வஞ்சிக்கோட்டை வாலிபன்


Vanjikkottai Valibanமுப்பது வருஷத்துக்கு முன்னால் இன்றைக்கு டிவி எப்படியோ அப்படி ரேடியோ இருந்தது. விவித்பாரதி கேட்டு வளர்ந்த ஜெனரேஷன் அது. கடைத்தெருவில் நடந்து போனால் நாலு கடையிலாவது ரேடியோ பாட்டு கேட்கும். அப்படி காற்றினிலே வரும் கீதங்களில் இரண்டு கீதம் எப்போதும் என்னைப் பிடித்து நிறுத்திவிடும். என்ன அவசர வேலையாக இருந்தாலும் அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டுதான் அடுத்த அடி வைப்பேன். அதில் ஒன்று வஞ்சிக் கோட்டை வாலிபனின் போட்டி நடனப் பாட்டு.

என்ன அற்புதமான பாட்டு? காதல் என்பது இதுதானா என்று மெதுவாக ஆரம்பிக்கும். அப்புறம் கண்ணும் கண்ணும் கலந்து என்று கொஞ்சம் டெம்போ ஏறும். வீரப்பா சரியான போட்டியைக் கண்டு சபாஷ் போடுவார். வைஜயந்திமாலா களத்தில் ஜிலுஜிலுவென குதிப்பார். பத்மினி ஆறு பெருகி வரின் ஆணை கட்டலாகும் என்று சொல்லிப் பார்ப்பார். வை. மாலா இன்னொருத்தி நிகராகுமோ என்று அலட்டுவார். ஆடு மயில் முன்னே ஆணவத்தில் வந்தவரும் பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடுபவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடிப் பாடுவார்கள். சி. ராமச்சந்திரா சும்மா புகுந்து விளையாடிவிட்டார். வை. மாலா பாடும்போது ஒரு துள்ளல்; பத்மினி பாட்டில் சரணத்துக்கு சரணத்துக்கு ஏறிக் கொண்டே போகும் டெம்போ. ஆஹா!

இந்த பாட்டை கேட்டதிலிருந்தே படம் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் என் துரதிருஷ்டம், சின்ன வயதில் அக்கம்பக்கம் எங்குமே இந்தப் படம் திரையிடப்படவில்லை. சன் டிவியில் சில சமயம் ராஜா மகள் பாட்டு போடுவார்கள். வீடியோ லேசில் கிடைப்பதில்லை. கடைசியில் முழுவதும் பார்த்தது சன் டிவி தயவில்தான்.

சந்திரலேகா, அபூர்வ சகோதரர்களை விட ஒரு மாற்று குறைவுதான், ஆனால் நல்ல பொழுதுபோக்குப் படம். கப்பலில் ஜெமினி புரியும் சாகசம், கடைசியில் கோட்டையில் போடும் சண்டை எல்லாமே நன்றாக இருக்கும். வாசன் ஹிந்தியிலிருந்து சி. ராமச்சந்திராவை ஏன் இறக்குமதி செய்தாரோ தெரியாது, ஆனால் அவர் வூடு கட்டி அடித்திருக்கிறார்.

கதை சிம்பிள். ஜெமினி விசுவாசமான மந்திரி? மகன். ராஜ குடும்பத்தை சதி செய்து பி.எஸ். வீரப்பா துரத்திவிட்டு தான் ராஜாவாகிவிடுகிறார். ஆனால் மந்திரி இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார். ஜெமினியும் ராஜகுமாரி பத்மினியும் வழக்கம் போல காதலிக்கிறார்கள். நடுவில் வை. மாலாவின் தீவில் ஜெமினி மாட்டிக் கொள்கிறார். மாலா ஜெமினியைப் பார்த்து உருக, மாலா உதவியால் ஜெமினி மீண்டும் வஞ்சிக்கோட்டைக்கு வந்து போராட, ஆனால் மாலாவுக்கு பத்மினி விஷயம் தெரிந்துவிடுகிறது. போட்டி நடனம். மாலா ஜெமினியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார். பிறகு தப்பிக்கவும் வைக்கிறார். அப்புறம் வழக்கம் போல சண்டை, மாலா முழ நீளம் வசனம் பேசி விட்டு இறக்கிறார்.

ராஜா மகள் இன்னொரு நீளமான நல்ல பாட்டு. பாப்புலரும் கூட.

நண்பர் ராஜு சிலாகிக்கும் ஒரு நல்ல பாட்டு வெண்ணிலவே தண்மதியே. வீடியோ

ஜாலியான பொழுதுபோக்குப் படம். பாட்டுக்காகவே பார்க்கலாம். பத்துக்கு 7 மார்க். B- grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to வஞ்சிக்கோட்டை வாலிபன்

 1. Pingback: Tweets that mention வஞ்சிக்கோட்டை வாலிபன் « அவார்டா கொடுக்கறாங்க? -- Topsy.com

 2. அந்த நாதாரி , ஸ்த்ரி லோலன் பார்ப்பன கிழவன் ஜெமினிகணேசன் நடித்த படமாச்சே.அவன் துடிச்சு சாகனும்ங்க,என் பொண்டாட்டியை ஒரு சமயம் படப்பிடிப்பில் வச்சி கண்ணைஅடிச்சான் கம்மனாட்டி

  • RV says:

   முருகேசன்,
   என்னது, ஜெமினி கணேசன் செத்துட்டாரா? சொல்லவே இல்ல?

   • raju says:

    நண்பர் Rv

    வெண்ணிலவே ….பாடலை எனக்கு dedicate பண்ணியதுக்கு நன்றி.
    பத்து நாட்கள் நம்ம ஊர் பக்கம் போய் வந்தேன் .டுபாயே தேவலை -அவ்வளவு வெயில்,சூடு, பவர் கட் வேறே !

    ராஜு-துபாய்

   • raju says:

    நண்பர் Rv

    முருகேசனுக்கு நீங்கள் சொன்ன பதில் எனக்கு ஒரு பழைய Asian paints விளம்பரத்தில் வரும் வார்த்தைகள் ஞாபகம் வரது …”கலக்கறே சந்துரு..”.. “அங்கே சந்துரு இங்கே ஆர்வீ”. அம்புடுதேன்

    ராஜு-துபாய்

 3. உலக வலைப்பதிவு வரலாற்றில் முதல் முறையாக,இதை சொல்ல மறந்துட்டேன்.எந்த வலைப்பதிவனும் 13 ப்ளாக் வச்சுக்கிட்டது இல்லை.இவை என் பிளாக்குகள்.அவசியம் வரவும்.
  TAMIL VASAM ,
  hardybodywindymi… ,
  இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் ,
  நிர்வாண உண்மைகள் ,
  PAURUSHAM
  INDIAN POLITICAL CLOSEUP
  The Blog
  వాణీ పుత్రుని వాణి
  Woman voice
  kamasuthra
  The Tiger
  kavithai365
  C.K.THE TIGER
  Focus on Tomorrows
  Two Legends
  அனுபவ ஜோதிடம்

 4. s.Murugeshan says:

  அய்யா ,
  இது நான் எழுதிய கமெண்ட் அல்ல. எவனோ வெலை வெட்டி இல்லாத தண்டம் ,முண்டம் எழுதியது. முதலில் அதை இதை இரண்டையும் நீக்கித்தொலையுங்கள்

 5. chaikadai says:

  வெகு நாளாக நான் வெண்ணிலவே தண்மதியே என்ற பாட்டை தேடிக்கொண்டிருக்கிறேன். அதனால் இங்கு வந்து பார்த்தேன். ‘வீடியோ இஸ் பிரைவேட்’ என்ற சேதி. என் அந்த விதாவை மட்டும் ப்ரிவடாக வைதிருகீர்கள். மற்றப்படி உங்கள் எழுத்தை கண்டுப்பிடிததில் என்னக்கு மிக சந்தோசம். – சம்யுக்தா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: