலே பூங்குயிலே என்று மாற்றி இருக்கிறார்.ஒரு முறை சொன்னாராம் இருக்கும் ஏழு ஸ்வரங்களை மாற்றி மாற்றி போட்டு மக்களை ஏமாற்றுகிறோம் என்று. இன்னும் நிறைய ஏமாற்றுங்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. அவர் யுவன் ஷங்கர் ராஜா மாதிரி இந்தப் பாட்டை அமைத்துக் காட்டுவது அருமை! மிஸ் செய்யாதீர்கள்!

மூன்றாவது வீடியோவில் ஸ்வரங்களை வைத்து மாயம் செய்கிறார். நன்றாக இருக்கிறது!

உண்மையான ஜீனியஸ்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்